பாரதி அக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி
பாரதி அக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி தனது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை வழங்குகிறது.
Read More
பாரதி ஆக்ஸா ஜெனரல் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு கண்ணோட்டம்
பாரதி ஆக்சா ஜெனெரல் இன்சூரன்ஸ் கம்பெனியானது, இந்தியாவின் சிறந்த நிறுவனம் பாரதி என்டர்ப்ரைசஸ் மற்றும் உலக அளவில் உயர்ந்த ஆக்ஸா நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி ஆகும். இந்த ஆக்ஸா நிறுவனமானது நிதி நிலை பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் உலக அளவில் மிக சிறப்பானதாக விளங்கும் நிறுவனங்களுள் ஒன்று. இந்த பாரதி ஆக்ஸா நிறுவனம் ஆகஸ்ட் 2008 இல் தன் பணியை துவங்கியது. பாரதி ஆக்ஸா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி துவங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே ISO9001:2008 மற்றும் ISO27001:2005 என்ற இரண்டு சான்றிதழ்களைப் பெற்றது மேலும், ஜெனெரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுள் துவங்கிய முதல் ஆண்டிலேயே இந்த சான்றிதழ்களை பெற்றது இந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகவும் பெருமைக்கு உரிய ஒன்றாகும். மற்றும் 2012 ஆம் ஆண்டில் இந்த சாண்றிதழ்களானது மேலும் மூன்று வருடங்களுக்கு கூடுதலாக நீட்டிக்கப்பட்ட பெருமையும் இதற்க்கே உரியது.பாரதி ஆக்ஸா நிறுவனமானது ஒரு தனி நபரின் அடிப்படை மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு தனது திட்டங்களின் கூறுகளை மிகவும் கவனமான முறையில் தனித்தன்மையுடன் உருவாக்கியுள்ளது. எனவே ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை பொறுத்த வரையில் பாரதி ஆக்ஸா நிறுவனத்தை முதலில் கருத்தில் கொள்வது இன்றியமையாதது ஆகும்.
உங்கள் விருப்பப்படி பாரதி அக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி கவரேஜைத் தேர்வு செய்யவும்
பாரதி ஆக்ஸா ஜெனரல் ஹெல்த் இன்சூரன்ஸ் ஒரு பார்வை
அம்சங்கள் |
விவரக்குறிப்புகள் |
இணைக்கப்பட்ட மருத்துவமனைகள் |
4500+ |
பெறப்பட்ட கிளைம் ரேஷியோ (IRDAI 2018–19 அறிக்கையின்படி) |
89% |
தீர்க்கப்பட்ட உரிமைகோரல்களின் எண்ணிக்கை |
18 லட்சம்+ |
வழங்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை |
1.3 மில்லியன் |
புதுப்பித்தல் |
வாழ்நாள் முழுவதும் |
பாரதி ஆக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை பெறுவதன் நன்மைகள்
ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை பொறுத்த வரையில் இன்று இந்த நிறுவனம் காப்பீட்டுத் துறையில் விருப்பமான பிராண்டாக உள்ளது. அதற்கு காரணம் பாரதி ஆக்ஸா ஜெனரல் இன்சூரன்ஸ் அதன் முதல் ஆண்டு செயல்பாட்டிற்குள் இரண்டு சர்வதேச சான்றிதழ்களைப் பெற்றது, இவை இரண்டும் 2012 இல் மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டன. இந்த சாதனை நிறுவனத்தின் தரம், வாடிக்கையாளர் உறவுகள் மற்றும் உரிமைகோரல் செயல்முறையை எளிமைப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. பாரதி ஆக்ஸா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து உடல்நலக் காப்பீட்டுத் பிளான்களை வாங்குவதன் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் - பாலிசி ஆவணங்களில் கூறியபடி , மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன்பும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 60 நாட்களுக்குப் பிறகும் செய்யப்பட்ட செலவுகளுக்கு பாரதி ஆக்சா உடல்நலக் காப்பீடு ஈடுசெய்கிறது.
அறை வாடகைக்கு வரம்பு இல்லை - சில ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்பொழுது மருத்துவமனை அறை வாடகைக்கு வரம்பு இல்லை
மூத்த குடிமக்களுக்கான ஸ்மார்ட் மெடிக்கல் திட்டங்கள் - ரூ 1 கோடி வரை பாரதி ஆக்சா மூத்த குடிமக்கள் (வயதான பெற்றோருக்கு). விரிவான மருத்துவ பாதுகாப்பு வழங்குகிறது.
வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் - பாரதி ஆக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் உங்கள் பாலிசியை வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் விருப்பத்தை வழங்குகின்றன
ஏற்கனவே உள்ள நோய்களின் கவரேஜ்- பாலிசிதாரருக்கு, பாலிசியில் இணைவதற்கு முன்பே இருந்த நோய்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பினை பாலிசி துவங்கிய பின் பாலிசி காலத்திற்குள் காத்திருப்பு காலமாக 4 ஆண்டுகளுக்கு பிறகே பெற முடியும்.
டோமிசிலியரி ஹாஸ்பிட்டலைசேஷன் - நோய் அல்லது காயம் ஏற்பட்டால் மூன்று நாட்களுக்கு மேல் நோயாளியின் கவனிப்பும் சிகிச்சையும் வீட்டிலேயே மேற்கொள்ளப்படுவதற்கும் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கும் தேவையான வசதிகளை அளிக்கின்றது.
மருத்துவ-பரிசோதனை வசதி - 4 ஆண்டுகளுக்குப் பிறகு, க்ளெய்ம் செய்யாத காப்பீட்டுத் தொகையில் 1% இலவச உடல்நலப் பரிசோதனைகளை பெறலாம்.
வரி விலக்கு பலன்கள் - பாரதி ஆக்சா ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்தப்பட்டால் இந்திய வருமான வரிச் சட்டம் 1961 இன் படி ரூ.55,000 வரை வரி விளக்கு சலுகைகளை பெற முடிகிறது.
பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் பட்டியல்
தனிநபர் குடும்பங்கள் மற்றும் முதியோருக்கு பாரதி அக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி ஹெல்த் இன்சூரன்ஸை வழங்குகிறது. இத்திட்டத்தில் நிறைய பிளான்கள் உள்ளது அதில் ஸ்மார்ட் ஹெல்த் இன்சூரன்ஸ மற்றும் ஸ்மார்ட் சூப்பர் ஹெல்த் இன்சூரன்ஸ் மிக முக்கியமானவை. பாரதி அக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
- பாரதி ஆக்சா ஸ்மார்ட் ஹெல்த் அஸ்ஸுர் பிளான்
- பாரதி ஆக்ஸா ஸ்மார்ட் சூப்பர் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்
- பாரதி ஆக்சா ஸ்மார்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளாசிக் திட்டம்
- பாரதி ஆக்சா ஸ்மார்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் உபெர் திட்டம்
- பாரதி ஆக்ஸா ஸ்மார்ட் ஹெல்த் கிரிட்டிகல் இல்னஸ் இன்சூரன்ஸ் திட்டம்
- பாரதி ஆக்சா ஸ்மார்ட் இண்டிவிஜுவல் பர்சனல் ஆக்சிடென்ட் பிளான்
-
பாரதி ஆக்சா ஸ்மார்ட் ஹெல்த் அஸ்ஸுர் இன்சூரன்ஸ் பாலிசி மருத்துவச் செலவுகள் மற்றும் அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் சூழலில் உதவிகரமாக அமையும் ஒரு உடல்நலக் காப்பீட்டு திட்டமாகும். இந்த திட்டம் மருத்துவ உதவிகளுக்கான செலவுகளை ஏற்பதுடன், தினப்பராமரிப்பு செலவு, ஆயுஷ் சிகிச்சை செலவு, வீட்டில் தங்கி மருத்துவ உதவி பெறும் செலவு, உடல்நல பரிசோதனைகளுக்கான செலவுகள் இலவச உடல்நல பரிசோதனைகளை மற்றும் பல வகையான உதவிகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் ரூ.4 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகையை எதிர்பார்க்கும் வாடிக்கையளர்களுக்கு பொருந்தும். இந்த திட்டம் திட்டத்தை புதுப்பித்தல், வரிச் சேமிப்பு தள்ளுபடிகள், நோகிளைம் போனஸ் (NCB),போன்ற கூடுதல் நன்மைகளை வழங்கி உதவுகிறது.
பிளான் கவிராஜ் வகை |
தனிநபர்/குடும்ப ப்ளோடர் |
இன்சூரன்ஸ் தொகை |
ரூ.3 லட்சம் மற்றும் ரூ. 4 லட்சம் |
புதுப்பித்தல் |
வாழ்நாள் முழுவதும் |
தகுதி (ஆரம்ப வயது) |
91 நாட்கள் - 65 வயது |
அம்சங்கள் மற்றும் நன்மைகள்
- மருத்துவமனையில் இணைவதற்கு முந்தைய மற்றும் பிந்தய 60 முதல் 90 நாட்கள் முறையே ஏற்படும் அனைத்து மருத்துவ செலவுகாளையும் ஏற்கிறது.
- வாழ்நாள் முழுவதும் காப்புத்தொகையினை மீண்டும் திரும்ப பெறும் வசதி உடையது.
- இந்த திட்டம் 130 டே கேர் சிகிச்சை முறைகளுக்கான மருத்துவ உதவிகளை பெறும் வசதியினை செய்து தருகிறது.
- மகப்பேறு செலவுக்கான கவரேஜ் ரூ.35,000 மற்றும் பிறந்த குழந்தைக்கான பாதுகாப்பு கவரேஜ் ரூ.25,000 ஆகும்.
- இந்த திட்டத்தை வாழ்நாள் முழுவதும் புதுப்பித்து கொள்ளும் வசதி உள்ளது.
-
ஒரு தனிநபரின் நுழைவு வயது வரம்பு 5 ஆண்டுகள் முதல் 65 ஆண்டுகள் வரை, அதேசமயம் 91 நாட்கள் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பாலிசியின் கீழ் இன்சூர் செய்யப்பட்டிருந்தால்,பெற்றோர் இன்சூர் செய்யலாம். பாலிசியை 1 ஆண்டு, 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யலாம். வளர்ந்து வரும் தேவைகளுடன், மகப்பேறு பலன்கள் போன்ற வசதிகளை கூட்டி பாலிசியை மாற்றலாம். இந்த சூப்பர் ஸ்மார்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் பாலிசிதாரர் உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கி தேவையைப் பூர்த்தி செய்கிறது.
பிளான் கவரேஜ் வகை |
தனிநபர்/குடும்ப ப்ளோடர் |
இன்சூரன்ஸ் தொகை |
5லட்சம் ரூ. - 7லட்சம் ரூ. |
புதுப்பித்தல் |
வாழ்நாள் முழுவதும் |
தகுதி (ஆரம்ப வயது) |
91 நாட்கள் - 65 வயது |
அம்சங்கள் மற்றும் நன்மைகள்
- உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் உறுப்பு தானம் செய்பவர்களுக்கான செலவுகளை கவரேஜ் நன்மையுடன் இந்தத் திட்டம் தருகிறது .
- மருத்துவமனை அறை வாடகைக்கு வரம்பு இல்லை, மேலும் நோயாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக எந்த அறையையும் தேர்வு செய்யலாம்
- இந்த திட்டம் மூன்று வகைகளில் வருகிறது, அதாவது வேல்யு, கிளாசிக் மற்றும் உபெர்.
- விருப்பத்தின்படி ஒருவர் ஒரு சிறந்த உறுதியளிக்கப்பட்ட தொகையை தேர்வு செய்யலாம்.
- குறிப்பிட்ட தீவிரநோயான புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், திறந்த இதய வால்வு மாற்று, திறந்த மார்பு CABG, பெரிய தீக்காயங்கள், டெர்மினல் நோய், ஹெபடைடிஸ், முதன்மை நுரையீரல் உயர் இரத்த அழுத்தம், இறுதி நிலை நுரையீரல் நோய்கள், பாக்டீரியா மூளைக்காய்ச்சல், அப்லாஸ்டிக் அனீமியா, சிறுநீரக செயலிழப்பு/வழக்கமான டயாலிசிஸ், குறிப்பிட்ட தீவிர கோமா, கல்லீரல் தோல்வி, மோட்டார் நியூரானின் நோய்கள் போன்றவற்றிற்க்கு சலுகைகள் உண்டு .
- விலங்குகள் கடித்தால் தடுப்பூசிச் செலவுகள் (கிளாசிக் மற்றும் ஊபர் வகைகளில் கிடைக்கும்) வெளிநோயாளிகளுக்கான பல் அவசர சிகிச்சை (விபத்துகள் மட்டும்) - உபெர் வகைகளில் கிடைக்கிறது விபத்துகளுக்கான வெளி-நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை (கிளாசிக் மற்றும் உபெர் வகைகளில் கிடைக்கும்) முக்கியமான கூடுதல் தீவிர நோய்க்கான காப்பீட்டுத் தொகை தேர்ந்தெடுக்கப்பட்டால், காப்பீட்டுத் தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது
-
பாரதி ஆக்ஸா ஸ்மார்ட் சூப்பர் இன்சூரன்ஸ் திட்டத்தின் ஒரு வகையே இந்த ஸ்மார்ட் சூப்பர் க்ளாஸிக் ஹெல்த் திட்டம் ஆகும். இந்த அத்திட்டம் வேல்யூ கூற்றின் விரிவாக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.இது காப்பு தொகையாக அவரு பெருந்தொகையை அளிக்கின்றது. மேலும் பாரதி ஆக்சா ஸ்மார்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளாசிக் திட்ட நன்மைகள் மற்றும் அம்சங்களை கீழே காண்போம்:
பிளான் கவரேஜ் வகை |
தனிநபர்/குடும்ப ப்ளோடர் |
இன்சூரன்ஸ் தொகை |
ரூ.10 லட்சம் - ரூ. 20 லட்சம் |
புதுப்பித்தல் |
வாழ்நாள் முழுவதும் |
தகுதி (நுழைவு வயது) |
91 நாட்கள் - 65 வயது |
அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
- 10 நாட்கள் மற்றும் அதற்கும் அதிகமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும் சூழல் ஏற்படின், கன்வேல்சென்ஸ் நன்மையின் அடிப்படையில் ரூ10,000 வழங்கப்படுகிறது.
- எதிர்பாரா நேரங்களில் விபத்து மற்றும் இதர காரணங்களின் விளைவாக ஏற்றுக் கொள்ளப்படும் மருத்துவ உதவிகளுக்கு ரூ 10,000 வரை சலுகை தரப்படுகிறது.
- விலங்கு கட்டிகளின் விளைவாக எடுக்கப்படும் தடுப்பூசிகளை ரூ 2500 வரை ரீஇம்பர்ஸ்மென்ட் ஆகா பெற்றுக்கொள்ளும் வசதி உடையது.
- ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் வசதி உள்ளது.
- காப்புத்தொகைக்கு சமம் மற்றும் அதிகமாக மருத்துவ உதவிகள் தேவைப்படும் தீவிர நோய்களுக்கான உதவியாக ஒரு பெருந்தொகை வழங்கப்படுகிறது.
- வேல்யூ கூற்றில் தெரிவித்துள்ள படி இதர நன்மைகளும் விதிமுறைகளும் பாரதி ஆக்சா ஸ்மார்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளாசிக் திட்டத்திற்கும் பொருந்தும்.
-
பாரதி ஆக்ஸா ஸ்மார்ட் சூப்பர் இன்சூரன்ஸ் திட்டத்தின் ஒரு வகையே இந்த ஸ்மார்ட் சூப்பர் உபர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் ஆகும். இந்த திட்டம் க்ளாஸிக் கூற்றின் விரிவாக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.மேலும், ரூ100 லட்சம் வரையிலான ஒரு பெருந்தொகையை இந்த திட்டம் தனது காப்புத்தொகையின் வரம்பாக கொண்டுள்ளது. மேலும் பாரதி ஆக்சா ஸ்மார்ட் சூப்பர் உபர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்ட நன்மைகள் மற்றும் அம்சங்களை கீழே காண்போம்:
பிளான் கவரேஜ் வகை |
தனிநபர்/குடும்ப ப்ளோடர் |
இன்சூரன்ஸ் தொகை |
ரூ.20 லட்சம்- ரூ. 100 லட்சம் |
புதுப்பித்தல் |
வாழ்நாள் முழுவதும் |
தகுதி (நுழைவு வயது) |
91 நாட்கள் - 65 வயது |
அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
- கூடுதல் நன்மைகளாக, ரூ 50,000 வரை மகப்பேறு பாதுகாப்பு மற்றும் பிறந்த குழந்தைக்கான மருத்துவ பாதுகாப்பு கவரேஜினை கொண்டுள்ளது.
- விலங்கு கடிகளின் விளைவாக எடுக்கப்படும் தடுப்பூசிகளை ரூ 5000 வரை ரீஇம்பர்ஸ்மென்ட் ஆகா பெற்றுக்கொள்ளும் வசதி உடையது.
- காப்புத்தொகைக்கு சமம் மற்றும் அதிகமாக மருத்துவ உதவிகள் தேவைப்படும் தீவிர நோய்களுக்கான உதவியாக ஒரு பெருந்தொகை வழங்கப்படுகிறது.
- 30 நாட்கள் வரையில், மருத்துவமனையில் தங்கி இருப்பவருக்கான மானியத்தொகையாக ரூ500, ரூ1000, ரூ2000, ரூ3000 தரப்படுகிறது
- உள்நாட்டிற்குள் தேவைப்படும் விமான ஆம்புலன்ஸ் வசதிக்கான பாதுகாப்பினை பெறமுடியும்.
- பல் சம்பந்தப்பட்ட எமர்ஜென்சி சிகிச்சை பெரும் வசதிகள் உண்டு.
- மேலே உள்ள திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வகையான நன்மைகளும், நிபந்தனைகளும் இந்த திட்டத்திற்கும் பொருந்தும்.
-
உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு எதிராக மக்களுக்கு இந்த கிரிட்டிகள் இல்னஸ் இன்சூரன்ஸ் திட்டம் தேவையான மருத்துவ நன்மைகளை வழங்குவதில் முதன்மை கவனம் செலுத்துகிறது. ஒரு நபர் கடுமையான நோயால் பாதிக்கப்படும்போது, மருத்துவமனை செலவுகள் மற்றும் பிற மருத்துவம் தொடர்பான செலவுகள் ஆகியவற்றை காப்பீட்டாளருக்கு வழங்கி பயனளிக்கிறது.
பிளான் கவரேஜ் வகை |
தனிநபர்/குடும்ப ப்ளோடர் |
பிரீமியம் செலுத்துதல் |
மொத்த பணம் |
தகுதி (நுழைவு வயது) |
91 நாட்கள் - 65 ஆண்டுகள் |
அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
- மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், மருத்துவ செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்
- மருத்துவமனையில் இணைவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவ செல்வுகாள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
- உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது
- வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறும் செலவுகளும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது
- பிசியோதெரபி செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது
- நோயாளியுடன் இருப்பவருக்கான செலவுகளும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது
- எமர்ஜென்சி ஆம்புலன்ஸ் உதவி பெறும்வசதி உள்ளது.
- குழந்தைகளுகான கல்வி உதவி இந்த திட்ட்த்தின் மூலம் வழங்கப்படுகிறது.
- புதுப்பித்தலுகான நன்மையாக 5% வரை கொடுக்கப்படுகிறது.
- மருத்துவ உதவிகளுக்கான ரீய்ம்பர்ஸ்மென்ட் வசதி உள்ளது.
- ஒரே நிறுவனத்திற்குள் ஒரு திட்ட்த்தில் இருந்து வேறு திட்டத்திற்கு மாறும் வசதி உள்ளது.
- இந்தத் திட்டத்தில் குடும்ப ப்ளோட்டேர் பிளானை தேர்ந்தெடுக்கலாம் அதில் அவர் முழு குடும்பத்திற்கும் (4 நபர் வரை) ஒரு குறிப்பிட்ட தொகையைத் தேர்ந்தெடுக்கலாம்.
- இந்தத் பிளானில் முக்கியமான இருபது தீவிர நோய்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது அவை:
- ஆஒர்ட்டா அறுவை சிகிச்சை
- கொரொனரி ஹார்ட் அறுவை சிகிச்சை
- முதல் மாரடைப்பு
- சிறுநீரக செயலிழப்பு
- ஹார்ட் வால்வ் அறுவை சிகிச்சை
- பக்கவாதம் / ஸ்ட்ரோக்
- கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவை சிகிச்சை
- புற்றுநோய்
- இறுதி நிலை நுரையீரல் நோய்
- அப்லாஸ்டிக் அனீமியா
- இறுதி நிலை கல்லீரல் செயலிழப்பு
- கோமா
- தீவிர தீக்காயங்கள்
- உடல் உறுப்பு/ எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை
- மல்டிபில் ஸ்கலோரசிஸ்
- ஃபல்மினன்ட் ஹெபாட்டிடிஸ்
- மோட்டார் நீயுரான் நோய்
- ப்ரைமரி பல்மொனரி ஹைபர் டென்ஷன்
- பேக்டெரியல் மெனிங்க்டிஸ்
-
ஏதேனும் விபத்தின் விளைவாக ஏற்படும் செலவுகளை உள்ளடக்கும் பாலிசி இது.
பிளான் கவரேஜ் வகை |
தனிநபர்/குடும்ப ப்ளோடர் |
பிரீமியம் செலுத்துதல் |
மொத்த பணம் |
தகுதி (நுழைவு வயது) |
91 நாட்கள் - 65 ஆண்டுகள் |
அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
- இது பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தையும் பாதுகாக்கும் வகையில் அமைந்து உள்ளது
- இதில் வாழ்நாள் முழுவதும் பாலிசியை புதுப்பிக்கும் வசதி உண்டு
- நல்ல ஆரோக்கியம் இருப்பதாக அறிவிக்கப்பட்டால், பாலிசியின் கீழ் கிடைக்கும் அடுத்த இன்சூரன்ஸ் தொகை ஸ்லாப்பைத் தேர்வுசெய்யலாம்.
- நிரந்தர ஊனமுற்றோர் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது
- இந்த திட்டம் விபத்தால் ஏற்படும் மரணத்தை உள்ளடக்கியது
- இத்திட்டம் மருத்துவமனையில் சேர்க்கும் செலவு ஆகியவற்றை வழங்குகிறது
- நாடு முழுவதும் 4300 மருத்துவமனைகளுடன் இணைந்துள்ளது
- மருத்துவமனைக்குச் செல்லும் முன் மற்றும் பின் வரும் செலவுகளை ஈடுசெய்கிறது .
- உறுப்புகள் மாற்று சிகிச்சைக்கான செலவு
- வீட்டு மருத்துவ செலவுகளை உள்ளடக்கியது
- ஆம்புலன்ஸ் செலவுகள்
- நோயாளிகளுக்கான பிசியோதெரபி செலவுகள் செய்யப்படுகின்றன
- உடன் வரும் நபரின் செலவை உள்ளடக்கியது
- குழந்தைகள் கல்விக்கான நிதி வழங்கப்படுகிறது
- 5% புதுப்பித்தல் தள்ளுபடி உள்ளது
- இந்தத் திட்டம் மருத்துவச் செலவைத் திருப்பிச் செலுத்துகிறது
- அதே நிறுவனத்தால் ஒரு சுகாதாரக் பாலிசியிலிருந்து மற்றொரு சுகாதாரக் பாலிசிக்கு மாற்றுவதற்கு உதவும் போர்ட்டபிலிட்டி வசதி உள்ளது
- இரட்டை இறப்பு நன்மை அல்லது நிரந்தர ஊனமுற்றோர் பலன் உள்ளது, இதில் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது விபத்தால் ஏற்படும் மரணம் ஆகியவற்றிற்கு (காப்பீட்டுத் தொகையில் 200%) செலுத்தப்படுகிறது.
பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஏன் வாங்க வேண்டும்?
பாரதி அக்சா ஜெனரல் இன்சூரன்ஸ் வழங்கும் காப்பீடுகள் அனைத்தும் அந்நிறுவனத்தால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலான பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் அறை வாடகைக்கான செலவுகளை ஏற்காமல் இருப்பதில்லை மற்றும் கட்டாயமான கோ-பேமென்ட் செலுத்தும் விதியும் இல்லை. பாரதி ஆக்சா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமானது விரிவான காப்பீட்டு திட்டங்களை அதிகபட்சமாக ரூபாய் 100 லட்சம் காப்பீட்டுத் தொகை வரை வழங்குகின்றது. பாரதி அக்சா ஜெனரல் இன்சூரன்ஸ் காப்பீடுகளை பற்றிய ஒரு சில சிறப்பு அம்சங்களை கீழே காண்போம்:
- 89% விகிதம் உரிமைகோரல் நேர்மறையாக பிரதிபலிக்கிறது
- 4500 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை.
- மருத்துவக் காப்பீடு ரூ. 1 கோடி
- பாலிசி புதுப்பித்தலுக்கு 5% NCB தள்ளுபடி //82
பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் உள்ளடங்குபவை
கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் உள்ளடங்கும் நிகழ்வுகள் ஆகும். அவை:
கண் அறுவை சிகிச்சை, லித்தோட்ரிப்சி, டயாலிசிஸ், கீமோதெரபி, போன்ற மருத்துவ நிலைமைகள் மற்றும் 24 மணிநேரத்திற்கு மேல் மருத்துவமனையில் சேர்க்கத் தேவையில்லாத பிற நிலைமைகளும் பாதுகாப்பிற்குள் வருகின்றன.
மூன்று நாட்களுக்கு மேல் உள்ள மருத்துவத் தலையீடு மற்றும் வீட்டில் ஓய்வெடுப்பது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோய்கள் அல்லது காயங்கள் ஆகியவற்றிற்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் நிதி பாதுகாப்பினை வழங்குகின்றது.
பாரதி ஆக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானால் பாதுகாக்கப்படும் முக்கியமான நோய்கள் பின்வருமாறு:
- புற்றுநோய்
- ஆஒர்ட்டா அறுவை சிகிச்சை
- கொரொனரி ஹார்ட் அறுவை சிகிச்சை
- முதல் மாரடைப்பு
- சிறுநீரக செயலிழப்பு
- ஹார்ட் வால்வ் அறுவை சிகிச்சை
- பக்கவாதம் / ஸ்ட்ரோக்
- கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவை சிகிச்சை
- இறுதி நிலை நுரையீரல் நோய்
- அப்லாஸ்டிக் அனீமியா
- இறுதி நிலை கல்லீரல் செயலிழப்பு
- கோமா
- தீவிர தீக்காயங்கள்
- உடல் உறுப்பு/ எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை
- மல்டிபில் ஸ்கலோரசிஸ்
- ஃபல்மினன்ட் ஹெபாட்டிடிஸ்
- மோட்டார் நீயுரான் நோய்
- ப்ரைமரி பல்மொனரி ஹைபர் டென்ஷன்
- பேக்டெரியல் மெனிங்க்டிஸ்
போன்ற பலவித தீவிர நோய்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது .
ஆனால், இந்த உள்ளடங்கும் நிகழ்வுகள் மற்றும் நோய்களாவன திட்டத்திற்கு திட்டம் தனஹ்டு தன்மையை அடிப்படையாக கொண்டு வேறுபடும் என்பதே மிகவும் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது ஆகும்.
பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் விலக்குகள்
- பாரதி ஆக்சா உடல்நலக் காப்பீட்டு பிளானால் மூடப்படாத நிபந்தனைகள்
- பாலிசி தொடங்கி முதல் 30 நாட்களுக்குள் ஏற்படும் நோய்கள் அல்லது காயங்களுக்கு மருத்துவமனையில் சேர்த்தல் .
- இந்த நிபந்தனை பிற்காலத்தில் பாலிசி புதுப்பிக்கப்படும் போது பொருந்தாது.
- பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானால் பின்வரும் மருத்துவ நிலைகளின் பட்டியலில் அடங்கவில்லை
- டயாலிசிஸ் தேவைப்படும் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு செய்யப்படாது
- கண்புரை அல்லது லேசர் அறுவை சிகிச்சை செய்யப்படாது
- விபத்து காரணமாக காயம் ஏற்படாத நிலையில் , மூட்டுகளை மாற்றுவது செய்யப்படாது
- விரிவாக்கம் மற்றும் குணப்படுத்துதல்
- விருத்தசேதனம் மற்றும் பாலின மாற்றம் உள்ளடக்கப்படவில்லை
- வீரியம் இல்லையெனில் , மயோமெக்டோமி அல்லது கருப்பை நீக்கம் செய்யப்படாது
- குடலிறக்கம், ஹைட்ரோசெல், ஆசனவாயில் உள்ள ஃபிஸ்துலா, சைனசிடிஸ், ஹேமோர்ஹாய்ட்ஸ்/பைல்ஸ்
- பிறப்பு, கர்ப்பம் மற்றும் கருவுறுதல் தொடர்பான நடைமுறைகள் உள்ளடக்கப்படவில்லை. பிறப்பு கட்டுப்பாடு, ஹார்மோன் மாற்று சிகிச்சை, சிசேரியன் மற்றும் கருத்தரித்தல் அல்லது கருவுறுதல் தொடர்பான செயல்பாடுகள் போன்றவை
- இரைப்பை மற்றும் டூடெனனல் அரிப்புகள் மற்றும் புண்கள் மூடப்படவில்லை
- எய்ட்ஸ் மற்றும் அது தொடர்பான நோய்கள் காப்பீடு செய்யப்படாது
- கண்கள் மற்றும் காதுகளின் வழக்கமான பரிசோதனை மூடப்படவில்லை.
- கண்ணாடியின் விலை ஈடுசெய்யப்படாது
- நீர்க்கட்டிகள், முடிச்சுகள், மார்பக கட்டிகள் உள்ளிட்ட பாலிப்கள் போன்ற அனைத்து வகையான தோல் நிலைகளும் அவை வீரியம் மிக்கவை என கண்டறியப்பட்டால் தவிர காப்பீடு செய்யப்படாது.
- சுயமாக ஏற்படுத்திய நோய் அல்லது காயம், மனநல கோளாறுகள், பதட்டம்,தற்கொலை, மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு மற்றும் ஆல்கஹால் அல்லது போதைப்பொருளின் விளைவால் ஏற்படும் காயங்கள்/நோய்கள் ஆகியவை காப்பீடு செய்யப்படாது.இரைப்பை மற்றும் டூடெனனல் அரிப்புகள் மற்றும் புண்கள் மூடப்படவில்லை
- எய்ட்ஸ் மற்றும் அது தொடர்பான நோய்கள் காப்பீடு செய்யப்படாது
- கண்கள் மற்றும் காதுகளின் வழக்கமான பரிசோதனை மூடப்படவில்லை.
- கண்ணாடியின் விலை ஈடுசெய்யப்படவில்லை
- நீர்க்கட்டிகள், முடிச்சுகள், மார்பக கட்டிகள் உள்ளிட்ட பாலிப்கள் போன்ற அனைத்து வகையான தோல் நிலைகளும் அவை வீரியம் மிக்கவை என கண்டறியப்பட்டால் தவிர காப்பீடு செய்யப்படாது.
சுயமாக ஏற்படுத்திய நோய் அல்லது காயம், மனநல கோளாறுகள், பதட்டம்,தற்கொலை, மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு மற்றும் ஆல்கஹால் அல்லது போதைப்பொருளின் விளைவால் ஏற்படும் காயங்கள்/நோய்கள் ஆகியவை காப்பீடு செய்யப்படாது.
பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பாரதி அக்சா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு பல்வேறு வழிகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனத்தின் சேல்ஸ் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு கஸ்டமர் சர்வீஸ் பிரதிநிதியை அணுகுவதன் மூலம் பாலிசி பற்றிய விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
- பெயர், தொலைபேசி எண், மற்றும் மின்னஞ்சல் போன்ற விவரங்களை நிறுவனத்தின் வெப்சைட்டில் பதிவு செய்து கால் பேக் கோரிக்கை செய்யலாம்.
- கிளைம், சர்வீஸ், மற்றும் கால் பேக் போன்ற முக்கியமான வார்த்தைகளை 566770 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பலாம்.
- நிறுவனத்தின் கிளைகளில் ஒன்றை அனுகி அங்குள்ள ஏஜென்ட் மூலமாகவும் திட்டங்களைப் பற்றிய விவரங்களை அறியலாம்.
பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் க்ளைம் செய்வது எப்படி?
மருத்துவ சிகிச்சைகளுக்கு ஏற்படும் பணம் மற்றும் நிதி செலவுகளுக்கான நன்மைகளை பெற வேண்டி விண்ணப்பிப்பதே க்ளைம் ஆகும்.அவற்றை இரண்டு வழிகளில் நாம் அடையலாம். ஒன்று, கேஷ்லெஸ் க்ளைம் மற்றும் இரண்டாவது ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம் ஆகும். அவற்றை இன்னும் விரிவாக கீழே காண்போம்:
கேஷ் லெஸ் க்ளைம்
- எதிர்பாராத நேரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்படி நேரும் பொழுது, உடனடியாக நீங்கள் பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் பக்கத்தில் தரப்பட்டுள்ள ஹாஸ்பிடல் லோகேட்டர் பயன்படுத்தி உங்கள் அருகில் உள்ள இந்த திட்டத்துடன் இணைப்பில் உள்ள மருத்துவமனையை கண்டறிந்து அதில் சேரவும்.
- ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்படி நேரும் பொழுது, உடனடியாக நீங்கள் பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் ஹெல்ப் டெஸ்க்க்கு 4 நாட்கள் முன்னராகவே தெரியப்படுத்தி இருக்கவேண்டும். அதை, இந்த நிறுவனம் 6 மணி நேரத்திற்குள் எஸ் எம் எஸ் மூலம் மருத்துவமனைக்கு அறியப்படுத்திவிடும்.
- பின்னர் நீங்கள் மருத்துவமனையில் இணைத்த பின்னர், திட்டத்தின் வரம்பிற்கு உட்பட்டு அனைத்து மருத்டுவ வசதிகளும் பெற முடியும். அவற்றிற்கு பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமே பணம் செலுத்திவிடும். வரம்பிற்கு அப்பாற்பட்ட மருத்துவ வசதிகளையும் உங்களுக்கு தெரியப்படுத்திவிடும்.
- பின்னர் டி பி ஏ விடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்றவுடன் உங்களது அனைத்து மருத்துவ செலவுகளும் பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும்.
ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம்
ரீஇம்பர்ஸ்மென்ட் க்லைம் ஐ திட்டத்துடன் இணைப்பில்லாத் மருத்துவமனையில் பெற்ற சிகிச்சைகளுகான செலவுகளை திரும்ப பெற உபயியோகிக்கவேண்டும். பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களின் திட்டங்களிலும் இந்த ரீஇம்பர்ஸ்மென்ட் க்லைமிற்கான வழிமுறைகள் ஒன்றே. இங்கு கொடுக்கபட்டுள்ள வழிமுறையானது,
பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் - அறிவித்தல்
- நீங்கள் உங்களது ரீஇம்பர்ஸ்மென்ட் க்லைமை மருத்துவமனையில் இணைந்த 48 மணி நேரத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்.
- 1800-103-2292 எனும் எண்ணீற்கு தொடர்பு கொண்டோ அல்லது 5667700 எனும் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியோ அல்லது www.bharti-axagi.co.in மெயில் அனுப்பியோ தெரிவித்திருக்க வேண்டும்.
மருத்துவமனையில் இணைந்த விவரங்களுடன் மருத்துவ சிகிச்சை விவரங்கள் மற்றும் பாலிசியின் விவரங்கள்
- பாலிசிதாரரின் பெயர்
- சிகிச்சை பெறும் நபரின் பெயர்
- கஸ்டமர் எண்
- மருத்துவமனை மற்றும் சிகிச்சை குறித்த விவரங்கள்
- மருத்துவமனையில் இணைந்த தேதி
- எதிர்பார்க்கபடும் க்லைம் தொகை, ரீஇம்பர்ஸ்மென்ட் க்லைம் படிவம்
- மருத்துவமனையில் தங்க வேண்டிய/ பரிசொதனைகாளுக்கான/ ஆலோசனை செய்த மருத்துவர் பரிந்துரை செய்த கடிதம்
- மருத்துவமனை ரசீதுகல் மற்றும் டிஸ்சார்ஜ் ஆவணம்
- பரிசோதனை முடிவுகள் மற்றும் அதற்கான ரசீதுகள்
- போலிஸ் ஏஃப் ஐ ஆர் அல்லது போஸ்ட்மாடர்ம் ஆவணம் ( இருப்பின்)
- இன்சுரரால் கேட்கப்பட்ட இதர ஆவணங்கள்
- க்லைம் ப்ராசசிங் : உங்களது ஆவணங்கள் மற்றும் படிவங்கள் பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சரிபார்க்கும். சரிபார்த்த பின் டி பி ஏ உங்களை தொடர்பு கொள்வர்.
- க்லைம் செட்டில்மென்ட் : உங்களது க்லைம் ஒப்புதல் பெற்றவுடன் க்லைம் தொகை அதிகபட்சமாக 21 வேலை நாட்காளுக்குள் உங்களுக்கு கிடைக்கும். ஒருவேளை கிளைம் நிராகரிக்கப்பட்டால் பாலிசிதாரருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
- பூர்த்தி செய்யப்பட்ட க்ளைம் படிவம்
- மருத்துவமனையின் ரசீதுகள், படிவங்கள் மற்றும் டிஸ்சார்ஜ் ஆவணங்கள்
- மருத்துவர் அல்லது கெமிஸ்ட் தந்த முழுமையான மருத்துவ ரசீதுகள்
- பரிசோதனை முடிவுகள், ரசீதுகள் மற்றும் பரிசோதனைக்கு ஊக்குவித்த மருத்துவ படிவம்
- அறுவை சிகிச்சையின் காரணம், தற்போதய நிலை மற்றும் அதற்கான ரசீதுகள் மற்றும் பில்கள்
- நோயின் தன்மையை கண்டறிந்த மருத்துவரின் நோயின் தன்மையை பற்றிய எழுத்து பூர்வ பதிவு
- காப்பீடு செய்யப்பட்டவரின் மருத்துவ வரலாறு
- ஆலோசனை மர்ரும் சிகிச்சை வழங்கும் மருத்துவர் மற்றும் மருத்துவர்களின் சான்று.
- ஆம்புலன்ஸ் செலவுகள் ரசீதுகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் உண்மையான படிவங்களையே சமர்ப்பிக்க வேண்டும். அவற்றின் நகலை அல்ல. அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆர்வங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும், இவை திட்டத்திற்கு திட்டம் மாறுபடும்.
பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை ஆன்லைனில் புதுப்பித்தல்
பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை புதுப்பிப்பதற்கு நாம் பாலிசிபஜார் இன்சூரன்ஸ் ப்ரோக்கர் பிரைவேட் லிமிட்டட் எனும் அதன் துணை நிறுவனத்தின் உதவியுடன் பாலிசிபஜாரின் இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த திட்டத்தினை புதுப்பித்துக் கொள்ளலாம்.
- முதலில், பாலிஸிபஜார்.காம் எனும் பாலிஸிபஜாரின் உண்மையான இணையதளத்திற்கு செல்லவும்.
- இணையதளத்தில் உள்ள ரீநியூ யுவர் பாலிசி எனும் பட்டியலினை தேர்வு செய்யவும்.
- பின்பு, அதில் ஹெல்த் ரீநியூவல் என்பதை தேர்வு செய்யவும்
- அது ஒரு பயனர் உள்நுழைவு பக்கத்தற்கு உங்களை அழைத்து செல்லும்.
- அதில் உள்நுழைய, தங்களது பாலிசி எண் அல்லது பாலிசிதாரரின் தொலைபேசி எண்ணினை உள்ளீடு செய்யவும்.
- பாரதி ஆக்சா ஹெல்த் இன்சூரன்ஸ் திட்ட விவரங்கள் மற்றும் பாலிசிதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரின் விவரங்களை புதுப்பிக்கவும்
- கூடுதல் பாதுகாப்புகளை சேர்க்கலாம்.
- ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருக்கும், கூடுதல் பாதுகாப்புகளை நீக்கலாம்.
- ஆன்லைனில் புதுப்பித்தலுக்கான பிரிமியம் தொகையை செலுத்தவும்.
- இன்சூரன்ஸ் நிறுவனம் தங்களது பாலிசியை உடனே புதுப்பித்துவிடும் .
தொடர்பு விவரங்கள் :
பாலிசி பஜார்
- ஈ மெயில் : care@policybazaar.com
- தொலைபேசி எண் : 1800-258-5970 & 1800-208-8787
பாரதி ஆக்சா வாடிக்கையாளர் கஸ்டமர் கேர்:
- ஈ மெயில்: customer.service@bharti-axagi.co.in
- தொலைபேசி எண் :1800-103-2292
- காப்பீடு வாங்க - 080-49010222
- காப்பீடு உறுதிப்படுத்த -080-49123900