டெர்ம் காப்பீடு கால்குலேட்டர் என்பது நீங்கள் விரும்பிய தொகையை உறுதி பணமாக அடைய மாதம் எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் ஒரு கருவியாகும். இது டெர்ம் காப்பீடு திட்டம் வாங்க நினைப்பவர்களுக்கு மிகவும் உபயோகமானது மட்டும் இன்றி சுலபமானதும் கூட.
#All savings and online discounts are provided by insurers as per IRDAI approved insurance plans | Standard Terms and Conditions Apply
By clicking on "View plans" you agree to our Privacy Policy and Terms of use
~Source - Google Review Rating available on:- http://bit.ly/3J20bXZ
உங்கள் துரதிர்ஷ்டவசமான மரணத்திற்குப் பின்னரும் கூட நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு கொடுக்க நினைக்கும் தொகையை கணக்கிட இந்த டெர்ம் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர் உதவுகிறது.
காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர் நீங்கள் காப்பீடு நிறுவனத்திற்கு எவ்வளவு பிரீமியம் கட்டவேண்டும் என்பதை நிர்ணயிக்கும். இந்தியாவில் பல காப்பீடு நிறுவனங்கள் இருப்பதால், இந்த டெர்ம் காப்பீடு கால்குலேட்டர் பல்வேறு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கவும் அதன்மூலம் உங்கள் தேவைக்கு ஏற்ற சிறந்த காப்பீடு திட்டத்தை தேர்ந்தெடுக்கவும் வழிவகுக்கிறது.
நீங்கள் அருகில் இல்லாவிட்டாலும் உங்கள் குடும்பத்தை பாதுகாத்திடுங்கள். டெர்ம் காப்பீடு திட்டத்தை வாங்க எவ்வளவு பிரீமியம் ஒரு தனிநபர் செலுத்தவேண்டும் என்பதை கணக்கிட இணையதளத்தில் பல்வேறு காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர்கள் உள்ளனத. இதனை நமது தேவைக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கமுடியும்.
காப்பிட்டாளர்களின் பல்வகை தேவைகளை அனுசரிக்க பல்வகை பிரீமியம் கால்குலேட்டர்கள் உண்டு. அவை என்னன்ன என்று இப்போது பார்க்கலாம்.
உங்கள் வயது மற்றும் தேவைக்கு ஏற்ப நீங்கள் எவ்வளவு பிரீமியம் கட்டவேண்டும் என்பதை இந்த டெர்ம் காப்பீடு திட்டம் பிரீமியம் கால்குலேட்டர் கணிக்க உதவும்
நீங்கள் காப்பீடு திட்டங்களில் போட்டுள்ள முதலீடுகளை ஆய்வு செய்யவும் பின்னாளில் எவ்வளவு வளரும் என்ற கணிப்புகளை வழங்கவும் இந்த முதலீடு திட்டம் பிரீமியம் கால்குலேட்டர் உதவுகிறது.
இந்த டெர்ம் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர் நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதம்தோறும் நிலையான ஓய்வூதியம் பெற, இன்று எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை கணிக்க உதவுகிறது
உங்கள் குழந்தைக்கான கல்வி, திருமணம், மற்றும் இதர செலவுகளை சமாளிக்க இன்று எவ்வளவு பணம் பிரீமியம் செலுத்தவேண்டும் என்பதை கணிக்க இந்த குழந்தைகள் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர் உதவுகிறது
எது சரியான திட்டம் என்பது தெரியாமல் தேடி கொண்டு இருந்தீர்களானால் இந்த டெர்ம் காப்பீடு கால்குலேட்டர் உங்களுக்கு மிகவும் அவசியமானது. இது நீங்கள் பல்வேறு திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்கான சிறந்த டெர்ம் காப்பீடு திட்டம் எது என்பதை நிர்ணயிக்க உதவுகிறது. இந்த டெர்ம் காப்பீடு கால்குலேட்டரின் முக்கியமான நன்மைகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
எனவே உங்கள் டெர்ம் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டரை அறிவுபூர்வமாக உபயோகியுங்கள், ஏனென்றால், நீங்கள் எந்த பிரீமியம் சிறந்தது என்பதை குறித்து யூகிப்பதில் செலவிடும் நேரம் நீங்கள் டெர்ம் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டரில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய எடுக்கும் இரண்டு நிமிடத்தை விட மிகவும் அதிகமானது. டெர்ம் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர் வேகமானது மற்றும் ஒப்பீடு செய்ய எளிமையான கருவி மட்டுமின்றி துல்லியமானதும் கூட.
டெர்ம் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டரை உபயோகிப்பது எப்படி?
டெர்ம் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டரில் தேவையான விவரங்களை பதிவு செய்து பிரீமியம் மேற்கோள்களை பெறுவதற்கு பத்து நிமிடத்திற்கு மேல் ஆகாது.
3 எளிய படிகளில் இந்த கால்குலேட்டரை பயன்படுத்துவது எப்படி என்பது இங்கே:
படி 1: உங்களின் பிறந்த தேதி, பாலினம், திருமண நிலை, ஆண்டு வருமானம், குழந்தைகளின் எண்ணிக்கை, ஆயுள்காப்பீடு அளவு போன்ற சுய விவரங்களை பதிவு செய்யவும். உங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் குறித்தும் படிவத்தில் கேட்கப்படலாம்.
படி 2: நீங்கள் பிற்காலத்தில் எவ்வளவு உறுதி பணம் அடைய விரும்புகிறீர்கள் மற்றும் எத்தனை வருடத்தில் அடைய விரும்புகிறீர்கள் என்பதை பதிவிட வேண்டும். மேலும், உங்கள் குடும்பத்தாருக்கு எந்த வகையில் இந்த தொகை தேவைப்படும் எனவும் தெளிவுபடுத்த வேண்டும் - ஒருமுறை கணிசமான தொகையாகவா? அல்லது மாதாந்திர வருமானமாகவ?). பட்டனை அழுத்திவிட்டு முடிவுக்கு காத்திருங்கள்.
படி 3: டெர்ம் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர் நீங்கள் பதிவிட்ட விவரங்களின் அடிப்படையில் உங்களுக்கு சில காப்பீடு திட்டங்களை பரிந்துரைக்கும். இதனை திட்டவட்டமாக ஒப்பிட்டுப் பார்க்கவும். சிறந்த காப்பீடு திட்டத்தை தேர்வு செய்து வாங்க தொடரவும்.
எங்கள் டெர்ம் காப்பீடு கால்குலேட்டரை உபயோகிப்பதன் மூலம் துல்லியமாக கணிக்கவும் எளிதாக ஒப்பிட்டு பார்க்கவும் முடியும், இதன் மூலம் பிற்காலத்தில் எழும் சந்தேகங்களைத் தவிர்க்கலாம். உங்களுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் தொகைக்கான திட்டத்தை இப்பொழுதே துல்லியமாக வாங்கலாம். உங்கள் எதிர்காலத்தின் திட்டமிடல் வெறும் மூன்று படிகளே தள்ளி உள்ளது.
எளிமையான முறையில் கூற வேண்டுமென்றால், ஆயுள் காப்பீடு திட்டங்கள், காப்பீட்டாளர் இறக்கும்படி நேர்ந்தால் அவரது குடும்பத்தினருக்கு நிதி பாதுகாப்பு கொடுப்பதற்கே ஆகும். மேலும் ஆயுள் காப்பீடு திட்டங்கள், ஒரு சேமிப்பு கருவியாகவும், ஓய்வூதிய நிதி ஆகவும், ஆஸ்தி திட்டமாகவும், முதலீடு திட்டமாகவும் செயல்படுகின்றது. மேலும் ஆயுள் காப்பீடு திட்டங்கள் வரி சலுகையும் தருகின்றன.
ஆயுள் காப்பீடு பாலிசி வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோலவே திட்டத்தின் தொடர்ச்சியான நன்மைகளைப் பெற பாலிசியின் பிரீமியம் செலுத்துவது மிகவும் முக்கியமானது. பாலிசிதாரர் பிரீமியத்தை மாதாந்திர, அரையாண்டு, காலாண்டு மற்றும் ஆண்டு தோறும் போன்ற பல்வேறு இடைவெளியில் செலுத்தலாம். பாலிசியின் உத்தேசமான பிரீமியம் வீதத்தை கண்டறிய பாலிசிதாரர்கள் ஆயுள் காப்பீடு கால்குலேட்டரை பயன்படுத்தலாம்.
ஒரு பாலிசி பிரீமியம் விகிதம் திட்டத்தைப் பொறுத்தும் விண்ணப்பதாரரின் சான்றுகளை பொருத்தும் கணிக்கப்படுகின்றது. பொதுவாக இளம் காப்பீட்டாளர்களின் பிரீமியம் விகிதம் ஐம்பதுகளில் இருக்கும் பாலிசிதாரர்களின் பிரிமியம் விகிதத்தை விட சிறிது குறைவு. இது ஏனென்றால் இளம் வயதினர் வயது முதிர்ந்தோரை காட்டிலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால், காப்பீடு நிறுவனத்திற்கு குறைந்த நெருக்கடியை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது. இது தவிர பாலிசியின் பிரீமியம் விகிதத்தை நிர்ணயிக்கும் பல்வேறு காரணிகள் உண்டு.
காப்பீடு எடுக்க திட்டமிட்டு உள்ளவர்கள் காப்பீடு கால்குலேட்டரை உபயோகித்து மிகவும் நன்மை அளிக்கக்கூடிய திட்டத்தை குறைந்த பிரீமியம் விகிதத்தில் பெறலாம். இருப்பினும், பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தும்போது பாலிசிதாரர்கள் பின்வரும் விபரங்களை பதிவிட வேண்டும்:
இந்த விவரங்களை பதிவிட்ட பின்னர் காப்பீட்டாளருக்கு உத்தேசமான பிரீமியம் தொகை கிடைக்கும்.
டெர்ம் காப்பீடு திட்டத்தின் பிரீமியத்தை கணிப்பதற்கு முன்னால் பின்வரும் காரணிகளை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
புதுப்பித்தல் பிரீமியம்களை செலுத்தவேண்டிய இடைவெளி பிரீமியம் கட்டு இடைவெளி என்று அழைக்கப்படுகிறது. டெர்ம் காப்பீடு பிரீமியம் கட்டணங்களை ஆண்டுதோறும், அரையாண்டுதோறும், காலாண்டுதோறும், அல்லது மாதாந்திரமாக கட்டலாம்.
காப்பீட்டாளர்கள். காப்பீடு கால்குலேட்டர் துணையுடன் பாலிசியில் பிரீமியம் விகிதத்தை கணிக்கலாம். காப்பீடு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் பிரீமியத்தை சரியான நேரத்தில் செலுத்த பல்வேறு வழிமுறைகளை கொடுக்கின்றன. அவற்றுள் சில காப்பீடு பிரீமியம் கட்டண வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம்:
டெர்ம் காப்பீடு பிரீமியம் விகிதங்கள்
டெர்ம் ஆயுள் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர் நிர்ணயிக்கும் காப்பீடு பிரீமியம் விகிதங்கள், நீங்கள் காப்பீடு பாலிசி வாங்குவதற்கு செலுத்தும் தொகை ஆகும். இது காப்பீடு கணிப்பாளர்கள் என்ற நிபுணர்களால் கணக்கிடப்படுகிறது. இந்த டெர்ம் காப்பீடு பிரீமியம் விகிதங்கள் பாலிசியின் சலுகைகளை செலுத்துவதற்கு போதுமானதாகவும் சமமாகவும் இருக்க வேண்டும், மற்றும், காப்பீடு நிறுவனத்தின் நஷ்டம் ஏற்கும் அளவை பொருத்ததுமாகும். டெர்ம் காப்பீடு பிரீமியம் விகிதங்கள் பின்வரும் காரணிகளால் நிர்வகிக்கப்படுகிறது:
டெர்ம் காப்பீடு கால்குலேட்டர் அதிகம் கேட்கப்படும் கேள்விகள்
கேள்வி: ஒருவருக்கு எவ்வளவு ஆயுள் காப்பீடு வேண்டும் என்பதை எப்படி கணிப்பது?
விடை: ஒருவர் அவருக்கு தேவையான ஆயுள் காப்பீடு எவ்வளவு என்பதை இணையத்திலேயே காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர் மூலம் கணிக்கலாம். இதில் பெயர், வயது, பாலினம், தொழில் வகை, திருமண நிலை, போன்ற சில சுய விவரங்களை பதிவிட வேண்டும். இதனடிப்படையில் கால்குலேட்டர் சிறந்த காப்பீட்டு திட்டம் எதுவென்ற முடிவுகளை பகிரும்.
கேள்வி: ஆயுள் காப்பீடு தொகையை எவ்வாறு கணக்கிடுவது?
விடை: ஆயுள் காப்பீட்டை வாங்க எவ்வளவு தொகை ஆகும் என்று கணக்கிட காப்பீட்டை கோரும்போது தங்களின் வயது, உடல்நிலை, எதிர்பார்க்கும் உறுதி பணம், மற்றும் பாலிசியின் கால அவகாசம் போன்ற காரணிகள் உதவும். இருப்பினும் நீங்கள் புதியதாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கருவியை உபயோகிக்கலாம். அது யாதெனில், உறுதி பணம் எவ்வளவு என்பதை கணிக்கும் டெர்ம் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர்.
கேள்வி: காப்பீடு பிரீமியத்தை எவ்வாறு கணிக்க வேண்டும்?
விடை: உங்களுக்கு ஆயுள் காப்பீடு கால்குலேட்டரில் வரும் இறுதிப் பிரீமியம் தொகையும் உங்களிடமிருந்து இறுதியாக வசூலிக்கப்படும் பிரிமியம் தொகையும் சிறிது வேறுபட்டு இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். உங்கள் பிரீமியமை பாதிக்கக்கூடிய சில முக்கிய காரணிகள் யாதென்று பார்த்தால் உங்கள் வயது, பாலினம், மருத்துவ வரலாறு, வேலை, வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கையின் பிரிவு (முழு வாழ்க்கை அல்லது கால) மற்றும் பல.
கேள்வி: ஆயுள் காப்பீடு உறுதி பணம் எவ்வாறு கணிக்கப்படுகிறது?
விடை: உங்களது தற்சமய செலவுகள் அல்லது பண கடன்களை கணித்து அதில் மொத்த கடன்களை கூட்டி உங்கள் அசையும் சொத்துக்களை கழித்து மீதம் வருவதை கொண்டு உங்கள் ஆயுள் காப்பீடு உறுதி பணம் கணக்கிடப்படுகிறது. மேலும், ஏதேனும் முக்கியமான செலவுகள் அல்லது நிலுவையில் உள்ள பொறுப்புகளை சேர்த்து இறுதியாக கிடைக்கும் உறுதி பணத்தை கணிக்க வேண்டும்.
கேள்வி: ஆயுள் காப்பீடு பண மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது?
விடை: ஆயுள் காப்பீடு பண மதிப்பை கணக்கிட ஒரு எளிய வழி நீங்கள் எத்தனை வருடம் மற்றும் எத்தனை தவணை பிரீமியம் செலுத்தி உள்ளீர்கள் என்பதை கணிப்பதே ஆகும். அந்தத் தொகையை கணித்த பின்னர் அதன்மேல் 2.5 - 3.5% வட்டி விகிதத்தை சேர்த்து கொள்ளுங்கள். எனினும் நீங்கள் தேர்ந்தெடுத்த உறுதி பணம் மற்றும் செலுத்திய பிரீமியமால் இது மாறக்கூடும். எனினும் உங்களுக்கு உத்தேச தோராயம் கிடைக்கும்.
கேள்வி: டெர்ம் காப்பீடு மதிப்பைக் கணக்கிடுவது எப்படி?
விடை: பின்வரும் குறிப்புகளை மனதில் கொண்டு ஒரு டெர்ம் திட்டம் பிரீமியம் கால்குலேட்டர் கொண்டு உங்கள் ஆயுள் காப்பீடு மதிப்பை கணக்கிடலாம். 1. உங்களது தற்சமய செலவுகளையும் பண கடன்களையும் கூட்டிக் கொள்ளுங்கள் 2. அடுத்ததாக அனைத்து நிதி கடன்களையும் கூட்டிக்கொண்டு அதில் உங்கள் அசையும் சொத்துகளைக் கழித்து விடுங்கள். 3. பிற்காலத்தில் வர இருக்கும் ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் அல்லது பொறுப்புகள் இருந்தால் அதன் செலவுகளையும் இதில் கூட்டிக் கொள்ளுங்கள்.
கேள்வி: ஆயுள் காப்பீடு பிரீமியம் இந்தியாவை கணக்கிடுவது எப்படி?
விடை: உங்கள் பிரீமியம் தொகையை தரும் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர் கொண்டு பின்வரும் மூன்று படிகளில் நிர்ணயிக்கலாம்
கேள்வி: டெர்ம் காப்பீடிற்கு ஆகும் செலவை எவ்வாறு கணிப்பது?
விடை: ஒரு காப்பீட்டாளருக்கு ஆகும் ஆயுள் காப்பீடு திட்டத்தின் செலவு காப்பீடு நிறுவனங்களால் பாலினம், வயது, இடம் மற்றும் பல அபாய காரணிகள் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த காரணிகளின் ஒட்டிய செலவை பல்வேறு கணக்கு மாதிரிகள், வரலாற்று போக்குகள் மற்றும் பிற முக்கிய காரணிகள் கொண்டு கணக்கிட படுகிறது
கேள்வி: ஆயுள் காப்பீடு இறுதி தொகையை கணக்கிடுவது எப்படி?
விடை: தொழில்நுட்ப ரீதியில் அலசினால் பாலிசைதாரர் இறந்த பின் அவரது நாமினி இறப்பு பயன் கோரிக்கையை தாக்கல் செய்த பின்னரே ஆயுள் காப்பீடு இறுதி பணம் கொடுக்கப்படுகிறது.