எவ்வளவு ஆயுள் காப்பீடு மதிப்பீடு உங்களுக்கு தேவை என, ஒரு பாலிசியை வாங்குவதற்குமுன் மதிப்பிடுதல் முக்கியமானதாகும். எனினும், பெரும்பாலானோர் அவர்களுக்குத் தேவையான ஆயுள் காப்பீடு விவரம் மதிப்பீட்டைத் தெரிந்து கொள்வதில் சிரமப்படுகின்றனர். காப்பீடு விவர அறிக்கை கணக்கீடு மதிப்பீடுகள் தெரிந்துகொள்ள பல்வேறு வகைகள் இருக்கின்றன.
இந்த வழிமுறையின் மூலம், ஒருவர் வாங்க வேண்டிய ஆயுள் காப்பீட்டு தொகை, பொருளாதார சராசரி மதிப்பீட்டுக்கு நேரடியாக விகிதாசாரிக்கப்படுவதே மனித வாழ்க்கை மதிப்பீடு ஆகும். ஒரு தனி மனிதனின் வாழ்க்கைக்கு நடப்பு விலை வீழ்ச்சி மதிப்பில் முதலீட்டு மதிப்பைக் கணக்கிடுதல் வேண்டும். மனித வாழ்க்கை மதிப்பீடு மூன்று காரணிகளைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. அவையாவன: வயது, நடப்பு மற்றும் எதிர்கால செலவுகள், மற்றும் வருமானங்கள் ஆகும். இதனை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 40 வயது மதிப்புள்ள ராகுல் என்பவரின் வருட வருமானம் 5 லட்சம். ஒரு வருடத்திற்கான அவரது சுய செலவு 1.3 லட்சம். மீதம் 3.7 லட்சம் அவருடைய குடும்பத்திற்காகச் செலவு செய்கின்றார். இதில் 3.70,000 லட்சம் ராகுலின் 3 பொருளாதார மதிப்பு. இந்த கணக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மொத்த வருமானம் |
5 லட்சம் |
சுய செலவு |
1 லட்சம் |
வரி செலுத்துதல் |
15,000 |
இன்சூரன்ஸ் தொகை |
15,000 |
ஓய்வு வயது |
60 |
குடும்பத்திற்கான கூடுதல் வருமானம் |
3.7 லட்சம் |
எதிர்ப்பார்ப்பு வருமானம் |
8% |
உழைப்பு காலம் |
20 வருடங்கள் |
மனித வாழ்க்கை மதிப்பு |
3.9 லட்சம் |
உங்கள் மனித வாழ்க்கை மதிப்பை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்
இது அடிப்படை ஆயுள் காப்பீடு கணக்கீட்டு முறையாகும். இது ஆண்டின் வருமானத்தைக் அடிப்படையாகக் கொண்டது.
தேவைப்படும் ஆயுள் காப்பீடு: ஆண்டு வருமானம் * பணியிலிருந்து ஓய்வுபெற மீதம் இருக்கும் வருடங்கள்.
உதாரணத்திற்கு, உங்கள் வருட வருமானம் 4 லட்சம், உங்கள் தற்போதைய வயது 30, மற்றும் இன்னும் 30 வருடங்களின் நீங்கள் பணியிலிருந்து ஓய்வுபெற முடிவெடுத்திருந்தால், உங்களுக்குத் தேவைப்படும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் 12 கோடி (4,00,000*30)
இந்த முறையில் தினசரி குடும்ப செலவுகள் மற்றும் குடும்பத்தின் இளைய உறுப்பினரின் ஆயுள் எதிர்பார்ப்பு போன்றவற்றை சார்ந்து கணக்கிடப்படும். மதிப்பீடு செய்வதற்கு முக்கியமான காரணிகள்:
மேலே கொடுக்கப்பட்டுள்ள செலவுகளை கணக்கிட்டால் ஒருவேளை நீங்கள் மரணித்தால் உங்கள் குடும்பத்திற்கு தேவையான செலவுகளை கணக்கிடமுடியும். பின்னர் நீங்கள் ஏற்கனவே வைத்துள்ள ஆயுள் காப்பீட்டு பாலிசி மற்றும் சொத்துகளை அதிலிருந்து களிக்கவும். இதன்மூலம் கிடைக்கப்படும் தொகைதான் நீங்கள் பூர்த்தி செய்யவேண்டிய இடைவெளி ஆகும். இன்சூரன்ஸ் முதலீட்டு சொத்தில் தங்குமிடம், கார் போன்றவை அடங்காது.
தேவை ஆய்வு மனித வாழ்வு மதிப்பை விட சிறந்த கருவியாக கருதப்படுகிறது. ஏனென்றால், தேவை ஆய்வு வாழ்வின் வெவ்வேறு நேரங்களில் எழும் நிதி தேவையை கணக்கில் எடுத்து கொள்கிறது. ஆனால், மனித வாழ்வு மதிப்பு, ஒருவர் தம் வாழ்நாள் முழுதும் ஒரே வருவாய்யே ஈட்டுவார் என்று கருதுவதால் முழு நிலைமையை நம்மால் உணர முடியவில்லை. மேலும் தேவை ஆய்வு மூலம் ஒருவரது ஓய்வு தேவைகளையும் கணிக்க முடியும்
இந்த வழியின் கீழ் ஒருவர் அவரது வயதிற்கேர்ப்ப ஆண்டு வருமானத்தின் பெருக்காக தொகையை காப்பீடில் போட வேண்டும். உதாரணத்திற்கு 20 முதல் 30 வயதிலானவர்கள் தங்கள் வருட வருமானத்தின் 25 பெருக்காக ஆயுள் காப்பீடு திட்டத்தில் போட வேண்டும். அது போல 40 முதல் 50 வயதிலாணவர்கள் தங்கள் வருட வருமானத்தின் 20 பெறுக்காக ஆயுள் காப்பீடு திட்டத்தில் போட வேண்டும்
இந்த கூற்றின் படி குடும்ப தலைவரின் வருட வருமானத்தின் 6 சதவீதம், மேலும் தம்மை சார்ந்துள்ள ஒவோருவருக்கும் 1% கூடுதலாக ஆயுள் காப்பீடு திட்டத்திற்கு செலவழிக்க வேண்டும். உதாரணமாக உங்கள் மொத்த வருட வருமானம் 5 லட்சம் மற்றும் இருவர் - மனைவி மற்றும் குழந்தை உங்களை சார்ந்து இருக்கிறார்கள். உங்கள் ஆய் காப்பீடு பிரீமியம் ரூபாய் 40,000 (6*500000+1*500000*2)
ஆயுள் காப்பீடு தொகை காலத்திற்கேற்ப மாற்ற வேண்டியது அவசியமாகும். எனவே, உங்களது காப்பீடு தேவைகளை பரிசீலித்து பார்ப்பது அவசியம். மேலும், மேற்கூறிய வழிமுறைகள் தோராயமான மதிப்பை மட்டுமே கூறும். உங்களது இறுதி காப்பீடு கோப்பு உங்கள் நிதி நிலைமையை பொறுத்தே நிர்ணயிக்க பட வேண்டும்.
மேலும் படியுங்கள்: உங்கள் காப்பீடு தொகை குறைவாக உள்ளதா?