*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply
Who would you like to insure?
மாக்மா ஹெச் டி ஐ ஜெனெரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் இன் திட்டங்களில் ஒன்று மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் திடீர் மருத்துவ செலவுகள் மற்றும் உடல்நல குறைவுகள் ஆகிய சமயங்களில் நமக்கு உறுதுணையாக இருக்கின்றது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ உதவிகளை பெறுவதற்கு தேவைப்படும் நிதி உதவிகளையும் பெற முடியும். இத்திட்டத்தின் முக்கிய அம்சமே, இது தனிநபர் மற்றும் அவரது குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு வழங்குகிறது.
மாக்மா ஹெச் டி ஐ ஜெனெரல் இன்சூரன்ஸ் கம்பெனி , இந்தியாவின் மாக்மா பின்கார்ப் லிமிடெட் ( பூனாவாலா பின்கார்ப் லிமிடெட்) மற்றும் ஜெர்மனியின் ஹெச் டி ஐ க்ளோபல் எஸ் ஈ உடைய கூட்டு முயற்சியாகும். இந்த கம்பெனி இந்தியாவிலேயே மிக முக்கியமான இன்சூரர் ஆவதை தனது நோக்கமாக கொண்டுள்ளது.
மாக்மா ஹெச் டி ஐ ஜெனெரல் இன்சூரன்ஸ் கம்பெனியானது ஹெல்த் இன்சூரன்ஸ், மோட்டார் இன்சூரன்ஸ்,ஹௌஸ்ஹோல்டர் இன்சூரன்ஸ், பர்க்லரி இன்சூரன்ஸ், மரைன் இன்சூரன்ஸ், பயர் இன்சூரன்ஸ் போன்ற பல திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த கம்பெனி நாடு முழுவதும் 130 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் திட்டங்களின் மூலம் எல்லா தரப்பட்ட மக்களும் மருத்துவ உதவியை மிக எளிதாக பெறுகிறார்கள்.
இந்த கம்பெனி மக்களுக்கு பெரும் அளவில் உதவி புரிந்து வருகிறது. அதன் இந்த சேவைக்கு பரிசாக பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளது. அவையாவன: இந்தியா இன்சூரன்ஸ் அவார்ட் மூலம் ரைசிங் ஸ்டார் கம்பெனி ஆப் தி இயர் 2020 ,பி எப் எஸ் ஐ எக்சலன்ஸ் அவார்ட் 2020 மற்றும் சிறந்த பி எப் எஸ் ஐ பிராண்ட் 2019.
அம்சங்கள் | குறிப்புகள் |
இணைப்பில் உள்ள மருத்துவமனைகள் | 4300+ |
முன்பேயுள்ள நோய்களுக்கான காத்திருப்பு காலம் | 3/4 வருடங்கள் |
இன்க்கர்ட் க்ளைம் விகிதம் ( எப் ஒய் 2019-20 ) | 72.87% |
புதுப்பித்தல் காலம் | வாழ்க்கை முழுவதும் |
க்ளைம் செட்டில்மென்ட் விகிதம் (எப் ஒய் 2020-21) | 94.41% |
ஒரு மனிதனுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் உடல்நல குறைவுகள் வரலாம். ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைவதன் மூலம் நாம் அத்தகு சூழல்களுக்கு எப்பொழுதும் தயாராகவே இருக்கலாம். மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் குறைந்த பிரிமியம் தொகையில், அதிக பாதுகாப்பு வசதிகள் மற்றும் பல மருத்துவ நன்மைகளையும் வழங்குகிறது. இத்திட்டங்கள் மக்களின் தேவைகளை பொறுத்து தனித்துவமாக மட்டுமன்றி மிகவும் அதிகமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்சின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.
மாக்மா ஹெச் டி ஐ ஒன்ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம்., தனிநபர் மற்றும் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவைப்படும் மருத்துவ வசதிகளை பெற வழிவகுக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தேவையான மருத்துவ உதவிகளையும் நன்மைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் பெறமுடியும். மேலும் எதிர்பாரா நேரங்களில் ஏற்படும் மருத்துவ தேவைகளுக்கு உண்டாகும் செலவுகளையும் கவனித்துக்கொள்வதுடன் தேவையான நிதி பாதுகாப்பு உதவிகளையும் செய்கிறது. இத்திட்டம் தனித்தனியான வேறுபாடுகளுடன் ஐந்து பெருங்ககூறுகளை கொண்டு விளங்குகிறது. அவை- சப்போர்ட், செக்யூர் , சப்போர்ட் பிளஸ், ஷீல்டு, ப்ரீமியம்.
பிரிவு | தகுதி வரம்பு |
குறைந்தபட்ச வயது | பெரியவர் -18 வயது குழந்தை - 5 வயது (தனிநபர் திட்டம்), 91 நாட்கள் (பிளோட்டர் திட்டம் ) |
அதிகபட்ச வயது | பெரியவர் - 65 வருடங்கள் குழந்தைகள் - 26 வருடங்கள் |
காப்பு தொகை | Rs 2 லட்சம் முதல் 1 கோடி வரை |
நன்மை பெறும் குடும்ப உறுப்பினர்கள் | பாலிசிதாரர்,அவரது இணை (கணவன்/மனைவி),அவரது குழந்தைகள்,பெற்றோர்,
இணையின் பெற்றோர்கள், அவரது உடன்பிறப்புகள், அவரது பேரக்குழந்தைகள், அவரது மருமகன் அல்லது மருமகள் |
சாலை விபத்துகளினால் ஏற்படும் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிப்புகளுக்கு இந்த திட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. இத்திட்டம் மருத்துவ உதவி பெற்று தருவது மட்டுமன்றி விபத்தினால் ஏற்படும் நிரந்தர/ நிரந்தரமற்ற காயங்கள் மற்றும் உடலுறுப்பு இயலாமை அல்லது அகால மரணம் ஆகிய சூழல்களில் இழப்பீடும் வழங்குகிறது. இத்திட்டம் மூன்று வகைகளை கொண்டது. அவை - பேசிக் , வைடர் , காம்ப்ரெஹென்சிவ் .
பிரிவு | தகுதி வரம்பு |
குறைந்தபட்ச வயது | பெரியவர்கள்- 18 வயது குழந்தைகள் - 5 வயது |
அதிகபட்ச வயது | பெரியவர்கள்- 65 வருடங்கள் குழந்தைகள் - 23 வருடங்கள் |
காப்பு தொகை | Rs 1 லட்சம் முதல் Rs 5 கோடி வரை |
நன்மை பெறும் குடும்ப உறுப்பினர்கள் | பாலிசிதாரர்,அவரது இணை ( கணவன் / மனைவி), அவரது குழந்தைகள், அவரது பெற்றோர்,அவரது இணையின் பெற்றோர்கள் |
மாக்மா ஹெச் டி ஐ ஆரோக்யா சஞ்சீவினி திட்டமானது முன்பேயுள்ள நோய்கள் மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் நோய்கள் ஆகியவற்றிற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள நேரும் சூழல்களில் தேவைப்படும் மருத்துவ உதவிகள் மற்றும் அதனை நிறைவேற்ற அத்தியாவசியமாகிய நிதி நன்மைகளையும் பெறுவதற்கு மிகவும் உதவிகரமாக விளங்குகிறது.இத்திட்டத்தின் மூலம் ஒருவர் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் தேவையான மருத்துவ உதவிகளை நிதி நெருக்கடி இன்றி செய்து தர முடியும்.
பிரிவு | தகுதி வரம்பு |
குறைந்தபட்ச வயது | பெரியவர்கள்- 18 வயது குழந்தைகள் - 90 நாட்கள் |
அதிகபட்ச வயது | பெரியவர்கள்- 65 வருடங்கள்
குழந்தைகள் - 25 வருடங்கள் |
காப்பு தொகை | Rs 50,000 முதல் Rs 10 லட்சம் வரை |
நன்மை பெறும் குடும்ப உறுப்பினர்கள் | பாலிசிதாரர்,அவரது இணை ( கணவன்/மனைவி), அவரது குழந்தைகள், அவரது பெற்றோர்,அவரது இணையின் பெற்றோர்கள் |
மாக்மா ஹெச் டி ஐ கொரோனா கவஷ் திட்டமானது கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உடல்நல குறைவுகளினால் உருவாக்கப்படும் மருத்துவ உதவிகளை பெறும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.இது கோவிட்-19 தொற்றின் போது தேவைப்படும் மருத்துவ வசதிகள், மருத்துவ உபகரண தேவைகள் மற்றும் மாஸ்க், ஆக்சிஜன், பரிசோதனை வசதிகள், தனிமைப்படுத்தி கொள்ளுதல் போன்ற சூழல்களில் உருவாகும் நிதி சுமைகளை உதவிகரமாக இருக்கின்றது.இது தனி நபர் ஹெல்த் இன்சூரன்சாக மட்டுமன்றி பிளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸராகவும் பணிபுரிகிறது.
பிரிவு | தகுதி வரம்பு |
குறைந்தபட்ச வயது | பெரியவர்கள்- 18 வயது குழந்தைகள் - 1 நாள் |
அதிகபட்ச வயது | பெரியவர்கள்- 65 வருடங்கள் குழந்தைகள் - 25 வருடங்கள் |
காப்பு தொகை | Rs 50,000 முதல் Rs 10 லட்சம் வரை |
நன்மை பெறும் குடும்ப உறுப்பினர்கள் | பாலிசிதாரர்,அவரது இணை ( கணவன் / மனைவி), அவரது குழந்தைகள், அவரது பெற்றோர்,அவரது இணையின் பெற்றோர்கள் |
பாலிசிதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை இந்த திட்டத்தின் மூலம் அடையலாம்.அவை:
இந்த திட்டத்தின் மூலம், ஒரு வேளை நோயாளி வீட்டை விட்டு வெளிவரும் நிலையில் இல்லை எனில், அவர் வீட்டிலிருந்தே மருத்துவ உதவிகளை சிறந்த முறையில் பெறமுடியும். தேவைப்படும் சிகிச்சை மற்றும் மருந்துகள் ஆகியவற்றினை சரியான நேரத்தில் பெறமுடியும். இதனால் உண்டாகும் நிதி நெருக்கடிகளையும் இந்த திட்டத்தின் மூலம் சமாளிக்கமுடியும்.
அல்லோபதி மட்டுமன்றி ஆயுஷ்,ஹோமியோபதி, சித்தா, யுனானி போன்ற இதர மருத்துவ முறைகளில் பெறப்படும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ உதவிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றது.
உடல்நல குறைவு மற்றும் எதிர்பாரா விபத்துகளினால் ஏற்படும் உடல்நல பாதிப்பு ஆகிய சூழல்களில் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளது. இதன் மூலம் மருத்துவமனையில் தங்குவதால் உண்டாகும் செலவுகளையும் (மருந்து , மருத்துவ பரிசோதனை க்கான செலவுகள் , மருத்துவர் கட்டணம், பராமரிப்பு செலவுகள் போன்றவை ) இத்திட்டம் ஏற்கிறது. தவிரவும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொருந்தி, மருத்துவமனையில் இஅணிவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செல்வுகளையும் ஏற்கிறது.
டே கேர் சிகிச்சையினால் ஏற்படும் மருத்துவ செலவுகளையும் இத்திட்டத்தின் நன்மைகளின் மூலம் சமாளிக்க முடியும்.இது பெரும்பாலும், நவீன மருத்துவ வசதிகளால், 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவ உதவிகளுக்கு பொருந்தும்.
பாலிசிதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது .அவை:
தற்கொலை, தற்கொலை முயற்சி. தன்னை தானே காயப்படுத்தி கொள்வதால் உண்டாகும் உடல்நலபாதிப்புகளை சரி செய்ய தேவைப்படும் மருத்துவ உதவிகளுக்கு உண்டாகும் செலவுகளுக்கு இந்த அத்திட்டம் உத்திரவாதம் அளிக்காது.
புரட்சி, போர், வெளிநாட்டு ஊடுருவல் போன்ற எந்தவொரு போர் கால சூழல்களில் ஏற்படும் மருத்துவ செலவுகளை இந்த திட்டம் ஏற்காது.
மது மற்றும் போதை பொருள் உபயோகத்தினால் உண்டாகும் உடல்நல குறைவுகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை இத்திட்டத்தின் கீழ் வராது.
எந்தவொரு உளவியல் மற்றும் மனநல சிகிச்சை முறைகளுக்கும் இந்த திட்டம் உதவி செய்யாது.
வேறு நோய்களுக்கு எடுக்கப்படும் சிகிச்சையின் ஒரு பகுதியாகவோ அல்லது விலங்குகளின் கடியில் இருந்து காத்துக்கொள்ள போடப்படும் தடுப்பூசிகளை தவிர வேறு எந்த விதமான தடுப்பூசிக்கும் இந்த திட்டடம் செயல்படாது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை திட்டத்திற்கு திட்டம் வேறுபடும். ஆகவே தங்களது பாலிசிக்கு உரிய திட்ட விவரங்களை நாங்கள படித்து தெரிந்து கொள்ளவும்.
மருத்துவ சிகிச்சைகளுக்கு ஏற்படும் பணம் மற்றும் நிதி செலவுகளுக்கான நன்மைகளை பெற வேண்டி விண்ணப்பிப்பதே க்ளைம் ஆகும்.அவற்றை இரண்டு வழிகளில் நாம் அடையலாம். ஒன்று, கேஷ்லெஸ் க்ளைம் மற்றும் இரண்டாவது ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம் ஆகும். அவற்றை இன்னும் விரிவாக கீழே காண்போம்:
இந்த திட்டத்தின் மூலம் இணைப்பில் உள்ள மருத்துவமனைகளில் உண்டாகும் மருத்துவ நிதியுதவிகளை நீங்கள் கேஷ் லெஸ் க்ளைம் முறை மூலம் எல்லா நன்மைகளையும் பெறமுடியும். அதற்கான வழிமுறைகள் :
ஏற்கனவே ஆலோசித்து மருத்துவமனையில் இணையும் சூழலில், இணைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பும், திடீரென்று மருத்துவமனையில் தங்குகின்ற சூழல்களில், மருத்துவமனையில் சேர்ந்த 24 மணி நேரத்திற்குள் 1800-266-3202 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
நோய் மற்றும் அதற்கான சிகிச்சை பற்றிய முழு ஆவணங்களையும் மருத்துவ விவரங்களையும் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும்.
மருத்துவமனையில் இருந்து இன்சூரருக்கு அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்படும். பின்னர் அனைத்து சான்றுகளும் இன்சூரரின் க்ளைம் செட்டிலேமென்ட் டீம் மூலம் சரிபார்க்கப்படும்.
அனைத்து சான்றுகளும் சரிபார்க்கப்படும் பொழுது, கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால் அதனையும் சமர்ப்பிக்க வேண்டிவரும். அவ்வாறு அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு , அவை அனைத்தும் உண்மையெனில் க்ளைமிற்கு ஒப்புதல் தரப்படும்.
வாடிக்கையாளரின் க்ளைம் ஒப்புதல் பெற்றுவிட்டது எனில், இன்சூரர் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு கேஷ் லெஸ் மருத்துவ ஊக்குவிப்பார்.க்ளைம் தொகையினையும் தருவார்.
ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம் என்பது, இந்த திட்டத்தில் தொடர்பில் இல்லாத வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்பொழுது அதற்காக நீங்கள் செலவிடும் மருத்துவ உதவிக்கான நிதிகளை இத்திட்ட நன்மைகளின் மூலம் திரும்ப பெறுவது ஆகும். அதற்கான வழிமுறைகள் :
உங்கள் திட்டத்தின் மூலம் இணைப்பில் இல்லாத மருத்துவமனையில் தேவைப்படும் மருத்துவ உதவிகள் மற்றும் சிகிச்சைகளை மொத்தமாக முழு செலவுகளையும் நீங்களே செய்து பெறவேண்டும். அப்படி செய்த செலவுகளுக்காக ஆதாரங்களை ( மருத்துவமனை ரசீது, மருந்து ரசீது, பரிசோதனை ரசீது, மருத்துவர் கட்டண ரசீது போன்றவை ) சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவமனையில் இருந்து வெளிவந்த பின்னர் பாலிசி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா ஆவணங்களை இன்சூரரிடன் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் சமர்ப்பித்த எல்லா ஆவணங்களையும் இன்சூரர் சரிபார்ப்பார். ஆவணங்கள் போதாதவில்லை எனில், இன்னும் சான்றுகள் கூடுதலாக கேட்கலாம். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பார்.
நீங்கள் சமர்ப்பித்த அனைத்து சான்றுகள் மற்றும் ஆவணங்கள் உண்மையெனில், உங்களுடைய க்ளைம்மிற்கு ஒப்புதல் தரப்படும்.ஒப்புதல் பெறப்பட்டவுடன், பிடித்தங்கள் நீங்க மீத மொத்த தொகையும் ரீஇம்பர்ஸ்மென்ட் தொகையாக பாலிசிதாரருக்கு வழங்கப்படும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் உண்மையான படிவங்களையே சமர்ப்பிக்க வேண்டும். அவற்றின் நகலை அல்ல. அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆர்வங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதாக இருக்க வேண்டும்.
மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குவதற்கு நாம் பாலிசிபஜார் இன்சூரன்ஸ் ப்ரோக்கர் பிரைவேட் லிமிட்டட் எனும் அதன் துணை நிறுவனத்தின் உதவியுடன் பாலிசிபஜாரின் இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை புதுப்பிப்பதற்கு நாம் பாலிசிபஜார் இன்சூரன்ஸ் ப்ரோக்கர் பிரைவேட் லிமிட்டட் எனும் அதன் துணை நிறுவனத்தின் உதவியுடன் பாலிசிபஜாரின் இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த திட்டத்தினை புதுப்பித்துக் கொள்ளலாம்.