ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்

ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடட் இந்தியாவின் முன்னணி மருத்துவக் காப்பீடு அளிக்கும் நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் உங்களுக்கு இசைவான விலைகளில் பல்வேறு மருத்துவக் காப்பீடு திட்டங்களை அளிக்கிறது. தனிநபர்கள, குடும்பங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கார்ப்பரேட் நபர்கள் கொண்ட பெரிய வாடிக்கையாளர் அடித்தளத்தை அது கொண்டிருக்கிறது.

Read More

ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்

*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply

Get up to 10% discount*
Get insured from the comfort of your home No medicals required
I am a

My name is

My number is

By clicking on ‘View Plans’ you, agreed to our Privacy Policy and Terms of use
Close
Back
I am a

My name is

My number is

Select Age

City Living in

  Popular Cities

  Do you have an existing illness or medical history?

  This helps us find plans that cover your condition and avoid claim rejection

  Get updates on WhatsApp

  What is your existing illness?

  Select all that apply

  When did you recover from Covid-19?

  Some plans are available only after a certain time

  ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் ஒரு ஒட்டுமொத்தப் பார்வை

  மகாத்மா காந்தி ஒருமுறை கூறினார், “ஆரோக்கியம்தான் உண்மையான செல்வம், தங்கம், வெள்ளிகாளால் ஆன பொருட்கள் இல்ல.”ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி இந்த வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டுள்ள, ஒவ்வொருவருக்கும் மருத்துவக் காப்பீடு பாலிசி இருக்க வேண்டும் என்று அது விரும்புகிறது. ரிலைன்ஸ் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸின் பணி மக்களின் மருத்துவக் காப்பீடு தேவைகளைப் பூர்த்தி செய்வது, சிறந்த வாடிக்கையாளர் சேவையை அளிப்பது, அவ்வப்போது புராடக்ட்களைப் புதுமையாகச் செய்வது, அவற்றை நாடு முழுவதிலும் சிறப்பாக அடையச் செய்வது என்பவை. ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் கட்டுப்படியாகக் கூடியவை, அடையக் கூடியவை, வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டும், பாலிசிராரர்களின் நன்மைகளைத் தன் முக்கிய இலக்காகக் கொண்டும் வடிவமைக்கப்பட்டவை.

  ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஃபினிட்டி திட்டங்களின் மீது கோவிட் தடுப்பூசி தள்ளுபடி.

  கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம்களில் 5% வரையான சேமிப்பை ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி வழங்குகிறது. புதிய பாலிசிகள் வாங்கும் அல்லது இருக்கும் பாலிசிகளைப் புதுப்பிக்கும் எல்லா வாடிக்கையளர்களுக்கும் ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஃபினிட்டி திட்டத்தின் மீது இந்த கோவிட் தடுப்பூசித் தள்ளுபடி கிடைக்கும். ஒன்று அல்லது இரண்டு டோஸ்கள் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் பாலிசிதாரர்கள் இந்த பிரீமியம் சேமிப்பு விருப்பத் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். இந்தத் தள்ளுபடி ஒருமுறைதான் அளிக்கப்படும், பாலிசிதாரர்களுக்குக் கிடைக்கும் பிற சேமிப்பு விருப்பத் தேர்வுகளுக்குக் கூடுதலாக இது இருக்கும்.

  ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் ஒரு பார்வை

  முக்கிய அம்சங்கள் சிறப்பு அம்சங்கள்
  காப்பீட்டுத் தொகை ரூ. 50,000 முதல் ரூ. 1 கோடி வரை
  திட்டம் வகை தனிநபர் மற்றும் குடும்ப ஃப்ளோட்டர்
  தகுதிக்கான அளவுக்குறிகள் வயது வந்தோர் - 18 ஆண்டுகள் முதல் 65 ஆண்டுகள் வரை
  குழந்தை - 91 நாட்கள் முதல் 25 ஆண்டுகள் வரை
  பாலிசி காலம் 1/2/3 ஆண்டுகள்
  நெட்வொர்க் மருத்துவமனைகள் 7300+
  செலவழிக்கப்பட்ட கிளைம் விகிதம்* 89.36%
  கோவிட்-19 கவர் கிடைக்கிறது
  கூட்டப்பட்ட போனஸ் 100% வரை
  புதுப்பிக்கப்படுதல் தன்மை ஆயுட்காலம் முழுவதும்
  ஆரம்ப காத்திருப்பு காலம் 15 நாட்கள்/ 30 நாட்கள் (திட்டத்தைப் பொருத்து)
  முன்பே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலம் 2/3/4 ஆண்டுகள் (திட்டத்தைப் பொருத்து)
  கிளைம் செட்டில்மென்ட் விகிதம் 98%
  விருப்பத்தின் அடிப்படையிலான கோபேமென்ட் கிடைக்கிறது
  பேப்பர் ஒர்க் பூஜ்யம் பேப்பர் ஒர்க்
  EMI வசதி கிடைக்கிறது
  வரிச் சலுகைகள் வருமான வரிச் சட்டம், 1961 பிரிவு 80DD இன் கீழ் ரூ. 1,00,000 வரை சேமிப்பு

  *நிதியாண்டு 2019-20 க்கானபடி

  ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்களை ஏன் வாங்க வேண்டும்?

  ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் தேர்ந்தெடுக்கப் பல்வேறு காப்பீட்டுத் தொகை விருப்பத் தேர்வுகளுடன் கட்டுப்படியாகக் கூடிய மருத்துவக் காப்பீடு திட்டங்களை தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும் வழங்குகிறது. அதன் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் 91 நாட்கள் முதல் 65 ஆண்டுகள் வரை வயதுள்ள தனிநபர்களால் வாங்கப்படலாம். ரொக்கமில்லா மருத்துவமனைச் சிகிச்சை வசதிகளைப் பெற இந்தியா முழுவதும் 7300 க்கும் மேற்பட்ட மருத்துவனைகள் கொண்ட நெட்வொர்க்கை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது. மேலும் இதில் அறைக்கான உச்ச வரம்பு ஏதுமில்லை என்பதால், காப்பீடு பெற்ற நபர் அவர் விருப்பப்படி எந்த அறையிலும் தன்னை அனுமதித்துக் கொள்ளலாம்.

  ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு பாலிசியின் கீழ்,மருத்துவமனைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை திட்டத்தைப் பொருத்து குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட நாட்களுக்கு பாலிசிதாரர் பெறலாம். தி ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி விரைவான திறன்மிகுந்த கிளைம் செட்டில்மென்ட்டை உறுதி செய்கிறது. கிளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும், அடிப்படை காப்பீட்டுத் தொகையின் மீது ஒரு கூட்டப்பட்ட போனஸ் பூஜ்யம் கூடுதல் கட்டணத்தில் வழங்கப்படுகிறது. சில திட்டங்களின் கீழ் இலவச வருடாந்தர மருத்துவப் பரிசோதனைகளையும் அது வழங்குகிறது. மேலும், பாலிசிதாரர் பிரீமியத்தில் மிச்சம் பிடிக்க பல்வேறு தள்ளுபடிகளையும் இது வழங்குகிறது.

  ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்கள்

  ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி அதன் வாடிக்கையாளர்களுக்கு எட்டு வகை மருத்துவக் காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. அவற்றைக் கீழே பார்ப்போம்.

  • 1. ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஃபினிட்டி பாலிசி

   ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஃபினிட்டி பாலிசி அதிகம் விரும்பப்படும் ஒரு திட்டம், இது மருத்துவமனை சிகிச்சைச் செலவுகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள், AYUSH சிகிச்சை, அவசர கால ஆம்பலன்ஸ் கட்டணங்கள், டே கேர் சிகிச்சை போன்றவற்றை கவர் செய்கிறதுஅதிக ஆப்ஷன்கள் நன்மையுடன் வரும் இந்த பாலிசியை தனிநபர்களும், குடும்பங்களும் வாங்க முடியும். ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஃபினிட்டி பாலிசியின் அம்சங்களையும், நன்மைகளையும் கீழே பார்க்கலாம்.

   • ரூ. 3,00,000 முதல் ரூ.1,00,00,000 வரை உள்ள காப்பீட்டுத் தொகையுடன் இது வருகிறது.
   • மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை முறையே 90 நாட்கள் மற்றும் 180 நாட்கள் வரை இது கவர் செய்கிறது.
   • பாலிசிதாரர் கோவிட்-19 க்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால், பிரீமியத்தில் 5% சேமிப்பை இது வழங்குகிறது.
   • உலகம் முழுவதும் கவரேஜ் என்ற விருப்பத் தேர்வான நன்மையுடன் இது வருகிறது.
   • இதில் அறை வடகைக்கான உள் வரம்புகள் எதுவும் இல்லை.
   • ஆன்லைன் தள்ளுபடி, தற்போதைய வாடிக்கையாளர் தள்ளுபடி, குடும்பத் தள்ளுபடி மற்றும் நீண்டகால பாலிசி தள்ளுபடி ஆகியவற்றையும் இது வழங்குகிறது.
   • விருப்பத்தின் அடிப்படையிலான 10% கோ-பேமென்ட் ஆப்ஷனுடன் இது வருகிறது.
  • 2.ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் காப்பீடு திட்டம்:

   ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் காப்பீடு திட்டம் தனிநபர்களுக்கும், ஃப்ளோட்டர் அடிப்படையில் குடும்பங்களுக்கும் கவரேஜ் அளிக்கிறது.இது இரண்டு திட்ட வகைகளில் வருகிறது - திட்டம் A, திட்டம் B. இது மருத்துவமனை சிகிச்சைச் செலவுகள், உடல் உறுப்பு தானம் அளிப்பவர் செலவுகள், AYUSH சிகிச்சை, சாலை ஆம்பலன்ஸ், வீட்டிலிருந்தே சிகிச்சை, நவீன சிகிச்சைகள், டே கேர் சிகிச்சைகள் ஆகியவற்றுக்கு கவரேஜ் அளிக்கிறது. ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் பாலிசியின் பல்வேறு அம்சங்களும், நன்மைகளும் பின்வருமாறு:

   • ரூ. 3,00,000 முதல் ரூ.18,00,000 வரையிலான காப்பீட்டுத் தொகையை இது வ.ங்குகிறது.திட்டம் A இன் கீழ் காப்பீட்டுத்தொகை ரூ. 3,00,000 முதல் ரூ. 9,00,000 வரை, திட்டம் B இன் கீழ் ரூ.12,00,000 முதல் ரூ.18,00,000 வரை.
   • தனியாக இருக்கும் சுதந்திரமான பெண அல்லது பெண் குழந்தைக்கு சிறப்புத் தள்ளுபடியாக 5% இது வழங்குகிறது.
   • கிளைம் இல்லாத புதுப்பித்தலுக்கு ரூ. 1,00,000 விபத்துக் காப்பீடு திட்டம் B இன் கீழ் மட்டும்தான் கிடைக்கும்.
   • காப்பீட்டுத் தொகை தீர்ந்து விட்டல், அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 100% திரும்பச் சேர்த்தலை இது வழங்குகிறது.
   • 65 வயதுக்கு மேலான மூத்த குடிமக்கள் காப்பீட்டுத்தொகை ரூ. 3,00,000 க்கு கவர் செய்யப்படலாம்.
   • காப்பீடு பெற்ற நபருக்கு குறிப்பிடப்பட்ட ஒரு தீவிர நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டால், இந்தத் திட்டம் ஒருஆண்டுக்குத் தானாகவே நீட்டிக்கப் படுகிறது.
   • இந்த பாலிசியின் கீழ் குடும்பத்தின் உடனடி மற்றும் நீட்டிக்கபட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்படலாம்.
   • தற்போதைய வாடிக்கையாளருக்கான தள்ளுபடி மற்றும் நீண்ட கால பாலிசி தள்ளுபடி ஆகியவற்றையும் அது வழங்குகிறது.
   • EMI பிரீமியம் செலுத்தல் விருப்பத் தேர்வுடன் இது வருகிறது.
   • பாலிசி ஆயுட்காலம் முழுவதும் புதுப்பிக்கப்படுதலை அது வழங்குகிறது.
  • 3. ரிலையன்ஸ் ஆரோக்யா சஞ்சீவினி பாலிசி:

   ரிலையன்ஸ் ஆரோக்யா சஞ்சீவினி பாலிசி தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும் IRDAIவழிகாட்டல்களின்படி அளிக்கப்படும் ஒரு ஸ்டாண்டர்ட் பாலிசி கட்டுப்படியாகக் கூடிய இந்த ஹெல்த் பாலிசி டே கேர் வழிமுறைகள், மருத்துவமனை சிகிச்சைச் செலவுகள், நவீன சிகிச்சை, AYUSH சிகிச்சை, காடராக்ட் சிகிச்சை போன்றவற்றுக்கு கவரேஜ் அளிக்கிறது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியின் ஆரோக்யா சஞ்சீவினி பாலிசியின் அம்சங்களையும், நன்மைகளையும் கீழே பாருங்கள்.

   • இது ரூ. 1,00,000 முதல் ரூ. 10,00,000 வரையிலான காப்பீட்டுத் தொகையுடன் வருகிறது.
   • மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை முறையே 30 நாட்களுக்கும், 60 நாட்களுக்கும் இது கவர் செய்கிறது.
   • கிளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டுக்கும் 5% கூட்டப்பட்ட போனஸை 50% வரை இது வழங்குகிறது.
   • 50 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களுக்கு பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை இல்லை.
   • தற்போதைய வாடிக்கையாளர் தள்ளுபடி, குடும்பத் தள்ளுபடி மற்றும் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்‌ஷன் தள்ளுபடி ஆகியவற்றை இது வழங்குகிறது.
  • 4.ரிலையன்ஸ் கொரோனா கவச் பாலிசி:

   ரிலையன்ஸ் கொரோனா கவச் பாலிசி கோவிட்-19 மருத்துவமனைச் செலவுகளுக்கு எதிரான கவரை வழங்கும் கட்டுப்படியாகக் கூடிய ஒரு பாலிசி.தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் கவரேஜை இது வழங்குகிறது, அத்துடன் வீட்டில் சிகிச்சை பெறும் கட்டணம், AYUSH சிகிச்சை இவற்றையும் கவர் செய்கிறது.ரிலையன்ஸ் கொரோனா கவச் பாலிசியின் அம்சங்களும், நன்மைகளும் பின்வருமாறு:

   • ரூ. 50,000 முதல் ரூ. 5,00,000 வரையிலான காப்பீட்டுத் தொகையுடன் இது வருகிறது.
   • 1 நாள் முதல் 25 ஆண்டுகள் வரை வயதுள்ள குழந்தைகளை இது கவர் செய்கிறது.
   • மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் முறையே 15 நாட்களுக்கும், 30 நாட்களுக்கும் கவர் செய்யப்படுகின்றன.
   • PPE கிட்கள், கையுறைகள், முகக் கவசங்கள் போன்ற பயன்பாட்டுப் பொருட்கள் விலையையும் இது கவர் செய்கிறது.
   • மருத்துவமனை தினசரி ரொக்கத்தை ஒரு சேர்க்கப்படும் நன்மையாக, காப்பீட்டுத் தொகையில் 0.5% உள்வரம்புடன் இது அளிக்கிறது.
   • பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை இல்லை.
   • 3.5 மாதங்கள், 6.5 மாதங்கள் மற்றும் 5 மாதங்கள் என்ற காலங்களில் இந்த பாலிசி கிடைக்கிறது.
  • 5.ரிலையன்ஸ் கொரோனா ரக்ஷக் பாலிசி:

   ரிலையன்ஸ் கொரோனா ரக்ஷக் பாலிசி ஒரு தனிப்பயனாக்கப்பட்ட பாலிசி, கோவிட்-19 சிகிச்சைக்காக எழும் மருத்துவச் செலவுகளை கவர் செய்ய ஒரு மொத்தத் தொகையை இது அளிக்கிறது. இந்தத் திட்டம் தனிநபர் அடிப்படையில் கிடைக்கிறது, அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு மருத்துவமனையில் குறைந்தபட்சம் 72 மணி நேரம் தொடர்ச்சியான மருத்துவமனை சிகிச்சை பெற்றிருக்க வேண்டும்.ரிலையன்ஸ் கொரோனா ரக்ஷக் பாலிசியின் அம்சங்களையும், நன்மைகளையும் கீழே பார்க்கவும்

   • ரூ. 50,000 முதல் ரூ. 2,50,000 வரையிலான காப்பீட்டுத் தொகையை இது வழங்குகிறது.
   • இது 5 மாதங்கள், 6.5 மாதங்கள் மற்றும் 9.5 மாதங்கள் பாலிசி காலத்தில் கிடைக்கிறது.
   • பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை இல்லை
  • 6.ரிலையன்ஸ் தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசி

   காப்பீடு பெற்ற நபருக்கு விபத்து ஏற்பட்டால் ரிலையன்ஸ் தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசி இழப்பீடு வழங்குகிறது. காப்பீடு பெற்ற நபருக்கு விபத்தினால் ஏற்படும் மரணம், நிரந்தர மொத்தச் செயலிழப்பு இவற்றுக்கு எதிரான கவரை அளிக்கிறது, குழந்தைக் கல்வி நன்மையையும் அளிக்கிறது. ரிலையன்ஸ் கொரோனா ரக்ஷக் பாலோசியின் அம்சங்களையும், நன்மைகளையும் கீழே பார்க்கவும்

   • ரூ. 5,00,000 முதல் ரூ. 20,00,000 வரையிலான காப்பீட்டுத் தொகையை இது வழங்குகிறது.
   • இந்த பாலிசியில் மொத்த குடும்பத்தையும் தனிநபர் அடிப்படையில் கவர் செய்ய முடியும்
   • உலகம் முழுவதிலுமான கவரேஜை இது அளிக்கிறது.
   • மருத்துவச் செலவுகள் கவர் பெறும் விருப்பத் தேர்வுடன் இது வருகிறது.
   • ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டுக்கும் கூட்டப்பட்ட போனஸ் 5% ஐ 50% வரை வழங்குகிறது.
  • 7. ரிலையன்ஸ் ஹெல்த்ஒயிஸ் பாலிசி

   ரிலையன்ஸ் ஹெல்த்ஒயிஸ் பாலிசி மொத்தக் குடும்பத்துக்கும் கட்டுபடியாகக் கூடிய விலையில் கவரேஜ் அளிக்கும் ஒரு ஒட்டுமொத்த பாலிசி. மருத்துவமனைச் சிகிச்சைக்கான செலவுகள், டே கேர் சிகிச்சைகள், உடல் உறுப்பு வழங்குவோர் செலவுகள், வீட்டிலிருந்தே சிகிச்சை பெறுதல் போன்றவற்றுக்கு அது கவரேஜ் அளிக்கிறது.ரிலையன்ஸ் கொரோனா ஹெல்த்ஒயிஸ் பாலிசியின் அம்சங்களையும், நன்மைகளையும் கீழே பார்க்கவும்

   • ரூ.1,00,000 முதல் ரூ. 5,00,000 வரையிலான காப்பீட்டுத் தொகையை இது வழங்குகிறது.
   • மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை முறையே 60 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வரைஇது கவர் செய்கிறது.
   • தீவிர நோய்கள் மற்றும் நவீன சிகிச்சைகளுக்கான கவரேஜையும் இது வழங்குகிறது.
   • உள்ளூர் தினசரி மருத்துவமனை சிகிச்சை அலவன்ஸ், சாலை ஆம்பலன்ஸ் சேவை, குணமாதல் நன்மை போன்ற கூடுதல் நன்மைகளுடன் இது வருகிறது.
   • ஒரு பெண் குழந்தைக்கு பிரீமியத்தில் 7% சேமிப்பை இது வழங்குகிறது.
  • 8. ரிலையன்ஸ் தீவிர நோய்கள் பாலிசி

   ரிலையன்ஸ் தீவிர நோய்கள் பாலிசி தீவிர நோய்கள் சிகிச்சைக்கான செலவைச் சமாளிப்பதற்கான பொருளாதார கவரேஜை அளிக்கிறது. காப்பீடு பெற்ற நபரை புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு, மூன்றாம் டிகிரி தீக்காயங்கள் போன்ற 10 தீவிர வாழ்க்கைமுறை நோய்களுக்கு எதிராக கவர் செய்ய மொத்தத் தொகை நன்மையை வழங்குகிறது ரிலையன்ஸ் தீவிர நோய்கள் பாலிசியின் அம்சங்களும், நன்மைகளும் பின்வருமாறு:

   • ரூ. 5,00,000 முதல் ரூ. 10,00,000 வரையிலான காப்பீட்டுத் தொகையை இது வழங்குகிறது.
   • காப்பீட்டுத் தொகை தனிநபர் அடிப்படையில் கிடைக்கிறது.
   • 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களுக்கு பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை தேவையில்லை
   • கிளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு நோ கிளைம் போனஸை அதிகபட்சம் 50% வரை இது வழங்குகிறது.

  *எல்லா சேமிப்புகளும் IRDA ஆல் அஙுகீகரிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின்படி காப்பீடு நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்ட் விதிமுறைகளும், நிபந்தனைகளும் பொருந்தும்.

  ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு பாலிசி கவரேஜ்:

  ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் வழங்கும் பல்வேறு கவரேஜ்களைப் பற்றிய ஒரு விரைவான பார்வை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • மருத்துவமனை சிகிச்சைக் கட்டணங்கள் - நோயாளி தொடர்ந்து 24 மணி நேரத்துக்கு மேல் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றால், மருத்துவமனை சிகிச்சைச் செலவுகளை ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் கவர் செய்கின்றன.
  • டே கேர் சிகிச்சை - முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தால், காப்பீடு பெற்ற நபருக்கு 24 மணி நேரத்துக்குக் குறைவான மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அறுவை சிகிச்சை/ வழிமுறைகள் இவற்றுக்கான டே கேர் சிகிச்சைச் செலவுகளை இவை கவர் செய்கின்றன.
  • மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய செலவுகள் - மருத்துவமனை சிகிச்சைக்கு முன்னால் செய்யப்படும் மருத்துவச் செலவுகளுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை நாட்களுக்கு மருத்துவமனை சிகிச்சைகு முந்தைய செலவுகள் கவரேஜும் இந்தத் திட்டங்களால் வழங்கப்படுகின்றன.
  • மருத்துவமனை சிகிச்சைக்குப் பிந்தைய செலவுகள் - மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு செய்யப்பட்ட மருத்துவச் செலவுகளை குறிப்பிட்ட எண்ணிக்கை தினங்களுக்கு பெரும்பாலான ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் கவர் செய்கின்றன.
  • உடல் உறுப்பு தானம் வழங்குவோர் செலவுகள் - இந்தத் திட்டங்களில் பெரும்பாலானவை உடல் உறுப்பு தானம் வழங்குவோர் செலவுகளைக் குறிப்பாக குறிப்பிட்ட வரம்பு வரை கவர் செய்கின்றன.
  • வீட்டிலிருந்தே மருத்து சிகிச்சை பெறுதல் - காப்பீடு பெற்ற நபருக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட எண்ணிக்கை தினங்களுக்கு மேல் வீட்டிலிருந்தே மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், வீட்டிலிருந்தே மருத்துவ சிகிச்சைக்கும் இந்தத் திட்டங்கள் கவரேஜ் அறிக்கின்றன.
  • யோகா- ஆயுர்வேதம், ஹோமியோபதி, சித்தா, யுனானி உள்ளிட்ட AYUSH வகை மருந்துகள் மூலமான சிகிச்சை பெறுவதற்கான செலவும் கவர் செய்யப்படுகிறது.
  • சாலை ஆம்பலன்ஸ் கட்டணங்கள் - ஒரு மருத்துவ அவசர காலத்தின்போது, ஆம்பலன்ஸ் பயன்பாட்டுக்காக காப்பீடு பெற்றவரால் செலுத்தப்பட்ட கட்டணங்களை அவை வழங்குகின்றன.
  • நவீன சிகிச்சை - ஸ்டெம் செல் தெரபி, ஓரல் கெமோதெரபி, ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைக்கான செலவையும் பல ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் கவர் செய்கின்றன.

  ரிலையன்ஸ மருத்துவக் காப்பீடு திட்டங்களின் கீழ் விலக்கல்கள்

  ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு பாலிசி விலக்கல்களைக் கீழே பார்ப்போம்.

  • திட்டத்தின் முதல் 30 நாட்களுக்குள் எந்த மருத்துவச் செலவுகளுக்காகவும் செய்யப்பட்ட கிளைம்கள், அவை விபத்தினால் விளைந்ததாக இருந்தாலொழிய,கவர் செய்யப்பட மாட்டா.
  • ஆர்த்ரிடிஸ் (தொற்று அல்லாதவை), ஆஸ்டியோஆர்த்ரிடிஸ் எல்லா மாறுபடும் நோய்களும், மூட்டுமாற்று அறுவை சிகிச்சை, காடராக்ட், உள் கட்டிகள், சிறிநீரகக் கல்/ கருப்பை கல்/ கால் பிளாடர் கல் போன்ற குறிப்பிட்ட சில நோய்கள் அல்லது அறுவை சிகிச்சைகள் இரண்டு ஆண்டுகள் காத்திருப்பு காலம் உள்ளவை
  • வேண்டுமென்றே தானே ஏற்படுத்திக் கொண்ட காயம்
  • மது அல்லது போதை மருந்து பாதிப்பினால் விளைந்த காயம்
  • HIV/ AIDS அல்லது STD கள்
  • பிறந்ததிலிருந்தே உள்ள நோய்கள்
  • மகப்பேறு அல்லது கருவுறும் திறன் தொடர்பான குறைபாடுகள்
  • மூக்குக் கண்ணாடிகள், கான்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் காது கேட்கும் கருவிகளுக்கான செலவுகள்
  • பல் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை
  • காஸ்மெடிக் அல்லது ஈஸ்தடிக் சிகிச்சை
  • அலோபதி அல்லாத சிகிச்சை
  • சுய மருத்துவம்
  • நிரூபிக்கப்படாத சிகிச்சைகள்

  ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு கிளைம் தாக்கல் செய்வதற்கான படிகள்

  மருத்துவமனை சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைத்ததுமே, அதைப் பற்றி பாலிசிதாரர் ரிலையன்ஸ் ஜெனரல இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்குத் தெரிவிக்க வேண்டும். பாலிசிதாரர் காப்பீடு நிறுனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளுக்குச் சென்று ரொக்கமில்லா கிளைமை எழுப்பலாம் அல்லது நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைக்குச் சென்று ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைமை எழுப்பலாம்.ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு பாலிசியின் கீழ் கிளைம் தாக்கல் செய்வதற்குக் கீழே கொடுக்கப்பட்ட படிகளைப் பின்பற்றவும்.

  கிளைம் அறிவிப்பு:

  கப்பீடு நிறுவனத்துக்கு கிளைமைத் தெரிவிக்கும்போது தயாராக வைத்திருக்க வேண்டிய தகவல்கள் பின்வருமாறு:

  • பாலிசி எண்
  • காப்பீடு பெற்றவர்/ கிளைம் செய்பவர் தொடர்பு விவரங்கள்
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்படப் போகும் காப்பீடு பெற்றவர்/ கிளைம் செய்பவரின் பெயர்
  • மருத்துமனையில் அனுமதிக்கப்படுபவருடன் பாலிசிதாருக்கு உள்ள உறவு
  • மருத்துவமனையின் பெயர்
  • நோயின் பெயர்
  • விபத்தின் தன்மை (விபத்து நிகழ்வுகளில்)
  • விபத்து நடந்த தேதி மற்றும் நேரம் (விபத்து நிகழ்வுகளில்)
  • விபத்து நடந்த இடம் (விபத்து நிகழ்வுகளில்)
  • நோயின் அறிகுறிகள் தோன்றத் தொடங்கிய தேதி

  ரொக்கமில்லா வசதிக்கான கிளைம் வழிமுறை

  ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்களின் கீழ் ரொக்கமில்லா கிளைம் தாக்கல் செய்வதற்கான படிகள்:

  • ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியின் நெட்வொர்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுங்கள்
  • மருத்துவமனையில் ரிலையன்ஸ் ஹெல்த் கார்டைக் காட்டுங்கள்
  • மருத்துவமனையில் மூன்றாம் நபர் நிர்வாகி (TPA) டெஸ்க்கில் இருக்கும் ‘ரொக்கமில்லா சிகிச்சை விண்ணப்பப் படிவத்தை” நிரப்புங்கள்.
  • மருத்துவமனையில் சேரும்போது நிரப்பப்பட்ட முன்-ஒப்புதல் படிவத்தை ரிலையன்ஸ் ஹெல்த் கார்ட் நகலுடன் TPA இடம் அளிக்கவும் (ஒரு புகைப்பட அடையாள அட்டையை ஞாபகமாக எடுத்துச் செல்லுங்கள்.)
  • மருத்துவமனை முன்-ஒப்புதல் படிவத்தை RCare ஹெல்த்துக்கு அனுப்பி அவர்கள் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கிறது.
  • அங்கீகாரம் கிடைத்த பிறகு மருத்துவமனையில் சேருங்கள்.
  • டிஸ்சார்ஜின்போது காப்பீடு பெற்றவர்/ கிளைம் செய்பவர் எல்லா பில்களையும் சரிபார்த்துக் கையொப்பம் இட வேண்டும்.
  • மருத்துவமனை டிஸ்சார்ஜ் சம்மரி, ஆய்வு அறிக்கைகள் மற்றம் பிற ஆவணங்களை உங்கள் தேவைக்காக ஒரு நகல் எடுத்துக் கொண்டு அசலை மருத்துவமனையிலேயே ஒப்படைக்கவும்.

  ரீஇம்பர்ஸ்மென்ட் வசதியுடனான ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு வழிமுறை:

  ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்களின் கீழ் ரீஇம்பர்ஸ்மென்ட் தாக்கல் செய்வதற்கான படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • RCareHealth க்கு மருத்துவதனை சிகிச்சை பற்றித் தெரியப்படுத்தவும்.
  • நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறவும்.
  • மருத்துவமனை பில் தொகையை முழுமையாகச் செலுத்தவும்.
  • மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது, மருத்துவமனையின் எல்லா ஒரிஜினல் பில்கள், மருத்துவ ஆவணங்கள் மற்றும் ஆய்வு அறிக்கைகளையும் பெறவும்.
  • மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் தேவைப்படும் ஆவணங்களை கிளைம் படிவத்துடன் Rcare Health க்கு அவர்கள் புராசஸ் செய்வதற்கு அனுப்பவும்.
  • குழு ஆவணங்களை மதிப்பீடு செய்து கிளைமை செட்டில் செய்யும்.

  ரிலையன்ஸ் ஜெனரல் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  ரிலையன்ஸ் ஜெனரல் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியால் வழங்கப்படும் மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்குப் பல சானல்கள் மூலம் விண்ணப்பிக்க முடியும். ரிலையன்ஸ் மருத்துக் காப்பீடு திட்டங்களுக்கு ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிப்பதற்கான படிகளைப் பார்க்கவும்:

  ஆன்லைன் செயல்முறை:

  ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு பாலிசியை நபர்கள் policybazaar.com இல் ஆன்லைனில் வாங்கலாம். பாலிசியை வாங்க அவர்கள் நிறுவனத்தின் இணையதளத்துக்கும் செல்லலாம். ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு பாலிசியை வாங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்:

  • பாலிசிபஜார் இன்ஷ்யூரன்ஸ் புரோக்கர் பிரைவேட் லிமிடட் இன் இணையதளத்துக்குச் செல்லவும்.
  • ‘ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்’ என்ற படத்துக்குச் செல்லவும்.
  • காப்பீடு செய்யப்பட வேண்டிய நபர்களின் வயது, மருத்துவ வரலாறு போன்ற விவரங்களை உள்ளிடவும்.
  • தொடர்பு விவரங்களை அளிக்கவும்.
  • வாங்க வேண்டிய ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தேர்ந்தெடுத்த திட்டத்துக்கான பிரீமியத்தைச் செலுத்தவும்.
  • வெற்றிகரமான செலுத்தலுக்குப் பிறகு பாலிசி வழங்கப்படும்.

  பாலிசியை வாங்குவதற்கு முன் வெவ்வேறு மருத்துவக் காப்பீடு திட்டங்களை ஒப்பிட வேண்டும். கேள்விகள் ஏதேனும் இருந்தால், care@policybazaar.com. க்கு எழுதவும்.

  ஆஃப்லைன் வழிமுறை:

  ஒரு நபர் பின்வரும் முறைகள் மூலம் மருத்துவக் காப்பீடு பாலிசியை ஆஃப்லைனில் வாங்கலாம்.

  • தனிநபர்கள் பாலிசிபஜார் இன்ஷ்யூரன்ஸ் புரோக்கர் பிரைவேட் லிமிடட் இன் விற்பனை உதவி எண்ணான 1800-208-8787 ஐ அழைத்து வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதியுடன் பாலிசி வாங்குவது பற்றிப் பேசலாம்.
  • இணையதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவித்துத் திரும்ப அழைக்கும்படி கோரலாம்.
  • வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியின் அலுவலகத்துக்குச் சென்று பாலிசி வாங்க ஒரு இன்ஷ்யூரன்ஸ் ஏஜன்ட்டுடன் தொடர்பு கொள்ளலாம்.

  *எல்லா சேமிப்புகளும் IRDA ஆல் அஙுகீகரிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின்படி காப்பீடு நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்ட் விதிமுறைகளும், நிபந்தனைகளும் பொருந்தும்.

  ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • கேள்வி. 1 ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு பிரீமியம் செலுத்துவது எப்படி? செலுத்தலுக்குக் கிடைக்கும் முறைகள் என்ன?

   விடை:ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு பாலிசிக்கான பிரீமியம் பின்வரும் முறைகளில் செலுத்தப்படலாம்:

   • கிரடிட் கார்ட்
   • டெபிட் கார்ட்
   • நெட் பாங்கிங்
  • கேள்வி. 2 ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு பாலிசியின் நிலையை நான் எப்படிச் சரிபார்ப்பது?

   விடை:உங்கள் பாலிசியின் நிலையை நீங்கள் பாலிசி வாங்கிய இணையதளத்திலிருந்து ஆன்லைனில் சரிபார்க்கலாம். உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லுடன் லாகின் செய்து உங்கள் ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் நிலையைச் சரிபாருங்கள்.

  • கேள்வி 3. ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு பாலிசியைப் புதுப்பிக்கும் வழிமுறை என்ன?

   விடை:பாலிசிபஜார் இன்ஷ்யூரன்ஸ் புரோக்கர் பிரைவேட் லிமிடிட் இன் இணையதளத்தில் ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு பாலிசியைப் புதுப்பிப்பது எளிதானது. பாலிசியை ஆன்லைனில் புதுப்பிக்கும் விருப்பத் தேர்வுக்குச் சென்று உங்கள் தற்போதைய பாலிசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அல்லது தொடர்பு விவரங்களை அளிக்கவும். உங்கள் திட்டத்தின் விவரங்களை மதிப்பீடு செய்து, பாலிசியைப் புதுப்பிக்க விரும்பினால், பிரீமியம் தொகையைச்செலுத்தவும்.நிங்கள் பிரீமியத்தைச் செலுத்தியவுடனேயே உங்கள் பாலிசி புதுப்பிக்கப்பட்டு விடும்.

  • கேள்வி 4. ரிலையன்ஸ் மருத்துக் காப்பீடு கிளைமை அளிக்க என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?

   விடை:பாலிசிதாரர் கீழ்க்கண்ட ஆவணங்களை RCare Health க்கு சமர்ப்பித்து ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைமை எழுப்பலாம்.

   • முறையாக நிரப்பப்பட்ட மருத்துவக் காப்பீடு கிளைம் படிவம்
   • ஹெல்த் கார்ட் நகல்
   • காப்பீடு பெற்றவரின் அடையாள அட்டை மற்றும் பாலிசிதாரரின் PAN கார்ட்
   • மருத்துவர் பிரிஸ்க்ரிப்ஷன் மற்றும் சிகிச்சைத் தாள்கள்
   • ஆய்வு அறிக்கைகள்
   • FIR நகல் (விபத்து நிகழ்வுகளில்)
   • ஒரிஜினல் மருத்துவமனை டிஸ்சார்ஜ் கார்ட்
   • ஒரிஜினல் மருத்துவமனை பில்கள் மற்றும் செலுத்தல் ரசீதுகள்
   • கான்சல் செய்யப்பட்ட காசோலை
   • மருத்துவமனை சிகிச்சையைத் தடுக்கும் நோயாளியின் நிலையைத் தெரிவித்து சிகிச்சை அளித்த மருத்துவரின் சான்றிதழ்.
  • கேள்வி. 5 ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸின் பாலிசி ரத்து செய்தல் கொள்கை என்ன?

   விடை:ரிலையன்ஸ் மருத்துவக் காப்பீடு பாலிசியை ரத்து செய்ய, பாலிசி ஆவணங்களை நிரப்பப்பட்ட சரண்டர் படிவத்துடன் காப்பீடு நிறுவனத்தின் அருகாமையில் உள்ள கிளையில் சமர்ப்பிக்கவும். பாலிசியை ரத்து செய்யக் கோரி காப்பீடு அளிப்பவருக்கு நீங்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பவும் செய்யலாம். வெற்றிகரமான செயல்பாட்டுக்குப் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கில் பிரீமியம் ரீஃபண்ட் நேரடியாக டெபாசிட்செய்யப்படும், பாலிசி ரத்து செய்யப்படும்.ரத்துக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க ஃப்ரீ லுக் காலத்துக்குள் உங்கள் பாலிசியை ரத்து செய்யவும்.

   
  top
  Close
  Download the Policybazaar app
  to manage all your insurance needs.
  INSTALL