யுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்சூரன்ஸ்

(22 Reviews)
Insurer Highlights

*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply

*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply

Back
Get insured from the comfort of your home
Get insured from the comfort of your home
 • 1
 • 2
 • 3
 • 4

Who would you like to insure?

 • Previous step
  Continue
  By clicking on “Continue”, you agree to our Privacy Policy and Terms of use
  Previous step
  Continue

   Popular Cities

   Previous step
   Continue
   Previous step
   Continue

   Do you have an existing illness or medical history?

   This helps us find plans that cover your condition and avoid claim rejection

   Get updates on WhatsApp

   Previous step

   When did you recover from Covid-19?

   Some plans are available only after a certain time

   Previous step
   Advantages of
   entering a valid number
   You save time, money and effort,
   Our experts will help you choose the right plan in less than 20 minutes & save you upto 80% on your premium

   யுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்சூரன்ஸ்

   யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நம்பகத்தன்மை வாய்ந்த யுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கி பொது மக்களுக்கு உதவி வருகிறது. இந்த திட்டம் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கர்நாடகா வங்கி, சோம்போ ஜப்பான் இன்சூரன்ஸ் இன்க் மற்றும் டாபர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது. இந்தியா முழுவதும் பல கிளைகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.‌ இந்நிறுவனத்தின் திட்டங்கள் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என எல்லோருக்குமானதாகவும் அனைத்து வித மருத்துவ தேவைகளுக்கும் ஏற்றதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. எல்லோருக்கும் ஒரே திட்டம் என்று இல்லாமல் தனி தனியே சிரத்தையுடன் சிறந்த முறையில் வகுக்கப்பட்ட திட்டங்களை மக்களுக்கு ஏற்றவாறு இந்த நிறுவனம் வழங்குகிறது. அதற்கு மேலும் தேவைக்கேற்ப திட்டங்களில் கூடுதலாக வசதிகளை சேர்த்துக் கொள்ளும் வழியும் இருக்கிறது.

   Read More

   யுனிவர்சல் சோம்போ மருத்துவ காப்பீடு நிறுவனம் - ஒரு கண்ணோட்டம்

   பொருளாதார நிலையில்லாமையினாலும் இதர பல காரணங்களாலும் இன்றைய சூழலில் எல்லாமே விலை அதிகரித்து வருகிறது. மருத்துவச் செலவுகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் என‌ மருத்துவம் சார்ந்த செலவுகளும் இதற்கு விதிவிலக்காக இருப்பதில்லை‌ என்பது நிதர்சனம். பொது மக்களின் அன்றாட வாழ்வில் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் இன்னும் ஒரு நெருக்கடியாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இதனாலேயே மருத்துவக் காப்பீடு இன்று மிகவும் முக்கியமானதாகிக் கொண்டிருக்கிறது.

   மேலும், தற்போதைய வாழ்க்கை முறை உணவு முறையென எல்லாம் மாறி வர மருத்துவ கவனிப்பு தேவைப்படும் நோய்களும் பெருகி வருகின்றன. பெரும்பாலான நோய்களுக்கு மக்கள் பாதிக்கப்பட இருக்கும் வாய்ப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. மற்ற‌ செலவுகளை போல் இல்லாமல் மருத்துவச் செலவு இன்றியமையாததாக இருக்கிறது. மருத்துவ செலவுகள் செய்யாமல் தவிர்க்க முடியாத செலவாக இருப்பது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கிறது. இப்படி இல்லாமல் சிரமங்களை‌ கொஞ்சம் குறைத்துக் கொள்ள நமக்கு நாமே‌ காப்பீடு செய்துக் கொள்வது அவசியமாகிறது. எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரு காப்பீடு இருக்குமென்றால் அது யுனிவர்சல் சோம்போவின் காப்பீட்டுத் திட்டமாக தான் இருக்கும். மக்களின் காப்பீட்டுத் தேவை எதுவாக இருந்தாலும், அதற்கான சரியான பாலிசியை இந்நிறுவனம் பெற்றுள்ளது. 

   மருத்துவ அவசரம் எந்த நேரமும் வரலாம் என்பதாலும் தாமதிக்க முடியாததாக அது இருப்பதாலும் மருத்துவ காப்பீடு எந்த நேரத்திலும் தேவைப்படலாம். இதற்கேற்ப யுனிவர்சல் சோம்போவின் செயல்பாட்டு அழைப்பு மையத்தில் வாடிக்கையாளர் ஆதரவு நிர்வாகிகள் 24*7 நேரமும் மக்களின் எல்லா கேள்விகளுக்கும் தீர்வுகளை வழங்குவதற்கும், அவர்களின் சிரமங்களை குறைப்பதற்கும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

   உங்கள் விருப்பப்படி யுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜைத் தேர்வு செய்யவும்

   ₹3லட்சம்
   யுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்சூரன்ஸ்
   ₹5லட்சம்
   யுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்சூரன்ஸ்
   ₹10லட்சம்
   யுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்சூரன்ஸ்

   யுனிவர்சல் சோம்போ மருத்துவ காப்பீடு அம்சங்கள் மற்றும் விவரங்கள்

   அம்சங்கள் விவரங்கள்
   தொடர்பிலுள்ள மருத்துவமனைகள் 5500+
   பெறப்பட்ட உரிமைகோரல் விகிதம் (2020-21) 90.44%
   புதுப்பித்தல் வாழ்நாள் முழுவதும்
   க்ளெய்ம் தீர்வு விகிதம் 98.27%
   ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சைக்கு காத்திருக்கும் காலம் 4 வருடங்கள்
   வீட்டு உரிமைகோரலுக்கான தீர்வு இருக்கிறது

   ఆరోగ్య బీమా సంస్థ
   Expand

   யுனிவர்சல் சோம்போவிடமிருந்து மருத்துவக் காப்பீட்டு திட்டங்களின் நன்மைகள்:

   யுனிவர்சல் சோம்போவின் ஜெனரல் இன்சூரன்ஸ் திட்டங்கள் குறுகிய ஒரு வட்டத்திற்குள் முடிந்து விடாமல் விரிவான பலன்கள் நிறைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை கொடுக்கிறது. இந்நிறுவனம் குறிப்பிட்ட வருமான மட்டத்தினருக்கு என்று‌ இல்லாமல் எல்லோருக்குமான வலுவான மற்றும் பொருத்தமானதாக திட்டங்களை வடிவமைத்திருக்கிறது. யுனிவர்சல் சோம்போவின் காப்பீட்டுத் திட்டங்களின் நன்மைகள் கீழ் வருமாறு.

   நாடு முழுவதும் ஐந்தாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட நிறுவனத்துடன் தொடர்புடைய மருத்துவமனைகளில் பணமில்லா மருத்துவ சிகிச்சைக்கு வசதியளித்து உதவுகிறது யுனிவர்சல் சோம்போவின் இந்த காப்பீட்டுத் திட்டம். இதிலேயே மருத்துவமனைக்குச் செல்லும் முன் மற்றும் வீடு திரும்பிய பின்னர் என இருக்கும் எல்லா செலவுகளும்‌ ஈடுசெய்யப்படுகிறது. இவர்களின் க்ளெய்ம் தீர்வு விகிதமானது 98.27% ஆக இருப்பது நம் உரிமைகோரல் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது. எந்த நேரமும் வாடிக்கையாளர்களார் உதவி பெற இயலும். வருமான வரிச் சட்டத்தின் 80டி பிரிவின் கீழ் காப்பீடு பெறுபவர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படும். மேலும் மிக முக்கியமாக விரைவான க்ளெய்ம் தீர்வு வழங்கப்படுகிறது. இந்நிறுவனத்துடன் தொடர்புகொள்வது மிகவும் சுலபம். மக்களுக்கு உதவவும், வழிகாட்டவும், நம்பகமான காப்பீட்டுத் தீர்வுகளை வழங்கவும் இந்தியா முழுக்க பரவலாக இருப்புக் கொண்டு தயாராக இருக்கிறது இந்நிறுவனம்

   எதிர்கால அபாயங்களைக் குறைப்பதற்கு முன்னெச்சரிக்கையாக இருப்பது‌ மிகவும் அவசியமாகிறது. மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் ஒருபுறம் இருக்க, இந்நிறுவனத்தின் கஸ்டமர் அவுட்ரீச் செயல்பாடுகளின் மூலம் சுகாதார முகாம்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு ரோட்ஷோக்கள் ஆகியவை நிகழ்த்தி விழிப்புணர்வு அளித்து வருகிறார்கள். இது மட்டுமின்றி இயற்கை பேரழிவு நிகழ்வுகளின் போதும் தங்கள் வாடிக்கையாளர்கள் மட்டும் என்றில்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் இந்நிறுவனம் துணை நிற்கிறது.

   மகிழ்ச்சியான ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் மகிழ்வுந்து வழிவகுக்கிறார்கள். இந்நிறுவனத்தின் ஊழியர்களின் நலனுக்காக பணியிடத்தில் வேடிக்கையான செயல்பாடுகளை நிகழ்த்தியும் அதில் உள்ளக ஊழியர்களை ஈடுபடுத்தியும் அவர்களுக்குள் ஆரோக்கியமான பணிச்சூழலை‌ உருவாக்கிறது. இப்படியாக நிறுவனத்திற்குள்ளும் வெளியுலகிலும் பல நற்பலன்கள் செய்துவரும் நிறுவனம் நிச்சயமாக மக்களின் நம்பிக்கைக்குரியதாக மாறிவிடுகிறது. யுனிவர்சல் சோம்போவும் அப்படியான நம்பகத்தன்மை வாய்ந்த காப்பீட்டுத் திட்டங்களுடன் சேவை புரிந்து வருகிறது

   யுனிவர்சல் சோம்போவின் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களின் பட்டியல்:

   இந்த நிறுவனம் வெவ்வேறு வகையான மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஒவ்வொரு திட்டத்தின் விரிவான முன்னோட்டம் கீழ்வருமாறு:

   • யுனிவர்சல் சோம்போ தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:

    யுனிவர்சல் சோம்போ தனிநபர் காப்பீட்டுத் திட்டம் பின்வரும் அம்சங்களும் விலக்குகளும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இது தனிநபர் ஒருவரை மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளையும்‌ உள்ளடக்கியது

    சிறப்பம்சங்கள்:

    • இந்நிறுவனத்துடன் தொடர்புடைய மருத்துவமனைகளில் பணமில்லா காப்பீட்டு சிகிச்சை வசதி
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அதற்காகும் மருத்துவ செலவுகள்
    • மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கு மருத்துவமனையில் இல்லாமல் கீழ்வரும் காரணங்களால் வீட்டிலேயே மூன்று நாட்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படும்போது வீட்டுச் செலவுகள் இத்திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படும்
    • மருத்துவமனைக்கு கொண்டு போக முடியாத நிலையிலிருக்கும் நோயாளிகள்
    • மருத்துவமனையில் இடவசதி போதிய அளவு இல்லாததால் நோயாளியை அங்கு கொண்டு செல்ல முடியாத நிலை
    • 45 வயது வரை காப்பீடு‌ செய்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. 45 வயதை கடந்தவர்களுக்கு, மருத்துவப் பரிசோதனைகள் கட்டாயமாக இருக்கிறது. வாடிக்கையாளருக்கு இந்த சோதனைக் கட்டணங்களில் 50% திருப்பிச் கொடுக்கப்படும்.
    • சில தீவிரமான நோய்களை கவர் செய்ய வாடிக்கையாளர்கள் கூடுதலாக கவர்கள் வாங்கலாம்
    • காப்பீடு செய்யப்பட்டவரின் வயதையும் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையையும் பொறுத்து பிரீமியம் வழங்கப்படும்
    • இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் கவரேஜ் கிடைக்கும்
    • இந்தத் திட்டத்தின் கீழ் கவரேஜில்‌ போர்டிங் கட்டணங்கள், அறை வாடகைக் கட்டணம், நர்சிங், அறுவை சிகிச்சை நிபுணர்‌ அல்லது நிபுணத்துவக் கட்டணம், ஆக்ஸிஜன், இரத்தம் போன்றவற்றுக்கான கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.

    தகுதி:

    வயது வரம்பு: 55 ஆண்டுகள்

    விலக்குகள்

    பின்வரும் காரணங்களால் ஏற்படும் சேதம், இழப்பு அல்லது நோய்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஈடுசெய்ய முடியாது

    • காப்பீடு துவங்குவதற்கு முன்பே இருந்த நோய்கள் இந்த திட்டத்தின் கீழ் பொருந்தாது
    • காப்பீட்டுத் திட்டம் தொடங்கிய நாளிலிருந்து முதல் முப்பது நாட்களுக்குள் ஏற்படும் நோய்கள் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலோ சிகிச்சை வழங்கப்பட்டாலோ அதற்கான செலவுகள் காப்பீடு செய்யப்படாது. ஆனால், விபத்து ஏற்பட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், இந்த விலக்கு அதற்கு பொருந்தாது
    • காப்பீடு துவங்கிய முதல் வருடத்தில், கண்புரை, பைல்ஸ், கருப்பை நீக்கம், மெல்லிய புரோஸ்டேடிக் ஹைபர்டிராபி, சைனசிடிஸ் மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளுக்கான செலவுகள் இதில் வராது.
    • படையெடுப்பு, போர், வெளிநாட்டு எதிரியின் செயல் போன்ற இந்த காரணங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ காயம் அல்லது நோய் ஏற்பட்டால் அதற்கான செலவு செலுத்தப்படாது
    • சிகிச்சை அவசியமில்லாதபோது செர்க்கம்சிசனுக்கான காப்பீடு விலக்கப்படுகிறது
    • காண்டாக்ட் லென்ஸ்கள், கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகளின் விலைகள் என் இதிலெதுவும் இத்திட்டத்தின் கீழ் வராது
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத எந்த வித பல் சிகிச்சைக்கும் காப்பீடு இல்லை
    • எய்ட்ஸ்க்கான சிகிச்சையுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய சிகிச்சைக்களுக்கான செலவுகள் இதில் வராது
    • அழகியல் அல்லது ஒப்பனை சிகிச்சைகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை
    • வேண்டுமென்றே செய்துக் கொண்ட சுய தீங்கு, பாலியல் நோய்கள் மற்றும் ஆல்கஹால் அல்லது போதை மருந்துகள் பயன்பாடு என இவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கவரேஜ் செய்யப்படாது
    • குழந்தை பிறப்பு மற்றும் கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் காப்பீடு செய்யப்படாது
    • இயற்கை மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் இதில் வராது.
   • யுனிவர்சல் சோம்போ குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம்

    இந்த மருத்துவ திட்டத்தின் கீழ் வர்த்தகம் அல்லது உற்பத்தித் துறைகள், இதர நிறுவனங்கள், சங்கங்கள், சமூகங்கள் கிளப்புகளிலுள்ள குழுக்களின் ஊழியர்களுக்கான மருத்துவ மற்றும் குடியிருப்புச் செலவுகள் உள்ளடங்கும். யுனிவர்சல் சோம்போவின்‌ இந்த குழு காப்பீட்டுக் திட்டத்தின் அம்சங்களும் விலக்குகளும் பின்வருமாறு:

    சிறப்பம்சங்கள்:

    • இந்நிறுவனத்துடன் தொடர்புடைய மருத்துவமனைகளில் பணமில்லா காப்பீட்டு சிகிச்சை வசதி
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அதற்காகும் மருத்துவ செலவுகள்
    • மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கு மருத்துவமனையில் இல்லாமல் கீழ்வரும் காரணங்களால் வீட்டிலேயே மூன்று நாட்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படும்போது வீட்டுச் செலவுகள் இத்திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படும்
    • மருத்துவமனைக்கு கொண்டு போக முடியாத நிலையிலிருக்கும் நோயாளிகள்
    • மருத்துவமனையில் போதிய அளவு இடவசதி இல்லாத காரணத்தால் நோயாளியை அங்கு கொண்டு செல்ல முடியாத நிலை
    • குழுவின் அளவையும் அதன் தன்மையையும் பொறுத்து வேண்டுமெனில் கூடுதல் பிரீமியம் செலுத்தி காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதல் கவரேஜ் பெறலாம்.
    • க்ரிடிகள் இல்னெஸ் கவர் - புற்றுநோய், பக்கவாதம், கரோனரி ஆர்டரி பைபாஸ், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றிற்கான சிகிச்சைகளும் நுரையீரல், சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை மற்றும் கணையம் போன்ற உறுப்புகளின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்குமான செலவுகள் இதில் அடங்கும்.‌ தீவிர நோய்க்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுக்கும்போது, ​​காப்பீட்டுத் தொகை இரட்டிப்பாகிறது.
    • மகப்பேறு நலனுக்கான கவர் இதன்மூலம் வாங்கலாம்
    • ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான கவர்
    • ஃபேமிலி ஃப்ளோட்டர் கவர்
    • பிரீமியம் காப்பீடு செய்யப்படும் நபரின் வயதையும் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையையும் பொறுத்து வேறுபடலாம்
    • இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் கவரேஜ் வழங்கப்படும்
    • இந்தத் திட்டத்தின் கவரேஜில் போர்டிங் கட்டணங்கள், அறை வாடகைக் கட்டணம், நர்சிங், நிபுணர்/நிபுணத்துவக் கட்டணம், அறுவை சிகிச்சை, ஆக்ஸிஜன், இரத்தம் போன்றவற்றுக்கான கட்டணங்களும் அடங்கும்.

    தகுதி

    வயது வரம்பு: 55 ஆண்டுகள்

    விலக்குகள்

    பின்வரும் காரணங்களால் ஏற்படும் சேதம், இழப்பு அல்லது நோய்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஈடுசெய்ய முடியாது

    • காப்பீடு துவங்குவதற்கு முன்பே இருந்த நோய்கள் அதற்கான பிரத்யேக காப்பீடு குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தவிர, இந்த திட்டத்தின் கீழ் பொருந்தாது
    • காப்பீட்டுத் திட்டம் தொடங்கியதிலிருந்து முதல் 30 நாட்களுக்குள் ஏற்படும் நோய்கள் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலோ சிகிச்சை வழங்கப்பட்டாலோ அதற்கான செலவுகள் காப்பீடு செய்யப்படாது. ஆனால், விபத்து ஏற்பட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், இந்த விலக்கு பொருந்தாது
    • காப்பீட்டு தொடங்கிய முதல் வருடத்தில், கண்புரை, கருப்பை நீக்கம், மெல்லிய புரோஸ்டேடிக் ஹைபர்டிராபி, பைல்ஸ், சைனசிடிஸ் மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளுக்கான செலவுகள் இதில் வராது.
    • படையெடுப்பு, போர், வெளிநாட்டு எதிரியின் செயல் போன்ற இந்த காரணங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ காயம் அல்லது நோய் ஏற்பட்டால் அதற்கான செலவு செலுத்தப்படாது
    • சிகிச்சை அவசியமில்லாதபோது செர்க்கம்சிசனுக்கான காப்பீடு விலக்கப்படுகிறது
    • காண்டாக்ட் லென்ஸ்கள், கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகளின் விலைகள் என் இதிலெதுவும் இத்திட்டத்தின் கீழ் வராது
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத எந்த வித பல் சிகிச்சைக்கும் காப்பீடு இல்லை
    • எய்ட்ஸ்க்கான சிகிச்சையுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய சிகிச்சைக்களுக்கான செலவுகள் இதில் வராது
    • அழகியல் அல்லது ஒப்பனைக்கான சிகிச்சைகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை
    • வேண்டுமென்றே செய்துக் கொண்ட சுய தீங்கு, பாலியல் நோய்கள், மற்றும் ஆல்கஹால் அல்லது போதை மருந்துகள் பயன்பாடு என இவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கவரேஜ் செய்யப்படாது
    • குழந்தை பிறப்பு மற்றும் கர்ப்பம்

    தொடர்பான சிக்கல்கள் காப்பீடு செய்யப்படாது

    • இயற்கை மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் இதில் வராது.
   • யுனிவர்சல் சோம்போ பிரவாசி பாரதிய பீமா யோஜனா திட்டம்

    யுனிவர்சல் சோம்போவின் இந்த மருத்துவ திட்டம் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களின் மருத்துவச் செலவுகளை உள்ளடக்கியது. மேலும், "எமிக்ரேஷன் செக் தேவை" என்று பாஸ்போர்ட்டுகளில் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான மருத்துவ செலவுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் வருகிறது

    சிறப்பம்சங்கள்:

    • விபத்தினால் ஏற்படும் உடல் காயங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டவரின் நிரந்தர இயலாமைக்கு அல்லது மரணம் இத்திட்டத்தால் ஈடுசெய்யப்படும்
    • வெளிநாடுகளில் வேலையில் இருக்கையில், தற்செயலாக ​​காப்பீடு செய்யப்பட்ட நபர் மரணமடைந்தால், இறந்த நபரின் உடலை இந்தியாவுக்கு அங்கிருந்து எடுத்துச் செல்வதற்கான செலவை இந்நிறுவனம் திருப்பிச் செலுத்தும். மரண எச்சங்களுடன் இறந்த இடத்திலிருந்து இந்தியாவிற்கு வரும் உதவியாளருக்கு எகானமி கிளாஸில் விமானக் கட்டணமும் கொடுக்கப்படும்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்தால் மருத்துவ செலவுகள் இத்திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படும்
    • காப்பீட்டாளரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆகும் மருத்துவமனை செலவுகளையும் ஈடுசெய்கிறது. 65 வயது வரை வாழ்க்கைத் துணையையும், 21 வயது வரை இரண்டு குழந்தைகளையும் இத்திட்டம் உள்ளடக்கும். கவரேஜில் சேர்க்கப்பட்டுள்ள செலவுகள் பின்வருமாறு:
    • நர்சிங் மற்றும் அறை செலவுகள்
    • மயக்க மருந்து நிபுணர், மருத்துவ பயிற்சியாளர், ஆலோசகர் கட்டணம்
    • இரத்தம், மயக்க மருந்து, ஆக்சிஜன், அறுவை சிகிச்சை உபகரணங்கள், ஆபரேஷன் தியேட்டர், மருந்துகள், டயாலிசிஸ், எக்ஸ்ரே, கீமோதெரபி, செயற்கை கால்கள், ரேடியோதெரபி போன்றவற்றின் செலவுகளும் பிற செலவுகளும் இதில் வரும்
    • மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் டானிக்குகள் மற்றும் வைட்டமின்களின் விலை
    • 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அறுவை சிகிச்சைகளுக்கும் மற்ற சிகிச்சைகளுக்கும் தினப்பராமரிப்பு கவர் செய்யப்படும்
    • காப்பீடு செய்யப்பட்ட பெண்ணின் மகப்பேறு செலவுகள் இத்திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படும்
    • மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கு மருத்துவமனையில் இல்லாமல் கீழ்வரும் காரணங்களால் வீட்டிலேயே மூன்று நாட்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படும்போது வீட்டுச் செலவுகள் இத்திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படும்
    • மருத்துவமனைக்கு கொண்டு போக முடியாத நிலையிலிருக்கும் நோயாளிகள்
    • மருத்துவமனையில் போதிய அளவு இடவசதி இல்லாததால் நோயாளியை அங்கு கொண்டு செல்ல முடியாத நிலை
    • பின்வரும் சூழ்நிலைகளின் போது எகானமி வகுப்பு டிக்கெட்டுக்கான விமான கட்டணம் காப்பீட்டாளருக்கு வழங்கப்படும்:
    • காப்பீடு செய்யப்பட்டவர் வெளிநாடு சென்று பணியிடத்திற்கு அல்லது சேரவேண்டிய இடத்திற்கு வரும்போது, ​​முதலாளியின் சார்பாக ரிசீவ் செய்யப்படாத போது அல்லது வேலை மறுக்கப்படும் போது
    • காப்பீடு செய்யப்பட்டவரின் வேலையிலோ ஒப்பந்தத்திலோ ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு அது காப்பீட்டாளருக்கு பாதகமாக இருக்கும் போது
    • புலம்பெயர்ந்தவரின் பேரில் எந்த ஒரு தவறும் இல்லாமல், காப்பீட்டுக் காலத்தின் போது முதல் மூன்று மாதங்களுக்குள் வேலை நிறுத்தப்பட்டால்
    • புலம்பெயர்ந்த காப்பீடு செய்யப்பட்டவர் பணியைத் தொடர அல்லது தொடங்க மருத்துவ ரீதியாக தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டால் அல்லது நோய்வாய்ப்பட்டால் மற்றும் காப்பீடு தொடங்கிய முதல் 12 மாதங்களுக்குள் முதலாளியால் அவர்கள் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டால் காப்பீடு மூலம்‌ விமான கட்டணம் செலுத்த உதவி கிடைக்கும்.
    • இந்தத் திட்டத்தின் கவரேஜில் போர்டிங் கட்டணங்கள், அறை வாடகைக் கட்டணம், நர்சிங், நிபுணர்/நிபுணத்துவக் கட்டணம், அறுவை சிகிச்சை, ஆக்ஸிஜன், இரத்தம் போன்றவற்றுக்கான கட்டணங்கள் ஆகியவை உள்ளடங்கும்.
    • 45 வயதை கடந்துவிட்ட காப்பீடு செய்யப்பட்ட நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் அவசியம்

    தகுதி

    18 முதல் 65 ஆண்டுகள் வரை உள்ள வெளிநாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்களும் வேலைவாய்ப்பிற்கான விசா உள்ள இந்திய குடிமக்களுக்கு இத்திட்டம் பொருந்தும்

    விலக்குகள்

    பின்வரும் காரணங்களால் ஏற்படும் சேதம், இழப்பு அல்லது நோய்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஈடுசெய்ய முடியாது:

    • காப்பீடு செய்யப்பட்டவர் மருத்துவரின் ஆலோசனைக்கு மாறாக பயணம் செய்தால்
    • காப்பீடு செய்யப்பட்டவர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு மருத்துவ சிகிச்சைக்காக காத்திருப்போரின் பட்டியலில் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் வராது
    • காப்பீட்டாளர் மருத்துவ சிக்கலுக்கான முன்கணிப்பைப் பெற்றிருந்தால்
    • காப்பீடு செய்யப்பட்டவர் இராணுவம், கடற்படை அல்லது விமானப்படைகளின் பிரிவுகளில் பங்கேற்றால்
    • முன்மொழிவுப் படிவத்தில் குறிப்பிட்டதை போல் இல்லாமல் காப்பீடு செய்யப்பட்ட நபர் வேறு தொழில் அல்லது வேறு முதலாளியிடம் அல்லது வேறு நாட்டில் பணிபுரிந்தால்
    • நாட்டிற்கு எதிராக யுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கை நிகழும் போதும் காப்பீடு செய்யப்பட்ட நபர் வேலைக்குச் சென்ற நாட்டில் உள்நாட்டுப் பூசல்கள் ஏற்படும் போதும், காப்பீடு க்ளெய்ம் செய்யப்படாது.
    • காப்பீடு செய்யப்பட்டவர்களின் பாஸ்போர்ட் அல்லது அவர்களின் விசா காலாவதியான பிறகு க்ளெய்ம் செய்ய‌ முயன்றால்
    • சிகிச்சை அவசியமில்லாதபோது செர்க்கம்சிசனுக்கான காப்பீடு விலக்கப்படுகிறது
    • எய்ட்ஸ்க்கான சிகிச்சையுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய சிகிச்சைக்களுக்கான செலவுகள் இதில் வராது
    • வேண்டுமென்றே செய்துக் கொண்ட சுய தீங்கு, பாலியல் நோய்கள், மற்றும் போதை மருந்துகள் அல்லது ஆல்கஹால் பயன்பாடு என இவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கவரேஜ் செய்யப்படாது
    • படையெடுப்பு, போர், வெளிநாட்டு எதிரியின் செயல் போன்ற இந்த காரணங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ காயம் அல்லது நோய் ஏற்பட்டால் அதற்கான செலவு செலுத்தப்படாது
    • கடற்படை, விமானப்படை அல்லது இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்பு அல்லது ஈடுபாடு, பந்தயம், விமானம், பாராசூட்டிங், ஸ்கூபா டைவிங், பாறை அல்லது மலை ஏறுதல், ஹேங்-கிளைடிங், அல்லது போன்ற காரணங்களுக்காக க்ளெய்ம் செய்யப்படும் காப்பீடுகள்‌ இங்கு பொருந்தாது
   • யுனிவர்சல் சோம்போ சர்வ வித்யார்த்தி பீமா யோஜனா திட்டம்

    மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்களால் எடுக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தான் யுனிவர்சல் சோம்போ சர்வ வித்யார்த்தி பீமா யோஜனா திட்டம்.

    சிறப்பம்சங்கள்:

    இங்கு தனித்‌ தனி பிரிவுகள் உள்ளன. பிரிவு A கட்டாயமானதாகவும் மீதமுள்ள பிரிவுகள் விருப்பமானவையாகவும்‌ இருக்கிறது.

    பிரிவு A -ன் நன்மைகள்:
    • விபத்தின் காரணமாக பெற்றோரின் மரணம்
    • விபத்து காரணமாக பெற்றோரின் நிரந்தர மற்றும் முழு முடக்கம்
    • விபத்தின் காரணமாக பெற்றோரின் நிரந்தர மற்றும் பகுதியளவு முடக்கம்
    • விபத்தின் காரணமாக ஏற்பட்ட மாணவரின் மரணம்
    • எதிர்பாரா விபத்தைத் தொடர்ந்து நேர்ந்த மாணவரின் நிரந்தர மற்றும் மொத்த ஊனம்
    • விபத்தைத் தொடர்ந்து மாணவரின் நிரந்தர மற்றும் பகுதியளவு முடக்கம்
    • A பிரிவின் கீழ் எடுக்கமுடிந்த நீட்டிப்புகள் பின்வருமாறு
    • தனிப்பட்ட உடமைகளை இழக்க நேர்தல்
    • பெடல் சைக்கிளின் திருட்டு அல்லது இழப்புக்கான கவர்
    • பெற்றோரின் நிரந்தர மொத்த ஊனம்/ தற்செயலான மரணம் ஏற்பட்டால் மாணவருக்காகும் படிப்புக்கான செலவு
    • ஆம்புலன்ஸ்க்கு ஆகும் கட்டணம் நீட்டிப்பு
    • தேர்வுக்காக செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெறலாம்
    பிரிவு B -ன் நன்மைகள்:
    • பின்வருவனவற்றை உள்ளடக்கிய மருத்துவச் செலவுகளுக்கான கவரேஜ் - போர்டு, அறை மற்றும் நர்சிங் செலவுகள், மயக்க மருந்து நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர், ஆலோசகர்கள் ஆகியோர்களுக்காகும் கட்டணங்கள்; இரத்தம், மயக்க மருந்து, ஆபரேஷன் தியேட்டர், ஆக்ஸிஜன் ஆகியவற்றின் கட்டணங்கள்; அறுவை சிகிச்சை உபகரணங்கள், மருந்துகள், எக்ஸ்ரே, டயாலிசிஸ், ரேடியோதெரபி, கீமோதெரபி, ஸ்டென்ட்கள் மற்றும் செயற்கை உறுப்புகள் போன்றவற்றின் செலவுகள்‌
    பிரிவு C-ன் நன்மைகளை:
    • தீ, வெடிப்பு போன்றவற்றினால் காப்பீடு செய்யப்பட்ட சொத்திற்கு ஏதேனும் சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால் சேதத்தின் அளவை மற்றும் / அல்லது அதன் சந்தை மதிப்பை நிறுவனம் செலுத்தும். விலங்குகள் அல்லது சாலை வாகனம்/ இரயில்களால் ஏற்படும் பாதிப்பு, பாறைகள் சரிவு, தானியங்கி, ஏவுகணை சோதனை நடவடிக்கைகள், தெளிப்பான்களில் இருந்து கசிவு நேர்தல், புதர் தீ மற்றும் இது போன்ற காரணங்களால் ஏற்படும் சேதங்களும் இத்திட்டத்தின் கீழ் வரும்.
    பிரிவு C -ன் கீழ் கிடைக்கும் நீட்டிப்புகள்:
    • ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான தற்செயலான நன்மையை வழங்கும் பணியாளர் பாதுகாப்பு நீட்டிப்பு
    • கல்வி நிறுவனத்தின் நூலகப் புத்தகங்களை தீ மற்றும் பிற ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்க காப்பீடு செய்யப்பட்ட தொகையை திருப்பிச் செலுத்தும் நூலக புத்தக நீட்டிப்பு
    • மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கு மருத்துவமனையில் இல்லாமல் கீழ்வரும் காரணங்களால் வீட்டிலேயே மூன்று நாட்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படும்போது வீட்டுச் செலவுகள் இத்திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படும்
    • மருத்துவமனைக்கு கொண்டு போக முடியாத நிலையிலிருக்கும் நோயாளிகள்
    • மருத்துவமனையில் இடவசதி போதிய அளவு இல்லாததால் நோயாளியை அங்கு கொண்டு செல்ல முடியாத நிலை
    • கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலமாக கூடுதல் நன்மைகளை பெறலாம். பின்வரும் நீட்டிப்புகளை/கவர்களை வாங்கலாம்:
    • ரீஇன்ஸ்டேட்மெண்ட் வேல்யூ விதி (பிரிவு C -ல் வரும்) - காப்பீடு செய்யப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு தீ மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆபத்துகளால் நிகழும் சிக்கல்களுக்கு எதிராக மறுசீரமைப்பு மதிப்பின் அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் ஈடுசெய்யும் வசதி இருக்கிறது
    • காப்பீடு செய்யப்பட்ட கல்வி நிறுவனத்தின் வளாகத்திலிருக்கும் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்செயலான இடர்களை உள்ளடக்கிய பாலிசியைத் தேர்வுசெய்தால், 25% வரை தள்ளுபடி வழங்கப்படும் (பிரிவு A -வில் வரும்).
    • உள்ளடக்க காப்பீடு (பிரிவு A -வில் வரும்) இது வீட்டு உள்ளடக்கத்திற்கான கவரேஜாக ரூ. 15000 வரை வழங்குகிறது.
    • பிரீமியம் காப்பீடு செய்யப்படும் நபரின் வயதையும் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையையும் பொறுத்து வேறுபடலாம்
    • காப்பீட்டுத் தொகை புதுப்பித்தலின் போது அதிகரிக்கும்

    தகுதி

    3 வயதிலிருந்து 65 வயது வரை உள்ள மாணவர்களும் பணியாளர்களும் காப்பீடு செய்யலாம்

    விலக்குகள்

    விபத்து க்ளெய்ம்கள் தொடர்பான விலக்குகள் (பிரிவு Aக்கு கீழ் வரும்)

    • ஒரு வருடாந்திர பாலிசி காலத்தில் ஒன்றோ அதற்கு மேற்பட்ட க்ளெய்ம்களோ செலுத்தியதன் மூலம் ஒருவேளை காப்பீட்டுத் தொகை தீர்ந்துவிட்டால், அதைவிட அதிகமாக க்ளெய்ம் செய்யப்படும் தொகையை தொகை வழங்கப்படாது.
    • ஏற்கனவே உள்ள உடல் குறைபாடு, காயம் அல்லது இயலாமை
    • கர்ப்பம், குழந்தை பிறப்பு அல்லது அதன் விளைவாக இயலாமை அல்லது இறப்பு
    • இயலாமை, காயம் அல்லது இறப்பு தொடர்பான இழப்பீடுகள் கீழ்வரும் காரணங்களில் கொடுக்கப்பட மாட்டாது
    • வேண்டுமென்றே சுய காயம் அல்லது தற்கொலை முயற்சி
    • மது அல்லது வேறு போதைப்பொருட்களின் விளைவு
    • உணர்வு சோர்வு அல்லது துயரம்
    • பலூனிங்கில் அல்லது விமானப் போக்குவரத்தில் ஈடுபடும் போது நேரும் சிக்கல்கள்
    • எய்ட்ஸ்‌ அல்லது பால்வினை நோய்
    • பெற்றோர்/மாணவர் சட்டத்தை மீறுதல், குற்றச்செயல், கலவரம், தவறான நடத்தை, சிவில் கலவரங்களில் பங்கேற்பதால் எழும் அல்லது அதன் விளைவாக நேரும் சிக்கல்கள்
    • வேட்டை, பந்தயம், ஐஸ் ஹாக்கி, மலையேறுதல், குளிர்கால விளையாட்டுகள் மற்றும் பலவற்றில் ஈடுபடுவதால் வரும் பிரச்சனைகள்
    • போர், அணுசக்தி அல்லது கதிர்வீச்சு அபாயங்கள் காரணமாக வரும் பிரச்சினைகள்
    மருத்துவ க்ளெய்ம் தொடர்பான விலக்குகள் (பிரிவு Bக்கு கீழ் பொருந்தும்)
    • மாணவர்களால் ஏற்படும் செலவினங்களுக்காகவோ பின்வருபவை தொடர்பாகவோ இந்நிறுவனம் எந்தவொரு கட்டணத்தையும் இத்திட்டத்தின் கீழ் செலுத்தாது
    • யுனிவர்சல் சோம்போவுடன் பாலிசி தொடங்கப்பட்டதிலிருந்து, 48 மாதங்கள் முடியும் வரை, முன்பே கண்டறியப்பட்ட நோய்களுக்கு காப்பீடு வழங்கப்படாது.
    • பிரிவு 3 இல் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர மாணவரால் பாலிசி தொடங்கப்பட்டதிலிருந்து முதல் 30 நாட்களுக்குள் பாதிக்கப்படும் வேறு நோய்கள்‌ இத்திட்டத்தின் கீழ் வராது
    • மாநில அல்லது மத்திய அரசால் தொற்றுநோய் என வகைப்படுத்தப்பட்ட நோய்களுக்கு காப்பீடு வழங்கப்படாது
    • படையெடுப்பு, போர், வெளிநாட்டு எதிரியின் செயல் போன்ற இந்த காரணங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ நோய் அல்லது காயம் ஏற்பட்டால் அதற்கான செலவு செலுத்தப்படாது.
    • சிகிச்சை அவசியமில்லாதபோது செர்க்கம்சிசனுக்கான காப்பீடு விலக்கப்படுகிறது.
    • விபத்து, தடுப்பூசி அல்லது அழகியல் அல்லது ஒப்பனைக்கான சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஆகியவற்றின் ஒரு பகுதியாகவோ அதன் மூலமாகவோ வரும் சிக்கல்களுக்கு காப்பீடு இல்லை.
    • காண்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் கண்ணாடிக்கும்‌ கேட்கும் கருவிகளுக்கும் வேண்டிய விலை இத்திட்டத்தின் கீழ் வராது
    • பல் சிகிச்சை இதில் சேராது
    • பொது பலவீனம், பாலியல் நோய், மலட்டுத்தன்மை, வேண்டுமென்றே சுய காயம் செய்துக் கொள்ளுதல், ஓய்வு சிகிச்சை மற்றும் ஆல்கஹால் / போதை மருந்துகள் பயன்பாட்டின் மூலம் வரும் சிக்கல்கள், மறுவாழ்வு சிகிச்சை ஆகியவை இதில் பொருந்தாது
    • மருத்துவரால் சான்றளிக்கப்பட்ட சிகிச்சையின் பகுதியாக இல்லாமல் பெறப்படும் டானிக்குகள் மற்றும் வைட்டமின்களுக்கான செலவுகளுக்கு காப்பீடு இல்லை
    • அணு ஆயுதங்கள் / பொருட்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படும் காயம் அல்லது நோய்கள் இத்திட்டத்தின் கீழ் சேராது
    • கர்ப்பப் பிரசவத்திலிருந்து எழும் சிக்கல்களும் கண்டறியக்கூடிய பிரச்சினைகளுக்கான சிகிச்சை இதில் வராது
    • இயற்கை மருத்துவ சிகிச்சைகள் இதில் பொருந்தாது
    • பரிசோதனைக்கான சிகிச்சைகள் கவரேஜிலிருந்து விளக்கப்படுகிறது.
    தீ கவர்கள் விலக்குகள் (பிரிவு C க்கு கீழ் பொருந்தும்)
    • மின்னல், நிலச்சரிவு, பாறை சரிவுகள் போன்ற எதிர்பாரா விபத்துகளால் ஏற்படக் கூடிய ஒவ்வொரு இழப்புக்கும் குறைந்தபட்சம் ரூ.10,000 உட்பட ஒவ்வொரு க்ளெம்மின் முதல் 5% இதில் பொருந்தாது
    • மற்ற ஆபத்துகளால் ஏற்படக் கூடிய இழப்புக்கு இந்த பாலிசியின் மூலம் ரூ.10,000 இழப்பீடு அளிக்கப்படும்
    • படையெடுப்பு, போர், வெளிநாட்டு எதிரிகளின் விரோதச் செயல், கலகம், உள்நாட்டுப் போர், உள்நாட்டுக் கலவரம் அல்லது. இராணுவ எழுச்சி, மக்கள் எழுச்சி, கிளர்ச்சி, புரட்சி, போன்ற செயல்பாடுகளால் ஏற்படும் இழப்பு, அழிவு அல்லது சேதம் (போர் அறிவிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும்) இதில் வராது
    • அணுக்கரு எரிபொருளின் கதிரியக்கங்கள், அயனியாக்கும் கதிர்வீச்சுகளால் ஏற்படும் மாசு, அணு எரிபொருளை எரிப்பதினால் ஏற்படும் அணுக் கழிவுகள்; அல்லது ஏதேனும் வெடிக்கும் அணுக்கரு அசெம்பிளி, வெடிமருந்துகள் அல்லது கதிரியக்க நச்சு என இக்காரணங்களால் ஒருவரால் காப்பீடு செய்யப்பட்டிருக்கும் சொத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படும் சேதம், இழப்பு, அல்லது அழிவு
    • மாசு அல்லது அதன் விளைவாக ஏற்படக்கூடும் எந்த ஆபத்தும் இத்திட்டத்தின் மூலம் காப்பீடு செய்யப்படாது
    • குளிர்பதனக் கிடங்கு வளாகத்தில் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படுத்தக்கூடும் பங்குகளின் இழப்பு, சேதம் அல்லது அழிவு இதில் வராது
    • பொன் அல்லது மற்ற விலைமதிப்பற்ற கற்கள், கலைப் படைப்புகள், நம்பிக்கையில் அல்லது கமிஷன் மீது வைத்திருக்கும் கையெழுத்துப் பிரதிகள், பொருட்கள், வரைபடங்கள், திட்டங்கள், கடமைகள், பத்திரங்கள் (அ) ஆவணங்கள், நாணயங்கள், முத்திரைகள், காகிதப் பணம், கணக்குப் புத்தகங்கள், காசோலைகள் அல்லது பிற வணிகம் சார்ந்த புத்தகங்கள், கணினி அமைப்புகளும் பதிவுகளும் என இவற்றின் இழப்பு, சேதம் அல்லது அழிவுக்கு ரூ.10000க்கும் அதிகமான தொகை வழங்கப்பட வேண்டுமானால் இதில் பொருந்தாது.
    • குறிப்பிட்ட மின் சாதனம், இயந்திரம், கருவிகள், மற்ற இயந்திரங்கள், சுய வெப்பமாக்கல், அதிகப்படியான மின்னழுத்தம், மின்சாரம் கசிவு ஆகியவற்றின்போது ஏற்படும் அழிவு, சேதம் அல்லது இழப்பு
    • வருவாய் இழப்பு, சந்தை இழப்பு, தாமதத்தால் ஏற்படும் இழப்பு, பிற விளைவுகள் அல்லது சேதம்
    • ஆபத்தின் போது அல்லது அதற்குப் பிறகு திருட்டினால் காப்பீடு செய்யப்பட்ட பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு.
    • எரிமலை வெடிப்பு, பூகம்பம் அல்லது இதர இயற்கையின் சீற்றங்களின் காரணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ அதன் மூலமோ அதன் விளைவாகவோ ஏற்படும் சேதம் அல்லது இழப்பு.
    • கலவரம், வேலைநிறுத்தம், தீங்கிழைக்கும் சேதங்கள் என வெளிப்புற வன்முறைகளால் நேரும் இழப்புகளுக்கு காப்பீடு இல்லை‌.
    • எரிமலை வெடிப்பு தவிர புயல், வெள்ளம், மற்றும் சூறாவளி ஆகியவற்றால் ஏற்படும் இழப்புகள், சேதங்கள் அல்லது அழிவுகள் இதில் வராது.
   • யுனிவர்சல் சோம்போ ஸ்வர்ண கிராமின் பீமா யோஜனாத் திட்டங்கள் (தனிநபர் மற்றும் குழுத் திட்டங்கள்)

    யுனிவர்சல் சோம்போவின் இந்த திட்டம் ஒரு கிராமவாசியால் எடுக்கப்படக்கூடிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். ஒரு‌ கிராமவாசியால் தனக்கும் தனது குடும்பத்திற்கும், நிதி நிறுவனங்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்கும் பின்வரும் அம்சங்களுடனும் விலக்குகளுடனும் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துக்கொள்ள‌ முடிகிறது.

    சிறப்பம்சங்கள்:

    • விபத்தின் காரணமாக காப்பீடு செய்த நபரின் அல்லது அவரது குடும்பத்தாரின் மரணம், விபத்து நடந்ததின் விளைவாக காப்பீட்டாளருக்கு அல்லது அவரது குடும்பத்தாருக்கு நிரந்தர மொத்த முடக்கமோ அல்லது பகுதியளவு முடக்கமோ ஏற்பட்டால் அவற்றிற்கு காப்பீடு வழங்கப்படும்
    • புற்றுநோய், திறந்த மார்பு சி.ஏ.பி.ஜி., முதல் மாரடைப்பு, திறந்த இதய மாற்று சிகிச்சை, கோமா, டயாலிசிஸ் தேவைப்படுகிற சிறுநீரக செயலிழப்பு, மூட்டு நிரந்தர முடக்கம், பக்கவாதம், முக்கிய உறுப்பு அல்லது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, மோட்டார் நியூரான் நோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற தீவிர நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு.
    • முன்பிருந்தே இருக்கும் நோய்களுக்கு கூடுதலாக பிரீமியம் செலுத்துவதன் மூலம் பயன்பெறலாம்
    • இந்த பாலிசியின் காலம் ஒன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் வரையில் இருக்கும்
    • காப்பீடு செய்துக்கொண்ட நபர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்பீடு செய்யும் போது அதில் தள்ளுபடி வழங்கப்படுகிறது

    தகுதி

    • வயது வரம்பு: 18 வயதிலிருந்து 65 வரை‌
    • சார்ந்திருக்கும் குழந்தைகளை சேர்க்கும் வயது: 6 மாதங்கள்
    • வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் செய்ய முடிகிறது

    விலக்குகள்

    பின்வரும் காரணங்களால் ஏற்படும் சேதம், இழப்பு அல்லது நோய்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஈடுசெய்ய முடியாது:

    • காப்பீடு துவங்குவதற்கு முன்பே இருந்த நோய்கள் அதற்கான பிரத்யேக காப்பீடு குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தவிர, இந்த திட்டத்தின் கீழ் பொருந்தாது
    • காப்பீட்டுத் திட்டம் தொடங்கிய நாளிலிருந்து முதல் முப்பது நாட்களுக்குள் ஏற்படும் நோய்கள் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலோ சிகிச்சை வழங்கப்பட்டாலோ அதற்கான செலவுகள் காப்பீடு செய்யப்படாது. ஆனால், விபத்தின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கு இந்த விலக்கு பொருந்தாது
    • காப்பீடு துவங்கிய முதல் வருடத்தில், கண்புரை, மெல்லிய புரோஸ்டேடிக் ஹைபர்டிராபி, பைல்ஸ், சைனசிடிஸ், கருப்பை நீக்கம் மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளுக்கான செலவுகள் இதில் வராது.
    • படையெடுப்பு, போர், வெளிநாட்டு எதிரிகளின் செயல் போன்ற இந்த காரணங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ காயம் அல்லது நோய் ஏற்பட்டால் அதற்கான செலவு செலுத்தப்படாது
    • சிகிச்சை அவசியமில்லாதபோது செர்க்கம்சிசனுக்கான காப்பீடு விலக்கப்படுகிறது
    • காண்டாக்ட் லென்ஸ்கள், கண்ணாடிகள், காது கேட்க உதவும் கருவிகளின் விலைகள் என் இதிலெதுவும் இத்திட்டத்தின் கீழ் வராது
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத எந்த வித பல் சிகிச்சைக்கும் காப்பீடு இல்லை
    • எய்ட்ஸ்க்கான சிகிச்சையுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய சிகிச்சைக்களுக்கான செலவுகள் இதில் வராது
    • அழகியல் அல்லது ஒப்பனைக்கான சிகிச்சைகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை
    • வேண்டுமென்றே செய்துக் கொண்ட சுய தீங்கு, பாலியல் நோய்கள் மற்றும் ஆல்கஹால் அல்லது பிற போதை மருந்துகள்னின் பயன்பாடு என இவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கவரேஜ் செய்யப்படாது
    • குழந்தை பிறப்பு மற்றும் கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் காப்பீடு செய்யப்படாது
    • இயற்கை மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் இதில் வராது
   • யுனிவர்சல் சோம்போ ஆபத் சுரக்ஷா பீமா இன்சூரன்ஸ் திட்டம்:

    யுனிவர்சல் சோம்போவின் ஆபத் சுரக்ஷா பீமா இன்சூரன்ஸ் திட்டம் என்னும்‌ இத்திட்டம் ஆபத்தான நோய்களினிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பும் காப்பீடும் வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காப்பீட்டாளருக்கு மருத்துவமனை செலவுகள் உட்பட பிற மருத்துவம் தொடர்பான செலவுகளுக்கு காப்பீடு வழங்கி‌ உதவுகிறது இத்திட்டம்.

    சிறப்பம்சங்கள்:

    • புற்றுநோய், பக்கவாதம், கரோனரி தமனி நோய், சிறுநீரக செயலிழப்பு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற முக்கிய சிகிச்சைகளுக்கான காப்பீடு இதில் வரும்
    • காப்பீடு செய்யப்பட்டவர் விபத்தில் இறக்க நேர்ந்தால், காப்பீட்டுத் தொகைக்கு நிகரான மொத்தத் தொகை நாமினிக்கு வழங்கப்படும்
    • விபத்தின் காரணமாக நிரந்தரமாக அல்லது மொத்தமாக பார்வை அல்லது கைகால் இழப்பு ஏற்பட நேர்ந்தால், காப்பீடு செய்யப்பட்டவர் காப்பீட்டுத் தொகையிலிருந்து ஒரு சதவீதத்தைப் பெறுவார்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் மருத்துவ செலவுகள் திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படும்
    • செலுத்தப்படும் பிரீமியத்திற்கு, வருமான வரிச் சட்டத்தின் (80D பிரிவின்) கீழ் வருமான வரிச் சலுகை கிடைக்கும்

    தகுதி

    • 18 வயதிலிருந்து 65 வயது வரையில் உள்ள இந்திய குடிமக்கள் வாழ்நாள் புதுப்பித்தலுடன் காப்பீடு பெறலாம்
    • 6 வயதிலிருந்து 25 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர் காப்பீடு செய்து வரும் வரையில் கவரேஜ் வழங்கப்படுகிறது

    விலக்குகள்

    பின்வரும் காரணங்களால் ஏற்படும் சேதம், இழப்பு அல்லது நோய்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஈடுசெய்ய முடியாது:

    • காப்பீடு துவங்குவதற்கு முன்பே இருந்த நோய்கள் அதற்கான பிரத்யேக காப்பீடு குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தவிர, இந்த திட்டத்தின் கீழ் பொருந்தாது
    • பாலிசி திட்டம் தொடங்கிய முதல் தொண்ணூறு நாட்களுக்குள் கண்டறியப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகள்
    • ஆபத்தான நோயைக் கண்டறிந்ததிலிருந்து முப்பது நாட்களுக்குள் மரணம் ஏற்பட்டால் அது இத்திட்டத்தின் கீழ் வராது
    • தற்கொலை, வேண்டுமென்றே சுயமாக காயப்படுத்திக் கொள்ளுதல் அல்லது காப்பீடு செய்யப்பட்டவர் மது போன்ற போதைப்பொருளினால் பாதிக்கப்பட்டிருக்கையில் ஏற்படும் விபத்துகளும் இதர பிரச்சினைகளும் இதில் வராது
    • விமானத்தில் பயணிக்கும்போது அல்லது சாகச விளையாட்டுகளில் பங்கேற்கும் போது ஏற்படும் விபத்துகளால் தனிநபர் இறந்தாலோ நிரந்தர ஊனத்தால் அவதிப்பட நேர்ந்தாலோ அது இத்திட்டத்தின் கீழ் வராது
   • யுனிவர்சல் சோம்போ மருத்துவமனை பணக் காப்பீட்டுத் திட்டம்

    இந்த திட்டம் காப்பீடு செய்தவரோ அவரது குடும்பத்தினரோ வருந்தும் வகையில் அவர்களின் சேமிப்பில் பெரும் வடிகால் இல்லாத மாதிரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது பணம் கொடுத்து பலன் வழங்கி உதவுகிறது.

    சிறப்பம்சங்கள்:

    • பாலிசி தொடங்கும் நேரத்தில் காப்பீடு செய்பவரால் தேர்ந்தெடுக்கப்படப்பட்ட அதிகபட்ச நாட்களுக்கு மருத்துவமனையில் (ஐ.சி.யூ இல்லாமல்) அனுமதிக்க பட்டிருக்கும் நிலையில் தினசரி கொடுப்பனவு கொடுத்துதவப்படும்.
    • காப்பீடு செய்யப்பட்ட நபர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் தீவிர சிகிச்சைக்காக ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது ​​மருத்துவமனை ரொக்கப் பலனுக்காக காப்பீட்டாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகை இரட்டிப்பாகும்.
    • காப்பீடு செய்யப்பட்டவர் அல்லது அவர் குடும்பத்தினர் 21 நாட்களுக்கும் மேல் மருத்துவமனையில் இருக்க நேர்ந்தால் ரூ. 10,000 கொடுக்கப்படும்.
    • ஒரு பிரீமியம் செலுத்துவதன் மூலம் பாலிசியை ஒன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் வரையில் வாங்கலாம்
    • காப்பீடு செய்தவரின் குடும்பத்திற்கு 5% வரை தள்ளுபடி வழங்கப்படும்

    தகுதி:

    • 18 வயதிலிருந்து 65 வயது வரையில் உள்ள எந்த இந்திய குடிமக்களும் வாழ்நாள் புதுப்பித்தலுடன் காப்பீடு பெறலாம்
    • 6 வயதிலிருந்து 25 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர் காப்பீடு செய்து வரும் வரையில் கவரேஜ் வழங்கப்படுகிறது
    • சார்ந்திருக்கும் துணை, இரண்டு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளடக்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னையும் குடும்பத்தையும் காப்பதற்கான பாலிசிகளை எடுக்கலாம்

    விலக்குகள்:

    பின்வரும் காரணங்களால் ஏற்படும் சேதம், இழப்பு அல்லது நோய்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஈடுசெய்ய முடியாது:

    • 48 மாதங்கள் கவரேஜ் முடியும் வரை காப்பீடு செய்வதற்கு முன்பிருந்து இருக்கும் நோய்களுக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படாது
    • தற்கொலை, வேண்டுமென்றே சுயமாக காயப்படுத்திக் கொள்ளுதல் அல்லது காப்பீடு செய்யப்பட்டவர் மது போன்ற போதைப்பொருளினால் பாதிக்கப்பட்டிருக்கையில் ஏற்படும் விபத்துகளும் இதர பிரச்சினைகளும் இதில் வராது
    • விமானத்தில் பயணிக்கும்போது அல்லது சாகச விளையாட்டுகளில் பங்கேற்கும் போது ஏற்படும் விபத்துகளால் தனிநபர் இறந்தாலோ நிரந்தர ஊனத்தால் அவதிப்பட நேர்ந்தாலோ அது இத்திட்டத்தின் கீழ் வராது
    • பல் சிகிச்சைகளுக்கு காப்பீடு இல்லை
    • செர்க்கம்சிசன், அழகியல் மற்றும் ஒப்பனை சார்ந்த சிகிச்சைகள் இதில் உள்ளடக்கப்படவில்லை
    • பரிசோதனை இயல்புடைய எந்த சிகிச்சையும் மருத்துவரால் செய்யப்படாத சிகிச்சைகளும் இதில் வராது
   • யுனிவர்சல் சோம்போ முழுமையான சுகாதார காப்பீட்டுத் திட்டம்

    சிறப்பம்சங்கள்:

    • இதில் மூன்று வகை திட்ட விருப்பங்கள் உள்ளன - அடிப்படை, அத்தியாவசியம் மற்றும் சிறப்புரிமை.
    • இத்திட்டத்தை மிதவை அடிப்படையிலோ தனிநபர் காப்பீட்டுத் தொகை அடிப்படையிலோ எடுக்கலாம்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்தால் மருத்துவ செலவுகள் இத்திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படும்
    • தினப்பராமரிப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது
    • உறுப்பு தானம் செய்பவருக்கான சிகிச்சைகள் இதில் பொருந்தும்
    • மருத்துவ சிகிச்சை தேவைப்படும் காப்பீடு பெற்றவர் மூன்று நாட்களுக்கும் மேல் வீட்டிலேயே அடைபட்டு சிகிச்சை பெற நேர்ந்தால் வீட்டுச் செலவுகள் இத்திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படும்
    • ஆம்புலன்ஸ் கட்டணம் திட்டத்தின் கீழ் திருப்பிச் செலுத்தப்படுகிறது
    • விபத்து காரணமாக பல் சிகிச்சைகள் தேவைப்பட்டால் அதற்கான செலவு திருப்பிச் செலுத்தப்படும்
    • யுனானி, ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி போன்ற மாற்று உள்நோயாளி சிகிச்சைகளுக்கான பணம் திருப்பிச் செலுத்தப்படுகின்றன.
    • காப்பீடு செய்யப்பட்ட 12 வயதுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் 72 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், மருத்துவம் அல்லாத செலவினங்களுக்கு ஈடுசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவத் திட்டத்தின்படி தினசரி கொடுப்பனவு வழங்கப்படும்.
    • கடிபட நேர்ந்தால் தடுப்பூசி கட்டணம் கொடுக்கப்படும்
    • வெளிநோயாளிகளுக்கான கட்டணமும் செலுத்தப்படுகிறது
    • நோயறிதல் சோதனைகள் கவர் செய்யப்படுகிறது
    • வெளிநோயாளர்களுக்கான பல் சிகிச்சையும் இத்திட்டத்தால் கவர் செய்யப்படுகிறது
    • பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு ஜோடி கண்ணாடியோ ஒரு ஜோடி காண்டாக்ட் லென்ஸ்களோ பெற வசதியுள்ளது
    • ஆலோசனைக் கட்டணங்கள் இதன் கீழ் திருப்பிச் செலுத்தப்படும்
    • காப்பீடு செய்யப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தார 10 நாட்களுக்கும் மேல் மருத்துவமனையில் இருக்க நேர்ந்தால் ரூ. 10,000 வழங்கப்படுகிறது.
    • மகப்பேறுக்கு முன்பும் பின்பும் ஆகும் செலவுகள் இதில் அடங்கும்
    • பிறந்த குழந்தைக்கு 91 நாட்கள் ஆகும் வரை அல்லது பாலிசி காலாவதியாகும் வரை கவரேஜ் வழங்கப்படுகிறது.
    • வாடிக்கையாளர்களின் விருப்பப்படி கவரேஜ் அதிகரிக்கவோ தள்ளுபடி செய்யவோ‌ முடிகிறது. விரிவாக்கம் (அ) தள்ளுபடி பின்வரும் 5 விருப்பங்களின் கீழ் வழங்கப்படுகின்றன:-
     • தனிப்பட்ட விபத்து
     • தீவிர நோய்
     • மருத்துவமனை பணம்
     • சப்ளிமிட்
     • அடுக்கு நெட்வொர்க் சிகிச்சை
    • ஒரு பிரீமியம் செலுத்தி மூன்று வருட கவரேஜ் பெறலாம்
    • வாடிக்கையாளர்கள் அவர்களது பாலிசிகளை மின்னணு வடிவத்தில் பெறவேண்டுமானால் அதற்கு E பாலிசி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • குடும்ப உறுப்பினர்களை ஒரே திட்டத்தின் கீழ் உள்ளடக்கும் போது குடும்பத் தள்ளுபடிகள் உள்ளன
    • "டயல்-ஏ-டாக்டர்" வசதி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் தொலைபேசி அல்லது ஆன்லைன் முறையில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம்.
    • வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் “ஹெல்த் எஜுக்கேஷனல் லைப்ரரி ஃபார் பீப்பிள்" (HELP) அணுகலைப் பெறலாம்.
    • வாடிக்கையாளர்கள் உணவு மற்றும் சுகாதார குறிப்புகளும் இது போன்ற தகவல்களும் கொண்ட மாதாந்திர செய்திமடலைப் பெறுகிறார்கள்
    • எந்தவொரு நாட்பட்ட நோய் நிலைகளிலும் நிபுணர் கருத்துக்களைப் பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் இரண்டு ஃபாலோ-அப் அமர்வுகளுடன் சிறப்பு மின்-ஆலோசனையைப் பெறுகிறார்கள்
    • குறிப்பிட்ட ஹெல்த் கேர் ப்ராடெக்ட்ஸ் மற்றும் சேவைகளில் தள்ளுபடி வழங்கும் வெல்னெஸ் பேக்கேஜை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

    தகுதி:

    • வயது வரம்பு: 18 வயதிலிருந்து 70 வயது வரையில்
    • சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு 91 நாட்களிலிருந்து காப்பீடு செய்யலாம்
    • சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு மிதவைத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய 1 நாள் வயது வரம்பு விதிக்கப்பட்டிருக்கிறது.

    விலக்குகள்:

    பின்வரும் காரணங்களால் ஏற்படும் சேதம், இழப்பு அல்லது நோய்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஈடுசெய்ய முடியாது

    • 36 மாதங்கள் வரை ஏற்கனவே இருந்த நோய்களுக்கான சிகிச்சைகள் இந்த திட்டத்தின் கீழ் வராது
    • சிகிச்சை அவசியமில்லாதபோது செர்க்கம்சிசனுக்கான காப்பீடு விலக்கப்படுகிறது
    • எய்ட்ஸ்க்கான சிகிச்சையுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய சிகிச்சைக்களுக்கான செலவுகள் இதில் வராது
    • அழகியல் அல்லது ஒப்பனை சார்ந்த சிகிச்சைகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை
    • வேண்டுமென்றே செய்துக் கொண்ட சுய தீங்கு, பாலியல் நோய்கள், மற்றும் ஆல்கஹால் அல்லது பிற போதை மருந்துகளின் பயன்பாடு என இவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கவரேஜ் செய்யப்படாது
    • கர்ப்பம் தொடர்பான சிக்கல்களும்‌ கருவுறாமைக்கான சிகிச்சைகளும் காப்பீடு செய்யப்படாது
    • மனநலம் சார்ந்த மருத்துவம் இதில் உள்ளடக்கப்படவில்லை
    • தூக்கக் கோளாறுகள் உள்ளடக்கப்படவில்லை
    • வளர்ச்சி தாமதத்திற்கான சிகிச்சைகள் இதில் உள்ளடக்கப்படவில்லை
    • நிரூபிக்கப்படாத பரிசோதனைச் சிகிச்சையில் இதில் பொருந்தாது
    • பாலியல் செயலிழப்பிற்கான சிகிச்சையோ பிறப்பு கட்டுப்பாடோ இத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை
    • ப்ரைவேட் நர்சிங் காப்பீட்டில் சேராது
    • எடை இழப்புக்கான அறுவை சிகிச்சைகளுக்கு காப்பீடு இல்லை
    • செயற்கையான வாழ்நாள் பராமரிப்புகள் இத்திட்டத்தின் கீழ் வராது
    • வைட்டமின்கள்/ஊட்டச் சத்துக்கான செலவுகள் காப்பீட்டின் கீழ் வராது
    • கைகால்கள், செயற்கை மூட்டுகளுக்கான செலவுகள் ஈடுசெய்யப்படாது
   • யுனிவர்சல் சோம்போ மூத்த குடிமக்கள் சுகாதாரத் திட்டம்:

    யுனிவர்சல் சோம்போவின்‌ சீனியர் சிட்டிசன் ஹெல்த் கேர் திட்டம் 60 வயதுக்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள் மற்றும் இதர மருத்துவச் செலவுகளை உள்ளடக்குகிறது. இத்திட்டத்தின் கீழ்வரும் அம்சங்களும் விலக்குகளும் பின்வருமாறு:

    சிறப்பம்சங்கள்:

    • மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் அறை மற்றும் போர்டிங் கட்டணங்கள், மருத்துவ செலவுகள், மயக்க மருந்து, நோயறிதல் சோதனைகள், ஆக்ஸிஜன், இரத்தம், அறுவை சிகிச்சை உபகரணங்கள், OT கட்டணங்கள், எக்ஸ்ரே, மருந்துகள், கீமோதெரபி, டயாலிசிஸ், ரேடியோதெரபி, செயற்கை கால்கள் மற்றும் ஸ்டென்ட் பொருத்துவதற்கான செலவுகள் ஆகியவற்றிற்கு ஆகும் செலவுகள் என எல்லாம் இதில் அடங்கும்.
    • தினப்பராமரிப்புக்கான உதவி வழங்கப்படும்
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிற்கு முந்தைய செலவுகள் 30 நாட்களுக்குள்ளும் பிந்தைய செலவுகள் 60 நாட்களுக்குள்ளும்‌ வழங்கப்படும்
    • மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கு மருத்துவமனையில் இல்லாமல் கீழ்வரும் காரணங்களால் வீட்டிலேயே மூன்று நாட்களுக்கும் மேல் சிகிச்சை அளிக்கப்படும்போது வீட்டுச் செலவுகள் இத்திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படும்
    • மூன்று க்ளெய்ம்-இல்லாத வருடங்களுக்குப் பிறகு மருத்துவ பரிசோதனைக்கான செலவுகள் காப்பீடு செய்யப்படும்
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கையில் காப்பீட்டுத் தொகையிலிருந்து 0.1% அல்லது ரூ. 2500 (இரண்டில் எது குறைவோ அது) ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கு வழங்கப்படும்
    • ஆம்புலன்ஸ்க்கான கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும்
    • உடன் வரும் நபரின் செலவுகளும் ஈடுசெய்யப்படும்
    • பின்வரும் தீவிர நோய்களோ அறுவை சிகிச்சை முறைகளோ கண்டறியப்பட்டால், காப்பீட்டுத் தொகை பாலிசியின் கீழ் செலுத்தப்படும்:
    • புற்றுநோய்
    • திறந்த மார்பு சி.ஏ.பி.ஜி.
    • அடிக்கடி டயாலிசிஸ் தேவைப்படுகிற சிறுநீரக செயலிழப்பு
    • நிரந்தர அறிகுறிகளை விளைவிக்கும்‌ பாரிசவாதம்
    • எலும்பு மஜ்ஜை/முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
    • மல்டிபிள் ஸ்களீரோசிஸ்
    • அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கு க்ளெய்ம் செய்யாமல் இருக்கையில், அதற்காக 5% மொத்த போனஸ் கிடைக்கிறது.
    • ஒன்றிலிருந்து மூன்று வருடங்கள் வரையிலான பாலிசி விதிமுறைகள் உள்ளன. இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் செலுத்துகையில், ​​பிரீமியங்களில் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகள் கிடைக்கும்
    • பாலிசியின் கீழ் வாடிக்கையாளர் ஒருவர் தனது துணையையும் காப்பீடு செய்யத் தேர்ந்தெடுத்தால், தனிநபர் காப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் ​​மருத்துவமனை பிரீமியத்தில் அவருக்கு 10% ஃபேமிலி டிஸ்க்கௌண்ட் கிடைக்கும்.
    • காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையில் வழங்கப்படும்
    • ஒவ்வொரு முறை புதுப்பிக்கும் போதும் காப்பீட்டுத் தொகை அதிகரிக்கும்
    • வாடிக்கையாளர்களுக்கு‌ கோ-பே வசதியுள்ளது. இந்த கூட்டுச் செலுத்துதல் காப்பீட்டுத் தொகையைக் குறைக்கவோ பாதிக்கவோ‌ செய்யாது.

    தகுதி:

    • 60 ஆண்டுகள் முதல் 70 ஆண்டுகள் வரையுள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம்
    • இத்திட்டத்தின் கீழ் வாழ்நாள் புதுப்பித்தல் உள்ளது
    • இத்திட்டம் 60 வயதைக் கடந்த தனிநபர் மற்றும் அவரது துணையை உள்ளடக்கியது

    விலக்குகள்

    பின்வரும் காரணங்களால் ஏற்படும் சேதம், இழப்பு அல்லது நோய்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஈடுசெய்ய முடியாது

    • 24 மாதங்கள் முடியும் வரை ஏற்கனவே இருந்த நோய்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய முடியாது
    • பின்வரும் மருத்துவ சிகிச்சைகளுக்கும் செலவுகளுக்கும் காப்பீடு பெற 24 மாதங்கள் காத்திருப்பு காலம் உள்ளது:
    • கண்புரை
    • தீங்கற்ற மெல்லிய புரோஸ்டேடிக் ஹைபர்டிராபி
    • கருப்பை நீக்கம், மயோமெக்டமி, வீரியம் இல்லாதபோது
    • ஹைட்ரோசெல் மற்றும் அனைத்து வகையான ஹெர்னியா
    • ஃபிஸ்டுலா மற்றும்/அல்லது ஆசனவாயில் பிளவுகள், மூல நோய்
    • வாத நோய், முதுகெலும்பு கோளாறுகள்
    • சைனசிடிஸ் மற்றும் அது தொடர்புடைய கோளாறுகள்
    • சிறுநீர் மற்றும் பிலியரி அமைப்புகளில் ஏற்படும் கற்கள்
    • எண்டோமெட்ரியோசிஸ்
    • தோல் மற்றும் உட்புற கட்டிகள் / மார்பக கட்டிகள்/ முடிச்சுகள், எல்லா வகையான பாலிப்களும் வீரியம் மிக்கதாக இல்லாதபோது
    • டயாலிசிஸ் தேவைப்படும் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு
    • அடினாய்டுகள், டான்சில்ஸ் மற்றும் சைனஸ்களுக்கான அறுவை சிகிச்சை
    • இரைப்பை அரிப்பு புண்கள்
    • விலகிவிட்ட நாசியின் செப்டம்
    • வெரிகோஸ் அல்சர் / வெரிகோஸ் வெய்ன்ஸ்
    • விபத்தின் காரணமாக இருந்தால் தவிர மூட்டு மாற்று சிகிச்சைகள்
    • ஹார்மோன் மாற்று சிகிச்சையினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிகழும் இழப்புகள்
    • பரிசோதனைகரமான சோதனைகள்
    • ஒப்பனை மற்றும் அழகியல் சிகிச்சைகள் உள்ளடக்கப்படவில்லை
    • வேண்டுமென்றே செய்துக் கொண்ட சுய தீங்கு, பாலியல் நோய்கள் மற்றும் ஆல்கஹால் அல்லது அது போன்ற பிற போதை மருந்துகளின் பயன்பாடு என இவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கவரேஜ் செய்யப்படாது
    • பல் சிகிச்சைக்கு காப்பீடு அளிக்கப்படாது
    • வைட்டமின்கள்/ஊட்டச் சத்துக்கான செலவுகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வராது
    • வேறு காரணங்கள் ஏதுமின்றி பிசியோதெரபிக்கு மட்டும் என பிரத்யேகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது காப்பீட்டின் கீழ் சேராது
    • வழக்கமான சுகாதார சோதனைகள், சிறப்பு மருத்துவ பராமரிப்பு, பொது பலவீனம், ஓய்வு சிகிச்சை மற்றும் சோம்பல் ஆகியவை இதில் உள்ளடக்கப்படவில்லை

   யுனிவர்சல் சோம்போவின் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு விண்ணப்பித்தல்

   • யுனிவர்சல் சோம்போ நிறுவனம் வழங்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை பல சேனல்களின் மூலம் பயன்படுத்த முடிகிறது.
   • காப்பீட்டுத் திட்டங்களில் ஒன்றைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், நிறுவனத்தின் விற்பனை உதவி எண்ணுக்கு அழைத்து வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதியிடம் அதுகுறித்து பேசலாம்.
   • தங்கள் கேள்விகளை contactclaims@universalsompo.com அல்லது contactus@universalsompo.com என்ற‌ மின்னஞ்சல் முகவரிகளில் அனுப்பலாம்.
   • வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் கிளைகளை அணுகலாம். இல்லையேல் தேவையான திட்டங்களை வாங்க முகவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

   யுனிவர்சல் சோம்போ மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை எப்படி க்ளெய்ம் செய்வது?

   யுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் க்ளெய்ம் பெற, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு வழங்கிய இன்சூரருக்கு தெரிவிக்க வேண்டும். நெட்வொர்க் மருத்துவமனைகளில் அனுமதித்து பணமில்லா சிகிச்சை வசதியை பெறலாம். அங்கு உரிமைகோரல் தொகை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து நேரடியாக செலுத்தப்படும்.

   திருப்பிச் செலுத்தும் உரிமைகோரல்களில், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, காப்பீடு பெறுபவர் மருத்துவமனையில் சேர்த்த போதான செலவுகளுக்கான பில்களையும் மருத்துவ ரிப்போர்ட்டையும் உரிமைகோரல் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். க்ளைம் தொகை நேரடியாக பாலிசிதாரரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சிறிய விபத்துக்களுக்கான உரிமைகோரலைத் தீர்க்க 7 வணிக நாட்களை எடுத்துக்கொள்ளும்.

   யுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் புதுப்பிக்கும் முறை

   • Policybazaar.com -க்கு செல்லவும். 'இன்சூரன்ஸ் ப்ராடெக்ட்ஸ்' என்ற பிரிவின் கீழ் தோன்றும் மெனுவில் மருத்துவ காப்பீடு என்ற இடத்தை க்ளிக் செய்து அந்த பக்கத்திற்குச் செல்லவும்
   • அங்கு கிடைக்கக்கூடிய படிவத்தை பூர்த்தி செய்து வேண்டிய திட்டத்தின் விவரங்களை வழங்கவும். சரியான யுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுத்து, பாலிசி விவரங்களைச் சரிபார்க்கவும்
   • பிரீமியத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்
   • முடிந்ததும் பாலிசி உடனடியாக புதுப்பிக்கப்படும்.

   தொடர்பு கொள்ள:

   லேண்ட் லைன் : 1800-200-4030 (அ) 1800-22-4030

   பயிர் காப்பீடு பற்றிய கேள்விகளுக்கு : 1800-200-5142

   சீனியர் சிட்டிசன் நம்பர் : 1800-267-4030

   ஆதரவு: contactclaims@universalsompo.com (அ) contactus@universalsompo.com

   Policybazaar exclusive benefits
   • 30 minutes claim support*(In 120+ cities)
   • Relationship manager For every customer
   • 24*7 claims assistance In 30 mins. guaranteed*
   • Instant policy issuance No medical tests*
   book-home-visit
   Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
   top
   Close
   Download the Policybazaar app
   to manage all your insurance needs.
   INSTALL