*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply
Who would you like to insure?
கோட்டாக் ஜெனரல் இன்சூரன்ஸ், 100% கோட்டாக் மஹிந்திரா வங்கியின் துணை கம்பெனி ஆகும். கோட்டாக் மஹிந்திரா வங்கி இந்தியாவின் அதி வேகமாக வளரும் ஒரு வங்கியாகும். லைப் இன்சூரன்ஸ் அல்லாத பிரிவில் மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்காக கோட்டாக் ஜெனரல் இன்சூரன்ஸ் ஏற்படுத்தப்பட்டது. ஏப்ரல் 2015 ல் இதன் பணி ஆரம்பிக்கப்பட்டது. செப்டம்பர் 2020 ல் இதற்கு நாடு முழுதும் 19 கிளைகளும் 793 பணியாளர்களும் இருந்தனர். வாடிக்கையாளர் சேவை, தரம் மற்றும் புதுமைகளை வழங்குவதே இதன் நோக்கம்.
வளர்ந்து வரும் மருத்துவ பணவீக்கத்தின் காரணமாக மருத்துவ செலவுகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதன் காரணமாக, திட்டமிடப்படாத மருத்துவ அவசரத்தின் பொழுது ஏற்படும் செலவுகள் ஒருவருக்கு பாரமாக இருக்கக்கூடும். இதனை மனதில் கொண்டு கோடக் மகேந்திரா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தனது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப உடல் நலக் காப்பீடு திட்டங்களை கோட்டாக் ஹெல்த் பிரிமியர் எனும் பெயரில் வழங்கி வருகின்றது.
குடும்ப அங்கத்தினர்களை தனித்தனியாக இன்சூர் செய்யவேண்டும் என்றால் 4 பெரியவர்கள் மற்றும் 4 சிறியவர்களை ஒரே பாலிசியில் கவர் செய்யலாம். பேமிலி பிளோட்டர் பிளானில் 2 பெரியவர்கள் மற்றும் 3 சிறியவர்களை ஒரே ப்ரீமியத்தில் இன்சூர் செய்யலாம். ப்ரீமியத்துக்கு வரிவிலக்கு உண்டு. மேற்கொண்டு பல நன்மைகளும் உண்டு.
பல வகையான வாடிக்கையாளர் பிரிவுகள் மற்றும் இடங்களில் லைப் இன்சூரன்ஸ் அல்லாத பிளான்களை வழங்குவதில் அக்கறை காட்டி வருகிறது. இந்த பிளான்கள் வாகனம், சுகாதாரம், வீடுகள் மற்றும் வியாபாரம் சம்பந்தப்பட்டவை.
முக்கிய அம்சங்கள் | சிறப்புகள் |
மருத்துவ மனைகள் (நெட்ஒர்க் லிஸ்டட்) | 4000+ |
க்ளைம் விகிதாச்சாரம் | 48.21% |
புதுப்பித்தல் | வாழ்க்கை முழுதும் |
காத்திருப்பு காலம் | 4 வருடங்கள் |
பாலிசிதாரர்களின் தேவைக்கேற்ப பலவிதமான ஹெல்த் பிளான்களை கோட்டாக் மஹிந்திரா வழங்குகிறது. விபரங்கள் கீழே:
இந்த பிளானின்படி நோய் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மொத்தமாக ஒரு தொகை பாலிசிதாரருக்கு கொடுக்கப்படும். இதை தற்போதுள்ள சிகிச்சைக்கோ அல்லது அதே நோய்க்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட சிகிச்சைக்கான செலவுகளுக்கோ உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
ஏதாவது எமெர்ஜன்சி ஏற்பட்டால் இந்த பிளான் உடனே கைகொடுக்கும். தேவையில்லாமல் அதிக பணம் செலவாவதை தவிர்க்கலாம்.
பாலிசிதாரருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ விபத்தின் மூலம் ஏற்படும் காயங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவ செலவுகளுக்கும், உடல் ஊனமுறும் பட்சத்திலும் அல்லது இறப்பு ஏற்படும் பட்சத்திலும் ஏற்படும் செலவுகளுக்கும் இந்த பாலிசி மூலம் கவரேஜ் கிடைக்கும். மருத்துவ மனை செலவுகள் கவர் செய்யப்படும். மற்றும் பல்வேறு விதமான உடல் ஊனங்களுக்கு மொத்தமாக இழப்பீட்டு தொகை கிடைக்கும்.
ஏற்கனவே உள்ள இன்சூரன்ஸ் தொகை முழுதுமாக உபயோகப் படுத்தி விட்டாலும் இன்னும் அதிகமானஇன்சூரன்ஸ் தொகைக்கு இதன் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளலாம். மற்ற பிளான்களை விட இதன் பிரீமியம் குறைவாகவே இருக்கும்.
இது முழுமையான பாதுகாப்பு, பரிசுகள், மதிப்பு கூட்டப்பட்ட நன்மைகள் எல்லாம் சேர்ந்த ஒரு பாலிசி ஆகும்,
பிளானின் பெயர் | தகுதி | பாலிசி டைப் | ரெனீவல் வயது | நன்மைகள் | பாலிசி காலம் |
கோட்டாக் செக்யூர் ஷீல்டு | குறைந்த பட்ச வயது 18 அதிக பட்சம் 65 | கிரிட்டிக்கல் இல்னஸ் | வாழ்க்கை முழுதும் |
|
1,2 & 3 வருடங்கள் |
கோட்டாக் ஹெல்த் கேர் | குறைந்த பட்ச வயது 5 அதிக பட்சம் 65 | தனி நபர்/ பிளோட்டர் | -- |
|
1,2 & 3 வருடங்கள் |
கோட்டாக் ஆக்ஸிடன்ட் கேர் | குறைந்த பட்ச வயது 5 அதிக பட்சம் 65 | தனி நபர் விபத்து பிளான் | வாழ்க்கை முழுதும் |
|
1,2 & 3 வருடங்கள் |
கோட்டாக் ஹெல்த் சூப்பர் டாப் அப் | -- | தனி நபர் | -- |
|
1,2 & 3 வருடங்கள் |
கோட்டாக் ஹெல்த் ப்ரீமியர் | குழந்தைகளுக்கு என்ட்ரி வயது 91 நாட்கள், பெரியவர்களுக்கு 18 வருடங்கள். அதிக பட்ச என்ட்ரி வயது குழந்தைகளுக்கு 25 வருடங்கள், பெரியவர்களுக்கு 65 வருடங்கள் |
தனி நபர்/ குடும்ப பிளோட்டர் | வாழ்க்கை முழுதும் |
|
1,2 & 3 வருடங்கள் |
ஏற்கனவே இருந்த நோய்களுக்கு பாலிசி ஆரம்பம் ஆகி 4 வருடங்கள் முடியும் வரை கவரேஜ் கிடையாது.
விபத்துக்கான கிளைம் தவிர மற்ற கிளைம்களுக்கு 3 மாதம் காத்திருக்க வேண்டும்.
யுத்தம் மற்றும் அது போன்ற சூழ்நிலை. வெளி நாட்டு படையெடுப்பு. உள்நாட்டு யுத்தம் மற்றும் மிலிட்டரி நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட கிளைம்களுக்கு கவரேஜ் இல்லை.
ஆல்கஹால், ட்ரக்ஸ் மற்றும் அது போன்ற போதையை தூண்டும் பொருட்களை உபயோகப்படுத்தியதால் ஏற்படும் விபத்துகளுக்கு கவரேஜ் இல்லை.
எஸ்.டி.டீ, எயிட்ஸ் அல்லது ஹெச்.ஐ.வி சிகிச்சை செலவுகளுக்கு கவரேஜ் இல்லை.
தரை, விமான மற்றும் கடற்படையில் பணி புரியும்போது ஏற்படும் காயங்களுக்கு கவர் கிடையாது.
பயங்கரவாத செயல்களால் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு கவர் இல்லை.
ப்ரீ ஆதரைசேஷன் பாரம் பூர்த்தி செய்ய வேண்டும்.
அதற்கு அப்ரூவல் கிடைத்தபிறகு கோட்டாக் மஹிந்திராவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கலாம்.
தேவையான டாக்குமெண்ட்களை டீ பீ ஏ மூலம் கொடுத்தபிறகு செலவுகள் மருத்துவ மனைக்கு செட்டில் செய்யப்படும்.
பாலிசிதாரர் கோட்டக்கால் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை எடுத்திருந்தால் அவர் நேரடியாக மருத்துவமனைக்கு பணம் செலுத்திவிட்டு பின்னர் கிளைம் செய்யலாம். இதற்கு ரீஎம்பர்ஸ்மென்ட் கிளைம் என்று பெயர்.
தேவையான பணத்தை கொடுத்து பில்களை செட்டில் செய்துவிட்டு எல்லா டாக்குமெண்ட்களையும் டிஸ்சார்ஜ் ஆன 30 நாட்களுக்குள் சமர்ப்பித்தால் அவற்றை சரி பார்த்துவிட்டு ரீஎம்பர்ஸ்மென்ட் செய்யப்படும்.
கோட்டாக் வெப் சைட்டில் கெட் கோட் ஆப்ஷன் சென்று விபரங்கள் மற்றும் தேவைகளை கொடுத்து பின்னர் தேவையான பிளான் செலக்ட் செய்ய வேண்டும்.
பிரீமியம் கணக்கிட்டு ஆன்லைன் பேமெண்ட் செய்தால் பாலிசி கிடைக்கும்.
ரெனீவலுக்கும் ஆன்லைனில் வசதி உண்டு. கம்பெனியின் வெப் சைட் சென்று ரெனீவல் ஆப்ஷன் செலக்ட் செய்ய வேண்டும். பாலிசி விபரங்கள் தர வேண்டும். பின்னர் பிரீமியம் கணக்கிட்டு ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும். ரெனீவ் ஆன பாலிசி நகலை மெயில் ஐ.டி (ID) மூலம் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
கோட்டாக் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்,
8 வது தளம், ஜோன் 4, கோட்டாக் இன்பினிட்டி, 21-ம் கட்டடம்,
இன்பினிட்டி ஐ.டி. பார்க், WEH அருகில்,
ஜெனரல் AK வைத்யா மார்க்,
டின்டோஷி, மலட் கிழக்கு, மும்பை-400097, இந்தியா.