*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply
Who would you like to insure?
ராயல் சுந்தரம் ஜெனரல் இன்ஷுரன்ஸ் கம்பெனி லிமிடெட் இந்தியாவில் தனிப்பட்ட நபருக்கு சொந்தமான கம்பனிகளில் முதல் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகும். முன்பு இது ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. முன்பு இது சுந்தரம் பைனான்ஸ் கம்பெனியுடன் கூட்டு முன்பு இது ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. முன்பு இது சுந்தரம் பைனான்ஸ் கம்பெனியுடன் கூட்டு நிறுவனமாக செயல்பட்டு வந்தது. சுந்தரம் பைனான்ஸ் இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனம் ஆகும்.
ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி, வாகனம், தனி நபர் விபத்து, ஹெல்த், வீடு மற்றும் பயணம் சம்பந்தமான இன்சூரன்ஸ்களை வழங்கி வருகின்றதுகு. அது மட்டும் இல்லாமல் நெருப்பு, மரைன், இன்ஜினீரிங், லயபிலிட்டி மற்றும் பிசினஸ் இண்ட்ரப்ஷன் போன்ற பாலிஸிகளையும் வழங்குகிறது. சிறு குறு தொழில்களுக்கும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கும் அவர்களுக்கென்று தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தப்பட்ட பாலிசிகளை இந்த நிறுவனம் வழங்கி வருகின்றதுகு. ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பனிதான் கேஷ் இல்லா கிளைம் வசதிகளை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.
பிப்ரவரி 2019 ஆம் ஆண்டில் இருந்து ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஏஜிஸ் இன்சூரன்ஸ் இன்டர்நேஷனல் N.V. 40% பங்குக்கும், சுந்தரம் பைனான்ஸ் 50% பங்குக்கும் மற்ற இந்திய பங்குதாரர்கள் 10% பங்குக்கும் உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.
ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் கம்பெனி பல வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குகிறது. அவற்றிலிருந்து பாலிசிதாரர் தனது தேவைக்கேற்ப ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
முக்கிய அம்சங்கள் | சிறப்புகள் |
இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் | 3000+ |
க்ளைம் விகிதம் | 61% |
புதுப்பித்தல் | வாழ்க்கை முழுதும் |
காத்திருப்பு காலம் | 3 வருடங்கள் |
பாலிசி காலம் | 1, 2, 3 வருடங்கள் |
இன்சூரன்ஸ் தொகை புதுப்பித்தல் | அடிப்படை இன்சூரன்ஸ் தொகை வரை |
கருணை காலம் | 30 நாட்கள் |
நோ கிளைம் போனஸ் | பிளானை பொறுத்து 10% முதல் 50% |
டே கேர் செயல் முறை | 200 வரை |
தடுப்பூசி கட்டணங்கள் | பிராணிகள் மூலம் கடி பட்டால் |
நான்கு க்ளைம் அற்ற வருடங்களுக்கு பிறகு இலவச ஹெல்த் செக் அப் உண்டு.
ஒவ்வொரு க்ளைம் பிரீ வருடத்துக்கும் 5% இலிருந்து 50% வரை நோ க்ளைம் போனஸ் உண்டு. தொடர்ச்சியாக 3 வருடங்கள் பாலிசி ரெனீவலுக்கு பிறகு, முன்பே இருந்த நோய்களுக்கும் கவரேஜ் உண்டு.
3000 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா மருத்துவ வசதியை பாலிசிதாரர் அனுபவிக்கலாம். 147 டே கேர் செயல்முறைகளுக்கு இந்த பாலிசியில் கவரேஜ் உண்டு. மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பும் மருத்துவமனையில் இருந்து வெளி வந்த பின்னும் ஆகும் எல்லா செலவுகளுக்கும் கவரேஜ் உண்டு. அத்துடன் வாழ்நாள் முழுவதும் பாலிசி புதுப்பித்துக்கொள்ளும் வசதி உண்டு. தாய்மை பேற்று செலவுகளுக்கும் கவரேஜ் கிடைக்கும். எல்லா விதமான ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியங்களுக்கும் 80(D) பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் இன்சூரன்ஸ் தொகையை 50% உயர்த்திக் கொள்ளும் வசதியும் உண்டு.
எல்லா விதமான மருத்துவ அவசர நிலைகளுக்கும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட மருத்துவமனை அட்மிசன்களுக்கும் எல்லா பாலிசிதாரர்களுக்கும் ராயல் சுந்தரம் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்ஸ் முழுமையான கவரேஜ் தருகின்றன. தனி நபர்களுக்கும், குடும்பங்களுக்கும் பல வகையான பிளான்ஸ் இக்கம்பெனியில் உண்டு. அது மட்டும் இல்லாமல் 19 வகையான உறவு முறைகள் கொண்ட நபர்கள் இருக்கும் கூட்டுக் குடும்பங்களுக்கும் பிளான்ஸ் கிடைக்கும்.
பாலிசிதாரர் தனது ஒரே பிளானில் தன்னை சார்ந்து இருக்கும் குழந்தைகளையும், தனது பெற்றோரையும் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் மொத்த குடும்பத்தின் ஆரோக்கியத்தையும், சந்தோஷத்தையும் இந்த பிளான்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதிக பட்ச தொகைக்கும் அதாவது 1.5 கோடி ருபாய் வரையிலும் பிளான்கள் எடுத்துக்கொள்ளலாம். இது எல்லாவித பெரிய அளவிலான மருத்துவ செலவுகளையும் சமாளிப்பதற்கு உதவும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த பிளான்களை எடுத்துக்கொள்ளலாம். வயது உச்சவரம்பு ஏதும் கிடையாது.
ராயல் சுந்தரம் ஹெல்த் இன்சூரன்சின் சிறப்பு என்னவென்றால் உயிருக்கு ஆபத்தான 11 மருத்துவ சூழ்நிலைகளுக்கு உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். அது சம்பந்தமான அனைத்து செலவுகளுக்கும் கவரேஜ் உண்டு.
18 வயதுக்கு மேற்பட்ட தனி நபர் தனக்கோ அல்லது தன் குடும்பத்திற்கோ இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். பெற்றோரை சார்ந்து இருக்கும் குழந்தைகளின் வயது 3 மாதத்தில் இருந்து 25 வயது வரை இருக்கலாம்.
ஒரு பிளானில் அதிக பட்சம் 6 நபர்களை பாலிசியில் சேர்த்துக் கொள்ளலாம். 1, 2 அல்லது 3 வருட காலத்துக்கு பாலிசி எடுத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட நிபந்தனைக்கு உட்பட்டு 7.5% இலிருந்து 12% வரை ப்ரீமியத்தில் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் உண்டு.
லைப் லைன் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் 3 வித்யாசமான பிளான்களாக கிடைக்கிறது. அவை க்ளாசிக், சுப்ரீம் மற்றும் எலைட் ஆகும்.
இந்த பிளானின் விபரங்கள் கீழே:
பிளான் வகை | தனி நபர்/ (F)பிளோட்டர் |
வயது | பெரியவர்கள்: 18 வயதிற்கு மேல் குழந்தைகள்: 3 மாதத்தில் இருந்து 25 வருடம் வரை |
இன்சூரன்ஸ் தொகை | 2 முதல் 4 லட்சம் ரூபாய் வரை |
பாலிசி காலம் | 1, 2, 3 வருடங்கள் |
நோ கிளைம் போனஸ் | 10% - 50% |
இன்-பேஷண்ட் மருத்துவமனை செலவுகள், ஓ டி மற்றும் ஐ சி யு கட்டணங்கள், தடுப்பூசி, மருத்துவர் கட்டணம், மருந்து செலவுகள் இன்னும் மற்ற பிற செலவுகளுக்கு கவரேஜ் உண்டு.
மருத்துவமனை வருவதற்கு 30 நாட்கள் முன்பிருந்தும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபிறகு 60 நாட்கள் வரையிலும் இன்சூரன்ஸ் தொகை வரை கவரேஜ் உண்டு. வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுக்கும் செலவுகள், அரசு மருத்துவமனைகளில் எடுக்கும் ஆயுஷ் சிகிச்சை போன்றவற்றுக்கும் கவரேஜ் உண்டு. 3 வருடங்களுக்கு பிறகு வருடாந்தர ஹெல்த் செக்-அப் வசதியும் உண்டு. டே கேர் டிரீட்மெண்ட்டுக்கு ஆன செலவுகள் திரும்ப கிடைக்கும்.
இந்த பிளானின்கீழ் இன்சூரன்ஸ் தொகை 50 லட்சம் ரூபாய் வரை எடுக்கலாம். தனி நபர் மற்றும் குடும்பத்துக்கு எடுக்கலாம். விபரங்கள் கீழே:
பிளான் வகை | தனி நபர்/ (F)பிளோட்டர் |
இன்சூரன்ஸ் தொகை | 5 முதல் 50 லட்சம் ரூபாய் வரை |
நோ கிளைம் போனஸ் | 20% - 100% |
இன்சூரன்ஸ் தொகை புதுப்பித்தல் | அடிப்படை இன்சூரன்ஸ் தொகை வரை |
மருத்துவமனை செல்லும் முன்/திரும்பிய பின்செலவுகள் | 60/90 நாட்கள் |
வயது | பெரியவர்கள்: 18 வயதிற்கு மேல்
குழந்தைகள்: 3 மாதத்தில் இருந்து 25 வருடம் வரை |
11 பெரிய ஆபத்தான நோய்களுக்கு 2-வது மெடிக்கல் ஒப்பீனியன் செலவுகள் கவர் செய்யப்படும்.
வீட்டை விட்டு அவசரமாக வெளியேறியதற்கு ஆன செலவுகள் திரும்ப தரப்படும். ஆம்புலன்ஸ் செலவுகள் 5000 ரூபாய் வரை அதிகரித்துக் கொள்ளலாம்.
உறுப்பு தானம் செய்பவரது செலவுகள், வீட்டில் இருந்து சிகிச்சை பெறும் செலவுகள், அரசு மருத்துவமனைகளில் எடுக்கும் ஆயுஷ் சிகிச்சை போன்றவற்றுக்கும் கவரேஜ் உண்டு. கிளைம் ஏதும் செய்யாமல் இருக்கும் பட்சத்தில் நோ கிளைம் போனஸ் 20% முதல் 100% வரை கிடைக்கும். வருடாந்தர ஹெல்த் செக்-அப் வசதி உண்டு. ரூபாய் 1 லட்சம் வரை வீட்டை விட்டு வெளியேறியதற்கு ஆன செலவுகள் கவர் செய்யப்படும்.
இது உலகளாவிய அவசர தேவைகளுக்கான கவர் மற்றும் ஆபத்தான நோய்களுக்கான கவர் இவை எல்லாம் நிறைந்த ஒரு முழுமையான பிளான் ஆகும். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பிளான் வகை | தனி நபர்/ (F)பிளோட்டர் |
இன்சூரன்ஸ் தொகை | 25 முதல் 1 கோடி ரூபாய் வரை |
நோ கிளைம் போனஸ் | 20% - 100% |
இன்சூரன்ஸ் தொகை புதுப்பித்தல் | அடிப்படை இன்சூரன்ஸ் தொகை வரை |
மருத்துவமனை செல்லும் முன்/திரும்பிய பின்செலவுகள் | 60/180 நாட்கள் |
11 குறிப்பிட்ட ஆபத்தான நோய்களுக்கு அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளை உலகளாவிய அவசர மருத்துவமனை சிகிச்சை மற்றும் வெளி நாட்டு சிகிச்சைக்கு சேர்த்துக்கொள்ளும் வசதி உண்டு.
ஆம்புலன்ஸ் செலவுகளுக்கு கவரேஜ் உண்டு புதிதாக பிறந்த 2 குழந்தைகள் வரை ஆகும் செலவுகளுக்கு இன்சூரன்ஸ் தொகையில் 25% வரை கவரேஜும், ஒரு வருட தடுப்பூசி செலவுகளுக்கு கவரேஜும் கிடைக்கும். உலகளாவிய அவசர மருத்துவமனை செலவுகள், மருத்துவமனை வருவதற்கு 60 நாட்கள் முன்பிருந்தும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபிறகு 180 நாட்கள் வரையிலும் ஏற்படும் மருத்துவ செலவுகள் அனைத்துக்கும் கவரேஜ் உண்டு. நோ கிளைம் போனஸ் 20% முதல் 100% வரை கிடைக்கும். அரசு மருத்துவமனைகளில் எடுக்கும் ஆயுஷ் சிகிச்சை போன்றவற்றுக்கும் கவரேஜ் உண்டு.
சுலபமாக செலுத்தக்கூடிய பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த பிளான் இந்தியாவின் பெரிய குடும்பங்களுக்கு கவரேஜ் கொடுக்கிறது. ஒரு குடும்பத்தில் 19 நபர்கள் வரை இந்த பிளானில் சேர்ந்து கொள்ளலாம்.
விரிவான விபரங்கள் கீழே:
பிளான் வகை | தனி நபர்/ (F)பிளோட்டர் |
இன்சூரன்ஸ் தொகை | 2 முதல் 15 லட்சம் ரூபாய் வரை |
பேமிலி பிளோட்டர் அடிப்படையில் இன்சூரன்ஸ் தொகை | 3 லட்சத்தில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை |
வயது | பெரியவர்கள்: 18 வயதும்அதற்கு மேலும் குழந்தைகள்: 3 மாதத்தில் இருந்து |
நோ கிளைம் போனஸ் | 20% - 100% |
2 குழந்தைகள் வரை தாய்மை பேற்றுக்கான கவரேஜ் உண்டு.
அடிப்படை இன்சூரன்ஸ் தொகையை புதுப்பிக்கும் வசதி உண்டு. 5 வருடங்கள் எந்த கிளைமும் இல்லாவிட்டால் அடிப்படை தொகை இரட்டிப்பாகும்.
ஆயுஷ் சிகிச்சை, வீட்டில் இருந்து எடுக்கும் சிகிச்சை, உறுப்பு தானம் செய்பவரது செலவுகள், மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் செலவுகள் இவற்றுக்கு கவரேஜ் உண்டு. 11 பெரிய ஆபத்தான நோய்களுக்கு 2-வது மெடிக்கல் ஒப்பீனியன் செலவுகள் கவர் செய்யப்படும். ரூபாய் 1 லட்சம் வரை அவசரமாக வீட்டை விட்டு வெளியேறியதற்கு ஆன செலவுகள் கவர் செய்யப்படும். ஹெல்த் மற்றும் wellness ப்ரோக்ராம் சேவைகளை பாலிசிதாரர் அனுபவிக்கலாம்.
வழக்கமான மருத்துவ செலவுகள் தவிர மற்ற கூடுதல் செலவுகளை இந்த பாலிசி கவர் செய்கிறது. உதாரணமாக, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கும், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கும் சென்று வர ஆகும் செலவுகள், நோயாளியின் சாப்பாடு, அட்டெண்டர் செலவுகள் ஆகியவற்றை குறிப்பிடலாம். ஹெல்த் பிளான் வாங்கும்போது இந்த பாலிசியையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
இதன் கவரேஜ் விபரங்கள் கீழ் வருமாறு:
பிளான் வகை | தனி நபர்/ (F)பிளோட்டர் |
புதுப்பித்தல் | வாழ்நாள் முழுதும் |
தள்ளுபடி | 10% |
வயது | 1 – 65 வயது வரை |
கணவன், மனைவி, சார்ந்திருக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு கவரேஜ் உண்டு. ஒரே பிளானில் 3 குடும்ப அங்கத்தினருக்கு மேல் இருந்தால் மொத்த ப்ரீமியத்தில் இருந்து 10% தள்ளுபடி உண்டு.
விபத்துகளுக்கு இரட்டிப்பு கேஷ் பெனிபிட் வழங்கப்படும். ஐ.சி.யு வில் அவசர அட்மிஷனுக்கு மும்மடங்கு கேஷ் உண்டு. அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ டிரீட்மெண்ட் கவரேஜும் உண்டு.
147 டே கேர் செயல்முறைகளுக்கு கவரேஜ் உண்டு. மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பும், மருத்துவமனையில் இருந்து வெளி வந்த பின்னும் ஆகும் எல்லா செலவுகளுக்கும் கவரேஜ் உண்டு. தாய்மை பேற்று செலவுகளுக்கும், உயிருக்கு ஆபத்தான 11 மருத்துவ சூழ்நிலைகளுக்கு அது சம்பந்தமான அனைத்து செலவுகளுக்கும், இன்-பேஷண்ட் மருத்துவமனை செலவுகள், OT மற்றும் ICU கட்டணங்கள், தடுப்பூசி, மருத்துவர் கட்டணம், மருந்து செலவுகள் இன்னும் மற்ற பிற செலவுகளுக்கும் கவரேஜ் உண்டு. வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுக்கும் செலவுகள், அரசு மருத்துவமனைகளில் எடுக்கும் ஆயுஷ் சிகிச்சை போன்றவற்றுக்கும் கவரேஜ் உண்டு. 11 பெரிய ஆபத்தான நோய்களுக்கு 2-வது மெடிக்கல் ஒப்பீனியன் செலவுகள் கவர் செய்யப்படும். உறுப்பு தானம் செய்பவரது செலவுகளுக்கு கவரேஜ் உண்டு. ரூபாய் 1 லட்சம் வரை வீட்டை விட்டு வெளியேறியதற்கு ஆன செலவுகள் கவர் செய்யப்படும். ஆம்புலன்ஸ் செலவுகளுக்கு கவரேஜ் உண்டு. புதிதாக பிறந்த 2 குழந்தைகள் வரை ஆகும் செலவுகளுக்கு இன்சூரன்ஸ் தொகையில் 25% வரை கவரேஜும், ஒரு வருட தடுப்பூசி செலவுகளுக்கு கவரேஜும் கிடைக்கும். உலகளாவிய அவசர மருத்துவமனை செலவுகள் அனைத்துக்கும் கவரேஜ் உண்டு.
புற நோயாளிகள் பிரிவு சிகிச்சைக்கு கவரேஜ் இல்லை.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி 1 மாத காலத்திற்குள் பாலிசி கிளைம் பார்மை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 30 நாட்களுக்குள் கிளைம் பணம் கிடைக்கும். பணம் விண்ணப்பதாரர் அல்லது முன்மொழிபவர் பெயரில் கொடுக்கப்படும். ஏதாவது விபரங்கள் மாறுபட்டிருந்தால், கிளைம் மறுக்கப்பட்டு, அதற்கான கடிதம் 7 நாட்களுக்குள் பாலிசிதாரருக்கு அனுப்பப்படும்.
எல்லா டாக்குமெண்ட்ஸும் ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் கிளை அலுவலகத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
ஆன்லைனில் ராயல் சுந்தரம் வெப்சைட் சென்று ' பை ஹெல்த் இன்சூரன்ஸ்’ ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் தேவையான பிளான் ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
பிளான் மற்றும் பிரீமியம் விபரங்களை செக் செய்ய வேண்டும்.
ஆன்லைனில் பணம் செலுத்தினால், பாலிசி, வாங்குபவரது ஈமெயில் ஐடி க்கு அனுப்பப்படும்.
இலவச எண்: 1860 258 0000, 1860 425 0000, 1800 568 9999 (மோட்டார்
( உரிமைகோரலுக்கு) மின்னஞ்சல் முகவரி: customer.services@royalsundaram.in
பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி:
ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ்,
விஸ்ராந்தி மெளரம் டவர்ஸ்,
எண்.2/319, ராஜீவ் காந்தி சாலை (ஓ எம் ஆர்),
காரப்பாக்கம், சென்னை - 600097
தொலைபேசி: 91-44-7117 7117
தொலைநகல்: 91-44-7113 7114