*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply
Who would you like to insure?
ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி 1947 ஆம் வருடம் செப்டம்பர் 12 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இது ஓரியண்டல் கவர்ன்மெண்ட் செக்யூரிட்டி லைப் அஷுரன்ஸ் கம்பெனியின் துணை கம்பெனி ஆகும். இது சுயமான இயக்குனர்கள் குழுவால் professional ஆக நிர்வகிக்கப்படும் ஒரு கம்பெனி ஆகும். மேலும் மிகவும் பிரபலமான நபர்கள் முந்தைய சேர்மேன்களாக இருந்து வழி நடத்திய கம்பெனி ஆகும். பல துறைகளில் சிறந்து விளங்கும் பலர் தற்போதைய இயக்குனர் குழுவில் பங்கேற்கிறார்கள்.
2020-21 இல் முதலீடுகளை விற்றதில் வந்த லாபம் ரூபாய் 750 கோடியாக உள்ளது. நடப்பு ஆண்டில் வட்டி, டிவிடெண்ட் மற்றும் வாடகை மூலம் கிடைத்த வரவு ரூபாய் 1660.33 கோடி ஆகும். சென்ற ஆண்டில் இது 1438.05 கோடி ஆக இருந்தது. ஆப்பரேட்டிங் செலவுகள் 2020-21 ஆம் ஆண்டில் ரூபாய் 3042.81 கோடி ஆக உள்ளது. முந்தைய வருடம் இது 3442.53 கோடியாகும். ஏறக்குறைய 400 கோடி ரூபாய் செலவு குறைந்துள்ளது.
ஒரியண்டல் இன்சூரன்சின் தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய குறிக்கோள்கள் கீழே:
முக்கிய அம்சங்கள் | சிறப்புகள் |
இனிதைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் | 4300+ |
க்ளைம் விகிதாச்சாரம் | 113.86% |
புதுப்பித்தல் | வாழ்க்கை முழுதும் |
காத்திருப்பு காலம் | 4 வருடங்கள் |
ஓரியண்டல் இன்சூரன்ஸ் பல பெரிய அளவிலான பிராஜெக்ட்களுக்கு இன்சூரன்ஸ் கவரேஜ் தருகிறது. இதில் பவர் பிளாண்ட்ஸ், கெமிக்கல்ஸ், ஸ்டீல் மற்றும் பெட்ரோகெமிக்கல் Plants- உம் அடங்கும். நம் நாட்டின் நகர மற்றும் கிராம பகுதி மக்களுக்கு தேவையான பல வகையான இன்சூரன்ஸ் திட்டங்களை ஓரியண்டல் இன்சூரன்ஸ் வழங்குகிறது.
இந்தியா முழுதும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் தனது அலுவலகங்களை வைத்திருக்கிறது. 31 பிராந்திய அலுவலகங்களும் 1800 க்கும் மேற்பட்ட அலுவலகங்களும் உள்ளன. இக்கம்பெனியின் கிளைம் தீர்வு விகிதம் 2015- 16 ஆம் வருடத்துக்கு 83.71 சதவீதமாக இருந்தது. மக்கள் ஓரியண்டல் இன்சூரன்சின் மெடிகிளைம் பாலிசி-ஐ மிகவும் விரும்பி வாங்குகின்றனர்.
இது மருத்துவ அவசர காலத்தில் ஒருவருக்கு தேவைப்படும் நிதி சம்பந்தப்பட்ட தேவைகளை கவர் செய்யும் ஒரு முழுமையான பாலிசி ஆகும்.
இந்த பாலிசியின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
திடீரென்று ஒருவருக்கு ஏற்படும் நோய், மற்ற நோய்கள் அல்லது விபத்து சம்பந்தமான மருத்துவ மனை செலவுகளை இந்த பாலிசி கவர் செய்யும். 80 வயது வரை இந்த பாலிசியின் நன்மைகளை அனுபவிக்கலாம். ரூபாய் 50000 இலிருந்து 50 லட்சம் வரை இன்சூர் செய்து கொள்ளலாம். ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு பாலிசி எடுத்த 5 வது வருடத்திலிருந்து கவரேஜ் கிடைக்கும். ஆனால் பாலிசி எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ச்சியாக இருக்கவேண்டும். நெட்ஒர்க் மருத்துவமனைகளில் பணமில்லா வசதிஐ அனுபவித்துக்கொள்ளலாம். தனி நபர் மற்றும் குடும்பத்துக்கு இந்த பிளான் எடுத்து கொள்ளலாம். குடும்ப கவர்க்கு ப்ரீமியத்தில் இருந்து தள்ளுபடி கிடைக்கும். மருத்துவ மனை வருவதற்கு முன்பு மற்றும் மருத்துவ மனையில் இருந்து வெளி வந்த பின்பு முறையே 30 மற்றும் 60 நாட்களுக்கு ஆகும் செலவுகளுக்கு கவரேஜ் உண்டு.
முழு குடும்பத்துக்கான ஹெல்த் கேர் பாதுகாப்பு இதில் உண்டு.
இந்தியாவில் வசிக்கும் முழு குடும்பத்துக்கும் ஒரே தொகையில் இன்சூர் செய்து கொள்ளலாம்.
60 வயது வரை மெடிக்கல் செக் அப் தேவை இல்லை.
ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு பாலிசி எடுத்த 4 வது வருடத்திலிருந்து கவரேஜ் கிடைக்கும். பாலிசி தொடர்ச்சியாக புதுப்பிக்கப் பட்டிருக்க வேண்டும்.
மூன்றாம் தரப்பு நிர்வாகம் அல்லது மூன்றாம் தரப்பு நிர்வாகமற்ற சேவைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதி உண்டு. மூன்றாம் தரப்பு நிர்வாகமற்ற தேர்வு செய்தால் ப்ரீமியத்தில்தள்ளுபடி உண்டு. ஓ எம் பி ப்ரீமியத்தில் தள்ளுபடி உண்டு.
கோல்ட் பிளான் மற்றும் சில்வர் பிளான் என்று இரண்டு பிளான்கள் இதில் உண்டு. இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
பிளோட்டர் அடிப்படையில் இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 6 லட்சத்தில் இருந்து ரூபாய் 10 லட்சம் வரை எடுக்கலாம். இன்சூரன்ஸ் தொகைக்கு தகுந்தாற்போல் ஒருங்கிணைக்கப்பட்ட தினசரி கேஷ் மற்றும் அட்டெண்டர் அலவன்ஸ் உண்டு. இந்த பிளானில் லைப் ஹார்ட்ஷிப் சர்வை சர்வைவல் பெனிபிட் மற்றும் பர்சனல் ஆக்சிடென்ட் கவர் உண்டு.
பிளோட்டர் அடிப்படையில் இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சம் வரை எடுக்கலாம்.
10% கட்டாயமான இணை ஊதிய ம் இந்த பிளானில் சேர்க்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் தொகைக்கு தகுந்தாற்போல் ஒருங்கிணைக்கப்பட்ட தினசரி கேஷ் மற்றும் அட்டெண்டர் அலவன்ஸ் உண்டு. பர்சனல் ஆக்சிடென்ட் கவர் உண்டு.
அறை, சாப்பாடு மற்றும் நர்ஸ் செலவுகளுக்கு ஒரு நாளுக்கு இன்சூரன்ஸ் தொகையில் 1% கவரேஜ் கிடைக்கும்.
ஐ சி யு செலவுகளுக்கு ஒரு நாளுக்கு இன்சூரன்ஸ் தொகையில் 2% கவரேஜ் கிடைக்கும். சர்ஜன், அனஸ்தடிஸ்ட், மருத்துவர், கன்சல்டன்ட் மற்றும் நிபுணர்களின் பீஸ் இவை அனைத்தும் கவர் செய்யப்படும். ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், ஆக்ஸிஜன் மற்றும் ரத்தம், மருந்துகள் அறுவை சிகிச்சை உபகரணங்கள் இவை சம்பந்தமான செலவுகளுக்கும் கவரேஜ் உண்டு.
டயாலிசிஸ், கீமோதெரபி, ரேடியோ தெரபி, செயற்கை உறுப்புகள், பேஸ்மேக்கர், செயற்கை சாதனங்கள், லாபரேட்டரி செலவுகள், எக்ஸ்ரே போன்ற எல்லா செலவுகளுக்கும் கவரேஜ் உண்டு. ஆம்புலன்ஸ் செலவுகளுக்கு ஓரு நோய்க்கு ரூபாய் 2000 அல்லது இன்சூரன்ஸ் தொகையில் 1% அல்லது ரூபாய் 6000 இவை இரண்டில் எது குறைவாக உள்ளதோ அதற்கான கவரேஜ் உண்டு.
அதிக பட்சம் 10 நாட்களுக்கு, ஒரு நாளுக்கு ஒரு நோய்க்கு இன்சூரன்ஸ் தொகையில் 0.1 % அளவில் மருத்துவ மனை கேஷ் அலவன்ஸ் வழங்கப்படும். ஒரு நாளுக்கு ஒரு நோய்க்கு ரூபாய் 500 என்ற அளவில் அட்டெண்டன்ட் அலவன்ஸ் உண்டு. வீட்டில் இருந்து பெறப்படும் சிகிச்சைகள் சம்பந்தப்பட்ட செலவுகளுக்கு ரூபாய் 50000 வரை கவரேஜ் உண்டு.
பிராணிகள் கடித்ததினால் ஏற்படும் நியாயமான செலவுகளுக்கு ரூபாய் 5000 வரை திருப்பி தரப்படும் இது ஒரு பாலிசி காலம் முழுமைக்கும் ஆனதாகும்.
அறை, சாப்பாடு மற்றும் நர்ஸ் செலவுகளுக்கு ஒரு நாளுக்கு இன்சூரன்ஸ் தொகையில் 1% கவரேஜ் கிடைக்கும்.
ஐ சி யு செலவுகளுக்கு ஒரு நாளுக்கு இன்சூரன்ஸ் தொகையில் 2% கவரேஜ் கிடைக்கும்.
சர்ஜன், அனஸ்தடிஸ்ட், மருத்துவர், கன்சல்டன்ட் மற்றும் நிபுணர்களின் பீஸ் இவை அனைத்தும் இன்சூரன்ஸ் தொகை அளவு வரை கவர் செய்யப்படும்.. ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், ஆக்ஸிஜன் மற்றும் ரத்தம், மருந்துகள் அறுவை சிகிச்சை உபகரணங்கள் இவை சம்பந்தமான செலவுகளுக்கும் கவரேஜ் உண்டு.
டயாலிசிஸ், கீமோதெரபி, ரேடியோ தெரபி, செயற்கை உறுப்புகள், பேஸ்மேக்கர், செயற்கை சாதனங்கள், எக்ஸ்ரே போன்ற எல்லா செலவுகளுக்கும் கவரேஜ் உண்டு.
ஆம்புலன்ஸ் செலவுகளுக்கு ஓரு நோய்க்கு ரூபாய் 1000 அல்லது இன்சூரன்ஸ் தொகையில் 1% அல்லது ரூபாய் 3000 இவை இரண்டில் எது குறைவாக உள்ளதோ அதற்கான கவரேஜ் உண்டு.
வீட்டில் இருந்து பெறப்படும் சிகிச்சைகள் சம்பந்தப்பட்ட செலவுகளுக்கு ரூபாய் 25000 வரை கவரேஜ் உண்டு. இது இன்சூரன்ஸ் தொகையில் 10%- க்குள் இருக்க வேண்டும்.
பிராணிகள் கடித்ததினால் ஏற்படும் நியாயமான செலவுகளுக்கு ரூபாய் 5000 வரை திருப்பி தரப்படும். இது ஒரு பாலிசி காலம் முழுமைக்கும் ஆனதாகும்.
வெளி நாடு செல்பவர்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பு தரும் பிளான் இது.
இந்தியாவுக்கு வெளியே செல்லும்போது ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு முழுமையான கவரேஜ் தருகிறது.
உல் நோயாளி மற்றும் வெளி நோயாளி செலவுகள் அனைத்துக்கும் கவரேஜ் உண்டு.
ரூபாய் 50,000 இலிருந்து 500,000 வரை இன்சூர் செய்து கொள்ளலாம்.
ஓரியண்டலின் பார்ட்னர் கம்பெனியான M/s கோரிஸ் இன்டர்நேஷனல் மூலம் வெளிநாடுகளில் பணமில்லா சேவைகள் கிடைக்கும்.
பயணம் செய்பவரது தேவைக்கு தகுந்தாற்போல் பல விதமான பிளான்கள் உண்டு.
வியாபார மற்றும் விடுமுறை பயணங்கள், வெளிநாட்டில் கல்வி கற்பதற்காக செல்லும் பயணங்கள் அனைத்துக்கும் பாலிசி உண்டு.
அடிக்கடி வெளி நாடு செல்லும் பெரிய கம்பெனியின் அதிகாரிகளுக்கு கார்பொரேட் பிரீகுவண்ட் பாலிசி உண்டு.
ஏப்ரல் யு எஸ் , ஐ என் சி என்கிற கம்பனியுடன் கூட்டுசேர்ந்து மெடிக்கல் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் செய்தல் கவர் செய்யப்படும். பல்வலி சம்பந்தமான செலவுகள் யு எஸ் டி 225 வரையிலும் கவர் செய்யப்படும்.
நோயாளி மிகமோசமான நிலையில் இருந்தால் அவசர மருத்துவ வெளியேற்றம், அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் செலவுகளுக்கு கவரேஜ் உண்டு. பாலிசிதாரர் ஏதாவது வெளிநாட்டில் இறக்க நேரிட்டால் அவரது உடலை இந்தியாவுக்கு விமானம் மூலம் கொண்டு வர ஆகும் செலவுகள் தரப்படும். அல்லது அவர் இறந்த நாட்டில் அவரது உடலை புதைக்கவோ எரியூட்டவோ ஆகும் செலவுகள் தரப்படும். இந்த செலவுகள் ஏப்ரல் யு எஸ் , ஐ என் சி கம்பெனியால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் பணி புரியும் வெளிநாட்டவரும் இந்த பாலிசி-ஐ எடுத்துக்கொள்ளலாம். இது இந்தியாவில் இவர்கள் நுழைந்த தேதியில் இருந்து பாலிசியில் குறிப்பிட்ட expiry தினம் வரை செல்லுபடியாகும். அல்லது அந்த தேதிக்கு முன்னர் இவர்கள் தாயகம் திரும்ப நேரிட்டால் அவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறும் தேதி வரை செல்லுபடியாகும். அடிக்கடி வெளிநாடு சென்று வரும் நபர்களுக்கு ஒரு விசேட பாலிசி உண்டு. இது 12 மாதங்களுக்கு இவர்களது எல்லா பயணங்களையும் கவர் செய்யும்.
பிளான் ஆரம்பிப்பதற்கு முன் ஏற்படும் எல்லா செலவுகளுக்கும் கவரேஜ் இல்லை.
மருத்துவரது ஆலோசனைப்படி நடக்காமல் இருந்ததால் ஏற்படும் சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்பட மாட்டாது.
பிளான் ஆரம்பிக்கும்போது ஏற்கனவே எடுத்துக்கொண்டிருக்கும் சிகிச்சைகளுக்கு கவர் கிடையாது.
ஏற்கனவே டெர்மினல் ப்ரொக்னோசிஸ் கொடுக்கப் பட்டிருந்தால் கவரேஜ் கிடையாது.
தரை, கடல் மற்றும் விமானப் படைகளில் பங்கு பெறுபவராக இருந்தால் கவர் கிடையாது.
பாலிசிதாரர் குடித்துவிட்டு விபத்தோ அல்லது குற்றமோ புரிந்திருந்து அதன் மூலம் ஏற்படும் செலவுகள் கவர் செய்யப்பட மாட்டாது.
புத்தி கோளாறு, கவலை, மன அழுத்தம், சிற்றின்ப நோய், காயம், நோய், இறப்பு போன்ற பாதிப்புகளின் மூலம் ஏற்படும் செலவுகள் கவர் செய்யப்பட மாட்டா.
எய்ட்ஸ் நோயால் ஏற்படும் செலவுகளுக்கு கவரேஜ் இல்லை.
போர்கள், படையெடுப்புகள், எதிரிகளால் ஏற்படும் பாதிப்புகள், கலவரங்கள் போன்றவற்றால் ஏற்படும் செலவுகள் கவர் செய்யப்பட மாட்டா.
ரேடியோ செயல்பாடு, அணுசக்தி செயல்பாடு போன்றவற்றால் ஏற்படும் செலவுகளுக்கு கவரேஜ் இல்லை.
ஆபத்தான விளையாட்டுகளின் மூலம் ஏற்படும் செலவுகளுக்கு கவர் இல்லை.
இந்த பிளானில் 2 மாதங்களில் இருந்து 12 மாதங்கள் வரை கவர் உண்டு.
இன்சூரன்ஸ் தொகை $ 75,000
பிரீமியம் தொகை $- ல்தான் செலுத்தப்பட வேண்டும்.
காயத்தினால் ஏற்பட்டால் ஒழிய மற்ற எல்லா வகையான பல் சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்பட மாட்டாது.
தாய்மை பேறு மற்றும் குழந்தை பிறப்பு (miscarriage உட்பட) கவர் செய்யப்பட மாட்டாது.
இது குடும்ப அங்கத்தினர்களுக்கும், கார்ப்பரேட் பணியாளர்களுக்கும் பாதுகாப்புக்கு கொடுக்கும் ஒரு பிளான் ஆகும்.
அறை, சாப்பாடு மற்றும் நர்ஸ் செலவுகளுக்கு ஒரு நாளுக்கு இன்சூரன்ஸ் தொகையில் 1% கவரேஜ் அல்லது ஒரு நாளுக்கு ரூபாய் 5000 இவை இரண்டில் எது குறைவாக உள்ளதோ அந்த தொகைக்கு கவரேஜ் தரப்படும்.
ஐ சி யு செலவுகளுக்கு ஒரு நாளுக்கு இன்சூரன்ஸ் தொகையில் 2% கவரேஜ் அல்லது ஒரு நாளுக்கு ரூபாய் 10,000 இவை இரண்டில் எது குறைவாக உள்ளதோ அந்த தொகைக்கு கவரேஜ் கிடைக்கும்.
சர்ஜன், அனஸ்தடிஸ்ட், மருத்துவர், கன்சல்டன்ட் மற்றும் நிபுணர்களின் பீஸ் இவை அனைத்தும் கவர் செய்யப்படும். அனஸ்தீஸியா, ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், ஆக்ஸிஜன் மற்றும் ரத்தம், மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் இவை சம்பந்தமான செலவுகளுக்கும் கவரேஜ் உண்டு.
டயாலிசிஸ், கீமோதெரபி, ரேடியோ தெரபி, செயற்கை உறுப்புகள், பேஸ்மேக்கர், செயற்கை சாதனங்கள், எக்ஸ்ரே போன்ற எல்லா செலவுகளுக்கும் கவரேஜ் உண்டு.
ஆம்புலன்ஸ் செலவுகளுக்கு இன்சூரன்ஸ் தொகையில் 1% அல்லது ரூபாய் 2000 இவை இரண்டில் எது குறைவாக உள்ளதோ அதற்கான கவரேஜ் உண்டு.
உறுப்பு தானம் செய்பவரது செலவுகள், டே கேர் செலவுகள் (நிபந்தனைக்கு உட்பட்டு), வீட்டில் இருந்து செய்யும் 3 நாளைக்கான சிகிச்சை செலவுகள் (சரியான காரணங்களுக்கு உட்பட்டு) அதிக பட்சம் இன்சூரன்ஸ் தொகையில் 20 % அளவுக்கு திருப்பி தரப்படும்.
பாலிசிதாரர் விருப்பப்பட்டால் தாய்மைப்பேறு மற்றும் புதிதாக பிறந்த குழந்தை சம்பந்தப்பட்ட செலவுகளை கவர் செய்து கொள்ளலாம். மொத்த அடிப்படை பிரீமியம் தொகையில் 10% தொகையை இதற்காக கூடுதலாக செலுத்த வேண்டும்.
வெளி நோயாளி பிரிவு இல் எடுக்கப்படும் சிகிச்சைகள் கவர் ஆகாது.
இந்த பிளான் கீழ், மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பக்களுக்கான பிளான் ஆகும். மிகுந்த சிரமமில்லாமல் செலுத்தக்கூடிய பிரீமியம் தொகையுடன் கூடியது.
நோய்களுக்கும், காயங்களுக்கும் வீட்டில் இருந்தோ அல்லது மருத்துவ மனையிலோ எடுக்கப்படும் சிகிச்சை சம்பந்தமான செலவுகள் திருப்பி தரப்படும்.
அனைவராலும் செலுத்த முடிந்த பிரீமியம்.
வருடாந்தர முறையில் அமைந்த அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளக்கூடிய பிளான்.
பாலிசியின் விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை படித்து பார்த்து புரிந்து கொள்வதற்கு பிரீ லுக் பீரியட் ஆக 15 தினங்கள் அனுமதிக்கப்படும். பாலிசி பிடிக்கவில்லை என்றல் திருப்பி அனுப்பி விடலாம்.
பிரபலமான 2 வங்கிகளுடன் சேர்ந்து ஓரியண்டல் இன்சூரன்ஸ் இந்த குரூப் மெடிகிளைம் பாலிசி-ஐ வழங்குகிறது.
ஓரியண்டல் பேங்க் ஆப் காமெர்ஸ் வாடிக்கையாளர்களுக்கென்று இந்த பிளான் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கென்று பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.
மஹாராஷ்டிராவில் உள்ள கூட்டுறவு சொசைட்டி வங்கியான தன ஜனதா சஹகாரி வங்கியின் பணியாளர்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்குமான பிளான்
ஏற்கனவே இருந்த நோய்களுக்கு பாலிசி ஆரம்பம் ஆகி 3 வருடங்கள் முடியும் வரை கவரேஜ் கிடையாது. இருப்பினும் இது போன்ற நோய்களின் லிஸ்டில் அவ்வப்போது மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும். கம்பெனி வெப் சைட்டிலும், பாலிசி hand book கிலும் இதைப்பற்றிய விபரங்கள் கிடைக்கும்.
ஆபத்தான விளையாட்டுகள் அல்லது நடவடிக்கைகளின் காரணமாக விபத்து காயமோ அல்லது நோயோ ஏற்பட்டால் அதற்கு எல்லா விதமான பிளான்களிலும் கவரேஜ் கிடையாது..
உடற் பருமன், ஹார்மோன் தெரபி, பாலின மாற்றம், ஜெனெடிக் பிரச்னைகள், ஸ்டெம் செல் இம்ப்ளண்டேஷன் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை சம்பந்தமான செலவுகளுக்கு கவரேஜ் கிடையாது.
தனி நபர் சுக வசதிகள், இயற்கை வைத்தியம், சோதனை அல்லது மாற்று மருந்துகள், அக்குபிரெஷர், அக்குபஞ்சர், காந்த சிகிச்சை மற்றும் இவை போன்றவை அனைத்துக்கும் கவரேஜ் இல்லை.
போர், படையெடுப்பு, அணுக்கரு விபத்து இவற்றால் ஏற்படும் காயங்களுக்கு கவரேஜ் கிடையாது. ஏதாவது நோயின் காரணமாக மருத்துவமனை சிகிச்சை எடுத்திருந்தால் ஒழிய, எல்லா பல் சிகிச்சைகள் மற்றும் சர்ஜெரி இவற்றுக்கு கவரேஜ் கிடையாது.
கேட்ராக்ட், பெநிங் ப்ரோஸ்டாடிக் ஹைபேர்ட்ரோபி, ஹைஸ்டெரெக்டமி, மெனோரார்ஹகியா அல்லது பைப்ரோமிமோ, ஹெர்னியா, பைல்ஸ், சைனுசைட்டீஸ், ஆஸ்துமா பிராங்கைடிஸ் ஆகியவற்றுக்கும் கவரேஜ் இல்லை. எல்லா விதமான மனநல கோளாறுகளும் இந்த பிளானில் கவர் ஆகாது.
இது வயதானவர்களுக்கான, குறிப்பாக முதுமையில் வரும் நோய்களுக்கான, பாதுகாப்பு பிளான் ஆகும். இந்த பிளானின் முக்கிய விபரங்கள் கீழே:
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பிளான் இது. இந்தியாவுக்குள் இருக்கும் மருத்துவமனைகளில் எடுக்கும் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் கவர் ஆகும்.
இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 1,2,3,4 மற்றும் 5 லட்சங்களுக்கு பாலிசி எடுக்கலாம்.
குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் கவரேஜ் உண்டு.
ஏற்றுக்கொள்ளக்கூடிய கிளைம் தொகையுடன் compulsory co-payment 20% உண்டு.
தன்னார்வ இணை கட்டணம் ப்ரீமியத்தில் தள்ளுபடி உண்டு.
கிளைம் அற்ற தள்ளுபடி உண்டு.
பாலிசியில் புதிதாக சேரும் நபர்களுக்கு கூடுதல் பிரீமியம் உண்டு.
மெடிகிளைம் பாலிசியில் ஏற்கனவே இன்சூர் செய்திருந்தால் தொடர் பலன்களை பெற முடியும்.
மூன்றாம் தரப்பு நிர்வாகம் சேவை உண்டு.
ரூபாய் 1 லட்சம் வரை cashless சேவை மூன்றாம் தரப்பு நிர்வாகம் மூலம் மட்டுமே கிடைக்கும்.
அறை, சாப்பாடு மற்றும் நர்ஸ் செலவுகளுக்கு ஒரு நாளுக்கு இன்சூரன்ஸ் தொகையில் 1% கவரேஜ் அல்லது ஒரு நாளுக்கு ரூபாய் 5000 இவை இரண்டில் எது குறைவாக உள்ளதோ அந்த தொகைக்கு கவரேஜ் தரப்படும். ஐ சி யு செலவுகளுக்கு ஒரு நாளுக்கு இன்சூரன்ஸ் தொகையில் 2% கவரேஜ் உண்டு. சர்ஜன், அனஸ்தடிஸ்ட், மருத்துவர், கன்சல்டன்ட் மற்றும் நிபுணர்களின் பீஸ் கவர் செய்யப்படும்.
அனஸ்தீஸியா, ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், ஆக்ஸிஜன் மற்றும் ரத்தம், மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் இவை சம்பந்தமான செலவுகளுக்கும் கவரேஜ் உண்டு.
டயாலிசிஸ், கீமோதெரபி, ரேடியோ தெரபி, செயற்கை உறுப்புகள், பேஸ்மேக்கர், செயற்கை சாதனங்கள், எக்ஸ்ரே போன்ற எல்லா செலவுகளும் கவர் செய்யப்படும்.
அவசர ஆம்புலன்ஸ் செலவுகளுக்கு ரூபாய் 1000 கவரேஜ் உண்டு.
தம் பாஸ்போர்ட்டில் இமிகிரேஷன் செக் தேவை என்ற பதிவு பெற்ற, மற்றும் பணிக்காக வெளிநாடு செல்லும் அனைத்து இந்தியர்களும் கட்டாயமாக இந்த பாலிசி எடுக்கவேண்டும். இது இந்திய அரசாங்கத்தின் உத்தரவு ஆகும். வெளிநாடுகளில் வேறு விதமான இயற்கை மற்றும் பருவ சூழ்நிலைகளில் பணி புரிவதால் இவர்களுக்கு ஹெல்த் சம்பந்தமான பிரச்னைகள் வர மிகுந்த வாய்ப்புள்ளது. ஆகவே இவர்களது ஹெல்த் பாதுகாப்புக்காக இந்த பிளான் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தில் மரணம் அல்லது நிரந்தரமான உடல் உறுப்புகள் இழப்பு அல்லது காயம், தற்காலிக மற்றும் நிரந்தரமான உடல் உறுப்புகள் இழப்பின் காரணமாக வெளிநாட்டு வேலை இழப்பு ஆகியவற்றுக்கு ரூபாய் 10 லட்சம் வரை இன்சூர் செய்து கொள்ளலாம். கூடுதல் நன்மையாக தம் குடும்பத்துக்காக ரூபாய் 50,000 க்கு பேமிலி பிளோட்டர் பிளான் எடுத்துக்கொள்ளலாம். (வாழ்க்கை துணை மற்றும் தம்மை சார்ந்துள்ள 21 வயதுக்கு உட்பட்ட 2 குழந்தைகளுக்கு).
இன்சூரன்ஸ் எடுத்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் பாலிசிதாரருக்கு வெளிநாட்டு வேலை இழப்பு ஏற்பட்டால் ஒரு வழி எகானமி கிளாஸ் airfare உண்டு.
பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில் அவரது உடலை கொண்டு செல்லும் செலவுகள் மற்றும் உடன் வரும் நபரின் எகானமி கிளாஸ் airfare ஆகியவை கவர் செய்யப்படும்.
வெளி நாடு சென்றவுடன் எதிர்பாராத விதமாக வேலை இழப்பு அல்லது பாலிசிதாரருக்கு அனுகூலம் இல்லாத பணி மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் எல்லா செலவுகளும் கவர் செய்யப்படும். பாலிசிதாரர் வெளிநாட்டு Employer மீது அந்த நாட்டிலேயே வழக்கு தொடுத்தால், அதற்கான கவரேஜ் ஆக ரூபாய் 30,000 கிடைக்கும். அதற்கு அந்த நாட்டின் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் இருந்து வழக்கின் தேவை குறித்த சான்றிதழ் வாங்க வேண்டும்.
பாலிசிதாரர் வெளிநாட்டில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டாலோ அல்லது விபத்தினால் காயம் ஏற்பட்டாலோ ரூபாய் 75000 வரை மருத்துவமனை செலவுகளுக்கு கவரேஜ் உண்டு.
பெண் பாலிசிதாரருக்கு தாய்மை பேற்று செலவுகளுக்கு ரூபாய் 25000 வரை கவரேஜ் உண்டு.
கிளைம் பாரம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அத்துடன் ஒரிஜினல் மெடிக்கல் டாக்குமெண்ட்ஸ் இணைக்க வேண்டும். டிஸ்சார்ஜ் ஆகி 15 நாட்களுக்குள் இதை இன்சூரன்ஸ் கம்பெனியிடம் சேர்ப்பிக்க வேண்டும். அதில் கொடுத்துள்ள விபரங்கள் பற்றி இன்சூரன்ஸ் கம்பனிக்கு திருப்தி ஏற்பட்டால் கிளைம் செட்டில் செய்யப்படும்.
ஓரியண்டல் வெப்சைட் இல் பை ஆன்லைன் ஐ தேர்ந்தெடுத்து தேவையான பாலிசியை வாங்கலாம்.
ரெனீவலுக்கு (Renewal), வெப்சைட்-இல் ஆன்லைன் ரெனீவல் தேர்ந்தெடுத்து, பாலிசி விபரங்களுடன் லாக்-இன் செய்ய வேண்டும். Payment mode தேர்ந்தெடுத்து பணம் செலுத்த வேண்டும். Receipt ஐ பிரிண்ட் அல்லது save செய்து கொள்ளலாம்.
தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிட்டட்,
பதிவு அலுவலகம்: ஓரியண்டல் ஹவுஸ் A-25/27, ஆசிப் அலி சாலை,
புது தில்லி -110002.
தொலைபேசி எண்: 011-43659595
புகார்கள் மற்றும் குறைகளுக்கு:
திருமதி அனிதா ஷர்மா, Chief Manager,
வாடிக்கையாளர் சேவை பிரிவு,
4-ஆவது தளம், அகர்வால் ஹவுஸ், ஆசிப் அலி சாலை,
புது தில்லி – 110002.
ஈமெயில் : anitasharma@orientalinsurance.co.in
ஈமெயில்: csd@orientalinsurance.co.in
எல்லா சந்தேகங்களுக்கும், வழிகாட்டுதலுக்கும் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800118485
011- 33208485 (இந்த எண்ணுக்கு கட்டணம் உண்டு)
Refund சம்பந்தப்பட்ட விபரங்களுக்கு: portal.refunds@orientalinsurance.co.in