*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply
Who would you like to insure?
நியூ இந்தியா அஷுரன்ஸ் கம்பெனி இந்தியாவில் நேரடியாக இன்சூர் செய்யும் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி. மும்பையில் உள்ள இந்தகம்பெனி இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமானது. 27 நாடுகளில் இயங்கி வரும் இந்த கம்பெனி, முன்னேற்றமடைந்த தொழில் நுட்பத்துடன் பல வித்யாசமான திட்டங்கள் வைத்திருக்கிறது. இந்த கம்பெனியில் ஆயுள் இன்சூரன்ஸ் கிடையாது. ஆனால் தனி நபர் மற்றும் குடும்பத்திற்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்ஸ் உண்டு. இன்சூரன்ஸ் அல்லாத பிரிவில் இந்த கம்பெனி மார்க்கெட் லீடராக திகழ்கிறது.
நியூ இந்தியா அஷுரன்ஸ் கம்பெனியில் 2034 கேஷ் லெஸ் மருத்துவமனைகள் உள்ளன. ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்ஸ் மாதம் ருபாய் 259 இலிருந்து ஆரம்பம் ஆகின்றன. பிளான்கள் இந்தியா முழுதும் உள்ள இக்கம்பெனியின் கிளைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.
ரூபாய் 1 லட்சத்திலிருந்து ரூபாய் 50 லட்சம் வரை எந்த கவரேஜ் தொகைக்கும் பிளான் எடுத்துக்கொள்ளலாம். நியூ இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் கஸ்டமர் ரேட்டிங் 5 க்கு 4.1 என்ற அளவில் உள்ளது (42 ரிவ்யூக்களில்).
இந்த கம்பெனி உள் நாடு மற்றும் வெளி நாடுகளில் அழுத்தமாக கால் பதித்திருக்கின்றது. ஒருங்கிணைக்கப்பட்ட, புகார்களை கையாளும் அமைப்பு இதன் மற்றொரு பலமாகும். அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்குவதால் இதன் கூடுதல் நம்பகத் தன்மை அனைவருக்கும் உதவியாக இருக்கும். இக்கம்பெனியில் கிளைம் செட்டில்மெண்டும் கால தாமதமின்றி செய்யப்படுகிறது.
முக்கிய அம்சங்கள் | சிறப்புகள் |
இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் | 1200+ |
க்ளைம் விகிதம் | 103.19 |
புதுப்பித்தல் | வாழ்க்கை முழுதும் |
காத்திருப்பு காலம் | 4 வருடங்கள் |
நியூ இந்தியா அஷுரன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி உலகின் பல இடங்களில் இருப்பதால், இந்த கம்பெனியின் அனுபவம் இதில் இன்சூர் செய்பவர்களுக்கு தரமான சேவைகளை வழங்கும். இது இந்திய அரசாங்கத்தின் கம்பெனி என்பதால் எல்லா சேவைகளும் வாடிக்கையாளருக்கு தேவையான நேரத்திலும், தேவையான முறையிலும் தங்கு தடையின்றி கிடைக்கும். எல்லா வயதினருக்கும், குடும்பத்தினருக்கும் எல்லா சூழ்நிலையிலும் தேவையான ஹெல்த் பாலிசிகள் இந்த கம்பெனியில் உள்ளன. இதன் கீழ் சிகிச்சை தருவதற்கு 2034 மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் உள்ளன.
கம்பெனியின் பாலிசிகளுக்குண்டான பிரீமியம் தொகையை டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். எந்த அலுவலகத்துக்கும் இதற்காக செல்ல தேவை இல்லை. எல்லா வகையான விசா கார்டுகள் மற்றும் மாஸ்டர் கார்டுகள் பேமெண்ட் ஏற்றுக்கொள்ளப்படும். மற்றும் கிளைம்ஸ் ஆன்லைன் மூலம் செய்ய முடியும். பொதுவாக பல விஷயங்களை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளும் வசதி உண்டு.
40-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் அலுவலகங்களும், இந்தியாவின் 40 -க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் கிளை அலுவலகங்களும் இக்கம்பெனிக்கு உள்ளன.
இதன் மூலம், பாலிசி எடுப்பவர்களுக்கு தேவையான சேவைகளை சிரமமின்றி, சுலபமாக வழங்க முடியும். மற்றும் 30 -க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைம் சம்பந்தமான பணிகள் விரைவாக நடைபெறுகின்றன. மொத்தத்தில் பாலிசி எடுப்பவர்களுக்கு தேவையான சேவைகள் காலதாமதம் இன்றி கிடைக்கின்றன.
இக்கம்பெனியின் ஹெல்த் இன்சூரன்சில் உலக நாடுகள் முழுதும் பரவியுள்ள கோவிட்-19 என்ற நோய்க்கும் கவரேஜ் உண்டு. பாலிசியின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோவிட்-19 சம்பந்தப்பட்ட மருத்துவமனை செலவுகள் ஏற்கப்படும். இதற்காக கூடுதல் பிரீமியம் எதுவும் செலுத்த தேவையில்லை.
நியூ இந்தியா அஷுரன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனியில் கால தாமதம் ஏதும் இல்லாமல் புதிய பாலிசிகளை ஏற்றுக் கொள்வது குறித்து குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்கப்படுகிறது. உதாரணமாக தனி நபர் ஹெல்த் இன்சூரன்ஸ் ஏற்றுக்கொள்வது குறித்து 3 நாட்களில் முடிவு செய்யப்படுகிறது.
இதே போல் பாலிசிதாரர்களது மனக்குறை சம்பந்தப்பட்ட விஷயங்களும் கால தாமதமின்றி பரிசீலனை செய்யப்படுகின்றன.
இந்த பிளானில் இன்-பேஷண்ட் செலவுகள் கவரேஜ் உண்டு.
பிளானில் சொல்லப்பட்ட லிமிட் தாண்டும் வரை இந்த பாலிசி உபயோகத்தில் இருக்கும்.
லிமிட் தாண்டினாலும் இன்சூர் செய்த தொகை தாண்டாமல் இருக்கும் வரை பாலிசி உபயோகத்தில் இருக்கும்.
இன்சூர் செய்த தொகையே அதிகபட்ச லிமிட் ஆகும்.
லிமிட் தாண்டிவிட்டால் இன்சூர் செய்தவர் அவரது செலவை இந்த பாலிசி மூலமாகவோ அல்லது வேறு கம்பெனி பாலிசி மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இரண்டிலும் பெற முடியாது. ஏதாவது ஒன்றில் மட்டும்தான்.
ஏற்கனவே மருத்துவ செலவுக்கான பணம் ஏதும் பெற்றிருந்தாலும் இன்சூர் செய்த தொகையில் அந்த பணம் போக மீதமுள்ள தொகை எப்போதும் உபயோகிக்க முடியும்.
கவரேஜ் டைப் | இன்சூரன்ஸ் தொகை | த்ரெஷ்ஹோல்டு (ஆரம்பம்) |
A | 50000 | 50000 |
B | 1000000 | 500000 |
C | 1500000 | 500000 |
D | 700000 | 800000 |
E | 1200000 | 800000 |
F | 1700000 | 800000 |
G | 2200000 | 800000 |
பாலிசி எடுப்பவரின் வயது 18 முதல் 65 வரை இருக்க வேண்டும் மற்ற உறுப்பினர்கள் 3 மாதம் முதல் 65 வயது வரை. குழந்தைகள் 3 மாதம் முதல் 25 வயது வரை. குழந்தைகளின் பெற்றோர்களும் பாலிசியில் இணைந்திருக்க வேண்டும். குழந்தைகள் பெற்றோரை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணமாகாத பெண்ணும், புத்தி சுவாதீனமில்லாத குழந்தையும் விதிவிலக்கு.
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்த் செக்-அப் அவசியம்.
மோசமான மெடிக்கல் அல்லது க்ளைம் ஹிஸ்டரி உள்ளவர்களுக்கும் ஹெல்த் செக்-அப் அவசியம்.
ஒரு வருடம் மட்டும்.
கீழ்கண்ட மருத்துவமனை செலவுகளுக்கு கவரேஜ் உண்டு:
மருத்துவ மனை செலவுகள்:
ரூபாய் 500,000 த்ரெஷ்ஹோல்டுக்கு ஒரு நாளைக்கு அதிக பட்சம் ரூபாய் 5000. ரூபாய் 800,000 த்ரெஷ் ஹோல்டுக்கு ரூபாய் 8000. இதில் ரூம் வாடகை, உணவு மற்றும் நர்ஸ் செலவுகள், ஸ்பெசலிஸ்ட், கன்சல்டன்ட், சர்ஜன், மருத்துவர் அனெஸ்தடிஸ்ட் ஆகியோரது பீஸ் ஆகியவை அடக்கம்.
இத்துடன் ஐ.சி.யு, ஆக்ஸிஜன் மற்ற உபகரணங்கள் சம்பந்தப்பட்ட செலவுகள் அடக்கம். அத்துடன் எக்ஸ்ரே போன்ற மற்ற செலவுகளும் சேரும்.
கெட் வெல் பெனிபிட் என்ற வகையில் ஒரு நாளைக்கு ரூபாய் 5000 த்தில் இருந்து 8000 வரை, த்ரெஷ் ஹோல்டு மதிப்பை பொறுத்து கிடைக்கும். ஆனால், அது இன்சூர் செய்யப்பட்ட தொகையில் கழிக்கப்படும்.
டோனெர்ஸ் இருந்தால் அவர்களது செலவுகள், ஆம்புலன்ஸ் செலவுகள் இவையும் இந்த பிளானில் உண்டு. ஒரு நாளுக்கு ரூபாய் 500 முதல் 800 வரை ஹாஸ்பிடல் கேஷ் பெனிபிட்உண்டு கேட்டராக்ட் சிகிச்சைக்கு அதிக பட்சம் ரூபாய் 50000 வரை கவரேஜ் உண்டு. ஆயுஷ் சிகிச்சைகளும் செய்து கொள்ளலாம்.
முழு குடும்பமும் சேர்ந்து இந்த பாலிசி எடுத்துக்கொள்ளலாம்
இந்த பிளானில் கீழ்க்கண்டவற்றுக்கு கவரேஜ் உண்டு:
சில நிபந்தனைகளுக்குட்பட்டு குழந்தை பிறந்ததில் இருந்து இந்த பிளான் காலம் முடியும் வரை தாயாருக்கு கவரேஜ் உண்டு.
மருத்துவ மனையில் அட்மிட் ஆன பிறகு ஏற்படும் செலவுகள், ரூம் வாடகை மற்றும் நர்ஸ் செலவுகள், ஸ்பெசலிஸ்ட், கன்சல்டன்ட், சர்ஜன், மருத்துவர், அனெஸ்தடிஸ்ட் ஆகியோரது பீஸ் இவற்றுக்கு கவரேஜ் உண்டு.
இத்துடன் ஆக்ஸிஜன் மற்ற உபகரணங்கள் சம்பந்தப்பட்ட செலவுகள் அத்துடன் எக்ஸ்ரே போன்ற மற்ற செலவுகளும் சேரும். உறுப்பு தானம் செய்பவரது செலவுகள், குறிப்பிட்ட டே கேர் செலவுகள் இவற்றுக்கும் கவரேஜ் உண்டு. கேட்டராக்ட் சிகிச்சைக்கு அதிக பட்சம் ரூபாய் 50000 வரை கவரேஜ் உண்டு. ஆயுஷ் சிகிச்சைகளும் செய்து கொள்ளலாம். இவை இல்லாமல் குறிப்பிட்ட 11 க்ரிட்டிக்கல் நோய்களுக்கும் 10 சதவீத கவரேஜ் உண்டு.
பாலிசி எடுப்பவரின் வயது 18 முதல் 65 வரை இருக்க வேண்டும். குழந்தைகள் 18 முதல் 25 வயது வரை. குழந்தைகளின் பெற்றோர்களும் பாலிசியில் இணைந்திருக்க வேண்டும். குழந்தைகள் பெற்றோரை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணமாகாத பெண்ணும், புத்தி சுவாதீனமில்லாத குழந்தையும் விதிவிலக்கு.
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்த் செக்-அப் அவசியம். இருந்தாலும் 50 சதவிகித ஹெல்த் செக் அப் செலவுகள் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
ஒரு வருடம் மட்டும்.
2 லட்சம், 3 லட்சம், 5 லட்சம், 8 லட்சம் என்று 4, தொகைகளுக்கு இன்சூர் செய்து கொள்ளலாம்.
கீழ்கண்ட விபரங்களின்படி பிரீமியம் செலுத்த வேண்டும்:
பிரைமரி மெம்பெர் பிரீமியம் டேபிள், அடிஷனல் மெம்பெர் பிரீமியம் டேபிள் இவற்றின்படி பிரீமியம் செலுத்த வேண்டும்.
பேமிலி பிளோட்டர் - அதாவது எல்லா நபர்களுக்கும் இன்சூரன்ஸ் தொகை செல்லுபடியாகும். (குறைந்தது 2 முதல் அதிகபட்சம் 6 நபர்கள் வரை )
கிரேட்டர் மும்பை, டெல்லி, என் சி ஆர், இந்தியாவின் மற்ற இடங்கள் என்ற 3 பிரிவுகளின்படி.
பெற்றோர் தமது பெண் குழந்தைகளுடன் மட்டும் இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம் என்பது ஓர் தனி சிறப்பு.
ஐ. சி. யு., மருத்துவ மனையில் அட்மிட் ஆன பிறகு ஏற்படும் செலவுகள், ரூம் வாடகை மற்றும் நர்ஸ் செலவுகள், ஸ்பெசலிஸ்ட், கன்சல்டன்ட், சர்ஜன், மருத்துவர், அனெஸ்தடிஸ்ட் ஆகியோரது பீஸ் இவற்றுக்கு கவரேஜ் உண்டு.
இத்துடன் ஆக்ஸிஜன் மற்ற உபகரணங்கள் சம்பந்தப்பட்ட செலவுகள் அத்துடன் எக்ஸ்ரே போன்ற மற்ற செலவுகளும் சேரும். உறுப்பு தானம் செய்பவரது செலவுகள், குறிப்பிட்ட டே கேர் செலவுகள் இவற்றுக்கும் கவரேஜ் உண்டு. கேட்டராக்ட் சிகிச்சைக்கு அதிக பட்சம் ரூபாய் 50000 வரை கவரேஜ் உண்டு. ஆயுஷ் சிகிச்சைகளும் செய்து கொள்ளலாம்.
புற நோயாளிகள் பிரிவு சிகிச்சைக்கு கவரேஜ் கிடையாது.
பிறந்தது முதல் இருக்கும் நோய்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு கவரேஜ் உண்டு. குறிப்பிட்ட 11 க்ரிட்டிக்கல் நோய்களுக்கும் 10 சதவீத கவரேஜ் உண்டு.
ஆக்ஸிடென்டல் டெத், பெர்மனெண்ட் டோட்டல் டிசேபில்மென்ட், உடல் உறுப்புகள் மற்றும் கண்கள் இழப்பிற்கு மற்றும் ஒரு உறுப்பு அல்லது ஒரு கண் இழப்பிற்கு கவரேஜ் உண்டு.
பாலிசி எடுப்பவரின் வயது 18 முதல் 65 வரை இருக்க வேண்டும். குழந்தைகள் 3 மாதம் முதல் 25 வயது வரை. குழந்தைகளின் பெற்றோர்களும் பாலிசியில் இணைந்திருக்க வேண்டும். குழந்தைகள் பெற்றோரை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணமாகாத பெண்ணும், புத்தி சுவாதீனமில்லாத குழந்தையும் விதிவிலக்கு.
ஒரு வருடம் மட்டும்.
2 லட்சம், 3 லட்சம், 5 லட்சம், 8 லட்சம் என்று 4 தொகைகளுக்கு இன்சூர் செய்து கொள்ளலாம். கீழ்கண்ட விபரங்களின்படி பிரீமியம் செலுத்த வேண்டும்:
பிரைமரி மெம்பெர் பிரீமியம் டேபிள், அடிஷனல் மெம்பெர் பிரீமியம் டேபிள் இவற்றின்படி பிரீமியம் செலுத்த வேண்டும்.
பேமிலி பிளோட்டர் - அதாவது எல்லா நபர்களுக்கும் இன்சூரன்ஸ் தொகை செல்லுபடியாகும். (அதிகபட்சம் 4 நபர்கள் வரை )
கிரேட்டர் மும்பை, டெல்லி, என் சி ஆர், இந்தியாவின் மற்ற இடங்கள் என்ற 3 பிரிவுகளின்படி.
அடிஷனல் நபர்களைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்கு 50% குறைந்த பிரீமியம்.
65 வயதுக்கு மேல் உள்ள நபர்களின் பாலிசி புதுப்பிக்கப் படும்போது 2 சதவீத பிரீமியம் லோடிங் உண்டு.
எதிர்பாராத மருத்துவமனை செலவுகளுக்கு இந்த பாலிசி கவரேஜ் தருகிறது. குறைந்த பட்சம் 24 மணி நேரத்துக்கு மேல் மருத்துவ மனையில் இருந்திருக்க வேண்டும். மருத்துவ மனை வருவதற்கு 30 நாட்கள் முன்பிருந்தும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபிறகு 60 நாட்கள் வரையிலும் கவரேஜ் உண்டு.
பாலிசி எடுப்பவரின் வயது 18 முதல் 65 வரை இருக்க வேண்டும். குழந்தைகள் 18 முதல் 25 வயது வரை. குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவர் பாலிசியில் இணைந்திருக்க வேண்டும். குழந்தைகள் பெற்றோரை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் ஒரே பாலிசியில் தனித்தனி இன்சூரன்ஸ் தொகையுடன் எடுத்துக்கொள்ளலாம். பேமிலி (F)பிளோட்டர் அடிப்படையில் இரண்டில் இருந்து நான்கு பேருக்கு 11% இலிருந்து 18% வரை தள்ளுபடி உண்டு. க்ளைம் ஏதும் இல்லாத ஒவ்வொரு வருடத்திற்கும் நோ க்ளைம் போனஸ் உண்டு.
1 லட்சம் ரூபாயிலிருந்து எட்டு லட்சம் ரூபாய் வரை இன்சூர் செய்து கொள்ளலாம்.
55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிக பட்ச இன்சூரன்ஸ் தொகை மூன்று லட்சம். நிபந்தனைகளுக்கு உட்பட்டு இன்சூரன்ஸ் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம்.
இந்த பாலிசி வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கானது.
பர்சனல் ஆக்ஸிடன்ட் பெனிபிட், டெத் அல்லது பெர்மனன்ட் டிசபிலிட்டி பெனிபிட், இட மாற்றம் மற்றும் இறப்பின் காரணமாக ஏற்படும் போக்குவரத்து செலவுகள், பணி இழப்பினால் ஏற்படும் இட மாற்ற மற்றும் போக்குவரத்து செலவுகள், மருத்துவ மனை செலவுகள், தாய்மை பேற்றினால் ஏற்படும் செலவுகள் இவை அனைத்துக்கும் கவரேஜ் உண்டு.
வெளிநாடுகளில் பணி நிமித்தம் மட்டும் வாழும், 18 இலிருந்து 60 வயது வரை உள்ள இந்தியர்கள் இந்த பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.
நியூ இந்தியா மெடிகிளைம் 2007 பாலிசி
மருத்துவ மனை வருவதற்கு 30 நாட்கள் முன்பிருந்தும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபிறகு 60 நாட்கள் வரையிலும் ஆகும் செலவுகளுக்கு கவரேஜ் உண்டு.
மருத்துவ மனையில் இருக்கும்போது ஆகும் செலவுகள், ஆம்புலன்ஸ் கட்டணம், டே கேர் மற்றும் ஆயுர்வேதிக் டிரீட்மெண்ட் செலவுகள், நிபந்தனைக்கு உட்பட்டு ஏற்கனவே இருந்த நோய்களுக்கான செலவுகள், ஆகிய அனைத்துக்கும் கவரேஜ் உண்டு.
பாலிசி எடுப்பவரின் வயது 18 முதல் 60 வரை இருக்க வேண்டும். குழந்தைகள் 3 மாதம் முதல் 18 வயது வரை. குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவர் பாலிசியில் இணைந்திருக்க வேண்டும். குழந்தைகள் பெற்றோரை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்
ஆரோக்கியம் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட தள்ளுபடிகள், தொடர்ந்த போனஸ், ஹெல்த் செக்-அப் செலவுகள் திரும்பக் கிடைத்தல் மற்றும் வருமான வரி சலுகை ஆகியவை.
இந்த பாலிசியின் கவரேஜ் விபரங்கள் வருமாறு:
மருத்துவ மனை வருவதற்கு 30 நாட்கள் முன்பிருந்தும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபிறகு 60 நாட்கள் வரையிலும் ஆகும் செலவுகளுக்கு கவரேஜ் உண்டு.
மருத்துவ மனையில் இருக்கும்போது ஆகும் செலவுகள், ஆம்புலன்ஸ் கட்டணம், டே கேர் மற்றும் ஆயுர்வேதிக் டிரீட்மெண்ட் செலவுகள், நிபந்தனைக்கு உட்பட்டு ஏற்கனவே இருந்த நோய்களுக்கான செலவுகள், கேட்ராக்ட் அறுவை சிகிச்சை ஆகிய அனைத்துக்கும் கவரேஜ் உண்டு.
பதினெட்டில் இருந்து அறுபது வயது வரை உள்ளவர்கள் இந்த பிளானை எடுத்துக்கொள்ளலாம். இந்த பிளானில் குடும்பத் தலைவர், தலைவி மற்றும் பெற்றோரை சார்ந்திருக்கும் இரண்டு குழந்தைகளும் சேர்ந்து கொள்ளலாம்.
குறைந்த பட்ச இன்சூரன்ஸ் தொகை ருபாய் இரண்டு லட்சம். அதிக பட்சம் ருபாய் ஐந்து லட்சம். கணவர் அல்லது மனைவியை சேர்க்க 50%ம், பெற்றோரை சார்ந்திருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 25%ம் அதிகமாக செலுத்த வேண்டும்.
மருத்துவ மனை வருவதற்கு 30 நாட்கள் முன்பிருந்தும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபிறகு 60 நாட்கள் வரையிலும் ஆகும் செலவுகளுக்கு கவரேஜ் உண்டு.
மருத்துவ மனையில் இருக்கும்போது ஆகும் செலவுகள், ஆம்புலன்ஸ் கட்டணம், டே கேர் மற்றும் ஆயுர்வேதிக் டிரீட்மெண்ட் செலவுகள், நிபந்தனைக்கு உட்பட்டு ஏற்கனவே இருந்த நோய்களுக்கான செலவுகள், கேட்ராக்ட் அறுவை சிகிச்சை ஆகிய அனைத்துக்கும் கவரேஜ் உண்டு.
18 லிருந்து 60 வயது வரை உள்ளவர் இந்த பாலிசி எடுக்கலாம். மற்ற அங்கத்தினர்களுக்கு 3மாதம் முதல் 65 வயது வரை. 3 மாதத்தில் இருந்து 18 வயது வரை உள்ள குழந்தைகள் சேர்த்துக்கொள்ளப் படலாம். ஆனால், பெற்றோரும் இந்த பிளானில் இருக்கவேண்டும்.
ரூபாய் 50000 இலிருந்து 75000 வரை. க்ளைம் இல்லாத ஒவ்வொரு வருடத்துக்கும் நோ க்ளைம் போனஸ் 5% சதவிகிதம் அதிகரிக்கப்படும்.
மருத்துவ மனை வருவதற்கு 30 நாட்கள் முன்பிருந்தும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபிறகு 60 நாட்கள் வரையிலும் ஆகும் செலவுகளுக்கு கவரேஜ் உண்டு.
மருத்துவ மனையில் இருக்கும்போது ஆகும் செலவுகள், ஆம்புலன்ஸ் கட்டணம் மற்றும் ஆயுர்வேதிக் டிரீட்மெண்ட் செலவுகள், நிபந்தனைக்கு உட்பட்டு ஏற்கனவே இருந்த நோய்களுக்கான செலவுகள் ஆகிய அனைத்துக்கும் கவரேஜ் உண்டு.
அத்துடன் ஐ.சி.யு., ரூம் வாடகை மற்றும் நர்ஸ் செலவுகள், ஸ்பெசலிஸ்ட், கன்சல்டன்ட், சர்ஜன், மருத்துவர், அனெஸ்தடிஸ்ட் ஆகியோரது பீஸ் இவற்றுக்கு கவரேஜ் உண்டு.
இத்துடன் ஆக்ஸிஜன் மற்ற உபகரணங்கள் சம்பந்தப்பட்ட செலவுகள், எக்ஸ்ரே போன்ற மற்ற.செலவுகள், உறுப்பு தானம் செய்பவரது செலவுகள், இவற்றுக்கும் கவரேஜ் உண்டு.
60 லிருந்து 80 வயது வரை உள்ளவர் இந்த பாலிசி எடுக்கலாம். 90 வயது வரை பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். பாலிசி எடுப்பவருக்கு ஹெல்த் செக் அப் கட்டாயம்.
ரூபாய் 100,000 இலிருந்து 150,000 வரை இன்சூர் செய்து கொள்ளலாம். க்ளைம் இல்லாத ஒவ்வொரு வருடத்துக்கும் நோ க்ளைம் போனஸ் 5% சதவிகிதம் அதிகரிக்கப்படும். வயது மற்றும் இன்சூரன்ஸ் தொகையை பொறுத்து பிரீமியம் குறைவாக இருக்கும். வயதை பொறுத்து லோடிங் இருக்கும். குடும்பத்துக்கு பத்து சதவீத தள்ளுபடி உண்டு.
இந்த பிளானில் கீழ்கண்ட கவரேஜ்கள் உண்டு:
டேபிள் A: டேபிள் B யில் உள்ள கவரேஜ் உடன் டோட்டல் டிசேபில்மெண்ட் பிளான்
டேபிள் B: டேபிள் C யில் உள்ள கவரேஜ் உடன் பெர்மனெண்ட் பார்ஷியல் டிசேபில்மெண்ட் பிளான்
டேபிள் C: டேபிள் D யில் உள்ள கவரேஜ் உடன் இரண்டு உறுப்புகள் அல்லது இரண்டு கண்கள் இழப்பு மற்றும் பெர்மனெண்ட் டோட்டல் டிசேபில்மெண்ட் பிளான்
டேபிள் D: இறப்புக்கு 100 சதவீத இன்சூரன்ஸ் தொகை
இதில் பல விதமான பர்சனல் ஆக்ஸிடன்ட் பிளான்கள் உள்ளன. உ-ம் குரூப் மற்றும் தனி நபர் ஆக்ஸிடென்ட் பிளான். ஜனதா பர்சனல் ஆக்ஸிடன்ட் பிளான், ஸ்டூடென்ட் சேப்டி இன்சூரன்ஸ் பிளான் என்று மொத்தம் எட்டு வகையான பிளான்கள் உள்ளன.
5 வயதிலிருந்து 70 வயதுக்குட்பட்ட தனி நபர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்.
வெளி நாடுகளில் இருக்கும் தனி நபர்கள் இந்த ப்ளானை எடுக்கலாம் அவர்களது காயங்கள் மற்றும் நோய்களுக்கு இந்த பிளானில் கவரேஜ் உண்டு இதன் விபரம் கீழ் வருமாறு:
A-1, A-2, B-1, B-2, E-1 CFT , E-2 CFT பிளான்களின் கீழ் மருத்துவ மற்றும் இடமாற்ற செலவுகள், விமானத்தால் தாமதமான அல்லது இழந்துவிட்ட தங்கள் உடமைகளுக்கான செலவுகள், பாஸ்போர்ட் தொலைந்து போதல் போன்றவை கவர் செய்யப்படும்.
வேலை மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட மருத்துவ செலவுகள், மாற்றம் மற்றும் ஒன்று சேர்தல் சம்பந்தப்பட்ட செலவுகளுக்கு கவரேஜ் உண்டு.
6 மாதத்தில் இருந்து 70 வயது வரை உள்ள தனி நபர்கள் இந்த பாலிசியை எடுக்கலாம். ஆனால், இந்தியாவில் இருந்து கிளம்பும் முன் எடுக்க வேண்டும்.
இன்-பேஷண்ட் செலவுகள், இத்துடன் ஐ.சி.யு, ஆக்ஸிஜன் மற்ற உபகரணங்கள் மற்றும் எக்ஸ்-ரே சம்பந்தப்பட்ட செலவுகள், டோனெர்ஸ் மற்றும் ஆம்புலன்ஸ் செலவுகள், ரூம் வாடகை மற்றும் நர்ஸ் செலவுகள், ஸ்பெசலிஸ்ட், கன்சல்டன்ட், சர்ஜன், மருத்துவர், அனெஸ்தடிஸ்ட் ஆகியோரது பீஸ், குறிப்பிட்ட டே கேர் செலவுகள் , கேட்ராக்ட் மற்றும் ஆயுஷ் சிகிச்சை செலவுகள், சில நிபந்தனைகளுக்குட்பட்டு பிறந்தது முதல் இருக்கும் நோய்களுக்கு ஆகும் செலவுகள், குறிப்பிட்ட 11 க்ரிட்டிக்கல் நோய்களுக்கு 10 சதவீத செலவுகள், ஆக்ஸிடென்டல் டெத், பெர்மனெண்ட் டோட்டல் டிசேபில்மென்ட், உடல் உறுப்புகள் மற்றும் கண்கள் இழப்பிற்கு மற்றும் ஒரு உறுப்பு அல்லது ஒரு கண் இழப்பிற்கு உண்டான .சிகிச்சைக்கு ஆகும் செலவுகள், மருத்துவ மனை வருவதற்கு 30 நாட்கள் முன்பிருந்தும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபிறகு 60 நாட்கள் வரையிலும் ஆகும் செலவுகள், பர்சனல் ஆக்ஸிடன்ட் பெனிபிட், டெத் அல்லது பெர்மனன்ட் டிசபிலிட்டி பெனிபிட், இட மாற்றம் மற்றும் இறப்பின் காரணமாக ஏற்படும் போக்குவரத்து செலவுகள், பணி இழப்பினால் ஏற்படும் இட மாற்ற மற்றும் போக்குவரத்து செலவுகள், மருத்துவ மனை செலவுகள், தாய்மை பேற்றினால் ஏற்படும் செலவுகள், ஆயுர்வேதிக் டிரீட்மெண்ட் செலவுகள் இவை அனைத்துக்கும் கவரேஜ் உண்டு.
புற நோயாளிகள் பிரிவு சிகிச்சைக்கு கவரேஜ் இல்லை.
ஆன்லைனில் கிளைன்ட் ஐடி, பாலிசி நம்பர் இவற்றை உபயோகித்து லாக்-இன் செய்து கிளைம் செய்யலாம்.
ஆன்லைனில் ப்ராடக்ட் தேர்வு செய்து அதன் பின் கேட்கப்படுகிற கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் பாலிசி பற்றிய விபரங்களோடு ‘கோட்’ கொடுக்கப்படும். மேற்கொண்டு அதில் சொல்லியபடி எல்லா விபரங்களையும் கொடுத்தால் அது பரிசீலிக்கப்படும்.
இலவச எண்: 1800 209 1415
மின்னஞ்சல் முகவரி: tech.support@newindia.co.in
பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி: தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட், #87, எம்.ஜி.ரோடு, கோட்டை, மும்பை 400 001.