இஃப்கோ டோக்கியோ மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

உலகின் முன்னணி உர உற்பத்தியாளர்களில் ஒன்றான இஃப்கோ என்ற இந்திய நிறுவனம் ஜப்பானின்‌ முக்கிய இன்சூரன்ஸ் குரூப்களில் ஒன்றான டோக்கியோ மெரீன் குரூப் நிறுவனத்துடன் கைக்கோர்த்து 2000-ம் ஆண்டு இஃப்கோ டோக்கியோ என்ற காப்பீட்டுத் திட்டத்தினை துவங்கியது. கார் இன்சூரன்ஸ், பைக் இன்சூரன்ஸ், ஹோம் இன்சூரன்ஸ் என்று பல காப்பீட்டுத் திட்டங்களுடன் மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் சேர்த்து, மக்களுக்கு எல்லா வகையிலும் உதவி வருகிறது. பொதுவாக நடைமுறையில் உள்ள வெவ்வேறு காப்பீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் பல நல்ல சலுகைகளுடன் மக்களின் நம்பிக்கையுடன் இருபத்திரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது இந்த நிறுவனம். மக்களுக்கு ஒளிவு மறைவின்றி நேர்மையாகவும், சரியான நேரத்தில் உதவியாகவும் இருக்கும் நோக்கோடு நிறுவப்பட்டு வளர்ந்து வருகிறது.

Read More

இஃப்கோ டோக்கியோ மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply

Get insured from the comfort of your home No medicals required
I am a

My name is

My number is

By clicking on ‘View Plans’ you, agreed to our Privacy Policy and Terms of use
Close
Back
I am a

My name is

My number is

Select Age

City Living in

  Popular Cities

  Do you have an existing illness or medical history?

  This helps us find plans that cover your condition and avoid claim rejection

  Get updates on WhatsApp

  What is your existing illness?

  Select all that apply

  When did you recover from Covid-19?

  Some plans are available only after a certain time

  இஃப்கோ டோக்கியோ மருத்துவ காப்பீடு நிறுவனம் - ஒரு கண்ணோட்டம்

  மாறிவரும் காலச்சூழலில் காப்பீட்டுத் திட்டங்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இங்கு நாம் எல்லோரும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்ற நிச்சயம் இல்லாத வாழ்க்கையை வாழ்த்துக் கொண்டிருக்கிறோம். எதுவுமே நிச்சயமில்லாத போது, எந்த வித இடையூறும் இல்லாமல் சுமூகமாக போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீரென ஒரு அவசர உதவி தேவைப்படலாம். அது மருத்துவ அவசரமாக கூட இருக்கலாம். அப்படிப்பட்ட அவசர காலத்தில் பூதமாக எழுந்து நிற்கும் மருத்துவ சிகிச்சைக்கான செலவு, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு இன்னுமோர் பேரிடியாக இருக்கிறது. இஃப்கோ டோக்கியோ போன்ற நிறுவனங்களின் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் இந்த மாதிரியான சங்கடமான சூழலில் நமக்கு கைக்கொடுக்கின்றன.

  சென்ற ஆண்டு கொரொனா பாதிப்பின் போது கணக்கில்லாத உயிர் சேதங்கள் நடந்தது. வாழ்க்கையின் நிலையில்லாமையை அந்த போராட்டக் காலம் மக்களுக்கு நினைவூட்டியது. உயிர் மீதான பயத்தை மக்களுக்கு காட்டியது. உலகமே முடங்கிப் போய் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் போய்விட்டிருந்த அந்த காலத்தில், 2021-ம் ஆண்டில் மட்டும் இஃப்கோ டோக்கியோ வின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பதினொரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பேருதவியாக இருந்திருக்கிறது. இஃப்கோ என்ற இந்திய நிறுவனமும் டோக்கியோ மெரீன் குரூப் என்ற ஜப்பானிய நிறுவனமும் இணைந்து 2000-ம் ஆண்டு நிறுவி இருபது ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் மக்களின் நம்பிக்கையுடன் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது இஃப்கோ டோக்கியோ மருத்துவ காப்பீட்டுத் திட்டம். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இந்தியாவின் பல இடங்களில் கிளைகள் கொண்டு ஏழாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் தொடர்புக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

  இஃப்கோ டோக்கியோ மருத்துவ காப்பீடு அம்சங்கள் மற்றும் விவரங்கள்

  அம்சங்கள் விவரங்கள்
  தொடர்பிலுள்ள மருத்துவமனைகள் 7500+
  ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சைக்கு காத்திருக்கும் காலம் 3 வருடங்கள்
  க்ளெய்ம் தீர்வு விகிதம் 99.71% (2020 – 2021)
  பயன்பாடு விகிதம் 90%
  கொடுக்கப்பட்ட பாலிசிகளின் எண்ணிக்கை 156118
  நிவர்த்தி செய்யப்பட்ட க்ரீவன்சஸ் 99.93%
  புதுப்பித்தல் வாழ்நாள் முழுவதும்

  ஏன் இஃப்கோ டோக்கியோ மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?

  வாழ்நாள் எல்லாம் உழைத்து சிறுக சிறுக சேமித்த பணமெல்லாம் ஒரு முறை மருத்துவமனைக்கு போய் வருவதற்குள் தொலைந்து விடும் என்றாள் அது எவ்வளவு பெரிய வலி. இப்படி இல்லாமல், சேமிப்புகளை கரைத்து விடாமலும், கடன் வாங்கி கஷ்டப்படாமலும் மருத்துவ உதவியை நாட முடியுமென்றால் அதை யாரும் வேண்டாமென்று சொல்லப் போவதில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பிருந்து வீடு திரும்பும் வரை எல்லாமே ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கவர் செய்யப்படுவது சாமானிய மக்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறது. அவசர காலத்தில் திடீரென ஒரு பெரும் தொகையை திரட்டுவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. சிலருக்கு அது அசாத்தியமாகவே இருக்கிறது. ஆனால், காப்பீட்டுத் திட்டங்களுடன் தொடர்பில் இருக்கும் மருத்துவமனைகளில் பணமில்லாமல் காப்பீடு மூலமே வேண்டிய சிகிச்சைகளை செய்ய முடிகிறது. இது மட்டுமில்லாமல் நோ க்ளெய்ம் போனஸ் (என்.சி.பி) போன்ற சலுகைகளும் இருக்கிறது. இதற்கும் மேல் மருத்துவ காப்பீடு வேண்டாமென்று சொல்ல என்னக் காரணம் இருக்கிறது?

  எத்தனையோ மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் இருக்க ஏன் இஃப்கோ டோக்கியோ நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம். முதலாவதாக, ஆன்லைனிலோ, பி.ஒ.எஸ் மையங்களிலோ, நிறுவன கிளைகளிலோ, எங்கேயானாலும் உடனடி சேவை வழங்கப்படுகிறது. இஃப்கோ டோக்கியோ திட்டத்திற்கு கீழ் இருபதாயிரம் (20,000) முகவர்களும் கிளைகளும் செயலாற்றி வருகின்றன. இங்கு, க்ளெய்ம் செய்யப்பட்ட காப்பீடு தானாகவே உடனடியாக புதுப்பிக்கப்படும். நீங்கள் வேறு திட்டங்களில் உறுப்பினராக‌ இருக்கும் பட்சத்தில் அங்கிருந்து இஃப்கோ டோக்கியோவின் காப்பீட்டுத் திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளும் வசதியிருக்கிறது. மக்களின் தேவைகளுக்காகவும் சேவைக்காகவும் எந்த நேரமும் எந்த நாளும் நிறுவனத்தின் கால் சென்டர்கள் செயல்பாட்டிலேயே இருக்கின்றன. இவ்வளவுக்கும் மேல், இஃப்கோ டோக்கியோ நிறுவனத்திற்கு 7500+ மருத்துவமனைகளுடன் தொடர்புள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்று பிரத்யேக சலுகைகள் இருக்கின்றன. பொதுவாக பாலிசி தொடங்குவதற்கு முன்பே அறியப்பட்ட நோய்களுக்கு சிகிச்சைக்காக காத்திருக்கும் காலம் நான்கு ஆண்டுகளாக இருக்கும். ஆனால் இஃப்கோ டோக்கியோ நிறுவனம் அந்த காத்திருப்புக் காலத்தை மூன்றாக குறைத்துள்ளது. இப்படியாக இன்னும் பல நல்ல முன்னெடுப்புகளுடன் மக்களின் சேவைக்காக நிறுவப்பட்டு இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இஃப்கோ டோக்கியோ மருத்துவ காப்பீடு.

  இஃப்கோ டோக்கியோ மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களின் பட்டியல்:

  • இஃப்கோ டோக்கியோ கிரிட்டிகல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி

   எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது திடீரென தனக்கு தீவிர நோய் இருப்பதைக் கண்டறிவது ஒருவருக்கும் அவர் குடும்பத்திற்கும் பெரும் மனச் சோர்வை கொடுக்கும். இதற்கிடையில் சிகிச்சைக்காக பணம் திரட்டுதல் எல்லாம் அசாத்தியமாகிவிடுகிறது. இஃப்கோ டோக்கியோவின் கிரிட்டிகல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி என்பது ஒரு பாதுகாப்புத் திட்டம். இது ஒரு தனி நபரை அவரின் தீவிர நோய் காலத்தில் சிகிச்சைக்கான சிக்கலில் இருந்து பாதுகாக்கிறது.

   சிறப்பம்சங்கள்:
   • கொடுநோய்களின் போது சிகிச்சைக்காக செய்யப்படும் அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய ஒரு முழு அளவிலான மருத்துவ காப்பீடு.
   • இந்த திட்டத்தின் கீழ் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, பைபாஸ் அறுவை சிகிச்சை, பெரிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, விபத்துக்களில் கைகால்களை இழந்தோருக்கான மருத்துவ சிகிச்சை என எல்லா தீவிர பாதிப்புகளிலிருந்தும் பாதுகாப்பு வழங்கப்படும்.
   • மேலும் இஃப்கோ டோக்கியோவுடன் தொடர்பில் இருக்கும் மருத்துவமனைகளில் பணமில்லா க்ளெய்ம் வசதியுள்ளது
   தகுதி:
   • முதலாளிகளால் கவர் செய்யப்பட்ட பணியாளர்களும் அவர்களை சார்ந்தவர்களும்
   • மாநில/மத்திய அரசாங்கத்தால் பிரீமியம் செலுத்தப்படும் பிரிவு/குழு
   • பதிவுசெய்யப்பட்ட சேவைக் கழகங்களின் உறுப்பினர்கள்
   • க்ரெடிட் கார்ட் அல்லது பிற நிதி அட்டைகளை வைத்திருப்பவர்கள்
   • வங்கிகள்/என்.பி.எஃப்.சி -களின் டெபாசிட் அல்லது சான்றிதழ் வைத்திருப்பவர்கள்
   • பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றின் பங்குதாரர்கள்
   • மாணவர்கள்‌ அல்லது ஆசிரியர்கள் என எல்லோரும் இத்திட்டத்தில் இணையலாம்.
   விலக்குகள்:
   • காப்பீடு வழங்கப்படுவதற்கு முன் கண்டறியப்பட்ட நோய்களின் விளைவுகள்
   • காப்பீடு தொடங்கப்பட்டு 120 நாட்களுக்குள் கண்டறியப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்கு ஏற்படும் செலவு
   • மது அருந்துவதால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை
   • தற்கொலை முயற்சி காரணமாக தேவைப்படும் சிகிச்சை
   • போர் அல்லது பயங்கரவாத தாக்குதல் போன்றவற்றின் போது தேவைப்படும் சிகிச்சை

   என‌ இது மாதிரியான சிகிச்சைகளும் மருத்துவ சிக்கல்களும் இந்த திட்டத்திற்கு கீழ் வராது.

  • இஃப்கோடோக்கியோதனிநபர்மெடிஷீல்ட்திட்டம்

   மருத்துவருக்கான செலவுகளுடன் இதர பொருட்கள் சோதனைகள் மருந்துகள் என இவற்றிற்கான செலவுகளும் சேர்ந்து பெரும் மலையாக நிற்கிறது. இந்த மாதிரி கஷ்டப்படும் தனிநபருக்கோ அவர் குடும்பத்தாருக்கோ மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளுக்கு மற்ற செலவுகளுக்கும் உதவ வடிவமைக்கப்பட்ட மருத்துவத் திட்டம் இது.

   சிறப்பம்சங்கள்:

   • காப்பீட்டுத் திட்ட கவரேஜின் போது ஏற்படும் நோய் அல்லது காயங்களின் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகளுக்கு இத்திட்டம் பொருந்தும்
   • இந்தியாவில் சிகிச்சைக்காக ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு மட்டுமே இது பொருந்தும்
   • 3 மாதக் குழந்தை முதல் 80 வயது நபர் வரை எல்லோருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் கிடைக்கும்.
   • 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை குழந்தைகள் பெற்றோரின் பாதுகாப்புக்கு உட்பட்டவர்கள்
   • 45 வயது வரையிலான விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை.
   • 45 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, இரத்த சர்க்கரை, சிறுநீர் மற்றும் இ.சி.ஜி ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவ பரிசோதனைகள் அவசியம். மேலும் புதிய மற்றும் ப்ரேக் கவரேஜ் விண்ணப்பதாரர்களுக்கு பரிசோதனை அவசியம்
   • ஃபேமிலி பேக்கேஜ் திட்டத்தின் கீழ் சார்ந்திருக்கும் துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோரைச் சேர்ப்பதற்கான பிரீமியம் திட்டத்தில் தள்ளுபடி வழங்கப்படும்
   • 23 வயது வரை சார்ந்திருக்கும் குழந்தைகள் திருமணமாகாத நபர்களாகக் கருதப்படுவார்கள்
   • தனிநபர் மெடிஷீல்டு திட்டத்தின் கீழ் வரும் 121 சிகிச்சைகளின் பட்டியல் தனியாக இணைக்கப்பட்டுள்ளது.

   இத்திட்டத்தின்கீழ்வரும்செலவுகள்:

   • அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 1.0% தினசரி அறை வாடகைக்கு வழங்கப்படுகிறது
   • ஐ.சி.யூ/ஐ.டி.யூ வாடகைக்கு 2.5% அடிப்படை காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது
   • மருத்துவமனையில் பதிவு கட்டணம், சேவைக் கட்டணங்கள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றிற்காகச் செய்யப்படும் செலவுகளுக்கு அடிப்படைக் காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சமாக 0.5% வழங்கப்படும்
   • மருத்துவரின் பரிந்துரையின் பேரில் செவிலியர்களை நியமிக்கும் செலவுகள்,
   • அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர், அல்லது வேறு ஏதேனும் ஆலோசனைச் செலவுகள் என அனைத்து உள்ளடக்கம்
   • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் தினசரி உதவித்தொகையாக அடிப்படை காப்பீட்டுத் தொகையிலிருந்து 0.1%, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 250‌ வழங்கப்படும்
   • ஆம்புலன்ஸ் கட்டணமாக அடிப்படை காப்பீட்டுத் தொகையிலிருந்து 1.0% அல்லது ரூ 1,500, எது அதிகமோ அது‌ வழங்கப்படும்
   • மருந்து, இரத்தம், ஆக்ஸிஜன், மயக்க மருந்து, நோயறிதல் சோதனைகள், ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், கீமோதெரபி, டயாலிசிஸ், செயற்கை மூட்டுகள் போன்றவற்றிற்கு ஆகும் செலவுகளும் இதில் அடக்கம்
   • தகுந்த காரணங்களோடு மருத்துவமனையில் இல்லாமல் வீட்டிலேயே செய்யப்படும் சிகிச்சைக்கு, அடிப்படைக் காப்பீட்டுத் தொகையிலிருந்து அதிகபட்சமாக 20% தரப்படும் அல்லது திருப்பிச் செலுத்தப்படும்.
   • சிகிச்சைகளுக்கு மருத்துவமனையின் பரிந்துரைக்கப்பட்ட பேக்கேஜ் கட்டணங்களுக்கு‌ காப்பீட்டுத் தொகையிலிருந்து அதிகபட்சம் 80% தரப்படும்

   விலக்குகள்:

   • திட்டம் தொடங்கப்பட்ட 30 நாட்களுக்குள் புதிதாக பாதிக்கப்பட்ட நோய்க்கான செலவு இத்திட்டத்தின் கீழ் சேராது
   • பாலிசி தொடங்குவதற்கு முன்பிருந்த நோய்கள், பாலிசி தொடங்கி 3 வருடங்கள் வரை திட்டத்தின் கீழ் வராது
   • கண்ணாடிகள், காண்டாக்ட் லென்ஸ்கள் அல்லது செவிப்புலன் கருவிகள் அல்லது ஏதேனும் பல் சிகிச்சைக்கான செலவுகள் என மருத்துவமனையில் அனுமதிக்க அவசியமில்லாத பிரச்சினைகளுக்கான செலவுகள் இங்கு வராது
   • எந்த வெளிநோயாளர் சிகிச்சையும் திட்டத்தின் கீழ் வராது
   • வெளிப்புற மருத்துவ உபகரணங்களின் விலைக்கு இத்திட்டம் பொருந்தாது
   • ஆபத்தான விளையாட்டுகளினால் அல்லது செயல்பாடுகளினால் அல்லது தற்செயலாகவோ ஏற்படும் காயங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது
   • உடல் பருமன், ஹார்மோன் மாற்று சிகிச்சை, பாலின மாற்றம், மரபணு கோளாறுகள், ஸ்டெம் செல் பொருத்துதல் என்பதான மருத்துவ செலவுகள் இதில் சேராது
   • தனிப்பட்ட சௌகரியம் மற்றும் வசதிக்கான பொருட்களின் செலவுகள் திட்டத்தின் கீழ் வராது
   • இயற்கை மருத்துவம், அக்குபிரஷர் மற்றும் அது போன்ற சிகிச்சைகளுக்கான செலவுகள் இதில் வராது
  • இஃப்கோடோக்கியோதனிநபர்விபத்துக்காப்பீட்டுத்திட்டம்

   வாழ்க்கையில் எந்த நேரம் வேண்டுமானாலும் எந்த அசம்பாவிதம் வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக மருத்துவ தேவைகள் வரும்போது, ​​பெரும் செலவுகளுக்கு ஆயத்தமாக இருக்கவேண்டியதாக இருக்கிறது. இஃப்கோ டோக்கியோவின் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டமானது அதன் பல்வேறு திட்டங்களைப் போலவே, அதன் வாடிக்கையாளருக்கு சங்கடமான சூழலில் கைக்கொடுக்கிறது. புது நம்பிக்கையைக் கொடுக்கிறது.

   சிறப்பம்சங்கள்
   • தனிநபர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழுவிற்குக் இந்த திட்டம் பொருந்துகிறது
   • தற்செயலான நிகழ்வால் ஏற்படும் காயம் அல்லது இறப்புக்கு எதிரான பாதுகாப்பு வழங்குகிறது
   • மரணம் ஏற்பட்டால், காப்பீட்டாளரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்தத் திட்டம் நிதியுதவி வழங்கி உதவுகிறது.
   • விரல்கள்/கால்விரல்கள் அல்லது வேறு ஏதேனும் நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டால், இயலாமையின் தன்மையைப் பொறுத்து 5% முதல் 40% வரையிலான நிதியுதவி வழங்கப்படும்.
   • தற்காலிக முழு ஊனமுற்ற நிலைகளில் 1% காப்பீட்டுத் தொகை அல்லது ரூ. 6000/- , இதில் வாரத்திற்கு எது அதிகமோ அது செலுத்தப்படும்.
   • இறப்பு அல்லது கைகால்கள்/கண்கள் இழப்பு அல்லது காப்பீட்டாளரின் நிரந்தர முழு ஊனமுற்ற நிலை போன்ற சூழ்நிலைகளில் சார்ந்திருக்கும் குழந்தைகளின் கல்விக்கு இந்தத் திட்டம் உதவுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் வேலை இழப்புக்கும், இந்த திட்டம் நிதி உதவி வழங்கி உதவுகிறது.
   • விபத்து ஏற்பட்டால் ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்துவதற்கான செலவும் குறிப்பிட்ட வரம்பிற்குள் செலுத்தப்படும்.
   • விபத்தில் சேதமடைந்த ஆடைகளுக்கான இழப்பீடு, இறந்த உடலை எடுத்துச் செல்வதற்கான செலவுகள் போன்ற கூடுதல் நன்மைகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளன.
   • ஒவ்வொரு புதுப்பித்தலிலும் தனிநபர் மற்றும் குடும்பத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட தொகை தானாகவே உயர்த்தப்படும்.
   நன்மைகளின் அட்டவணை காப்பீட்டுத் தொகையின் %
   1. மரணம் 100
   2. a). பார்வை இழப்பு (இரு கண்களும்)
   b) இரண்டு கைகால் இழப்பு
   c) ஒரு மூட்டு மற்றும் ஒரு கண் இழப்பு
   100
   100
   100
   3. a) ஒரு கண்ணின் பார்வை இழப்பு
   b) ஒரு மூட்டு இழப்பு
   50
   50
   4. நிரந்தர முழு ஊனம் 100
   விலக்குகள்:
   • சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் மற்றும் தற்கொலை வழக்குகள் இத்திட்டத்தின் கீழ் வராது
   • பாலியல் நோய்,
   • போதைப்பொருளினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் காயங்கள்,
   • பிரசவம் தொடர்பான பிரச்சினைகள்,
   • எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது சிக்கல்கள்,
   • போர் மற்றும் அணு அபாயங்கள்,
   • விமானம், பலூனிங் போன்ற அபாயகரமான விளையாட்டுகளினால் ஏற்படும் மரணம் அல்லது விபத்து,
   • ஆயுதப்படை உறுப்பினர்களின் பிரச்சினைகள்

   என இவை எதுவும் இத்திட்டத்தின் கீழ் சேராது.

  குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ்:

  • இஃப்கோ டோக்கியோ ஃபேமிலி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி

   இந்த திட்டம் தனி நபரைத் தாண்டி மற்ற குடும்ப உறுப்பினர்களின் மருத்துவத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

   சிறப்பம்சங்கள்:
   • இந்தியாவில் செய்யப்படும் சிகிச்சைக்காக ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு மட்டுமே இது பொருந்தும்
   • 3 மாதங்கள் முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கு பொருந்தும்
   • விண்ணப்பதாரர்களுக்கு 45 வயது வரை மருத்துவ பரிசோதனை தேவையில்லை
   • 45 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் ப்ரேக் கவரேஜ் வழங்கப்பட்டவர்களுக்கும் இரத்த சர்க்கரை, சிறுநீர் மற்றும் இ.சி.ஜி ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவ பரிசோதனை அவசியம்.
   • 55 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, புதிய/பிரேக் கவரேஜுக்கு கூடுதல் சோதனைகள் (எல்.பி & கே.எஃப்.டி) கட்டாயம்
   • ஃபேமிலி பேக்கேஜ் திட்டத்தின் கீழ் சார்ந்திருக்கும் துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோரைச் சேர்ப்பதற்கான பிரீமியத்தில் தள்ளுபடி
   • சார்ந்திருக்கும் குழந்தைகள் 23 வயது வரை திருமணமாகாத நபர்களாகக் கருதப்படுவார்கள்.
   திட்டத்தின்கீழ்வரும்செலவுகள்:
   • அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 1.0% தினசரி அறை வாடகைக்கு வழங்கப்படுகிறது
   • ஐ.சி.யூ/ஐ.டி.யூ வாடகைக்கு 2.5% அடிப்படை காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது
   • மருத்துவமனையில் பதிவு கட்டணம், சேவைக் கட்டணங்கள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றிற்காகச் செய்யப்படும் செலவுகளுக்கு அடிப்படைக் காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சமாக 0.5% வழங்கப்படும்
   • மருத்துவரின் பரிந்துரையின் பேரில் செவிலியர்களை நியமிக்கும் செலவுகள் இதில் சேரும்
   • அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர், அல்லது வேறு ஏதேனும் ஆலோசனைச் செலவுகள் எல்லாம் இதற்கு கீழ் வரும்
   • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் தினசரி உதவித்தொகையாக அடிப்படை காப்பீட்டுத் தொகையிலிருந்து 0.1%, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 150‌ வழங்கப்படும்
   • ஆம்புலன்ஸ் கட்டணமாக அடிப்படை காப்பீட்டுத் தொகையிலிருந்து 1.0% அல்லது ரூ 750, எது அதிகமோ அது‌ வழங்கப்படும்
   • மருந்து, இரத்தம், ஆக்ஸிஜன், மயக்க மருந்து, நோயறிதல் சோதனைகள், ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், கீமோதெரபி, டயாலிசிஸ், செயற்கை மூட்டுகள் போன்றவற்றிற்கு ஆகும் செலவுகளும் இதில் அடங்கும்
   • தகுந்த காரணங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்குப் பதிலாக வீட்டிலேயே செய்யப்படும் எந்தவொரு சிகிச்சைக்கும், அடிப்படைக் காப்பீட்டுத் தொகையிலிருந்து அதிகபட்ச வரம்பு 20% உட்பட்டு வழங்கப்படும் அல்லது திருப்பி செலுத்தப் படும்.
   • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு ஏற்படும் செலவுகளை உள்ளடக்கிய மருத்துவமனைக்கு முன் மற்றும் பிந்தைய செலவுகள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், மொத்த மருத்துவமனை செலவில் 7% அல்லது ரூ. 7,500/- எது அதிகமோ அது வழங்கப்படும்.
   • சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்பட்ட பேக்கேஜ் கட்டணங்களுக்கான செலவுகள் திருப்பிச் செலுத்தப்படும்
   விலக்குகள்:
   • ஏற்கனவே இருக்கும் நோய்கள் பாலிசி தொடங்கி 4 ஆண்டுகள் வரை திட்டத்தின் கீழ் வராது
   • பாலிசி தொடங்கி 30 நாட்களுக்குள் புதிதாகத் வந்த நோய்கள்,
   • கண்ணாடிகள், காண்டாக்ட் லென்ஸ்கள் அல்லது காது கேட்கும் கருவிகள்,
   • எக்டோபிக் கர்ப்பம் தவிர கர்ப்பத்துடன் தொடர்புடைய மற்ற சிக்கல்கள் இதில் வராது
   • எந்த வெளிநோயாளர் சிகிச்சைகளும் வராது
   • வெளிப்புற மருத்துவ உபகரணங்களின் விலை
   • ஆபத்தான விளையாட்டு/செயல்பாடுகளில் பங்கேற்கும் போது ஏற்படும் தற்செயலான காயங்கள்
   • உடல் பருமன், ஹார்மோன் மாற்று சிகிச்சை, பாலின மாற்றம், மரபணு கோளாறுகள், ஸ்டெம் செல் பொருத்துதல் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றில் ஏற்படும் மருத்துவ செலவுகள்
   • தனிப்பட்ட சௌகரியம் மற்றும் வசதிக்கான பொருட்கள் என் இவையெல்லாம் இத்திட்டத்தின் கீழ் வராது
   • இயற்கை மருத்துவம், அக்குபிரஷர் போன்ற சிகிச்சைகளுக்கான செலவுகள்
   • எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் அது தொடர்புடைய சிக்கல்கள்
   • போர், பயங்கரவாதம் மற்றும் அணுசக்தி அபாயங்கள்
   • தனிப்பட்ட வசதிக்கான சேவைகள் உட்பட அனைத்து மருத்துவம் அல்லாத செலவுகள்.
   • உடல் பருமன் சிகிச்சை, ஹார்மோன் மாற்று சிகிச்சை, பாலின மாற்றம்.
   • மரபணு கோளாறுகள் ஸ்டெம் செல் பொருத்துதல் மற்றும் அறுவை சிகிச்சை.
   • இயற்கை மருத்துவம், அக்குபிரஷர், மற்றும் அது போன்ற மாற்று சிகிச்சைகள் ஆகியவற்றுக்கான செலவுகள்.
   • காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் இருக்கும் பட்சத்தில் க்ளெய்மின் முதல் 10 சதவிகிதமும் அவருக்கு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரண்டும் இருக்கும் பட்சத்தில் முதல் 25 சதவிகிதமும்

   என இவை எல்லாம் இத்திட்டத்தின் கீழ் பொருந்தாது

  • இஃப்கோ டோக்கியோகுரூப்கிரிட்டிகல்இல்னெஸ்ப்ளான்:

   சிறப்பம்சங்கள்:
   • இந்த திட்டம் தீவிர நோயின் போது ஏற்படும் அதிக செலவுகளை ஈடுகட்ட மேம்படுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டம்
   • காப்பீட்டுத் தொகையில் தினசரி கொடுக்கப்படும் அளவு 0.15% அல்லது ரூ. 1,000/-
   • ஆம்புலன்ஸ் கட்டணமாக அடிப்படை காப்பீட்டுத் தொகையிலிருந்து 0.75% அல்லது ரூ 2,500, எது குறைவோ அது‌ வழங்கப்படும்
   • மருத்துவமனையில் சேர்வதற்கு முன் 45 நாட்களும் சேர்ந்ததற்கு பின் 60 நாட்களுக்கு நர்சிங் மற்றும் பிற மருத்துவ செலவுகள்

   புற்றுநோய், முதல் மாரடைப்பு, ஓப்பன் செஸ்ட் சி.ஏ.பி.ஜி, ஓப்பன் ஹார்ட் மாற்று அல்லது இதய வால்வுகளை சரிசெய்தல், கோமா,‌ டயாலிசிஸ் தேவைப்படும் சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், முக்கிய உறுப்பு / எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, கைகால்களின் நிரந்தர முடக்கம், மோட்டார் நியூரான் நோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் முதலியவை தீவிரமான‌ மற்றும் கொடு நோய்களின் பட்டியலில் வருகிறது. இவை இத்திட்டத்தின் கீழ் வரும்.

   இத்திட்டத்தின்கீழ்வரும்செலவுகள்:
   • பதிவு/சேவைக் கட்டணங்கள் உட்பட மருத்துவமனைகளின் அறை வாடகை செலவுகள்
   • மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் சேர்க்கும் காலத்தின் போது தேவைப்படும் நர்சிங் செலவுகள்
   • அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர், மருத்துவப் பயிற்சியாளர், ஆலோசகர் மற்றும் இதர சிறப்புக் கட்டணங்களுக்கான செலவுகள்
   • மயக்க மருந்து, இரத்தம், ஆக்ஸிஜன், ஆபரேஷன் தியேட்டர், அறுவை சிகிச்சை உபகரணங்கள், மருந்துகள், எக்ஸ்ரே, டயாலிசிஸ், கீமோதெரபி, ரேடியோதெரபி, பேஸ்மேக்கர் செலவு, செயற்கை மூட்டுகள், உறுப்புகளின் செலவு மற்றும் இது போன்ற செலவுகள்
   • ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, சித்தா மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள் காப்பீட்டுத் தொகையின் வரம்பிற்கு ஏற்ப‌ வழங்கப்படும்

  இஃப்கோ டோக்கியோ மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்படுபவை:

  பொதுவாக நடைமுறையில் இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போல் இல்லாமல் இஃப்கோ டோக்கியோவின் காப்பீட்டுத் திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான கவரேஜை வழங்குகிறது. சாமானிய மக்களின் சிகிச்சைச் செலவுகளையும் அதிலிருக்கும் சிரமங்களையும் உண்மையிலேயே புரிந்து கொள்ளும் காப்பீட்டாளரால் இங்கு ஈடுசெய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்‌ கீழ்வரும் கவரேஜ் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது.

  • மருத்துவமனையில் சேர்க்கும் கட்டணம்‌- மருத்துவமனை அறை வாடகை, ஆலோசனைக் கட்டணங்கள், அறுவை சிகிச்சை முறைகள்
  • மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவ செலவுகள்
  • டான்சிலெக்டோமி, கண்புரை மற்றும் அது போன்ற பலவிதமான முன்-திட்டமிடப்பட்ட சிகிச்சைகளுக்கான‌ செலவுகள்
  • ஆய்வக சேவைகள் - சிகிச்சையின் போது தேவைப்படும் பல்வேறு சோதனைகள் மற்றும் எக்ஸ்ரே சேவைகள்
  • சிகிச்சையின் போது எடுத்துக்கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்
  • ஆயுஷ் - ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற மாற்று சிகிச்சைகள்
  • ஆம்புலன்ஸ் கட்டணம், மருத்துவமனை பயணங்களுக்கான கட்டணங்கள்
  • தீவிர நோய் - புற்றுநோய், பக்கவாதம், திறந்த இதய அறுவை சிகிச்சை, பெரிய தீக்காயங்கள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து நிதிப் பாதுகாப்பு.
  • என இன்னும் பல செலவுகளும் இதன் கீழ் அடங்கும்.

  இஃப்கோ டோக்கியோ மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாதவை:

  • ஒப்பனை சிகிச்சைகள் - தோற்றத்தை மேம்படுத்துவதற்கான மருத்துவ நடைமுறைகள்
  • ஏற்கனவே இருக்கும் மருத்துவ பிரச்சினைகள் 3 ஆண்டுகள் காத்திருப்பு காலத்திற்குப் பிறகுதான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் உள்ளடக்கப்படும்.
  • கர்ப்பம் தொடர்பான நிலைமைகள்
  • சுய தீங்கு அல்லது தற்கொலை முயற்சி காரணமாக ஏற்படும் காயங்கள்
  • போர், அணு வெடிப்பு காரணமாக ஏற்பட்ட காயங்கள்

  என‌ இவையாவும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராது. இன்னும் விவரமாக இன்சூரன்ஸ் ப்ளான்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

  இஃப்கோ டோக்கியோ மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை எப்படி க்ளெய்ம் செய்வது?

  இஃப்கோ டோக்கியோ மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை இரண்டு வழிகளில் க்ளெய்ம் செய்யலாம்.

  பணமில்லாஉரிமைகோரல்/ கேஷ்லெஸ்க்ளெய்ம்:

  இஃப்கோ டோக்கியோ நிறுவனத்துடன்‌ தொடர்புடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதானால் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்கவும். திடீரென முன்பே திட்டமிடப்படாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதானால், காப்பீட்டு நிறுவனத்திற்கு அவர்களின் கட்டணமில்லா வாடிக்கையாளர் உதவி எண் மூலம் தெரிவிக்கவும். நீங்கள் மருத்துவமனையில் புகைப்பட அடையாளச் சான்றுடன் உங்கள் ஹெல்த் கார்டைக் காட்ட வேண்டும். உங்கள் அடையாள விவரங்கள் அங்கு சரிபார்க்கப்படும். பின், காப்பீட்டு நிறுவனத்தின் டிபிஏ-க்கு உங்கள் கையொப்பத்துடன் கோரிக்கைப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டால், காப்பீட்டாளரின் டிபிஏ-லிருந்து மருத்துவமனைக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பப்படும். மருத்துவமனையில் கோரிக்கையை சரிபார்த்த பின்னர், உங்கள் பணமில்லா சிகிச்சை தொடங்கும். தேவையான ஆவணங்கள் கிடைத்த 24 மணி நேரத்திற்குள், பணமில்லா கோரிக்கைக்கான ஒப்புதல் அனுப்பப்படும்.

  திருப்பிச்செலுத்தப்படும்க்ளெய்ம்:

  இஃப்கோ டோக்கியோ நிறுவனத்துடன் தொடர்பில் இல்லாத மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டாலோ அல்லது தொடர்பில் இருக்கும் மருத்துவமனையில் பணமில்லா க்ளெய்ம் மறுக்கப்பட்டாலோ, மருத்துவக் கட்டணத்தை உங்கள் சொந்த காசு போட்டு நேரடியாகச் செலுத்த வேண்டியிருக்கும். அப்படி செய்தால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் பணத்தைத் திருப்பிக் கோரலாம். உங்கள் அருகிலுள்ள இஃப்கோ டோக்கியோ கிளையில் தேவையான மருத்துவ ஆவணங்களுடன் உரிமைகோரல் படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆவணங்கள் கிடைத்த 20 நாட்களுக்குள் சரிபார்க்கப்பட்டு காசோலை மூலம் உரிமைகோரல் தொகை திருப்பி வழங்கப்படும்.

  இஃப்கோ டோக்கியோ ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் பெறும் முறை

  இஃப்கோ டோக்கியோ காப்பீட்டை‌ ஆன்லைனில் பெறுவது மிகவும் சுலபம். இஃப்கோ டோக்கியோவின் வலைத்தளத்திற்கு செல்லவும். உங்கள் சுகாதாரத் தேவைகளைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கவும். அவர்கள் உங்களுக்கு சரியான திட்டத்தை பரிந்துரைப்பார்கள். வேண்டிய ஆட்-ஆன் பலன்களை சேர்த்துக் கொள்ளலாம். கவரேஜில் திருப்தி அடைந்த பின் கட்டணத்தைத் தொடரலாம்.

  இஃப்கோ டோக்கியோ ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் புதுப்பிக்கும் முறை

  இஃப்கோ டோக்கியோ நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டை சுலபமாக ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம். மருத்துவ காப்பீட்டுக் கொள்கையின் கவரேஜை நீட்டித்துக் கொள்ள எளிதான, விரைவான மற்றும் மிகவும் வசதியான வழி இது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்‌ ஒன்றே ஒன்றுதான். இஃப்கோ டோக்கியோ இணையதளத்திற்குச் சென்று, 'புதுப்பித்தல்' விருப்பத்தை கிளிக் செய்யவும். அதில் உங்கள் பாலிசியின் விவரங்களை உள்ளிட்டு, பணம் செலுத்தவும். உங்கள் மெடிக்ளைம் பாலிசியின் கவரேஜ் புதுப்பிக்கப்படும். பின் புதுப்பிக்கப்பட்ட பாலிசி ஆவணங்களைப் உங்கள் இன்பாக்ஸில் பெறுவீர்கள்.

  தொடர்பு கொள்ள:

  தொலைபேசி : 7993407777

  லேண்ட் லைன் : 1800-103-5499

  பயிர் காப்பீடு பற்றிய கேள்விகளுக்கு : 1800-103-5490

  ஆதரவு: support@iffcotokio.co.in

  book-home-visit
  இஃப்கோ டோக்கியோ மருத்துவ காப்பீட்டுத் திட்டம் Plans
  Individual Medishield Policy
  Family Health Insurance
  Health Protector Plus Policy
  Family Health Protector Policy
  Health Protector Policy
  Individual Personal Accident Policy
  Show More Plans
  Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
  Average Rating
  (Based on 27 Reviews)
   
  top
  Close
  Download the Policybazaar app
  to manage all your insurance needs.
  INSTALL