*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply
Who would you like to insure?
ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் பரவலான வகை வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மருத்துவக் காப்பீடு தீர்வுகளை அளிக்கிறது. ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் அதன் பரந்த வகை வாடிக்கையாளர்களின் காப்பீடடுத் தேவைகளை கட்டுப்படியாகக் கூடிய பிரீமியத்தில் பூர்த்தி செய்யும் விதத்தில் தனிப்பயனாக்கப்பட்டுள்ளன கவர்ச்சிகரமான சில நன்மைகளில் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கான கவரேஜ், டே கேர் மருத்துவ வழிமுறைகளுக்கான கவரேஜ், தனிநபர் விபத்து கவர், மருத்துவமனை ரொக்க நன்மை, தீவிர நோய்கள் மற்றும் புற்று நோய் கவரேஜ் ஆகியவை அடங்கும்.
ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடட் IRDA ஆல் முறைப்படுத்தப்படுகிறது. தன் வாடிக்கையாளர்களுக்கு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட எளிமைப்படுத்தப்பட்ட பொதுக் காப்பீடு சேவைகளை வழங்க, அது ABIBL என்ற துணை நிறுவனத்தைத் தொடங்கியது. டயக்னாஸ்டிக் மையங்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவை வழங்குபவர்களுடன் இந்த நிறுவனம் தொடர்புகள் வைத்திருக்கிறது. ஆதித்ய பிர்லாவின் செட்டில்மென்ட் விகிதமான 94% அதை வாடிக்கையாளர்களிடையே ஒரு விரும்பப்படும் தேர்வாக ஆக்குகிறது.
முக்கிய அம்சங்கள் | சிறப்பு அம்சங்கள் |
நெட்வொர்க் மருத்துவமனைகள் | 8200 |
செலவழிக்கப்பட்ட கிளைம் விகிதம் | 89.05 |
புதுப்பிக்கப்படக் கூடிய தன்மை | ஆயுட்காலம் முழுவதும் |
கிடைக்கக் கூடிய கூடுதல் ரைடர் நன்மை | கிடைக்கின்றன |
செட்டில் செய்யப்பட்ட கிளைம்கள் | 63000+ |
Some of the key features and benefits are listed as follows:
ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் இவை போன்ற பல்வேறு தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அம்சங்களைக் கொண்டிருக்கிறது:-
*எல்லா சேமிப்புகளும் IRDA ஆல் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின்படி வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்ட் விதிமுறைகளும், நிபந்தனைகளும் பொருந்தும்.
ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும் ஒட்டுமொத்த கவரேஜ் நன்மைகளை அளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஹைப்பர்டென்ஷன், டயாபிடீஸ் போன்ற நீண்ட கால நோய்கள், மூத்த குடிமக்கள்,தனிநபர் விபத்து மற்றும் தீவிர நோய்கள் ஆகியவற்றை கவர் செய்ய வெவ்வேறு மருத்துவக் காப்பீடு திட்டங்கள் உள்ளன. திட்டங்களின் பட்டியல்கள் இதோ. விவரங்கள் கீழே விளக்கப்பட்டிருக்கின்றன.
நடுத்தர வருமானம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கான ஒட்டுமொத்த திட்டம். பல காப்பீட்டுத் தொகை விருப்பத் தேர்வுகள் உள்ளன, உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். வழக்கமான ரொக்கமில்லா மற்றும் ரீஇம்பர்ஸ்மென்ட் நன்மைகளுடன், ஆரோக்கியம் வழங்கும் ரிடர்ன்ஸ், வெல்னெஸ் கோச் போன்ற மதிப்பக் கூட்டப்பட்ட நன்மைகளையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
அம்சங்கள் | ஸ்பெஸிஃபிகேஷன்கள் |
நுழைவு வயது | குறைந்தபட்சம்: 91 நாட்கள் அதிகபட்சம்: வயது வரம்பு எதுவும் இல்லை. |
பாலிசி காலம் | 1,2,3 ஆண்டுகள் |
கவரேஜ் | குடும்ப ஃப்ளோட்டர் கவரேஜ் 9 உறுப்பினர்கள் வரை |
காப்பீட்டுத் தொகை | ரூ. 10 லட்சம் வரை |
கூட்டப்பட்ட போனஸ் | கிளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 முதல் 100% வரை |
மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய செலவுகள் | மருத்துவமனையில் சேர்வதற்கு முன் 30 நாட்கள் வரை |
மருத்துவமனையிலிருந்து வெளிவந்ததற்குப் பிந்தைய செலவுகள் | டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதற்குப் பின் 60 நாட்கள் வரை |
சாலை ஆம்பலன்ஸ் செலவுகள் | நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏற்படும் உண்மையான செலவுகள் பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ரூ. 2,000 வரை |
அம்சங்களும், நன்மைகளும்:
இது ரூ. 2 கோடி வரை காப்பீட்டுத் தொகை கொண்ட ஒட்டுமொத்த மருத்துவக் காப்பீடு திட்டம் 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான பாலிசி காலத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இது தனிநபர் மற்றும் குடும்ப ஃப்ளோட்டர் திட்டமாகக் கிடைக்கிறது. வழக்கமான நன்மைகளைத் தவிர, ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் அளிக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட நன்மைகளையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
அம்சங்கள் | ஸ்பெஸிஃபிகேஷன்கள் |
நுழைவு வயது | குறைந்தபட்சம்: 91 நாட்கள் அதிகபட்சம்: வயது வரம்பு எதுவும் இல்லை. |
காப்பீட்டுத் தொகை | குறைந்தபட்சம்: ரூ. 2 லட்சம் அதிகபட்சம்: ரூ. 2 கோடி |
கவரேஜ் | குடும்ப ஃப்ளோட்டர் கவரேஜ் 9 உறுப்பினர்கள் வரை |
கோ-பேமென்ட் | பொருந்தாது |
கூட்டப்பட்ட போனஸ் | கிளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டுக்கும் 20% முதல் 100% வரை |
உடல்நலம் தேறல் நன்மை | SI இல் 1%, அல்லது அதிகபட்சமாக ரூ. 10,000 |
உடல் உறுப்பு தானம் வழங்கியவருக்கான செலவுகள் | கவர் செய்யப்படுகின்றன. |
காப்பீட்டுத் தொகையை மீண்டும் சேர்த்தல் | காப்பீட்டுத் தொகை தீர்ந்து போகாத கிளைம்களுக்கு தானாகவே திரும்பச் சேர்க்கப்படுதல் |
டே கேர் சிகிச்சை | குறிப்பிட்ட வழிமுறைகளுக்காகச் சேர்க்கப்படுகிறது |
வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறுதல் | SI வரம்பு வரை |
மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய செலவுகள் | மருத்துவமனையில் சேர்வதற்கு 60 நாட்கள் முன் |
மருத்துவமனையிலிருந்து வெளிவந்ததற்குப் பிந்தைய செலவுகள் | மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின் 180 நாட்கள். |
சாலை ஆம்பலன்ஸ் கவர் | நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏற்படும் உண்மையான செலவுகள் நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் மருத்துவமனைச் சிகிச்சைக்கு ரூ. 5,000 வரை. |
அம்சங்களும், நன்மைகளும்
விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது ஊனங்கள் போன்ற விரும்பத் தகாத அபாயங்களுக்கு எதிராகப் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் தனிநபர் விபத்து கவர் வாங்கலாம். விபத்தினால் ஏற்படும் மரணம், நிரந்தர பகுதி அல்லது முழுச் செயலிழப்புக்கு எதிராக தனிநபர் விபத்து கவர் வழங்குவதற்காக இந்த பாலிசி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான நன்மைகளைத் தவிர, கவரேஜை மேம்படுத்த தேர்ந்தெடுக்கக் கூடிய பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.
அம்சங்கள் | ஸ்பெஸிஃபிகேஷன்கள் |
விபத்தினால் ஏற்படும் மரணத்துக்கான கவர் | SI இல் 100% |
வயது நிபந்தனைகள் | 5-65 ஆண்டுகள் |
நிரந்தர/ மொத்தச் செயலிழப்பு | SI இல் 100% |
அனாதைக்கான நன்மை | SI இல் 100% அல்லது அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் |
கல்வி நன்மை (மொத்தத் தொகை) | உயிருடன் இருக்கும் குழந்தைக்க் SI இல் 10% |
அவசரகால ஆம்பலன்ஸ் கவர் | ரூ. 1,000 வரை |
நிரந்தர மொத்தச் செயலிழப்புகள் | செயலிழப்பின் தன்மையின் அடிப்படையில் SI இல் 100% வரை |
புதுப்பித்தல் நன்மை | வாகனம் அல்லது வீட்டைப் புதுப்பிக்க ரூ. 1 லட்சம் வரை. |
ஈமச் சடங்கு செலவுகள் | SI இல் 1% அல்லது அதிகபட்சம் ரூ. 50,000 |
கருணையினால் சென்று பார்ப்பதற்கான கவர் | சர்வதேசப் பயணம் - ரூ. 25,000 வரை உள்நாட்டுப் பயணம் - ரூ. 10,000 வரை |
தற்காலிக மொத்தச் செயலிழப்பு கவர் (விருப்பத் தேர்வான நன்மை) | 100 வாரங்கள் வரை வாரத்துக்கு ரூ. 50,000 வரை நன்மை |
கூட்டப்பட்ட போனஸ் | SI இல் ஆண்டுக்கு 5% முதல் 50% வரை |
விபத்தின் காரணமாக மருத்துவமனைச் சிகிச்சை (விருப்பத் தேர்வு) | SI இல் 1% அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் |
EMI பாதுகாப்பு கவர் (விருப்பத் தேர்வு) | பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி கடன்களுக்கான மாதாந்தரத் தவணைகள் |
கடன் பாதுகாப்பு கவர் (விருப்பத் தேர்வு) | கவர் செய்யப்படுகிறது. |
அம்சங்களும், நன்மைகளும்
ஆதித்ய பிர்லா ஆக்டிவ் செக்யூர் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு தீவிர நோயும் முதன்முறையாகக் கண்டறியப்படுவதைத் தொடர்ந்து ஒரு மொத்தத் தொகையை வழங்கும ஒரு தீவிர நோய்கள் காப்பீடு திட்டம். இந்தத் திட்டத்தில் பல வகைகளும், நெகிழ்வுத் தன்மை கொண்ட பல விருப்பத் தேர்வுகளும் உள்ளன. காப்பீடு பெற்ற நபர் உடனடியாக நன்மைகள் பெற வேண்டும் என்பதற்காக உயிரோடு இருக்கும் காலம் குறைவாக வைக்கப்பட்டிருக்கிறது. பாலிசிதாரருக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அவருக்குப் போதுமான பொருளாதார ஆதரவு இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த பாலிசி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அம்சங்கள் | ஸ்பெஸிஃபிகேஷன்கள் |
திட்டம் 1 | 20 நோய்கள் வரை கவரேஜ் . |
திட்டம் 2 | 50 நோய்கள் வரை கவரேஜ் . |
திட்டம் 3 | 64 நோய்கள் வரை கவரேஜ் . |
வெல்னெஸ் கோச் (விருப்பத் தேர்வான நன்மை) | ஃபிட்னெஸ், வாழ்க்கைமுறை மாற்றங்கள், ஊட்டச் சத்து ஆகியவை பற்றி வழிகாட்டல்கள் |
மருத்துவ இரண்டாவது (விருப்பத் தேர்வான நன்மை) | கவர் செய்யப்படுகிறது. |
அம்சங்களும், நன்மைகளும்
இந்த ஆக்டிவ் செக்யூர் மருத்துவமனை ரொக்க திட்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தில் தினசரி ரொக்க நன்மை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலிசியின் கீழ் நீங்கள் மருத்துவமனை சிகிச்சைச் செலவுகளை மட்டும்தான் செலுத்துவீர்கள், மருத்துவமனை சிகிச்சையின்போது பல மறைவான செலவுகளும் எழக் கூடும் என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
குணமாதல் நன்மை, உணவு, பயணம் உட்பட பல வகை செலவுகளை இந்த மருத்துவமனை ரொக்க நன்மை ஈடு செய்கிறது. இந்தத் திட்டத்தில் பல்வேறு விருப்பத் தேர்வுகள் உள்ளன, மருத்துவமனை சிகிச்சையின்போது ஏற்படும் தினசரி செலவுகளுக்கு ஈடு பெற இவற்றில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
அம்சங்கள் | ஸ்பெஸிஃபிகேஷன்கள் |
பெற்றோர் தங்குமிடம் கவர் | ரொக்க நன்மை ஒரு நாளைக்கு வழங்கப்படுகிறது. 12 வயதுக்குக் குறைவாக உள்ள குழந்தைகள் 72 மணி நேரத்துக்கு மேல் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றால், இது பொருந்தும். |
குணமாதல் நன்மை | 7 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும்போது பொருந்தும் |
ஐ சி யூ கவர் | ஒரு பாலிசி காலத்தில் அதிகபட்சம் 10 நாட்கள் வரை |
தினசரி ரொக்க நன்மை | நிபந்தனைக்குட்பட்டு (பாலிசி விதிமுறைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் உட்பட்டு) |
வெல்னெஸ் கோச் (விருப்பத் தேர்வு) | ஃபிட்னெஸ், வாழ்க்கைமுறை மாற்றங்கள், ஊட்டச் சத்து ஆகியவை பற்றி வழிகாட்டல்கள் |
கழிக்கக் கூடியது | 1 நாள் |
அம்சங்களும், நன்மைகளும்
ஆக்டிவ் செக்யூர் புற்றுநோய் திட்டம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது, வெவ்வேறு வகை மற்றும் நிலைகளில் உள்ள புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் விவரங்கள் கீழே விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளன:
அம்சங்கள் | ஸ்பெஸிஃபிகேஷன்கள் |
வயது நிபந்தனைகள் | 18 ஆண்டுகள் அதற்கும் மேல் |
உயிருடன் இருக்கும் காலம் | புற்றுநோய் முதலில் கண்டறியப்பட்ட பிறகு 7 நாட்கள் |
பே-அவுட் நன்மைகள் | ஒவ்வொரு கண்டறிதலுக்கும் SI இல் 50% முக்கியமான நிலை கண்டறிதலுக்கு 100% SI முற்றிய நிலை புற்றுநோய்க்கு SI இல் 150% |
கூட்டப்பட்ட போனஸ் | SI இல் 10% அல்லது அதிகபட்சம் 100% |
கூடுதல் பே-அவுட் | ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்ட புற்றுநோய்க்கு முதல் பே-அவுட் அளித்த பின்னும் புற்றுநோயின் முக்கிய நிலைக்கு பே-அவுட். |
வெல்னெஸ் கோச்சிங் | ஃபிட்னெஸ், வாழ்க்கைமுறை மாற்றங்கள், ஊட்டச் சத்து ஆகியவை பற்றி வழிகாட்டல்கள் |
அம்சங்களும், நன்மைகளும்
இந்த ஆக்டிவ் அஷ்யூர் டயமண்ட் திட்டம் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு கவரேஜை அளிக்கிறது. காப்பீட்டுத் தொகை விருப்பத் தேர்வு ரூ. 2 கோடி வரை செல்கிறது. ஒரு ஆண்டு பாலிசியையோ அல்லது 3-ஆண்டுத் திட்டத்தையோ நீங்கள் வாங்கலாம்.
அம்சங்கள் | ஸ்பெஸிஃபிகேஷன்கள் |
காப்பீட்டுத் தொகை (ரூ.) | ரூ. 2 கோடி வரை |
நுழைவு வயது | குறைந்தபட்சம்: 91 நாட்கள் அதிகபட்சம்: வயது வரம்பு இல்லை |
கிளைம் இல்லாததற்கான போனஸ் | SI இல் 10% அல்லது அதிகபட்சமாக 100% (ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டுக்கும்) |
டே கேர் சிகிச்சை | 586 வழிமுறைகள் வரை சேர்க்கப்பட்டுள்ளன. |
காப்பீட்டுத் தொகையைத் திரும்பச் சேர்த்தல் (விருப்பத் தேர்வான நன்மை) | பல கிளைம்களுக்குப் பிறகு SI பலமுறை திரும்பச் சேர்க்கப்படுதல் |
காப்பீட்டுத் தொகை திரும்பச் சேர்க்கப்படுதல் | 150% வரை அல்லது அதிகபட்சம் ரூ. 50 லட்சம் |
தினசரி ரொக்க நன்மை | ரூ. 4 லட்சம் SI வரை தினமும் ரூ. 500 (அதிகபட்சம் 5 நாட்கள்) |
சூப்பர் NCB (விருப்பத் தேர்வு) | ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டுக்கும் 50%, அதிகபட்சம் 500% க்கு உட்பட்டு |
உடல்நலப் பரிசோதனை வசதி | காப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீடு பெற்றவரின் வயதைப் பொருத்து ஆண்டுக்கு ஒருமுறை |
உடல் உறுப்பு தானம் செய்தவர் செலவுகள் | உடல் உறுப்புகள் தானம் செய்வது, பெறுவது இரண்டுக்கும் கவர் செய்யப்பட்டுள்ளது. |
அம்சங்களும், நன்மைகளும்
ஆதித்ய பிர்லா ஆக்டிவ் கேர் சீனியர் சிடிஸன் பிளான் 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான ஒரு மருத்துவக் காப்பீடு திட்டம். ஸ்டாண்டர்ட், கிளாஸிக், பிரீமியர் என்ற மூன்று வகைகளிலிருந்து விண்ணப்பதாரர் தேர்வு செய்யலாம். திட்டத்தின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
அம்சங்கள் | ஸ்பெஸிஃபிகேஷன்கள். |
காப்பீட்டுத் தொகை (ரூ.) | 3 - 25 லட்சம் |
திரும்பச் சேர்க்கப்படும் காப்பீட்டுத் தொகை | 50-100% |
வயது | 55 ஆண்டுகள் அதற்கும் மேல் |
கிளைம் இல்லாததற்கான போனஸ் | 10-50% |
அம்சங்களும், நன்மைகளும்
இது ஒரு வருடாந்தர க்ரூப் மருத்துவப் பாதுகாப்புத் திட்டம், வழக்கமாக பணியமர்த்துவோருக்கும் அவர்கள் ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும், பிற க்ரூப்களும், அசோஸியேஷன்களும் க்ரூப் ஹெல்த் காப்பீடு கவரேஜைத் தேர்ந்தெடுக்கலாம்.
அம்சங்களும், நன்மைகளும்
ஆதித்ய பிர்லா மருத்துவத் திட்டங்களை நீங்கள் பாலிசிபஜாரிலிருந்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளிலும் வாங்கலாம்:
கிளைம் செய்யும்போது, பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும்:
கிளைம் வழிமுறை பற்றிய எல்லா விவரங்களையும் நீங்கள் ஆதித்ய பிர்லாவின் ஹெல்த் இணையதளத்தில் காணலாம். கிளைம் இருக்கும்போது, காப்பீடு நிறுவனத்துக்கு உடனே தெரிவிக்க வேண்டியது முக்கியம். கிளைம் பற்றிய விவரங்களை அறிய அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை எண்ணைக் குறித்துக் கொள்ளவும். கிளைம் தாக்கல் செய்யும்போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லா ஆவணங்களையும், சான்றுகளையும் அளிக்க வேண்டும்.
எல்லா ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, காப்பீடு நிறுவனம் கிளைமைச் சரிபார்த்து, உங்கள் கிளைமை செட்டில் செய்யும் காப்பீடு நிறுவனத்தின் இணையதளத்துக்கு லாகின் செய்தும் உங்கள் கிளைம் நிலையை நீங்கள் அறியலாம்.
*எல்லா சேமிப்புகளும் IRDA ஆல் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின்படி வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்ட் விதிமுறைகளும், நிபந்தனைகளும் பொருந்தும்.
ஒரு மருத்துவக் காப்பீடு திட்டத்தை வாங்கும்போது, மருத்துவக் காப்பீட்டின் பிரீமியத்தை பாதிக்கும் விஷயங்கள் பற்றி நீங்கள் அறிய வேண்டியது முக்கியம்
பிரிமியத்தை ஆன்லைனில் ஆதித்ய பிர்லா மருத்துவக் காப்பீடு பிரீமியம் கால்குலேடரை பயன்படுத்தியும் நீங்கள் கணக்கிடலாம்
ஆதித்ய பிர்லா மருத்துவக் காப்பீட்டை வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
விடை: காயம், நோய் போன்ற எதிர்பாராத சந்தர்ப்பங்கள் முன்பே எச்சரிக்கை செய்து விட்டு வருவதில்லை. மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில்மிகச் சிறந்த மருத்துவக் காப்பீடு பாலிசியை போதுமான அளவு காப்பீட்டுத் தொகையுடன் வாங்க வேண்டியது முக்கியம். மெடிகேர் திட்டம் மருத்துவ அவசரநிலையின்போது பொருளாதார அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. செயலில் இருக்கும் ஒரு காப்பீடு பாலிசி இருந்தால், நீங்கள் பொருளாதாரப் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படுவதற்கு பதிலாக உங்கள் ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்த முடியும்.
விடை: மருத்துவக் காப்பீடு பிரீமியம்கள் கீழ்க்கண்ட காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன பின்வரும் ரிஸ்க்குகளை உறுதி செய்து கொண்டு, காப்பீடு நிறுவனம் உங்களுக்கான மருத்துவக் காப்பீடு பிரீமியத்தை கோட் செய்கிறது. இவற்றைப் பார்ப்போம்:
விடை: குடும்ப ஃப்ளோட்டர் திட்டத்தில் ஒரு பொதுவான காப்பீட்டுத் தொகை காப்பீடு பெற்ற எல்லா உறுப்பினர்களாலும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது. ஆனால், தனிநபர் ஹெல்த் திட்டத்தில், காப்பீட்டுத் தொகை காப்பீடு பெற்ற எல்லா நபர்களுக்கும் தனித்தனியே ஒதுக்கப்படுகிறது.
தனிநபர் திட்டங்களுக்கு குடும்ப ஃப்ளோட்டர் திட்டங்களை விடக் கட்டணம் சிறிது அதிகம் ஆனால் ஒரு காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க காப்பீட்டுத் தொகை மட்டுமே ஒரே அளவுக்குறியாக இருக்கக் கூடாது.
விடை: மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும்போது, பணம் செலுத்துவதைப் பற்றிக் கவலைப்படுவது கடைசி விஷயமாக இருக்க வேண்டுமென்றுதான் நீங்கள் விரும்புவீர்கள். உங்களுக்கு ரொக்கமில்லா மருத்துவமனை சிகிச்சை வசதி இருந்தால், பொருளாதார ஏற்பாடுகள் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டி இருக்காது. ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் இந்தத் தொகையைச் செலுத்தி விடும். மேலும், பணம் பற்றி நீங்கள் கவலைப்படவோ அவசரமாகப் பண ஏற்பாடு செய்யவோ வேண்டியதில்லை. நீங்கள் ஒரு மருத்துவக் காப்பீடு பாலிசி வாங்கினால், ரொக்கமில்லா பாலிசி வாங்குவது புத்திசாலித்தனமானது.
விடை: உங்கள் தற்போதைய பாலிசியை ஒரு காப்பீடு நிறுவனத்திலிருந்து இன்னொரு காப்பீடு நிறுவனத்துக்கு உங்களால் எளிதாக போர்ட் செய்ய முடியும் மேலும், காத்திருப்பு காலம், கிளைம் இல்லாததற்கான போனஸ் போன்ற உங்கள் கூட்டப்பட்ட மருத்துவக் காப்பீடு நன்மைகள் அப்படியே இருக்கும். உங்கள் தற்போதைய பாலிசியில் போதுமான கவர் இல்லை என்று உங்களுக்குத் தோன்றினால், சேர்ந்திருக்கும் நன்மைகளுடன் உங்களால் ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸுக்கு மாற முடியும்.
விடை: கிளைம் இல்லாததற்கான போனஸ் பாலிசிதாரருக்கு அளிக்கப்படுகிறது. கிளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டுக்கும் காப்பீடு பெற்ற நபருக்கு ஒரு தள்ளுபடி கிடைக்கும். கிளைம் இல்லாததற்கான போனஸ் ஒவ்வொரு ஆண்டு புதுப்பித்தலுக்கும் சேர்க்கப்படுகிறது.