*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply
Who would you like to insure?
நமது உலகத்தின் இன்றைய காலகட்டத்தில், மனிதர்களின் உடல்நலமானது முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களினால் பெரிதும் பாதிக்கப்படைந்து வருகிறது. மேலும் அதிகரித்துக்கொண்டே வரும் மருத்துவ செலவுகளினால் நாம் நமது உடல்நலத்திற்கு தனி கவனம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்த சூழலில், மனிதனின் பொருளாதார நிலையும் அத்தகு மேன்மை பொருந்திய உச்சியையும் இன்னும் எட்டி விடவில்லை.இவை அனைத்தையும் சமாளிக்க நமக்கு டிஜிட் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.
எந்த ஒரு உடல்நல குறைவும் நம்மிடம் முன்பே சொல்லிக்கொண்டு வருவது இல்லை. ஒவ்வொரு நோய் மற்றும் தீராத வியாதிகாளும் னமது வாழ்க்கை முறையின் விளைவாகவே உருவாகின்றன. நாம் நமது உணவு பழக்க வழக்கங்களை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டாலே, நமது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையும் மாற்றம் காணுகிறது. இருப்பினும், இன்றைய காலத்தின் மிக பெரிய கேள்விக்குறியாக விளங்கும் சுற்றுப்புற காரணிகளும் நமது வாழ்வில் ஒரு பெரும் பங்கு வகிக்கின்றது என்பது ஒரு துரதிஷ்டவகையான உண்மை ஆகும். இந்த நிலையில், எதிர்பாரத விதமாக திடீரென ஏற்படும் உடல்நல குறைவுகள் அல்லது திடீர் விபத்துகளின் விளைவாக ஏற்படும் உடல்நல பாதிப்புகள் நம்மை பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றன. இத்தகு சூழல்களில் இருந்து மீள மற்றும் சிறந்த முறையில் கையாள காப்பீட்டு திட்டங்காள் முக்கியமான ஒன்றாக திகழ்கின்றன. அதிலும், டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற சில சிறப்பான இன்சூரன்ஸ் திட்டங்கள் மிகவும் உதவிகரமாக அமையும். டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைவதன் மூலம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ திடீரென ஏற்படும் உடல்நல குறைவுகள் மற்றும் எதிர்பாராத விபத்துகளின் காரணமாக ஏற்படும் உடல்நல பாதிப்புகளின் போது பதற்றமின்றி தேவையான மருத்துவ உதவிகாளை சரியான நேரத்தில் பெறுவது எளிதாக அமைகின்றது.மேலும், இந்த வகையான திட்டங்கள் பொருளாதார ரீதியான நன்மைகளையும் பாலிசிதாரருக்கு பெற்று தருகின்றன.
சிறப்பம்சங்கள் | முக்கிய காரணிகள் |
தொடர்பில் உள்ள மருத்துவமனைகள் | 6400+ |
இன்கார்ட் க்ளைம் விகிதம் | 60% |
புதுப்பித்தல் காலம் | ஆயுள் முழுவதும் |
காத்திருக்கும் காலம் | 2 வருடங்கள் |
இந்த மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசியின் மூலம் நாம் அடையும் நன்மைகளை கீழே காண்போம்:
ஒவ்வொரு தனி நபர் மற்றும் குடும்பம் ஆகிய அனைத்து தர மக்களையும் அவர்களது நலனையும் நோக்கமாக கொண்டு, அவற்றின் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு, டிஜிட் ஹெல்த் இன்சுரன்ஸ் சில பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.அவை:
ஆகியவை ஆகும். அவற்றின் ஒவ்வொரு பண்புகளை பற்றியும் கீழே விரிவாக காண்பொம்:
டிஜிட் ஹெல்த் இன்சுரன்ஸ் என்பது ஒரு காம்ப்ரீஹென்சிவ் ஹெல்த் இன்சுரன்ஸ் வகையை சார்ந்த ஒரு திட்டம் ஆகும். இந்த் அதிட்டம் ஒரு தனி நபர் மற்றும் அவரது மொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும் அனைத்து வித மருத்துவ வசதிகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய அனைத்து சூழல்களிலும் தேவையான உதவிகளை மிக சரியான நேரத்தில் கிடைக்கும் படி செய்கின்றது.
இந்த திட்டம் தனி நபர் மற்றும் ஃப்லோட்டர் ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கி உள்ளது. ஓரே திட்டத்தின் மூலம் குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களையும் காக்க விரும்பும் அனைவருக்கும் இந்த திட்டம் ஏற்றது. இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகள் உண்டாக்கும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் நிறைய நன்மைகளை கொண்டு விளங்குகிறது. இந்த திட்டம் இரண்டு கூறுகளை கொண்டது. அவை- ஸ்மார்ட் மற்றும் கம்ஃபோர்ட் ஆகும்.
இந்த திட்டம் நோய்கள் ,விபத்துகளின் விளைவாக உண்டாகும் உடல்நல குறைவு மற்றும் கோவிட்-19 ஆகிய சூழல்காளில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறது.
ஒரு வேளை பாலிசிதாரர் தனது திட்டத்தின் மொத்த காப்புத்தொகைக்கும் க்லைம்களை செய்துவிட்டார் எனில், மீண்டும் பாலிசியின் காப்புத்தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.
கூடுதல் நன்மைகளாக, மகப்பேறு கால நன்மை, பிறந்த குழந்தைக்கான பாதுகாப்பு, மேலும் ஆயுஷ் ,சித்தா, ஹோமியோபதி போன்ற இதர சிகிச்சை முறைகளை ஊக்குவித்தல் மற்றும் கோவிட்-19 எனப்படும் கொரொனா நோய்க்கான சிகிச்சை போன்ற இதர சில பாதுகாப்புகளையும் கூடுதல் நன்மைகளாக உள்ளடக்கி உள்ளது.
டிஜிட் சூப்பர் டாப்- அப் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம் ஒரு சூப்பர் டாப் அப் பிரிவினை சார்ந்த திட்டம் ஆகும். இது இதர திட்டங்களை போலவே அனைத்து பாதுகாப்பு நன்மைகளையும் கொண்டு உள்ளது. இந்த திட்டம் மற்ற திட்டங்களின் ஒரு மேம்படுத்தப்பட்ட பிரிவு எனலாம். இந்த திட்டம் பாலிசிதாரர் தனது திட்டத்தின் மொத்த அடிப்படை காரணிகளையும் பயன்படுத்திவிடும் நிலையில் செயலுக்கு வருகின்றது.
பாலிசிதாரர் தனது டிஜிட் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தின் அடிப்படை காப்புத்தொகையை அவரது க்லைம்களின் மூலம் பயன்படுத்தி விட்டார் எனில், இந்த திட்டம் செயலுக்கு வருகின்றது. இந்த சூப்பர் டாப்-அப் திட்டத்தின் உதவியுடன் பாலிசிதாரர் பயன்படுத்திய தனது திட்ட நன்மைகளை புதுபித்துக் கொள்ளும் வசதி கிடைக்கின்றது. அதொடு நில்லாமல் கூடுதல் நன்மைகளையும் பெற முடிகின்றது.
இந்த திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் ஒரே ஒரு முறை மட்டும் ஒரு குறிப்பிட்ட்தொகையினை செலுத்தவேண்டி இருக்கும். அதன் பின் அவர் க்லைம்களை செய்து கொள்ளலாம். பாலிசிதாரர் தனது விருப்பத்தின் அடிப்படையில் அந்த தொகையை கீழ்க்கண்டவைகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். அவை முறையே, ரூ 1,2,3 லட்சங்கள் மற்றும் அவரது காப்பு தொகையின் அடிப்படையில் ரூ 10 லட்சத்தில் இருந்து ரூ20 லட்சத்திற்கும் இடையே ஏதேனும் ஒரு தொகையை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த திட்டம் ஒரே ஒரு க்லைம்மிற்கு மட்டும் உதவாமல், ஒட்டுமொத்த மருத்துவ செலவுகளுக்கான பாதுகாப்பினையும் வழங்கி இதர டாப்-அப் திட்டங்களில் இருந்து வேறுபட்டு விளங்குகிறது.
இந்த டிஜிட் ஹெல்த் சூப்பர் டாப்-அப் திட்டம் ஆனது வாடிக்கையாளரின் தேவையை பொருத்து இதர அம்சங்கள் மற்றும் கூடுதல் நன்மைகளையும் கொண்டு விளங்குகிறது.
டிஜிட் ஒபிடி ஹெல்த் இன்சுரன்ஸ் இந்த திட்டம் ஒபிடி வகையை சார்ந்த ஒரு திட்டம் ஆகும். இந்த டிஜிட் ஒபிடி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தின் மூலம், பாலிசிதாரர் மற்றும் பாலிசியில் இணைக்கப்பட்டு உள்ள அவரது மொத்த குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு சென்று எடுத்துக் கொள்ளும் அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான பாதுகாப்பு நன்மைகளை வழங்குகிறது.
இந்த டிஜிட் ஒபிடி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம் அனைத்து வித நோய்களுக்கும் தேவைப்படும் சிகிச்சையை பெறுவதற்கு என மருத்துவமனைக்கு செல்லும் சூழலுக்கு உதவும் வகையில் உண்டாக்கப்பட்டது. டிஜிட் ஒபிடி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டமான இது மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல், பரிசோதனை கட்டணம், அறுவை சிகிச்சை, மருத்துவ ரசீதுகள் பல் தொடர்பான சிகிச்சை முறைகள் என அனைத்து வகையான மருத்துவ நன்மைகளையும் உள்ளடக்கி உள்ளது.
இந்த டிஜிட் ஒபிடி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம் பாலிசிதாரர் விரும்பும் எந்த மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை பெறுவதை ஊக்குவிக்கிறது.மேலும், வருடாந்திர மருத்துவ ரீதியான உடல்நல பரிசோதனைகளை பெற்றுக்கொள்வதில் சலுகை வழங்கி உதவி செய்கிறது.
மற்றும், இந்த டிஜிட் ஒபிடி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம் மகப்பேறு கால நன்மை மற்றும் பிறந்த குழந்தைகாளுகான பாதுகாப்பு என சில இதர நன்மைகளை கூடுதல் அம்சங்களாக கொண்டு விளங்கி அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து உதவுகிறது.
ஒபிடி என்றால் அவுட் பேஷன்ட் டிப்பார்ட்மென்ட் என்பது ஆகும். இந்த டிஜிட் ஒபிடி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம் மருத்துவமனையின் அவுட் பேஷன்ட் டிப்பார்ட்மென்ட் உடன் தொடர்பு உடைய அனைத்து வித மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதை தனது நோக்கமாக கொண்டு உள்ளது.
டிஜிட் கார்ப்பரேட் ஹெல்த் இன்சுரன்ஸ் ஒரு க்ரூப் ஹெல்த் இன்சுரன்ஸ் வகையை சார்ந்த ஒரு திட்டம் ஆகும்.இந்த திட்டம் ஒரு தனி நபர் என்று தனது சேவைகளை நிறுத்திக் கொள்ளாது ஒரு நிறுவனத்தின் மொத்த வேலையாட்களுக்கும் உதவும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் ஒரு குறிப்பிட்ட அலுவலுகத்தில் பணி புரியும் ஒட்டுமொத்த வேலையாட்களுக்கும் அந்த நிறுவனத்தின் மூலம் அனைத்து வகையான் மருத்துவ நன்மைகளையும் வழங்கிகிறது.இதனால், வேலையாட்களின் உடல்நலத்தில் நிறுவனம் தனிக்கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கிறது.
இந்த டிஜிட் கார்ப்பரேட் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம் ஒரு மக்கள் குழுவிற்கு உதவுகிறது. இந்த டிஜிட் கார்ப்பரேட் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம் பெரிய அளவில் வேலை பார்ப்பவருக்கு நன்மையை தருகின்றது. ஏனெனில், அவர் எந்தவொரு பிரிமியம் தொகையையும் தனியாக கட்டாமல் அனைத்து வகையான மருத்துவ நன்மைகளையும் பொருளாதார உதவிகளையும் பெற முடிகிறது.
இந்த திட்டம் எந்த ஒரு நிறுவனத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளது. சிறிய முதல் பெரிய நிறுவனகளுக்கும் இந்த திட்டம் தனது சேவையை வழங்குகிறது. பத்து னபர் முதல் பத்தாயிரம் நபர் வரை எண்ணிக்கை கொண்ட எந்த நிறுவனமும் இந்த திட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தனது பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்.
ஒருவேளை, இந்த பெரிய நிறுவனம் மற்றும் சிறிய நிறுவனத்தின் பணியாளாக இருக்கும் டிஜிட் கார்ப்பரேட் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தின் பாலிசிதாரர் தனது மொத்த பாலிசியின் காப்பு தொகையினையும் க்லைம் செய்து பயன்படுத்தி விட்டார் எனில், மீண்டும் அவரது காப்பு தொகையை திரும்ப புதுபித்துக்கொள்ளும் வசதியை இந்த திட்டம் வழங்கி உதவுகிறது.
டிஜிட் ஆரோக்ய சஞ்சீவனி திட்டம் ஒரு ஸ்டான்டர்ட் ஹெல்த் இன்சுரஸ் வகையை சார்ந்த ஒரு திட்டம் ஆகும். இந்த டிஜிட் ஆரோக்ய சஞ்சீவனி திட்டம் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. குறைந்த பிரிமியம் தொகையில் அனைத்து வகையான மருத்துவ வசதிகள் மற்றும் பொருளாதார உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த டிஜிட் ஆரோக்ய சஞ்சீவனி திட்டம் அதிகபட்சமாக ஐந்து லட்சம் வரையிலான பாதுகாப்பினை தனது பாலிசிதாரருக்கு வழங்க முடியும்.
இந்த டிஜிட் ஆரோக்ய சஞ்சீவனி திட்டத்தை வாழ்நாள் முழுவதும் எப்பொழுது வேண்டுமானாலும், புதுப்பித்துகொள்ளும் வசதி கொண்டது.பாலிசிதாரர் தனது பிரிமியம் தொகையை சரியான முறையில் கட்டுகிறார் எனில், அவரது வாழ்க்கையின் எந்த ஒரு நிலையிலும் இந்த திட்டத்தை புதுப்பித்து பயன் பெறலாம்.
இந்த டிஜிட் ஆரோக்ய சஞ்சீவனி திட்டம் அதிகபட்சமாக 5% இணைந்து செலுத்தும் பணத்தின் அளவை வைத்து இருப்பது மிகவும் நன்மைக்கு உரியது ஆகும். ஏனெனில், மொத்த மருத்துவ செலவுகளின் 5% தொகையை மட்டுமே பாலிசிதாரர் தனது சொந்த பணத்தில் இருந்து செலவழிக்க வேண்டி இருக்கும். இது பெரும் அளவில் அவரை பொருளாதார ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாக்காது.
இந்த டிஜிட் ஆரோக்ய சஞ்சீவனி திட்டம் இரண்டு வகையான கூறுகளாஅக பிரிக்கப்பட்டு உள்ளது. அவை- தனிநபர் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம் மற்றும் ஃபேமிலி ஃப்லோட்டர் இன்சுரன்ஸ் திட்டம் ஆகியன ஆகும்.
இந்த டிஜிட் ஆரோக்ய சஞ்சீவனி திட்டம் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் இணைவதற்கு முந்தய 30 நாட்கள் மற்றும் மருத்துவம்னையில் இணைந்த பின்னர் 60 நாட்களுக்கும் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்து தந்து அதற்கான பொருளாதார உதவிகளையும் செய்து உதவி புரிகிறது.
இந்த திட்டம் பெரும்பாலும் அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைகளையும் உள்ளடக்கியது:
கீழ்கணட சில மிக முக்கிய நோய்களுக்கான செலவுகளை இன்சூரர் ஏற்றுக்கொள்வார் :
நீங்கள் அவுட் பேஷண்ட் நன்மைகளை தேர்வு செய்தீர்கள் எனில், மருத்துவமனையில் தங்கும் செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது:
கேஷ்லெஸ் ஹெல்த் இன்சுரன்ஸ் க்லைம்களை டிஜிட் ஹெல்த் நிறுவனத்தின் இணைப்பில் உள்ள எதேனும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொழுது விண்ணப்பிக்கலாம். மருத்துவமனையில் இணைந்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் டி பி ஏ விடம் க்லைம் ஐ பதிவு செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகளாவன:
இத்திட்டத்தின் வலை- இணைப்பில் இல்லாத மருத்துவமனைகளில் நீங்கள் சிகிச்சை பெறவேண்டிய சூழல்களில் இந்த வசதி உதவுகிறது. ரீஇம்பேர்ஸ்மென்ட் செயல்முறையின் மூலம் தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து நீங்கள் மருத்துவ செலவுகளுக்காக தொகையை இத்திட்டத்தில் க்ளைம் செய்யலாம்.
நீங்கள் உங்கள் இன்சூர்ர்க்கு ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் தெரியப்படுத்திய பின்பு உங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் அல்லது ஈமெயில் கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதன் மூலம் நீங்கள் உங்களது சிகிச்சைக்கான படிவங்கள் மற்றும் ரசீதுகள் ஆகியவற்றின் மூலபடிவங்களை உங்கள துவங்கி கணக்கின் விவரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் . உங்களது பரிந்துரை பரீசீலிக்கப்பட்டு உங்களது இந்த வங்கி கணக்கிற்கு பணம் திருப்பி அனுப்பப்படும்.
அனைத்து படிவங்களும் உங்களது கையெழுத்துடன் கூடிய தேதியுடன் ஸெல்ப் அட்டெஸ்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் ஒரிஜினல் படிவங்களையும்( ஒரு சில நேரங்களில் ) சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் .
உங்களது பரிந்துரை பரீசீலிக்கப்பட்டு உங்களது பரிந்துரைக்கப்பட்ட தொகையானது 30 வேலை நாட்களுக்குள் திருப்பி செலுத்தப்படும்.
க்ளைம் பதிவு செய்வது சில நேரங்களில் மிகவும் நேரம் விரயமாகும் ஒரு நிகழ்வாக அமைய வாய்ப்புள்ளது. அனைத்து ஆவணங்களையும் முன்னரே சமர்பிப்பதன் மூலம் நாம் அதை தவிர்க்கலாம்.தேவையான ஆவணங்கள் திட்டத்திற்கு திட்டம் வேறுபடும். டிஜிட் ஹெல்த் பிளஸ் பாலிஸியில் நிலைமைக்கு ஏற்ற வகையில் கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவையாவன:
டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குவதற்கு நாம் பாலிசிபஜார் இன்சூரன்ஸ் ப்ரோக்கர் பிரைவேட் லிமிட்டட் எனும் அதன் துணை நிறுவனத்தின் உதவியுடன் பாலிசிபஜாரின் இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
மருத்துவ நன்மைகளை நீங்களும் உங்களது குடும்பத்தினரும் தொடர்ந்து பெறவெண்டுமெனில், நீங்கள் திட்டத்தை புதுபித்தல் அவசியமாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் டிஜிட் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தினை புதுப்பித்துக் கொள்ளலாம்.