*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply
Who would you like to insure?
லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது லிபெர்ட்டி ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் கம்பெனியின் திட்டமாகும். இந்த திட்டம் அதிக பாதுகாப்புகளை கொண்டு விளங்குகிறது. இந்த திட்டத்துடன் தொடர்பில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், எல்லா மக்களுக்கும் மருத்துவ வசதிகள் சிறப்பான முறையில் எளிதில் கிடைக்கும்படி செய்கிறது. இந்த திட்டம், வெவ்வேறு பிரிமியம் தொகையை உடைய திட்டங்களை கொண்டுள்ளாதால், வாடிக்கையாளர்கள் அவரது தெவை மற்றும் நிதி நிலைக்கு ஏற்ப திட்டங்களை தேர்வு செய்து இணைந்து பயன் பெறும் வகையில் இது வகுக்கப்படுள்ளது.
லிபெர்ட்டி ஜெனெரல் இன்சூரன்ஸ் கம்பெனி 2013 ஆம் ஆண்டில் , அமெரிக்காவில் உள்ள லிபெர்ட்டி ம்யூச்சுவல் இன்சூரன்ஸ் குழுமம், டி பி ஜிண்டால் குழுமம் மற்றும் ஏனாம் செக்கியூரிட்டிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து துவக்கப்பட்ட ஒன்றாகும்.இது மக்களுக்கு தங்களது எல்லா இன்சூரன்ஸ் திட்டங்களின் வழியாக தேவையான மருத்துவ பாதுகாப்புகளை விரிவான முறையில் வழங்குவதையே தனது பெரும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி ஹெல்த் இன்சூரன்ஸ் , கார் இன்சூரன்ஸ், இருசக்கர வாகன இன்சூரன்ஸ் போன்ற பல வகையான இன்சுரன்ஸ் திட்டங்களை மக்களுக்கு உதவும் வகையில் வழங்குகிறது. இந்த நிறுவனம் ஏறக்குறைய 1200 வேலையாட்களுடன் 95 நகரங்களில் 110 அலுவலகங்களை கொண்டு மக்களுக்கு உதவி வருகிறது. 2019-2020 ஆம் ஆண்டு கணக்கின் படி இந்த கம்பெனியின் க்ளைம் விகிதம் 94% இருந்து வருகிறது என்பது மிகவும் பெருமைக்கு உரியது ஆகும். லிபெர்டி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டங்கள் தற்பொழுது கொரொனா வைரஸ் தொற்றிற்கும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கி உதவி மக்களின் நலனை ஊக்குவிக்கிறது.
சிறப்பம்சங்கள் | முக்கிய காரணிகள் |
தொடர்பில் உள்ள மருத்துவமனைகள் | 5000+ |
இன்கார்ட் க்ளைம் விகிதம் | 87.78% |
புதுப்பித்தல் காலம் | ஆயுள் முழுவதும் |
காத்திருக்கும் காலம் | 2/3/4 வருடங்கள் |
இணைப்பில் உள்ள மருத்துவமனைகள்: லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்திய நாட்டில் 3000 க்கும் அதிகமான மருத்துவமனைகளுடன் தங்களது இணைப்பை கொண்டு செயல்பட்டு வருகின்றன என்பது மிகவும் முக்கியமாக நமது கருத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இந்த மருத்துவமனைகளில் பாலிசிதாரர் அவரது சிகிச்சைக்காக பணமின்றி எல்லா மருத்துவ உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. இந்த மருத்துவமனைகள் எவை எவை என்று தெரிந்து கொள்ள நிறுவனத்தின் இணையதளத்தை அணுகலாம். அங்கு இந்த மருத்துவமனைகளின் பட்டியல் இருக்கும் அதில், உங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையை தேர்வு செய்து பயன் பெறலாம்.
லிபெர்ட்டி இன்சூரன்ஸ் திட்டங்கள் : லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் ஆனது ஒரு தனி நபரின் தேவையை அடிப்படையாக அமைத்து அவருக்கு உதவும் வகையில் ஐந்து வகையான திட்டங்களை வகுத்து உள்ளது. இவை ஒவ்வொன்றும் தனித் தனி தன்மைகளுடன் வேறுபட்டு விளங்குகின்றன.பாலிசிதாரர் தனது தேவை மற்றும் நிதி நிலையை பொறுத்து திட்டத்தை டெஹ்ரவு செய்து இணைந்து பயன் பெறலாம்.
ஆன்லைன் வசதிகள் : லிபெர்ட்டி நிறுவனத்தின் சில திட்டங்களில் ஆன்லைன் மூலம் இணைந்து கொள்ழும் வசதி உள்ளது. மேலும் பெரும்பாலான திட்டங்களை ஆன்லைனில் புதுப்பிக்கவும் இயலும். இதற்கு பாலிசிதாரர் லிபெர்ட்டி நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தக்க விவரங்களை பதிவு செய்ய வேண்டி இருக்கும். ஆன்லைனில் புதுப்பிப்பதற்கு பாலிசிதாரர் அவரது பாலிசி எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய பாலிசி விவரங்களை உள்ளீடு செய்து தேவையான விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
கூடுதல் நன்மைகள்: லிபெர்ட்டி நிறுவனம் மிகவும் அதிகபட்ச க்ளைம் விகிதம் கொண்டு விளங்குகிறது. அதிகபட்சமாக 2015-16 இல் 106.02% க்ளைம் விகிதம் பெற்ற பெருமை உடையது இந்த நிறுவனம் ஆகும்.மேலும், இந்த திட்டத்தில் இணைந்துள்ள பாலிசிதாரர்கள் அவர்கள் காட்டும் பிரிமியம் தொகைக்கு வருமான வரி சட்டம் 1961, பிரிவு 80D கீழ் வரி விளக்கு வசதி பெற முடியும்.
மக்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறைய திட்டங்களை கொண்டுள்ளது.அவற்றை விரிவாக காண்போம்:
லிபெர்டி ஹெல்த் கனக்ட் திட்டமானது தனிநபர் மற்றும் குடும்பத்தினருக்கும் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் குறைந்த விலையில் சில சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அவை, கூடுதல் மருத்துவ ஆலோசனை பெறுதல், காப்பு தொகை புணரமைத்தல், பராமரிப்பு மற்றும் ரெக்கவரி சலுகைகள் ஆகும்.
திட்ட காரணிகள் | ஈ கனக்ட், பேசிக், எலைட் , சுப்ரீம் |
பாதுகாப்பின் வகை | தனிநபர்/ ப்ளோடர் |
காப்பு தொகை | Rs 2 - 15 லட்சம் |
வயது வரம்பு | 18 வயது - 91 நாட்கள் (குழந்தை ) |
பாலிசிக்கு முன் உடல்நல சோதனை | 55 வயது வரை உள்ளவர்களுக்கு இல்லை |
பாலிசி காலம் | 1/ 2 வருடம் |
இணைந்து செலவழித்தல் | இந்த வசதி இல்லை |
லிபெர்ட்டி ஹெல்த் கனக்ட் சுப்ரா திட்டமானது, காப்பு தொகை தீர்ந்த பின்னரும் மருத்துவ உதவிகளை க்ளைம் செய்து பெறும் வசதி கொண்டு உள்ளது. ஆனால், அந்த வகையில் கோரப்படும் ஒவ்வொரு க்ளைம்மிற்க்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இதன் சிறப்பு கூறுகளான காப்பு தொகை மீண்டும் புதுப்பித்தல்,உலகளாவிய பாதுகாப்பு, வருமுன் காக்கும் முறைகள் ஆகியவற்றை நமது தேவைக்கு ஏற்ப திட்டத்தில் சேர்த்து பயன் பெறலாம்.
திட்ட காரணிகள் | டாப் அப் , சூப்பர் டாப் அப் |
பாதுகாப்பின் வகை | தனிநபர்/ ப்ளோடர் |
காப்பு தொகை | Rs 3 லட்சம் - 1 கோடி |
வயது வரம்பு | 18 வயது - 91 நாட்கள் (குழந்தை ) |
பாலிசிக்கு முன் உடல்நல சோதனை | 65 வயது வரை உள்ளவர்களுக்கு இல்லை |
பாலிசி காலம் | 1/ 2 /3 வருடம் |
பிடித்தம் செய்யப்படும் தொகை | 40 லட்சம் வரை |
லிபெர்ட்டி செக்யூர் ஹெல்த் கனக்ட் திட்டம் பாலிசிதாரரின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குகிறது.இத்திட்டத்தின் இதர நன்மைகளான, காப்பு தொகை புதுப்பித்தல், போனஸ் வசதி, க்ளைம் கண்டிப்பாக கிடைக்கும் உறுதி, ஆரோக்கியமாக இருத்தலுக்கான ஊக்குவித்தல் போன்றவை மிகவும் சிறப்பான முறையில் செயல் திறன் உடையவை.மேலும் இத்திட்டத்தில் பிரிமியம் தொகையை தனித்தனி தவணைகளாக பிரித்து கட்டலாம்.
திட்ட காரணிகள் | பேசிக், எலைட்,சுப்ரீம் |
பாதுகாப்பின் வகை | தனிநபர்/ ப்ளோடர் |
காப்பு தொகை | Rs 2 - 15 லட்சம் |
வயது வரம்பு | 18 வயது - 91 நாட்கள் (குழந்தை ) |
பாலிசிக்கு முன் உடல்நல சோதனை | 55 வயது வரை உள்ளவர்களுக்கு இல்லை |
பாலிசி காலம் | 1/ 2 /3 வருடம் |
இணைந்து செலவழித்தல் | 60 வயதிற்கும் மேற்பட்ட மற்றும் இணைப்பினுள் இல்லாத மருத்துவமனைகளில் 10% வரை செலுத்தும் வசதி |
லிபெர்ட்டி இண்டிவிஜூல் பெர்சனல் ஆக்ஸிடெண்ட் திட்டம், எதிர்பாரத நேரங்களில் விபத்து நேர்தலின் விளைவாக ஏற்படும் மருத்துவ தேவைகளுக்கு நிதி உதவி செய்து உதவுகிறது. மேலும், விபத்துகளினால் ஏற்படும் விளைவுகளான உடலுறுப்பு செயல் இழத்தல் எனப்படும் டிஸ்எபிலிட்டி மற்றும் எதிர்பாராத இறப்பு ஆகியவற்றிற்கு இழப்பீடு தந்து உதவுகிறது. அதோடு மட்டுமன்றி, விபத்துகளின் காரணமாக, திடீரென பணிக்கு செல்லாமல் இருப்பதன் விளைவாக ஏற்படும் வருமான முடக்கத்திற்கும் இழப்பீடு வழங்கி நிதி பாதுகாப்பு அளித்து உதவுகிறது.
பாதுகாப்பின் வகை | தனிநபர்/ ப்ளோடர் |
காப்பு தொகை | Rs 1 லட்சம் – 1 கோடி |
வயது வரம்பு | 18 வயது - 5 வயது (குழந்தை ) |
பாலிசி காலம் | 1/ 2 /3 வருடம் |
லிபெர்ட்டி ஜண்டா பெர்சனல் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் திட்டம் எதிர்பாராத விபத்துகளினால் ஏற்படும் திடீர் இறப்புகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு என்றே தனித்துவமான பாதுகாப்பு நன்மைகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் விபத்தின் விளைவாக ஏற்படும் பாலிசிதாரரின் இறப்பிற்கு பின், காப்பீட்டாளரின் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவி செய்கிறது. இந்த திட்டம் கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பின் வகை | தனிநபர் |
வயது வரம்பு | 18 வயது - 5 வயது (குழந்தை ) |
பாலிசி காலம் | 1 வருடம் |
லிபெர்ட்டி ஹாஸ்பி - கேஷ் கனக்ட் திட்டம் விபத்து மற்றும் நோய்களினால் மருத்துவமனையில் தங்கும்பொழுது ஏற்படும் நிதி நெருக்கடிகளுக்கு உதவுவதுடன், 30 நாட்களுக்கு தின செலவுகளாக குறிப்பிட்ட தொகையை தருகிறது. இந்த திட்டம் நிறைய நன்மைகளை கொண்டுள்ளதால், நமது தேவைக்கு ஏற்ப நாம் அதை தேர்வு செய்து கொள்ளும் வசதியை வழங்குகின்றது.
திட்ட காரணிகள் | ஷுயர், ஷுயர் ஆப்டிமா, ஷுயர் அல்டிமா,ஷுயர் சுப்ரீம், ஷுயர் எக்ஸல் |
பாதுகாப்பின் வகை | தனிநபர்/ குடும்பம் |
காப்பு தொகை | Rs 2 - 10 லட்சம் |
வயது வரம்பு | 18 வயது - 91 நாட்கள் (குழந்தை ) |
பாலிசிக்கு முன் உடல்நல சோதனை | மருத்துவ தேவைகள் உள்ள நபருக்கு மட்டும் |
பாலிசி காலம் | 1/ 2 /3 வருடம் |
லிபெர்ட்டி க்ரிட்டிக்கல் கனக்ட் திட்டம் காப்பீட்டாளரின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வசதி உடன் உள்ளது. இது தீவிர நோய்களுக்கு உரிய பாதுகாப்பு தேவைகளை வழங்குகிறது. இத்திட்டத்தின் வரம்புக்குள் வரும் தீவிர நோய்களுடன் மட்டுமன்றி ஹெச் ஐ வி / எய்ட்ஸ் க்கும் தேவையான பாதுகாப்பு நன்மை மற்றும் நிதி உதவி அளிக்கிறது. இது ஹெல்த் 360 எனும் சிறப்பம்சத்தை கொண்டுள்ளது. இந்த அம்சமானது, டிலைட் ஹெல்த்கேர், கன்சீர்ஜ் ஹெல்த்கேர், டெடிகேட்டட் மெடிக்கல் ப்ரொபஷனல் மற்றும் வெல்னஸ் ரிவார்டு போன்ற காரணிகளை கொண்டது.
திட்ட காரணிகள் | பிளான் A, பிளான் B |
பாதுகாப்பின் வகை | தனிநபர்/ ப்ளோடர் |
காப்பு தொகை | Rs 1 லட்சம் - 1 கோடி |
வயது வரம்பு | 18 வயது - 5 வயது(குழந்தை ) |
பாலிசி காலம் | 1/ 2 /3 வருடம் |
இணைந்து செலவழித்தல் | இதில் இல்லை |
லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் : ஆரோக்யா சஞ்சீவனி திட்டம் மருத்துவ ரீதியான அனைத்து வகையான செலவுகளுக்கும் பெருவாரியான மருத்துவ மற்றும் பொருளாதார நன்மைகளை நிரந்தரமாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளின் கீழ் ஓரல் தெரபி, கீமோதெரபி, டீப் பிரைன் ஸ்டிமுலேஷன், ஸ்டெம் செல் தெரபி போன்ற பல நவீன மருத்துவ உதவிகளை பெறுவதும் அடங்கும்.
பாதுகாப்பின் வகை | தனிநபர்/ ப்ளோடர் |
காப்பு தொகை | Rs 1 லட்சம் - 5 லட்சம் |
வயது வரம்பு | 18 வயது - 91 நாட்கள் (குழந்தை ) |
பாலிசிக்கு முன் உடல்நல பரிசோதனை | 45 வயது வரை இல்லை |
பாலிசி காலம் | 1 வருடம் |
இணைந்து செலவழித்தல் | அனைத்து க்ளைம்களிலும் 5% |
லிபெர்ட்டி ஹெல்த் ப்ரைம் கனக்ட் திட்டத்தில் இணைவதன் மூலம் பலவித நோய்கள் மற்றும் மருத்துவ செலவுகளுக்கு பாதுகாப்பு செய்யமுடியும். இதில், விலங்குக்கடி தடுப்பூசி, லேசர் கண் அறுவை சிகிச்சை, மகப்பேறு கால மருத்துவ செலவுகள், ஒபிசிட்டி சிகிச்சை, கருத்தரிப்பு சிகிச்சை ஆகியவை அடங்கும்.
திட்ட காரணிகள் | எசன்ஷியல், ஆப்டிமம், ஆப்டிமம் ப்ளஸ் |
பாதுகாப்பின் வகை | தனிநபர்/ ப்ளோடர் |
காப்பு தொகை | Rs 10 லட்சம் - 1 கோடி |
வயது வரம்பு | 18 வயது - 91 நாட்கள் (குழந்தை ) |
பாலிசி காலம் | 1/ 2 வருடம் |
இணைந்து செலவழித்தல் | இதில் இல்லை |
லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் : கொரோனா கவஷ் திட்டம் கோவிட் 19 சிகிச்சைக்கான மருத்துவ நன்மைகளை பெறுவதற்காகவே தனித்துவமான தன்மைகளுடன் உருவாக்கப்பட்டது. இதில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்குதல், வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறுதல், மற்றும் கொரொனா நோய்க்கான அடிப்படை தேவைகளான பி பி ஈ, கிட், மாஸ்க்,ஆக்சிஜன் ஆகிய காரணிகள் மற்றும் உட்கொள்ளப்படும் மருந்துகளுக்கான செலவுகளையும் உள்ளடக்கி உள்ளது.
பாதுகாப்பின் வகை | தனிநபர்/ ப்ளோடர் |
காப்பு தொகை | Rs 50,000 - 5 லட்சம் |
வயது வரம்பு | 18 வயது - 1 நாள் (குழந்தை ) |
பாலிசி காலம் | 3.5 மாதங்கள், 6.5 மாதங்கள், 9.5 மாதங்கள் |
லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ்: கொரோனா ரக்ஷக் திட்டம் எனப்படும் இந்த திட்டம் ஏதேனும் ஒரு அரசாங்க அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் பெற்ற பரிசோதனைக்கூடத்தில் கொரோனா கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர் அதற்காக 72 மணி நேரத்திற்கும் மேல் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும் சூழல் ஏற்படின் இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து நன்மைகள் மற்றும் உதவிகளும் செயலுக்கு வரும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை மருத்துவ சிகிச்சைக்காக உதவித்தொகயாக பெற்றுக் கொள்ளலாம்.
பாதுகாப்பின் வகை | தனிநபர் |
காப்பு தொகை | Rs 50,000 – 2.5 லட்சம் |
வயது வரம்பு | 18 வயது |
பாலிசி காலம் | 3.5 மாதங்கள், 6.5 மாதங்கள், 9.5 மாதங்கள் |
லிபெர்ட்டி செக்யூர் பியூச்சர் கனக்ட் திட்டமானது மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழலை உருவாக்காத பல நோய்களுக்கு எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கு தேவையான நன்மைகளை வழங்கி பாதுகாப்பு வழங்குகிறது. வாடிக்கையாளரின் திட்டத்தின் பாலிசி காலத்தின் போது வரும் நோய்கள் இந்த திட்டத்தின் பட்டியலில் உள்ள 25 தீவிர நோய்களுக்குள் இருப்பின், தேவையான மருத்துவ மற்றும் பொருளாதார பாதுகாப்பு வழங்கி உதவுகிறது. எதிர்பாராத விபத்துகளுக்கான பாதுகாப்பு, நோய்களுக்கான பாதுகாப்பு மற்றும் விருப்பமற்ற வேலை ஒய்வு போன்ற சூழல்களில் தேவையான நிதி நன்மைகளை அளிப்பதையும் இதர கூடுதல் நன்மைகளாக இந்த திட்டத்திற்குள் உள்ளடக்கி உதவி வருகின்றது.
பாதுகாப்பின் வகை | தனிநபர் |
வயது வரம்பு | 18 வயது |
பாலிசி காலம் | 1/ 2/ 3 வருடங்கள் |
லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ்: சரல் சுரக்ஷா பீமா என பெயர் இடபட்ட இந்த திட்டமானது எதிர்பாராத விபத்துகளினால் விளைவாக ஏற்படும் நீரந்தர உடலுறுப்பு இயலாமை எனப்படும் பெர்மெனன்ட் டிஸ்எபிலிட்டி மற்றும் உயிரிழப்பு ஆகிய திடீரென ஏற்படும் துயர சூழல்களில் தேவையான மருத்துவ வசதிகள், நிதி நன்மைகள் மற்றும் உதவி தொகைகள், மானியம் மற்றும் இழப்பீடு வழங்கி உதவுகிறது. இந்த திட்டத்தின் இதர கூடுதல் நன்மைகளாக, நிரந்தரமற்ற உடலுறுப்பு இயலாமை, கல்வி உதவி மற்றும் திடீர் மருத்துவ செலவுகள் போன்றவற்றிற்கான மருத்துவ பாதுகாப்பு மற்றும் பொருளாதார நன்மைகளை தனது திட்டங்களுக்குள் கொண்டு விளங்குகிறது.
பாதுகாப்பின் வகை | தனிநபர் |
காப்பு தொகை | Rs 10 லட்சம் - 1 கோடி |
வயது வரம்பு | 18 வயது |
பாலிசி காலம் | 1 வருடம் |
இணைந்து செலவழித்தல் | இதில் இல்லை |
ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமும் பெரும்பாலான சூழல்களுக்கு தங்களது உதவியை அளிப்பதற்காக வகுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த திட்டங்கள் தீவிர நோய்களான கேன்சர், எய்ட்ஸ் போன்றவைகளுக்கும் மருத்துவ வசதிகள் பெற்று தருகின்றன. இவை தவிர கீழே கொடுக்கப்பட்டுள்ள வேறு சில சொஸ்ழல்களுக்கும் இந்த திட்டங்கள் பாதுகாப்பு நன்மைகள் அளிக்கின்றன. அவை:
மருத்துவமனையில் தங்கி இருத்தல் : ஒரு சில தருணங்களில் நோயினால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் சூழல் உருவாகலாம். அத்தகு நேரங்களில் பாதிக்கப்பட்டவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான நிதி நன்மைகள் வழங்குவதில் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் மிகவும் உதவிகரமாக அமைகின்றன.
மருத்துவமனையில் இணைவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவ செலவுகள்: ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இணைவதற்கு முன்பு எடுத்து கொள்ளப்படும் மருத்துவ உதவிகள் அமரும் அவற்றிற்கான செலவுகள் ஆகியவற்றிற்கும் உதவி அளிக்கின்றன. தவிரவும், நோயின் தீவிரத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழல்களில் மருத்துவமனையில் சேர்ந்த பின்பு ஏற்படும் அனைத்து வகையான மருத்துவ உதவிகள், பரிசோதனைகள் ஆகியவற்றிற்கான செலவுகளுக்கு நன்மைகளை திட்டங்களின் வரம்புகளுக்கு உட்பட்டு வழங்கி உதவுகின்றன. நோயின் தன்மையினை அடிப்படையாக கொண்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும் பொழுது, அதிகபட்சமாக 50 நாட்கள் வரை தேவையான அனைத்து பாதுகாப்பு நன்மைகளையும் தருகின்றன.
காத்திருப்பு காலம்: பாலிசிதாரர் திட்டத்தில் இணைவதற்கு முன்பே அவருக்கு உள்ள நோய்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை ஒரு சில திட்டங்கள் வழங்குகின்றன.ஆனால், அவற்றிற்கு நீங்கள் ஆரம்ப கால காத்திருப்பு காலத்தினை கடந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.பெரும்பாலும், காத்திருப்பு காலம் 1 முதல் 4 வரையிலான வருடங்கள் ஆகும்.
போக்குவரத்து வசதிகள்: ஒரு சில திட்டங்கள், இணைப்பில் உள்ள மருத்துவமனைகள் பாலிசிதாரருக்கு தொலைவில் இருப்பின், அவருக்கு ஏற்படும் போக்குவரத்து ரீதியான செலவுகளுக்கும் நன்மைகள் வழங்குகின்றன. அவற்றை ரீஇம்பர்ஸ்மென்ட் முறை மூலம் பெற்று கொள்ளும் வசதி உண்டு. மேலும் நோயாளியை ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கான செலவுகளையும் இந்த திட்டங்கள் ஏற்கின்றன.
மேலே குறிப்பிடப்பட்ட காரணிகள் திட்டத்திற்கு திட்டம் மாறுபடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எக்லுஷன்ஸ் என்பது, உங்களது பாலிசி திட்டத்தின் வரம்பிற்குள் இல்லதவை ஆகும். இந்த எக்ஸ்லுஷன்ஸ்களுக்கு பாலிசி திட்ட நன்மைகள் மற்றும் இந்த திட்டத்தின் மூலம் பெறப்பட வேண்டிய எந்தவொரு மருத்துவ உதவிகளும் கிடைக்காது. இந்த வரம்புகள் ஒவ்வொரு பாலிசி திட்டத்தின் தன்மையை பொறுத்து மாறுபடும். ஆகவே, ஒவ்வொரு பாலிசி திட்டத்திற்கும் இந்த காரணங்கள் பொதுவானதாக இருப்பதில்லை. இவை திட்டத்தின் நோக்கம் மற்றும் தேவை பொறுத்து மாறுபடக்கூடியது.
லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் கீழ்கண்ட காரணங்களுக்கு திட்ட நன்மைகளை வழங்காது. அவை:
பாலிசி படிவத்தில் இருந்து அந்தந்த திட்டத்தில் கணக்கில் வராத நோய்களை குறித்து அறிந்து கொள்ளவும்.
பாலிசிபஜார் மூலம் ஆன்லைனில் லிபெர்ட்டி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தில் இணைவதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்:
லிபெர்ட்டி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தின் நன்மைகளை நீங்கள் தொடர்ந்து பெறவெண்டுமெனில், நீங்கள் திட்டத்தை புதுபித்தல் அவசியமாகும். லிபர்ட்டி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தை புதுப்பிப்பதற்கு நாம் பாலிசிபஜார் இன்சூரன்ஸ் ப்ரோக்கர் பிரைவேட் லிமிட்டட் எனும் அதன் துணை நிறுவனத்தின் உதவியுடன் பாலிசிபஜாரின் இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த திட்டத்தினை புதுப்பித்துக் கொள்ளலாம்.
லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரசனே திட்டமானது இரு வகையான க்ளைம்களை உள்ளடக்கியது. அவை, கேஷ்லெஸ் க்ளைம் மற்றும் ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம். அவற்றை எவ்வாறு அணுகுவது என்பதை கீழே காணலாம்:
ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம் பதிவு செய்ய கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்கவும்:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் உண்மையான மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களையே சமர்ப்பிக்க வேண்டும். அவற்றின் நகலை அல்ல.