கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் (ரெலிகர் ஹெல்த் இன்சூரன்ஸ் )
ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் செப்டம்பர் 1,2020 இல் கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி ( ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி) 2012 இல் ஐ ஆர் டி ஏ ஐ இந்த ஒப்புதலுடன் செயல்பட துவங்கியது.
Read More
கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் ( ரெலிகர் ஹெல்த் இன்சூரன்ஸ் ) - திட்டங்களின் பட்டியல்
கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் ( முந்தைய ரெலிகர் ஹெல்த் இன்சூரன்ஸ்) பலவகையான திட்டங்களை கொண்டு விரிவான பாதுகாப்பினை வாடிக்கையாளருக்கு வழங்குகிறது. அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
திட்டத்தின் பெயர்
கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
91 நாட்கள் இல்லை
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 3 லட்சம் Rs 6 கோடி
திட்டத்தின் பெயர்
கேர் ஜாய் ஹெல்த் இன்சூரன்ஸ்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
1 நாள் 65 வயது
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 3 லட்சம் Rs 5 லட்சம்
திட்டத்தின் பெயர்
கேர் சீனியர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
61 நாட்கள் இல்லை
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 3 லட்சம் Rs 10 லட்சம்
திட்டத்தின் பெயர்
கேர் ஹெல்த் என்ஹான்ஸ் சூப்பர் டாப் அப் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
1 நாள் இல்லை
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 1 லட்சம் Rs 55 லட்சம்
திட்டத்தின் பெயர்
கேர் பிரீடம் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
90 நாட்கள் இல்லை
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 3 லட்சம் Rs 10 லட்சம்
திட்டத்தின் பெயர்
கேர் க்ரிட்டிக்கல் இல்னஸ் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
18 வயது 65 வயது
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 1 லட்சம் Rs 25 கோடி
திட்டத்தின் பெயர்
கேர் கேன்சர் மெடிக்ளைம் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
5 வயது 50 வயது
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 10 லட்சம் Rs 2 கோடி
திட்டத்தின் பெயர்
கேர் ஹார்ட் கேர் இன்சூரன்ஸ் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
18 வயது இல்லை
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 3 லட்சம் Rs 10 லட்சம்
திட்டத்தின் பெயர்
கேர் ஆரோக்யா சஞ்சீவினி திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
3 மாதங்கள் 65 வயது
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 50,000 Rs 10 லட்சம்
திட்டத்தின் பெயர்
கேர் ஆபரேஷன் மெடிக்ளைம் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
5 வயது 50 வயது
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 10 லட்சம் Rs 2 கோடி
திட்டத்தின் பெயர்
கேர் கொரோனா கவஷ் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
1 நாள் 70 வயது
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 50,000 Rs 5 லட்சம்
திட்டத்தின் பெயர்
கேர் ஹெல்த் கேர் அட்வாண்டஜ் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
91 நாட்கள் இல்லை
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 25 லட்சம் Rs 1 கோடி
திட்டத்தின் பெயர்
கேர் ஹெல்த் செக்யூர் பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
91 நாட்கள் 70 வயது இல்லை
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 10 லட்சம் Rs 25 கோடி
ஒவ்வொரு இன்சூரன்ஸ் திட்டத்தையும் விரிவாக கீழே காண்போமா:
கேர் ஹெல்த் கேர் இன்சூரன்ஸ் திட்டம்
கேர் ஹெல்த் கேர், வாழ்க்கை முழுவதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் விரிவான நன்மைகளுடன் பாதுகாப்பு வழங்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் மிக விரைவாக க்லைம்களை வழங்கி வாழ்வு முழுவதும் நிம்மதியான வாழ்க்கை வாழ வழிவகை செய்கிறது. அது கீழ்கண்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள் :
- ரொக்கமில்லா வசதியுடன் கூடிய 7400க்கும் அதிகமான மருத்துவமனைகள்
- உலகளாவிய மருத்துவ சிகிச்சை பாதுகாப்பு
- 540 தினங்களுக்கு வீட்டிலிருந்தே மருத்துவ நன்மை பெறுவதற்கு உதவுகிறது.
- 24 மணி நேரத்திற்கும் அதிகமான மற்றும் குறைவான நேரத்திற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான பாதுகாப்பு
- ரோபாட்டிக் அறுவை சிகிச்சைக்கான பாதுகாப்பு
- 1 லட்சம் காப்பு தொகை கொண்ட திட்டங்களுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு மகப்பேறு கால மருத்துவ பாதுகாப்பு வழங்குகிறது
- மருத்துவமனையில் சேருவதற்கு முந்தைய 30 நாட்கள் மற்றும் மருத்துவமனையில் இணைந்த பின் 60 நாட்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான நன்மைகளை தருகிறது
-
கேர் ஹெல்த் வாழ்க்கையின் அதிசயத்தையே மிகவும் மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறது. இந்த கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் (முந்தைய ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் ) மகப்பேறு காலம் மற்றும் பிறந்த குழந்தைக்கான மருத்துவ உதவிகள் பெறுவதற்கான செலவுகளுக்கு பாதுகாப்பினை வழங்குகிறது. இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாவன :
சிறப்பம்சங்கள் :
- கேர் ஹெல்த் ஜாய் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமானது பராமரிப்பு செலவுகள், மருத்துவமனையில் துணை பெரு சிகிச்சைக்கான செலவுகள் மற்றும் மகப்பேறு கால செலவுகளுக்கு உரிய உதவிகளை அளிக்கிறது.
- பிறந்த குழந்தைக்கு 90 நாட்களுக்கு இலவச'பாதுகாப்பினையும் அதற்கு பின் நிலையான பிரிமியம் தொகையின் அடிப்படையிலான பாதுகாப்பு வழங்குகிறது.
- மருத்துவமனையில் சேருவதற்கு முந்தைய 30 நாட்கள் மற்றும் மருத்துவமனையில் இணைந்த பின் 60 நாட்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான நன்மைகளை தருகிறது
- நோ க்ளைம் போனஸாக 100% கூடுதல் காப்பு தொகையினை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.
- மகப்பேறு கால நன்மைகளை ஆரம்பகால காத்திருப்பு காலமான 9 மாதங்களுக்கு பின் பெற முடியும்.
- ஒரு ஏ சி அறையினை இத்திட்டத்தின் மூலம் பெற முடியும்.
- இத்திட்டம் ஒவ்வொரு வருடமும் புதுப்பித்தல், க்ளைம் பற்றிய கவலைகளை வழங்காது.ஏனெனில், இது மூன்று வருடகால பாலிசியாகும்.
- இந்திய வருமான அவரை சட்டத்தின் படி பிரிமியம் தொகை வரி விலக்குகளுக்கு உட்பட்டது.
-
கேர் ஹெல்த் கேர் சீனியர் திட்டமானது, 61 க்கு மேல் வயதானவர்களுக்கான திட்டமாகும். இத்திட்டம் இரண்டு வகைகளை கொண்டது. அவை, கேர் 8, கேர் 9.கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் ( ரெலிகேர் ஹெல்த் இன்சூரசன்ஸ் ) நமது குடும்பத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பினை தரும் சிறந்த திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் 10 லட்சத்திற்கு உரிய மருத்துவ உதவிகளுக்கான நன்மைகளை தருகிறது.
சிறப்பம்சங்கள்
- மாற்றத்தக்க பாலிசி காலம் (1/2/3 வருடங்கள் )
- 7400 க்கும் அதிகமான இணைப்பில் உள்ள மருத்துவமனைகள்
- காப்பு தொகைக்கு உட்பட்டு மருத்துவமனையில் தங்கி பயன்பெறலாம்.
- வருடாந்திர மருத்துவ பரிசோதனை பெறும் வசதி
- காப்பு தொகைக்கு உட்பட்டு பராமரிப்பு செலவுகளுக்காக உதவிகள்
- மருத்துவமனையில் சேருவதற்கு முந்தைய 30 நாட்கள் மற்றும் மருத்துவமனையில் இணைந்த பின் 60 நாட்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான நன்மைகளை தருகிறது
- காப்பு தொகை தீரும் பொழுது 100% கூடுதல் காப்பு தொகை பெறும் வசதி
- உடலுறுப்பு மாற்றம் செய்பவருக்கான பாதுகாப்பு: Rs 50,000 ( கேர் 8) மற்றும் Rs 1 லட்சம்( கேர் 9)
- இதர சிகிச்சைகள் மற்றும் வீட்டிலேயே சிகிச்சை பெறுவதற்கான செலவுகளும் திரும்பி பெறமுடியும்.
- Rs 1500 முதல் 2000 வரை ஆம்புலன்ஸ் வசதிக்கான உதவிகளை வழங்குகிறது.
கூடுதல் நன்மைகள் :
- ஓபிடி பாதுகாப்பு தேர்வுகள் : Rs 5000( கேர் 8) மற்றும் Rs 10,000 ( கேர் 9)
- என் சி பி சூப்பர் 50% முதல் 100% வரை உள்ளது.
-
இந்த திட்டம் ஒரு டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமாகும். இன்சூரன்ஸ் திட்டத்தின் காப்பு தொகை தீரும் நேரங்களில், காப்பு தொகைக்கு மீறிய கூடுதல் பாதுகாப்பு மற்றும் நன்மைகள் வழங்குவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
சிறப்பம்சங்கள்
- பாலிசிதாரருக்கு ஒரு தனி அறையில் சிகிச்சை பெறும் வசதி உள்ளது.
- நோய் மற்றும் காயங்களுக்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுது காப்பு தொகைக்கு உட்பட்டு உதவிகள் பெறலாம்.
- மருத்துவர் ஆலோசனை கட்டம் மற்றும் ஐ சி யு செலவுகளுக்கு வரம்பு இல்லை.
- காயங்கள் தவிர இதர எல்லா நோய்களுக்கும் காத்திருப்பு காலம் 30 நாட்களாக உள்ளது.
- 5% முதல் 20% வரை சலுகைகள் பெற முடியும்.
- உடலுறுப்பு தானம் செய்பவருக்கு தேவையடான மருத்துவ செலவுகளையும் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.
- திட்டத்தில் இணைவதற்கு முன்பேயுள்ள நோய்களுக்கு காத்திருப்பு காலம் 4 வருடத்திற்கு பின் மருத்துவ உதவிகள் பெற்றுக்கொள்ளலாம்.
-
இந்த திட்டம் சர்க்கரை நோயாளிகளுக்கான பாதுகாப்பினை வழங்கும் திட்டமாகும்.இத்திட்டம் ஹைப்பர் டென்சன், பி பீ, உயர்ந்த பி எம் ஐ களுக்கு சிறப்பு கவனம் செலுத்தும்படி உருவாக்கப்பட்டது. கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் ( ரெலிகர் ஹெல்த் இன்சூரன்ஸ் ) வகுத்த இத்திட்டத்தின் அம்சங்களை கீழே காண்போம்:
சிறப்பம்சங்கள்:
- காப்பு தொகை வரம்பிற்குட்பட்டு மருத்துவமணியல் சிகிச்சை மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கன நன்மைகளை தருகிறது.
- 100% காப்புத்தொகை மீண்டும் பெரும் வசதி உள்ளது.
- இத்திட்டம், பயன்படுத்தும் பொருள் மற்றும் உடனிருப்பவர்க்கான நன்மைகளையும் அளிக்கிறது.
- வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் செலவுகள் மற்றும் டையலைசிஸ் சிகிச்சைக்கும் உதவிகள் வழங்குகிறது.
- மருத்துவமனையில் இணைவதற்கு முன் மற்றும் பின் ஆகும் செலவுகளும் இத்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
-
இன்றைய வாழ்க்கை முறையின் விளைவாக பல உடல்ரீதியான பிரச்சனைகளுக்கு நாம் ஆளாகிறோம், இத்திட்டம், 32 வகையான க்ரிட்டிக்கல் நோய்களுக்கு தேவையான பாதுகாப்பினை வழங்குகிறது. அவற்றின் அம்சங்கள் மற்றும் நன்மைகளாவன:
சிறப்பம்சங்கள்
- 32 வகையான தீவிர நோய்களுக்கு பாதுகாப்பு தருகிறது.
- எளிய தவணை முறை வசதிகளுடன் இந்த நன்மையை பெறமுடியும்.
- பாலிசி காலத்தின் இரண்டாவது வருடத்தில் இருந்து இலவச வருடாந்திர உடல்நல பரிசோதனைகள் செய்து கொள்ளும் வசதி
- கூடுதல் நன்மையாக மருத்துவரை எந்த செலவுமின்றி பெற்றுக்கொள்ளும் வசதி
- இத்திட்டம், மருத்துவமனையில் தங்கி பெறும் சிகிச்சைக்கான செலவுகள், உடலுறுப்பு தானம் செய்பவரின் செலவுகள், டையலைசிஸ் சிகிச்சை, இதர அசிகிச்சைகள், கூடுதல் மருத்துவ ஆலோசனை மற்றும் உலகளவில் கூடுதல் மருத்துவ ஆலோசனை பெறும் வசதி போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.
- Rs 5 லட்சம் வரையான விமான ஆம்புலன்ஸ் வசதி பெற்றுக்கொள்ளலாம்.
-
கேர் ஹெல்த் கேன்சர் மெடிக்ளைம் திட்டமானது, கேன்சருக்கு எதிரான வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு வழங்குகிறது. இத்திட்டம், உங்களுக்கு மற்றும் உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோயிலிருந்து விடுபட தேவையான வசதிகளை தருகிறது. இத்திட்டம் அனைத்து நிலையில் உள்ள புற்றுநோய்களுக்கும் பொருந்தும்.
சிறப்பம்சங்கள்:
- மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் செலவுகளை உள்ளடக்கியது.
- இது கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி செலவுகளை உள்ளடக்கியது.
- உடலுறுப்பு தானம் செய்பவருக்கு தேவாய மருத்துவ உதவிகள் செய்து மற்றும் அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறது.
- பாலிசிதாரருக்கு உலகளவில் சிகிச்சை பெறும் வசதி உடையது.
- விமான ஆம்புலன்ஸ் வசதிக்கு தேவையான மானியமும் வழங்குகிறது.
- மருத்துவ சிகிச்சைகளுக்கு உலகளவில் கூடுதல் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.
- ஓபிடி செலவுகளும் இத்திட்டத்தில் உள்ளடங்கியது.
- அறை வாடகை மாற்றும் வசதி உள்ளது.
-
இத்திட்டத்தின் மூலம் 16 வகையான மிக தீவிர இருதய பிரச்சனைகளுக்கு மருத்துவ உதவி பெறுவது எளிதாகுகிறது.இத்திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகளை கீழே காண்போம்:
சிறப்பம்சங்கள்:
- மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் வசதி உடையது.
- கேர் ஹெல்த் ஹார்ட் கேர் மெடிக்ளைம் திட்டமானது நோயாளி பராமரிப்பு செலவுகளையும் ஏற்கிறது.
- பாலிசிதாரருக்கு உலகளாவிய மருத்துவ பாதுகாப்பு கிடைக்கும் படி செய்கிறது.
- உடலுறுப்பு தானம் செய்பவருக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் ஏற்றுக்கொள்கிறது.
- விமான ஆம்புலன்ஸ் பயன்படுத்துதலுக்கு Rs 5 லட்சம் வரை மானியம் பெறமுடிகிறது.
- மருத்துவ சிகிச்சையின் போது கூடுதல் மருத்துவ ஆலோசனை பெறும் வசதியும் உள்ளது.
- ஓபிடி மருத்துவ பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
- தொலைபேசியில் மருத்துவரின் உதவியை பெறும் வசதியையும் உள்ளடக்கி உள்ளது.
- மருத்துவமனையில் அறை வாடகை மாற்றும் வசதியும் உள்ளது.
-
கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் ( ரெலிகர் ஹெல்த் இன்சூரன்ஸ் ) இருதய நோய் உள்ளவர்களுக்கு என தனித்துவமாக உருவாக்கப்பட்ட திட்டமே இத்திட்டமாகும். இது ஏற்கனவே இருதய நோய் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ நன்மைகளை தருகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளாவன:
சிறப்பம்சங்கள்:
- இத்திட்டம் மருத்துவமனையில் இணைவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவ உதவிகளுக்கு உதவுகிறது.
- வேறுபட்ட மருத்துவ சிகிச்சைகள் மற்றும் வீட்டிலிருந்தே மருத்துவ உதவிகளை பெறும் வசதியையும் உள்ளடக்கியது.
- காப்பு தொகையை 100% மீண்டும் மீட்டுக்கொள்ளும் வசதியும் உள்ளது.
- இது ஆம்புலன்ஸ் செலவுகள் மற்றும் குறிப்பிட தொகைக்கு உட்பட்டு கார்டியாக் பரிசோதனைகளை பெற உதவிகள் வழங்குகிறது.
- மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கேட்டராக்ட் அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது.
- இதர கூடுதல் நன்மைகளாக, ஓ பி டி பாதுகாப்பு, உலகளவில் கூடுதல் மருத்துவ ஆலோசனை. வீட்டிலிருந்தே மருத்துவ சிகிச்சைகள் பெறும் வழி, நடைமுறையில் இருக்கும் உடல்நல பரிசோதனை பாதுகாப்பு ஆகிய வசதிகள் உள்ளது.
-
இந்த திட்டத்தின் மூலம் பாலிசிதாரர், மருத்துவ செலவுகளுக்கு எந்தவித வரம்புமின்றி தேவைக்கு செலவழிக்கலாம். இந்த திட்டம் மருத்துவ உதவிகள் பெறுவதற்கு அளவற்ற நிதி உதவி செய்கிறது. இந்த திட்டத்தின் இதர நன்மைகளை கீழே காண்போம்:
சிறப்பம்சங்கள்:
- மிக உயர்ந்த மருத்துவ செலவுகளை பற்றிய கவலையின்றி மருத்துவ உதவிகளை பெற வழி செய்கிறது.
- இந்த திட்டத்தில் பாலிசிதாரர், அவரது குழந்தைகள், மனைவி, பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோருக்கு இத்திட்டத்தில் இணைத்து கொள்ளும் வசதி உள்ளது.
- மருத்துவ அறை வாடகை, ஐ சி யு , ஐ சி சி யு போன்ற பல மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற உதவிகளை செய்கிறது
- நோய் அல்லது காயத்தின் மூலம் ஏற்படும் பல் பிரச்சனைகள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கும் நிதியுதவி அளிக்கிறது.
- காட்டராக்ட் சிகிச்சை மற்றும் பராமரிப்பு செலவுகளையும் ஏற்கிறது.
-
இந்த திட்டமானது, எந்தவித நிதி நெருக்கடியும் இன்றி தேவையான மருத்துவ அறுவை சிகிச்சியகலிய பெற வழிவகை செய்கிறது. மேலும் இத்திட்டத்தில் இணைவதற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்ய தேவையில்லை.
சிறப்பம்சங்கள்:
- காப்பு தொகையின் வரம்பிற்குள் தேவையான மருத்துவ வசதிகளை பெற இந்த திட்டம் உதவுகிறது.
- மருத்துவமனையில் இணைவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவ செலவுகள்
- அறுவை சிகிச்சைக்களின் மூலம் ஏற்படும் மருத்துவ செலவுகள்
- அதிகப்பட்சமாக 15 லட்சம் அல்லது காப்புத்தொகையில் உடலுறுப்பு தானம் செய்பவரின் மருத்துவ செலவுகளை ஏற்கிறது.
- வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுதல், ஐ சி யு மற்றும் விமான ஆம்புலன்ஸ் போன்றவற்றிற்கு மானியம் வழங்குகிறது.
-
இந்த திட்டத்தின் மூலம் விபத்தின் மூலம் ஏற்படும் அனைத்துவித மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது. இது அனைத்து மருத்துவ வசதிகளையும் அளித்து பூரண குணமடைதலை உறுதி செய்கிறது.
சிறப்பம்சங்கள்:
- இந்த கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் (ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ்) , விபத்தின் மூலம் ஏதெனும் பேரிழப்பு ஏற்படின் காப்புத்தொகையை பாலிசிதாரரின் தேர்வரிடம் ஒப்படைக்கிறது.
- மருத்துவரினால் பரிந்துரைக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பாதுகாப்பு
- எதிர்பாரா உயிரிழப்புக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு
- மீண்டும் உருவாக்குதலுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கான செலவுகளுக்கு பாதுகாப்பு
- நிரந்தர / நிரந்தரமற்ற உடலுறுப்பு செயலிழப்பு தேவையான மருத்துவ நன்மைகளை பெறும் வசதி
- நிரந்தர உடலுறுப்பு செயலிழத்தல் மற்றும் மரணத்தின் போது குழந்தைகளுக்கான கல்வி செலவுகளை ஏற்கிறது.
- ஒரு வருட காலத்திற்க்கும் மேலாக பாலிசிதாரர் காணாமல் போயிருப்பின் காப்புத்தொகை பாலிசிதாரால் தேர்வு செய்யப்பட்டவருக்கு அளிக்கப்படுகிறது.
- செயற்க்கையாக பொருத்தப்பட்ட உடலுறுப்புகளினால் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு உதவி வழங்குகிறது.
- ஆம்புலன்ஸ் வசதிக்கான செலவுகளை திருப்பபெறும் வசதி உடையது.
-
இந்த திட்டம் ஒரு கோவிட்-19 ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டமாகும். இதில் கொரொனா சிகிச்சை பெற தேவைப்படும் அனைத்து விதமான செலவுகளும் ( மாஸ்க், பி பி பி கிட் , ஆக்சிஜன்) உள்ளடங்கும்.
சிறப்பம்சங்கள்
- இந்த திட்டத்தில் இணைய குறைந்தப்பட்ச வயது 18 வருடமாகும்.
- குழந்தைகள் பிறந்த முதல் நாளில் இருந்தே இந்த திட்டத்தில் கீழ் தேவையான மருத்துவ பாதுகாப்பு பெறமுடியும்.
- காப்புத்தொகை 5 லட்சம் வரை உள்ளது.
- வீட்டிலேயே பெறும், ஆயுஷ் அல்லது இணைந்துள்ள மருத்துவமனியில் பேறும் சிகிச்சைகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
- 15 நாட்கள் ஆரம்ப கால காத்திருப்பு காலம் உடையது.
- சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், ஹைபர் டென்ஷன் போன்ற ஏற்கனவே உள்ள நோய்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
- பாதுகாப்பு நன்மைகளில் ஆக்சிஜன், மாஸ்க் போன்ற பல நன்மைகள் உள்ளன.
- ஐ சி யு, ஐ சி சி யு செலவுகளும் உள்ளடங்கும்.
-
இணைப்பில் உள்ள 7800 க்கும் அதிகமான மருத்துவமனைகளில் ரொக்கமில்லா மருத்துவ உதவிகளை 1 கோடி வரை பெறமுடியும். பலவகையான நோய்களுக்கு தேவையான பாதுகாப்பினை வழங்குகிறது.
சிறப்பம்சங்கள்
- தனி நபர் மற்றும் ஃபேமிலி ஃப்லோடர் வகையை சார்ந்த திட்டம்
- 24 மணி நேரத்திற்க்கும் குறைவான மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மற்றும் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் முறை
- காப்புத்தொகைக்கு உள்ளடங்கி உடலுறுப்பு தானம் செய்பவருக்கு மருத்துவ உதவிகளை பெறமுடியும்.
- மருத்துவமனையில் சேருவதற்கு முந்தைய 30 நாட்கள் மற்றும் மருத்துவமனையில் இணைந்த பின் 60 நாட்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான நன்மைகளை தருகிறது
- பாலிசி காலத்திற்குள் தேவை எனில், காப்பு தொகை மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
- க்லைம் செய்யப்படவில்லை எனில் 10% - 50% வரை போனஸ் வழங்கப்படுகிறது.
கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டங்களை எதற்கு வாங்கவேண்டும் ?
கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் ( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ் ) மூலம் அதிக வகைகளில் இன்சுரன்ஸ் திட்டங்களில் இணையலாம். அதற்கான காரணங்களை காண்போம்:
- க்லைம் செட்டில்மென்ட் விகிதம் – க்லைம் செட்டல்மென்ட் விகிதம் (CSR) என்பது இன்சுரரால் பாலிசிதாரரின் க்லைமிற்கு வழங்கப்பட்ட தொகையின் விகிதமாகும். இது அதிகமிருந்தாலே போதும். கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக 93% கொண்டுள்ளது.
- அதிகமான மருத்துவமனைகள்- இந்தியளவில் 7400 க்கும் அதிகமான மருத்துவமனிகளில் இருந்து தேர்வு செய்து சிகிச்சை பெறும் வசதி
- எளிதான க்லைம் மற்றும் துக்க நிகழ்வு பதிவு செய்தல் – கேர் கஸ்டமர் கேர் மர்ரும் ஹெல்த் இன்சுரன்ஸ் டீம் மூலம் எந்த வித உதவிகளையும் எப்பொழுது வேண்டுமானலும் பெறமுடியும். உங்களது சந்தேகங்களை எப்பொழுது வேண்டுமானலும் தீர்த்துக்கொள்ளூம் வசதி.
- அதிகமான ஹெல்த் இன்சுரன்ஸ் திட்ட நன்மைகள் – அனைத்து வித மருத்துவ உதவிகளும் கேர் ஹெல்த் நிறுவனத்தின் திட்டங்களின் மூலம் பெறமுடியும் . நீங்கள் தேர்வு செய்த திட்டத்தின் படி, தேவையான சிகிச்சையை இந்தியாவில் அல்லது உலகளவில் சிறந்த மருத்துவமனையில் பெறலாம்.
கேர் ஹெல்த் இன்சுரன்ஸ்( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ்) திட்டத்தின் நன்மைகள் :
கேர் ஹெல்த் இன்சுரன்ஸ்( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ்) அதிகளவில் நன்மைகளை தரும் திட்டங்களை கொண்டது. இந்த திட்டங்களின் மூலம் பாலிசிதரர் அடையும் நன்மைகளை கீழே காண்போம்:
- 4 பெரியவர் மற்றும் 2 குழந்தைகள் என, அதிகபட்சம் 6 உறுப்பினர்கள் உடைய குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
- மருத்துவமனையில் சேருவதற்கு முந்தைய 30 நாட்கள் மற்றும் மருத்துவமனையில் இணைந்த பின் 60 நாட்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான நன்மைகளை தருகிறது
- உயிருக்கு பாதிப்பான நோய்களுக்கான பாதுகாப்பினை இந்த திட்டங்கள் வழங்குகிறது.
- மாற்று சிகிச்சை பெறும் வசதி, பராமரிப்பு செலவுகள், ஆம்புலன்ஸ் நன்மை, உடல் பரிசோதனைகள் போன்ற இதர நன்மைகளை கொண்டது.
- 16 வகையான இருதய நோய்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கு பாதுகாப்பு
- குறிப்பிடப்பட்ட அறுவைசிகிச்சைகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளூதல்
- ஆரம்ப கால காத்திருப்பு காலம் 4 வருடத்திற்க்கு பின் முன்பே உள்ள நோய்களுக்கு சிகிச்சை பெறுதல்
- கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டங்கள் அனைத்தும் வாழ்க்கை முழுவதும் புதுப்பிக்கக்கூடியவை. எனவே எதிர்பாரா மருத்துவ செலவுகளை கண்டு அஞ்ச தேவையில்லை.
- கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் 7400 க்கும் அதிகமான மருத்துவமனைகளுடன் இணைப்பில் உள்ளன. அந்த மருத்துவமனைகளில் ரொக்கமற்ற மருத்துவ உதவிகளை பெறமுடியும்.
- மருத்துவ சிகிச்சை பெற்ற பின்பு, காப்பு தொகை தீர்ந்து விட்டதெனில், எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் திரும்ப புதுப்பிக்கும் வசதி உடையது.
- எளிதாக எடுத்து செல்லும் வசதி உடையது. இதை, ப்ரிமியம் தொகை சரிபார்த்தல்,பாதுகாப்பின் தன்மையை சரிபார்த்தல், தாமதிக்கப்பட்டுள்ள தொகைகளை கொண்டு முடிவு செய்வர்.
- இலவச மருத்துவ பரிசோதனை வசதிகளை பெற முடியும்.
கேர் ஹெல்த் இன்சுரன்ஸ்( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ்) கூடுதல் நன்மைகள்
கேர் ஹெல்த் இன்சுரன்ஸ்( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ்) அனைத்து திட்டங்களிலும் உள்ள கூடுதல் நன்மைகளை கீழே காண்போம் :
- நோ க்லைம் போனஸ் சூப்பர் – இது ஒவ்வொரு க்லைம் மில்லா வருடத்திற்கும் காப்புத்தொகையில் 50% போனஸ் அளிக்கிறது. இது 100% வரை அமையலாம்.
- எவரிடே கேர் – இதன் மூலம் காப்புத்தொகையின் 1% ஐ மருத்துவரின் ஆலோசனைகளுக்கு வழங்க முடியும்.
- அன்லிமிடட் ஆட்டொமடிக் ரீசார்ஜ் – எல்லையில்லா தடவை, ஏற்கனவே உபயோகிக்கப்பட்ட காப்புத்தொகையை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
- விமான ஆம்புலன்ஸ் பாதுகாப்பு- உங்களது நகரத்தில் கிடைக்காத மருத்துவ சிகிச்சைகளை பெற வழிவகுக்கிறது.
- பெர்சனல் ஆக்சிடன்ட் பாதுகாப்பு – காப்பு தொகையை விட 10 மடங்கு அதிக மருத்துவ பாதுகாப்பினை எதிர்பாரா விபத்தின் மூலம் ஏற்படும் இறப்பு மர்ரும் உடலுறுப்பு இயலாமைக்கான சூழல்களில் வழங்குகிறது.
- இன்டர்நேஷனல் செகண்ட் ஒப்பினியன் – எந்தவித சிகிச்சையும் பெறும் முன்பே கூடுதல் மருத்துவ ஆலோசனைகள் பெற வழிவகுக்கிறது.
- உலகளாவிய பாதுகாப்பு – இந்தியா மட்டுமன்றி பிற தேசங்களிலும் ரொக்கமற்ற மருத்துவ உதவியை பெறமுடியும்.
கேர் ஹெல்த் இன்சுரன்ஸ்( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ்) இன்க்லுஷன்ஸ்
இன்க்லுஷன்ஸ் திட்டத்திற்கு திட்டம் மாறுபடும். சில பொதுவான இன்க்லுஷன்ஸ் காண்பொம்:
- மருத்துவமனையில் தங்கி பெறும் சிகிச்சை - கேர் ஹெல்த் இன்சுரன்ஸ்( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ்) மருத்துவமனையில் தங்கி பெறும் சிகிச்சைகளான, அறை வாடகை, ஐ சி யு, ஒ டி, இரத்த தானம் செய்பவர், இரத்த / மருத்துவர் கட்டணம் போன்ற சிகிச்சைகளுக்கு உதவி செய்கிறது.
- மருத்துவமனையில் இணையும் முன் பாதுகாப்பு – குறிப்பிட்ட வரம்பிற்க்குள் குறிப்பிட்ட நாட்களுக்கு மருத்துவமனையில் இணைவதற்கு முந்தைய மருத்துவ செலவுகளை ஏற்றல்
- மருத்துவமனையில் இணைந்த பின் பாதுகாப்பு – குறிப்பிட்ட வரம்பிற்க்குள் குறிப்பிட்ட நாட்களுக்கு மருந்துகள், பரிசோதனைகள் ஆகியவற்றை மருத்துவமனியில் இருந்து வெளி வரும் போது, மருத்துவமனையில் இணைந்த பின்பு மருத்துவ செலவுகளை ஏற்றல்
- வீட்டிலிருந்தே பாதுகாப்பு – மருத்துவர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற பரிந்துரைப்பின் அதற்கும் காப்பீடு வழங்கப்படுகிறது.
- மருத்துவ பரிசோதனை நன்மை – பாலிசிக்குட்பட்டு சில மருத்துவ பரிசோதனைகளை பெறும் வசதியுடையது.
- இதர சிகிச்சைகள் –ஆயுஷ், ஹோமியோபதி, யுனானி, சித்தா, ஆயுர்வெதா போன்ற சிகிச்சை முறைகளுக்கு உதவி வழங்குகிறது.
- பராமரிப்பு நன்மைகள் – 24 மணி நேர மருத்துவமனையில் இருக்கவேண்டிய நிர்பந்தமற்ற மருத்துவ சிகிச்சைகள் பெறலாம்.
- உடலுறுப்பு தானம் செய்பவர் நன்மை – உடலுறுப்பு தானம் வழங்குபவரின் மருத்துவ செலவுகளையும் ஏற்கிறது.
- நோ க்லைம் போனஸ்- பாலிசி காலம் முழுவதும் க்லைம் இல்லாமல் இருப்பின் NCB சதவீதத்தை பொருத்து பொனாஸ் வழங்கப்படுகிறது.
- கூடுதல் ஆலோசனை – மருத்துவ சிகிச்சைகளுக்கு எடுக்கப்படும் கூடுதல் மருத்துவ ஆலோசனைகளுக்கு மானியம் வழங்குகிறது.
- SI இன் ரீசார்ஜ் – காப்பீட்டு காலத்திற்குள் காப்புத்தொகை முதிர்வு அடந்தால், மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் வசதி
கேர் ஹெல்த் இன்சுரன்ஸ்( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ்) எக்லுஷன்ஸ்
எக்லுஷன்ஸ் திட்டத்திற்கு திட்டம் மாறுபடும். சில பொதுவான எக்லுஷன்ஸ் காண்பொம்:
- பாலிசி துவங்கி 30 நாட்களுக்குள் ஏற்படும் அல்லது அறிகுறிகள் தரும் எந்தவொரு வியாதிகள்
- தற்கொலை அல்லது தற்கொலை முயற்சியினால் ஏற்படும் காயங்கள்
- மது, போதைப் பொருள் ஆகியவற்றினால் ஏற்படும் மருத்துவ பிரச்சனைகள்
- எய்ட்ஸ் மூலம் ஏற்படும் மருத்துவ செலவுகள்
- மகப்பேறு, குழந்தை பிறப்பு, கருக்கலைப்பு மற்றும் இவை சம்ந்தப்பட்ட சிகிச்சைகான செலவுகள்
- மரபு ரீதியான வியாதிகள்
- கருதரித்தல் மற்றும் இன்- விட்ரோ கருதரித்தல் செலவுகள்
- போர், போராட்டம், அணு ஆயுதம் ஆகியவற்றினால் ஏற்படும் உடல் ரீதியான ப்ரச்சனைகளுக்கன செலவுகள்
கேர் ஹெல்த் கேஷ்லெஸ் ஹெல்த் இன்சுரன்ஸ் க்லைம் செய்தல்
கேர் ஹெல்த் மெடிகல் இன்சுரன்ஸ் ரீஇம்பர்ஸ்மென்ட் க்லைம் செய்தல்
மெடிகல் இன்சுரன்ஸ் ரீஇம்பர்ஸ்மென்ட் க்லைம் ஐ திட்டத்துடன் இணைப்பில்லாத் மருத்துவமனையில் பெற்ற சிகிச்சைகளுகான செலவுகளை திரும்ப பெற உபயியோகிக்கவேண்டும். பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களின் திட்டங்களிலும் இந்த ரீஇம்பர்ஸ்மென்ட் க்லைமிற்கான வழிமுறைகள் ஒன்றே. இங்கு கொடுக்கபட்டுள்ள வழிமுறையானது, கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனத்திற்கான வழிமுறையாகும். அவை:
கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் ( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ்) அறிவித்தல்
நீங்கள் உங்களது ரீஇம்பர்ஸ்மென்ட் க்லைமை உடனே பதிவு செய்யவேண்டும். எதிர்பாரா சூழல்களில் 24 மணி நேரத்திற்க்குள்ளும், முன்பே அறிந்த மருத்துவமனை சிகிச்சைக்கு 48 மணி நேரத்திற்க்கு முன்பும் தெரியப்படுத்த வேண்டும். 1800-200-6677 எனும் எண்ணீற்கு தொடர்பு கொன்டோ அல்லது மெயில் அனுப்பவோ வேண்டும்.
- தகவலை பகிரவும் : மருத்துவமனையில் இணைந்த விவரங்களுடன் மருத்துவ சிகிச்சை விவரங்கள் மற்றும் :
- பாலிசிதாரரின் பெயர்
- சிகிச்சை பெறும் நபரின் பெயர்
- கஸ்டமர் எண்
- மருத்துவமனை மற்றும் சிகிச்சை குறித்த விவரங்கள்
- மருத்துவமனையில் இணைந்த தேதி
- எதிர்பார்க்கபடும் க்லைம் தொகை
- ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் : கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் ( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ்) ரீஇம்பர்ஸ்மென்ட் க்லைம் படிவத்துடன் கீழே உள்ள ஆவணங்கள்
- புகைப்படத்துடன் கூடிய ஐடி
- மருத்துவமனையில் தங்க வேண்டிய/ பரிசொதனைகாளுக்கான/ ஆலோசனை செய்த மருத்துவர் பரிந்துரை செய்த கடிதம்
- மருத்துவமனை ரசீதுகல் மற்றும் டிஸ்சார்ஜ் ஆவணம்
- பரிசோதனை முடிவுகள் மற்றும் அதற்கான ரசீதுகள்
- போலிஸ் ஏஃப் ஐ ஆர் அல்லது போஸ்ட்மாடர்ம் ஆவணம் ( இருப்பின்)
- இன்சுரரால் கேட்கப்பட்ட இதர ஆவணங்கள்
- க்லைம் ப்ராசசிங் : உங்களது ஆவணங்கள் மற்றும் படிவங்கள் கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம் சரிபார்க்கும். சரிபார்த்த பின் டி பி ஏ உங்களை தொடர்பு கொள்வர்.
- க்லைம் செட்டில்மென்ட் : உங்களது க்லைம் ஒப்புதல் பெற்றவுடன் க்லைம் தொகை உங்களுக்கு கிடைக்கும்.
கேர் ஹெல்த் கேஷ்லெஸ் ஹெல்த் இன்சுரன்ஸ் க்லைம் செய்தல்
கேஷ்லெஸ் ஹெல்த் இன்சுரன்ஸ் க்லைம்களை கேர் ஹெல்த் நிறுவனத்தின் இணைப்பில் உள்ள எதேனும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பேறும் பொழுது விண்ணப்பிக்கலாம். மருத்துவமனையில் இணைந்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் டி பி ஏ விடம் க்லைம் ஐ பதிவு செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகளாவன:
- டி பி ஏ அல்லது கேர் ஹெல்த் நிறுவனத்தின் க்லைம் டீமிற்கு தெரியபடுத்துதல்: 1800-102-4488 எனும் இலவச எண்ணில் உங்களது க்லைமை 24 மணி நேரத்தில் பதிவு செய்யவேண்டும். மருத்துவமனையில் சேருவது முன்பே தெரியுமெனில், சேருவதற்கு 48 மணி நேரம் முன் தெரிவிக்கவேண்டும்.
- ப்ரீ- ஆத்தரைஷெஷன் ஐ துவங்குதல் : காப்பீட்டாளர் ப்ரீ- ஆத்தரைஷெஷன் படிவத்தை பூர்த்தி செய்து டி பி ஏ விடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அதை கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் இடம் பகிர்வர்.
- ஆவணங்களை ஒப்படைத்தல் மாற்றும் சரிபார்த்தல் : கேஷ்லெஸ் க்லைம் படிவத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
- கேஷ்லெஸ் க்லைம் ஒப்புதல்: ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அவை உண்மையெனில், உங்களது க்லைமிற்கு ஒப்புதல் வழங்கப்படும்.
- கேஷ்லெஸ் க்லைம் செட்டில்மென்ட் : க்லைம் பாரம் ஒப்புதல் பெற்றவுடன், இன்சுரர் காப்பீட்டாளர் மற்றும் மருத்துவமனைக்கு அறிவித்துவிட்டு அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்வர்.
குறிப்பு : மற்ற உதவிகளுக்கு கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் ( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ்) கஸ்டமர் கேரை தொடர்பு கொள்ளவும். அல்லது நீங்கள் தொலைபேசி மூலமும் உங்களது பாலிசியின் தற்போதைய நிலையை அறியலாம்.
கேர் ஹெல்த் இன்சுரன்ஸ்( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ்) புதுபித்தல் எப்படி?
மருத்துவ நன்மைகளை நீங்களும் உங்களது குடும்பத்தினரும் தொடர்ந்து பெறவெண்டுமெனில், நீங்கள் திட்டத்தை புதுபித்தல் அவசியமாகும். கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தை இணையம் வழி புதுபிக்கலாம். அதற்கான வழிமுறைகளாவன :
- பாலிசிபஜாரின் ஹெல்த் இன்சுரன்ஸ் ரீன்யுவல் பக்கத்திற்கு செல்லவும்
- ஹெல்த் ரீனீவல் பட்டனை அழுத்தவும்
- பாலிசி எண், பிறந்த தேதி உள்ளிடவும்.
- அனைத்தையும் சரிபார்த்த பின்பு, உங்களது பிரிமியம் தொகையை க்ரெடிட்/ டெபிட் கார்ட் அல்லது நெட் பாங்கிங் மூலம் கட்டலாம்.
- உங்களது பாலிசி புதுபிக்கப்பட்டது
- உங்களது பதிவு செய்யப்பட்ட ஈ மெயில் முகவரிக்கு புதுபிக்கப்பட்ட விவரங்கள் அனுப்பபடும்.