• City & RTO
  • Car Brand
  • Car Model
  • Car Fuel Type
  • Car Variant
  • Registration Year
தமிழ்நாட்டில் வாகன செலான் நிலையைச் சரிபார்க்கவும்
செயலாக்கம்
    Other models
    Other variants
    Select your variant
    View all variants
      Secure
      We don’t spam
      விவரங்களைச் சரிபார்க்கவும்
      Please wait..
      By clicking on “விவரங்களைச் சரிபார்க்கவும்”, you agree to our Privacy Policy & Terms of Use
      Get Updates on WhatsApp
      Select Make
      Select Model
      Fuel Type
      Select variant
      Registration year
      Registration month
      Save & update
      Please wait..
      Search with another car number?

      We have found best plans for you!! Our advisor will get in touch with you soon.

      Please wait ...

      தமிழ்நாட்டில் இ-செலானின் நிலையைச் சரிபார்க்கவும்

      சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடுதான் அதிக எண்ணிக்கையிலான இ-செலான்களை வழங்கியுள்ளது. இ-செலான்கள் என்பது, போக்குவரத்து விதிமீறல்களுக்காக மின்னணு முறையில் உருவாக்கப்படும் செலான்கள் ஆகும். இந்த மாநிலம் சுமார் 5.6 கோடி இ-செலான்களை வழங்கி, ரூ.755 கோடியை வசூலித்துள்ளது. மின்னணு முறையில் செலான்களை வழங்குவதற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டு வருவதால், சட்டரீதியான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, தமிழக மக்கள் இ-செலானை எப்படி சரிபார்ப்பது என்றும் அதற்கான கட்டணத்தை எப்படிச் செலுத்துவது என்றும் தெரிந்துகொள்ள வேண்டும்.

      Read more

      தமிழ்நாட்டில் உங்கள் வாகனத்திற்கான இ-செலான் நிலையைச் சரிபார்ப்பதற்கான பல்வேறு வழிகள்

      தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் தங்களது இ-செலானின் நிலையை இரண்டு வெவ்வேறு வழிகளில் ஆன்லைனில் சரிபார்க்கலாம். அந்த இரண்டு முறைகள் பின்வருமாறு:

      பரிவாஹன் போர்டல்

      உங்கள் இ-செலானின் நிலையைச் சரிபார்க்க சிறந்த வழி, மிகவும் நம்பகமான பரிவாஹன் போர்ட்டல். அதில் நீங்கள் சரிபார்ப்பதற்கான வழிகாட்டல் இதோ:

      • படி 1: முதலில், பரிவாஹன் வலைத்தளத்திற்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள 'ஆன்லைன் சேவைகள்' விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
      • படி 2: இப்போது, ஆன்லைன் சேவைகளின் கீழ் உள்ள 'இ-செலான்' விருப்பத்தைத் தேடி, அதைக் கிளிக் செய்யவும்.
      • படி 3: மேல் வலதுபுறத்தில் காட்டப்படும் 'ஆன்லைனில் பணம் செலுத்துக' என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
      • படி 4: அடுத்து, உங்கள் வாகன எண், செலான் எண் அல்லது ஓட்டுநர் உரிம எண்ணை உள்ளிடவும். பின்னர் கேப்ட்சாவை உள்ளிட்டு 'விவரங்களைப் பெறுக' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

      Policybazaar.com

      உங்கள் தமிழ்நாடு இ-செலான் நிலையை ஆன்லைனில் சரிபார்க்க விரும்பினால், அதை நீங்கள் Policybazaar.com மூலமாகவும் செய்யலாம். அதற்கு, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

      • படி 1: பாலிசிபஜார் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள 'வாகன செலான் நிலையைச் சரிபார்க்கவும்' பக்கத்திற்குச் செல்லவும்.
      • படி 2: வாகனப் பதிவு எண்ணை உள்ளிட்டு, பின்னர் 'செலானைக் காண்க' என்பதைக் கிளிக் செய்யவும்.
      • படி 3: உங்கள் முழுப்பெயர் மற்றும் எண்ணை உள்ளிட்டு, பின்னர் 'செலானைக் காண்க' என்பதைக் கிளிக் செய்யவும்.
      • படி 4: இப்போது நீங்கள் உங்கள் தமிழ்நாடு இ-செலான் நிலையுடன் கூட, வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC), மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUCC) நிலை மற்றும் இன்சூரன்ஸ் காலாவதியாகும் தேதி போன்ற பிற வாகன விவரங்களையும் ஆன்லைனில் பார்க்கலாம்.

      குறிப்பு: இ-செலான் கட்டணத்தை செலுத்துவதற்காக, தமிழ்நாடு காவல்துறை வலைத்தளம் உங்களை பரிவாஹன் வலைத்தளத்திற்கு கொண்டு செல்லும். 'குடிமக்கள் சேவைகள்' என்பதன் கீழ், 'போக்குவரத்து செலான்களுக்கான இ-பேமெண்ட்' என்ற துணைத் தலைப்பு உங்களைப் பரிவாஹன் வலைத்தளத்திற்கு கொண்டு செல்லும்.

      தமிழ்நாட்டில் இ-செலானை எவ்வாறு செலுத்துவது?

      ஆன்லைனில் இ-செலான் நிலையைச் சரிபார்த்த பிறகு, உங்கள் வசதிக்கேற்ப ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் இ-செலானுக்கு நீங்கள் கட்டணம் செலுத்தலாம். கூடுதல் அபராதங்களைத் தவிர்க்க, இ-செலான் வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.

      ஆன்லைன் கட்டண முறைகள்

      பரிவாஹன் போர்ட்டல்

      • படி 1: பரிவாஹன் போர்ட்டலுக்குச் சென்று 'ஆன்லைனில் பணம் செலுத்துக' என்பதைக் கிளிக் செய்யவும்.
      • படி 2: இப்போது உங்கள் ஓட்டுநர் உரிமம், இ-செலான் அல்லது வாகன எண்கள் போன்ற விவரங்களை நிரப்பவும். அடுத்து, சரியான கேப்ட்சாவை நிரப்பவும்.
      • படி 3: நீங்கள் பணம் செலுத்த வேண்டிய இ-செலானைக் கிளிக் செய்து, 'இப்போது பணம் செலுத்துக' என்பதைக் கிளிக் செய்யவும்.
      • படி 4: இ-செலானுக்கான கட்டணத்தை UPI, நெட் பேங்கிங், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.
      • படி 5: பணம் செலுத்திய பிறகு, நீங்கள் ரசீதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

      தமிழ்நாடு காவல்துறை வலைத்தளம்

      • தமிழ்நாடு காவல்துறை வலைத்தளம், இ-செலான் கட்டணத்தை செலுத்துவதற்காக உங்களை பரிவாஹன் வலைத்தளத்திற்கு கொண்டு செல்லும்.
      • 'குடிமக்கள் சேவைகள்' என்பதன் கீழ், 'போக்குவரத்து செலான்களுக்கான இ-பேமெண்ட்' என்ற துணைத் தலைப்பைத் தேர்வு செய்யவும்.
      • பின்னர் பரிவாஹன் வலைத்தளத்தில் கட்டணத்தை முடிக்கவும்.

      ஆஃப்லைன் கட்டண முறைகள்

      • போக்குவரத்து காவல் நிலையம்: இ-செலானை ஆஃப்லைனில் செலுத்துவதற்கு, செலான் விவரங்களுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்லவும்.
      • பணமாகச் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
      • டிமாண்ட் டிராஃப்ட்/காசோலை: DCP/டிராஃபிக் (HQ-கள்)' பெயரில் ஒரு DD/காசோலையைத் தயார் செய்யுங்கள்.
      • டிமான்ட் டிராஃப்ட் (DD) அல்லது காசோலையுடன், உங்கள் இ-செலான் நகலை போக்குவரத்து காவல் தலைமையகத்திற்கு கூரியர் மூலம் அனுப்புங்கள்.

      ஆன்லைனில் இ-செலான்களை செலுத்துவதன் முக்கிய நன்மைகள்

      • ஆன்லைனில் எங்கிருந்து வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்; எனவே, இருப்பிடம் தொடர்பான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
      • காகிதப் பயன்பாடு இல்லை, அதனால் பணம் செலுத்திய ரசீதுகளைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை.
      • இந்த வலைத்தளம் அனைத்து இ-செலான்களையும் சரியான வரிசையில் பதிவு செய்கிறது. இது பரிவர்த்தனைகளைத் தெளிவுபடுத்த உதவும்.
      • ஆன்லைன் போக்குவரத்து இ-செலான் நிலையை நீங்கள் எங்கும், எந்த நேரத்திலும் சரிபார்க்கலாம்.
      • பணம் செலுத்தும் செயல்முறை விரைவாகவும் எளிதாகவும் இருக்கும்.
      • அனைத்து பரிவர்த்தனைகளும் வெளிப்படையாக இருக்கும்.

      தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்

      • சிவப்பு விளக்கு எரியும் போது நிற்க வேண்டும், சிக்னல் பச்சையாகும்போது மட்டுமே செல்ல வேண்டும்.
      • இ-செலான்களைத் தவிர்ப்பதற்கும், சாலையில் பாதுகாப்பைப் பேணுவதற்கும், உரிய வழித்தட ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
      • உங்கள் PUC, ஓட்டுநர் உரிமம் மற்றும் இன்சூரன்ஸ் நகல் போன்ற ஆவணங்களை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள்.
      • நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது, எப்போதும் சீட் பெல்ட் அணிவது அவசியம்.
      • உங்களிடம் இருசக்கர வாகனம் இருந்தால், ஹெல்மெட் அணியாமல் ஒருபோதும் வாகனம் ஓட்டாதீர்கள்.
      • குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில், ஸ்பீட் லிமிட்களைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.
      • வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்தவோ அல்லது அழைப்புகளை ஏற்கவோ கூடாது.
      • உங்கள் வாகனத்தை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
      • நீங்கள் சாலையில் பயணிக்கும்போது, உங்கள் வாகனத்திற்குச் செல்லுபடியாகும் மோட்டார் இன்சூரன்ஸ் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

      தமிழ்நாட்டில் உங்களுக்குத் தவறான இ-செலான் அனுப்பப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

      கணினி அமைப்பில் கோளாறுகள் ஏற்படலாம், அதன் காரணமாக உங்களுக்குத் தவறான செலான் வழங்கப்படலாம். உங்களுக்கு அவ்வாறு நேர்ந்தால், நீங்கள் அதை ஆன்லைனிலோ அல்லது ஆஃப்லைனிலோ சரிசெய்து கொள்ளலாம்.

      தவறான இ-செலானுக்கு எதிரான ஆன்லைன் புகார் முறை

      • படி 1: அதிகாரப்பூர்வ பரிவாஹன் வலைத்தளத்துக்குச் செல்லவும்.
      • படி 2: 'புகார்' விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
      • படி 3: நீங்கள் படிவத்தை நிரப்ப வேண்டும். மாநிலப் பிரிவில், 'தமிழ்நாடு' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்களிடம் ஆதாரப் புகைப்படம் இருந்தால், அதையும் பதிவேற்றலாம்.
      • படி 4: படிவத்தைப் பூர்த்தி செய்தவுடன், 'சமர்ப்பிக்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும். படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு புகார் எண் வழங்கப்படும், அதைக்கொண்டு உங்கள் புகாரின் நிலையை நீங்கள் கண்காணிக்கலாம்.

      தவறான இ-செலானுக்கு எதிரான ஆஃப்லைன் புகார் முறை

      • படி 1: உங்களுக்கு மிக அருகிலுள்ள உள்ளூர் போக்குவரத்து காவல் நிலையத்தைத் தேடி, அங்கு நேரில் சென்று உங்கள் இ-செலான் திருத்தத்துக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
      • படி 2: தவறான இ-செலானின் நகலையும், பிரச்சனையை விளக்கும் ஒரு விளக்கக் கடிதத்தையும் இணைக்கவும்.
      • படி 3: முகவரிச் சான்று, அடையாளச் சான்று, வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) மற்றும் உங்கள் புகாருக்கான ஆதாரம் போன்ற ஆவணங்களைக் கட்டாயம் எடுத்துச் செல்லவும்.

      நிலுவையில் உள்ள இ-செலான் பரிவர்த்தனைகளை எவ்வாறு சரிபார்ப்பது?

      • படி 1: பரிவாஹனின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று 'ஆன்லைன் சேவைகள்' என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர், கீழே ஸ்க்ரோல் செய்து 'இ-செலான்'-ஐக் கண்டுபிடித்து அதைக் கிளிக் செய்யவும்.
      • படி 2: அடுத்து, 'ஆன்லைன் சேவைகளைச் சரிபார்க்கவும்' என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும், அதனைத் தொடர்ந்து 'நிலுவையில் உள்ள பரிவர்த்தனையைச் சரிபார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
      • படி 3: இங்கே, உங்கள் வாகனப் பதிவு எண் அல்லது உங்கள் செலான் எண்ணை உள்ளிட வேண்டும்.
      • படி 4: இப்போது, கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, நிலுவையில் உள்ள பரிவர்த்தனையைக் காண 'விவரங்களைப் பெறுக' என்பதைக் கிளிக் செய்யவும்.

      தமிழ்நாட்டில் இ-செலானில் என்னென்ன அடங்கும்?

      பொதுவாக, தமிழ்நாட்டில் ஒரு இ-செலானில் பின்வரும் விவரங்கள் இடம்பெற்றிருக்கும்:

      • செலான் எண்: இது குறிப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தனித்துவ எண் ஆகும்.
      • விதிமீறல் விவரங்கள்: போக்குவரத்து விதிமீறல் (உதாரணமாக, சிக்னலை மீறுதல், அதிவேகமாகச் செல்லுதல்), தேதி, நேரம் மற்றும் இடம்.
      • வாகன விவரங்கள்: இ-செலானில் உங்கள் வாகனத்தின் பிராண்ட், மாடல் மற்றும் ரெஜிஸ்டிரேஷன் இருக்கும்.
      • அபராதத் தொகை: நீங்கள் செலுத்த வேண்டிய அபராதம் குறித்த விவரங்களும் இ-செலானில் இடம்பெற்றிருக்கும். அது குற்றத்தையும் அதன் தீவிரத்தையும் பொறுத்து விதிக்கப்படும்.
      • கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு: அபராதம் செலுத்துவதற்கான கடைசி தேதியும் இ-செலானில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
      • அதிகார கையொப்பம்: தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின் டிஜிட்டல் சரிபார்ப்பு.

      தமிழகம் முழுவதும் சமீபத்திய போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அதற்கான அபராதங்கள்

      தமிழ்நாட்டில் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறினால், உங்களுக்கு இ-செலான் விதிக்கப்படும், அதை நீங்கள் கூடிய விரைவில் செலுத்த வேண்டும். மிகவும் பொதுவான சில குற்றங்களும் அவற்றுக்கான அபராதங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

      குற்றம் ரெகுலர் ஃபைன் தோபாரா
      போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுதல் ரூ 10000 ரூ 15000
      வாகனத்தில் அதிக சுமையேற்றுதல் ரூ 20000 ரூ 20000
      வாகனத்தின் ரெஜிஸ்டிரேஷனைப் புதுப்பிக்கத் தவறுதல் ரூ 500 ரூ 1500
      கட்டாய போக்குவரத்து குறிகளை மீறுதல் ரூ 500 ரூ 1500
      ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் ரூ 500 ரூ 1500
      அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் ரூ 1000 ரூ 10000
      (உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ) தகுதியற்ற நிலையில் வாகனம் ஓட்டுதல் ரூ 1000 ரூ 2000
      வாகனப் பதிவு இல்லாமல் வாகனம் ஓட்டுதல் ரூ 2500 ரூ 5000
      இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் ரூ 2000 ரூ 4000

      டிஸ்க்ளேமர்: மேலே குறிப்பிடப்பட்டுள்ள சில போக்குவரத்து விதிமீறல்களுக்கு, முதல் முறை மற்றும் மீண்டும் மீண்டும் விதிமீறுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை சஸ்பென்ட் செய்தல், சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம்.

      தமிழ்நாட்டின் சிறந்த இ-செலான்கள்

      சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடுதான் அதிக எண்ணிக்கையிலான இ-செலான்களை வழங்கியுள்ளது. இந்த மாநிலம் சுமார் 5.6 கோடி இ-செலான்களை வழங்கி, ரூ.755 கோடியை வசூலித்துள்ளது. பட்டியலில் முதலிடம் பிடித்த பல்வேறு குற்றங்களும் அவற்றின் பங்குகளும்: சிவப்பு விளக்கை மீறிச் செல்லுதல் (28%), அதிவேகம் (23%), வாகனம் ஓட்டும்போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துதல் (23%), சரக்கு வண்டியில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல் (12%), குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் (8%), சரக்கு வண்டியில் அதிக சுமையை ஏற்றிச் செல்லுதல் (7%).

      அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

      தமிழ்நாட்டில் இ-செலான்களைச் சரிபார்ப்பதற்கோ அல்லது நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கோ இந்த மாநிலத்திற்கு உரிய தனி வலைத்தளம் எதுவும் இல்லை. எனவே, பரிவாஹன் வலைத்தளம் அல்லது பாலிசிபஜார் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் போன்ற, பரிவாஹனிடமிருந்து நேரடியாக அங்கீகரிக்கப்பட்ட தகவல்களைக் காட்டும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களே உங்களுக்குச் சிறந்த தேர்வாக இருக்கும்.

      இல்லை, நீங்கள் செலுத்த வேண்டிய தொகையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தத் தவறினால், உங்களிடம் கூடுதலாகத் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும். உங்கள் அபராதங்கள் காலப்போக்கில் கூடிக் கொண்டே போகும். மேலும், கட்டணத்தைச் செலுத்தத் தவறினால் அது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

      தமிழ்நாடு முழுவதும் உள்ள நகரப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில், ANPR (ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெக்கக்னிஷன்) கேமராக்களையும், நிகழ்நேரக் கண்காணிப்பையும் கொண்டு போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்படுகின்றன. எனவே ஆம், காவல்துறை அதிகாரி இல்லாதபோதும் இ-செலான்கள் வழங்கப்படுகின்றன.

      பரிவாஹன் போர்ட்டலில் கோரிக்கை விடுத்த பிறகு, தவறாக வழங்கப்பட்ட இ-செலான்கள் ரத்து செய்யப்படலாம்.

      Disclaimer: The list mentioned is according to the alphabetical order of the insurance companies. Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by any insurer. This list of plans listed here comprise of insurance products offered by all the insurance partners of Policybazaar. For complete list of insurers in India refer to the Insurance Regulatory and Development Authority of India website www.irdai.gov.in
      Disclaimer: The list mentioned is according to the alphabetical order of the insurance companies. Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by any insurer. This list of plans listed here comprise of insurance products offered by all the insurance partners of Policybazaar. For complete list of insurers in India refer to the Insurance Regulatory and Development Authority of India website www.irdai.gov.in

      *Savings are based on the comparison between the highest and the lowest premium for own damage cover (excluding add-on covers) provided by different insurance companies for the same vehicle with the same IDV and same NCB. Actual time for transaction may vary subject to additional data requirements and operational processes.

      Close
      Download the Policybazaar app
      to manage all your insurance needs.
      INSTALL
      Claude
      top