குடும்ப மருத்துவ காப்பீடு

குடும்ப மருத்துவ காப்பீடு என்பது ஒரு வகையான மருத்துவ காப்பீட்டு திட்டமாகும்.இது ஒரே ஒரு பிரிமியம் தொகை மூலமாக குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் காப்பீடு வழங்கி உதவுகிறது. இந்த மாதிரியான திட்டம் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரே சமயத்தில் வியாதி உற்றாலோ அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலோ ஒரே நேரத்தில் இரண்டில் இருந்து மூன்று நபர்களுக்கு தேவையான காப்பீடை வழங்குகிறது.

Read More

 • Policybazaar is one of India's leading digital insurance platform
 • ~Source - Google Review Rating available on:- http://bit.ly/3J20bXZ
 • 6.7 Crores Registered consumer
 • 51 Insurance partners
 • 3.4 Crores Policies sold
Policybazaar exclusive benefits
 • 30 minutes claim support*(In 120+ cities)
 • Relationship manager For every customer
 • 24*7 claims assistance In 30 mins. guaranteed*
 • Instant policy issuance No medical tests*

*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply

*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply

Back
Find affordable plans with up to 25% Discount**
 • 1
 • 2
 • 3
 • 4

Who would you like to insure?

 • Previous step
  Continue
  By clicking on “Continue”, you agree to our Privacy Policy and Terms of use
  Previous step
  Continue

   Popular Cities

   Previous step
   Continue
   Previous step
   Continue

   Do you have an existing illness or medical history?

   This helps us find plans that cover your condition and avoid claim rejection

   Get updates on WhatsApp

   Previous step

   When did you recover from Covid-19?

   Some plans are available only after a certain time

   Previous step
   Advantages of
   entering a valid number
   valid-mobile-number
   You save time, money and effort,
   Our experts will help you choose the right plan in less than 20 minutes & save you upto 80% on your premium

   நீங்கள் உங்கள் குழந்தை , மனைவி, மற்றும் உங்களுக்கும் குடும்ப மிதவை திட்டத்தின் கீழ் காப்பீடு வசதி பெற்று உங்கள் குடும்பத்தினர்கள் முழு காப்பீட்டு தொகையையும் பாதுகாப்பாக பெற முடியும். உங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்த திட்டத்தினை மாற்றி அமைத்தும் கொள்ளலாம்.

   தற்போதைய நோய் பரவல் கால மத்தியில் நீங்கள் உங்கள் குடும்பத்தின் மருத்துவ வசதிகளை பற்றி யோசிப்பது தலையாய கடமையாகும்.உங்கள் குடும்பத்தினர் அதிகரிக்கும் மருத்துவ செலவுகளுக்கு மத்தியில் போதுமான மருத்துவ உதவி பாதுகாப்புகளை பெறுவதற்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் மிக முக்கியாமாக அமைகிறது. இந்த காலகட்டத்தில் உங்களிடம் ஏற்கனெவே உள்ள குடும்ப மருத்துவ மிதவை திட்டமானது கோவிட் – 19 கும் பாதுகாப்பு நல்குகிறது.

   ஆனாலும், கொரோனா கவஜ் திட்டம் போன்ற கொரோனா மருத்துவ உதவி திட்டங்களையும் கருத்தில் கொள்ளலாம். இது கோவிட் சம்பந்தமான மருத்துவமனை தங்கும் செலவுகள், வீட்டு சிகிச்சை, மற்றும் ஆயுஷ் சிகிச்சை போன்றவற்றிர்க்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இது பிபிஈ கிட் , கையுறை, முககவசம், ஆக்சிமீட்டர், வென்ட்டிலேட்டர் , பாதவுறை போன்ற அனுபவிக்கக்கூடிய பொருட்களுக்கான மருத்துவ செலவுகளையும் உள்ளாடக்கியது.

   நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு போதுமான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தேடி கொண்டிருக்கிறீர்கள் எனில் , பாலிசிபஜாரில் குறிப்பிடபட்டுள்ள சிறந்த திட்டங்களை ஒப்பிட்டு காண முடியும்.

   குடும்பத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் வாங்குவதற்கான நன்மைகள்

   ஒரு பெரிய குடும்பத்தில் உள்ள தாத்தா பாட்டிகளில் துவங்கி சிறு குழந்தைகள் வரை குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் பொறுத்தமாக அமைவதே இதன் தனிசிறப்பு ஆகும். குடும்ப மிதவை காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற கூடிய நன்மைகள் இன்னும் பல இருக்கின்றன. ஒரே ஒரு திட்டத்தின் மூலம் குடும்பத்தின் அனைவருக்கும், வயதை பொருட்படுத்தாமல் நாம் பாதுகாப்பு பெற முடியும். சில முக்கிய நன்மைகளை நாம் இங்கே காண்போம்.

   கவலையில்லாத மருத்துவ செலவுகள் பாதுகாப்பு

   குடும்ப மருத்துவ திட்டம், ஒவ்வொருவருக்கும் தனிதனியே காப்பீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்கவேண்டிய அவசியத்தை குறைகின்றன.அதோடு, ஒவ்வொருவருக்கும் தனி தனி பிரிமியம் கட்டவேண்டியதும் இல்லை. ஒருவேளை மருத்துவமனையில் தங்கும் சூழல் ஏற்படின், சாதாரண மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் போலவே குடும்ப மருத்துவ திட்டங்களிலும் காப்பீட்டாளர் , திட்டத்தில் இணைப்பில் உள்ள மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சை பெற்று கொள்ளலாம். இதன்மூலம் , நாம் நமது குடும்பத்தினரை மருத்துவ வசதிகளில் எந்தவொரு குறைவும் இன்றி அனைத்தும் பெற உதவுகின்றன.

   குடும்பத்தின் புது உறுப்பினர்களை பாதுகாப்பது எளிது

   இந்த திட்டங்களில், புது குடும்ப உறுப்பினரை இணைத்தல் எளிது. புது உறுப்பினர்களை சேர்க்கும் பொழுது காப்பீட்டை புதுப்பிக்க வேண்டியது அவசியம். நீங்கள் உங்கள் திட்டத்தில் உங்களுடைய பெற்றோரை இணைக்கும் பொழுது அதிக காப்பீட்டு தொகையை தேர்வு செய்யவும். ஒருவேளை குடும்பத்தின் மூத்த உறுப்பினர் இறந்தாலோ, அல்லது பாதுகாப்பிற்கு தகுதியின்றி போனாலோ, மற்ற உறுப்பினர்கள் மருத்துவ பாதுகாப்பு வசதிகளை பெற்று கொண்டிருப்பர். இதுவே இத்திட்டத்தின் சிறப்பு ஆகும்.

   ஏற்கத்தக்க பிரிமியம்

   குடும்ப மருத்துவ காப்பீட்டில் , குடும்பத்தின் ஒவ்வொருவருக்கும் தனி தனி பிரிமியம் கட்டவேண்டியதில்லை. ஒரே திட்டத்தின் கீழ் நீங்கள் உங்களது வாழ்க்கைதுணை , குழந்தைகள், மற்றும் பெற்றோரை ஏற்றுகொள்ளக் கூடிய பிரிமியம் தொகயை கட்டி இணைத்து கொள்ளலாம். எனினும், பெற்றோரின் வயதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தனி மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் எடுத்து கொள்வது நன்று.

   ఆరోగ్య బీమా సంస్థ
   Expand

   ஒரே திட்டத்தில் பெற்றோருக்கும் மருத்துவ காப்பீட்டு பாதுகாப்பை பெறுதல்

   ஒரே திட்டத்தில், நீங்கள் உங்களது பெற்றோர் மற்றும் உங்கள் வாழ்க்கை துணையின் பெற்றோர் இருவரையும் இணைத்து கொள்ளலாம். கூடுதல் பிரிமியம் செலுத்துவதன் மூலம், உங்கள் சார்ந்துள்ள பெற்றோர் மற்றும் உங்களது வாழ்க்கை துணையின் பெற்றோருக்கும் தனி தனி காப்பீட்டு திட்டங்கள் பெற முடியும்.

   குடும்பத்திற்கான கோவிட் மருத்துவ பாதுகாப்பு

   நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க கொரோனா வைரஸ் மருத்துவ பாதுகாப்பினை வாங்கலாம் . பெரும்பாலான காப்பீடு நிறுவனங்கள் சாதாரன மருத்துவ காப்பீட்டு திட்டத்திலேயே கொரோனாவிற்கான மருத்துவ பாதுகாப்பினையும் வழங்குகின்றன. கொரொனா கவஜ் திட்டம் மற்றும் கொரொனா ரக்ஷக் திட்டத்துடன் இணைந்து நிறைய மருத்துவ காப்பீடு வழங்குபவர்கள் கொரொனா வைரஸ் சிகிச்சை பாதுகாப்பையும் வழங்குகின்றன.கொரொன கவஜ் திட்டமானது, குடும்ப மிதவை முறையில் மருத்துவமனையில் தங்குதல் செலவுகளுக்கான பாதுகாப்பினையும் வழங்குவதுடன், மருந்துகள், பிபிஈ கிட், ஐ சி யு செலவுகள் , மருத்துவர் கட்டணம் போன்றவற்றிர்கும் சேர்த்து பாதுகாப்பு வழங்குகின்றன.

   கொரொன ரக்ஷக் திட்டமும் கோவிட் சிகிச்சை பாதுகாப்பினை வழங்கினாலும், பாதுகாப்பானது, குறைந்தது 72 மணிநேர மருத்துவமனையில் தங்குவதன் மூலம் மட்டுமே ஒருவரால் பெறமுடியும். குடும்பத்தின் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கொரொனா காப்பீடு எடுக்க விரும்பினால் இந்த திட்டம் நல்ல தேர்வு. அல்லது உங்களது மருத்துவ காப்பீட்டு திட்டம் கொரொனா பாதுகாப்பு வழங்குகிறதா என காப்பீட்டு செய்பவரிடம் கேட்டுகொள்ளலாம்.

   கூடுதல்நன்மைகளைபெறுவதற்கானவாய்ப்பு

   கொடிய நோய் பாதுகாப்பு, பிரசவ கால பாதுகாப்பு போன்ற பல்வேறு வகையான கூடுதல் நன்மைகள் இருக்கின்றன. உதாரணமாக, இளந்தம்பதியர் பிரசவ கால பாதுகாப்பு மற்றும் சிசுவுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை பெறலாம். ஆனால், இந்த நன்மைகள் காத்திருப்பு காலம் சார்ந்தவை. குடும்பதிற்கான சிறந்த மருத்துவ காப்பீடு திட்டம் வாங்கவேண்டும் எனில், காப்பீட்டு பத்திரங்களை நன்றாக படியுங்கள்.

   சலுகைகளை பெறுங்கள்

   குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், நீங்கள் தள்ளுபடி மற்றும் இதர நன்மைகளை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகையாக பெறலாம். உங்கள் குடும்ப நலனை காக்க இதுவே சிறந்த மற்றும் எளிய வழியாகும்.

   மருத்துவ காப்பீட்டு பிரிமியத்தில் வரி நன்மைகள்

   இந்திய வருமான வரி சட்டம் 80D இன் கீழ் மருத்துவ காப்பீட்டு திட்ட பிரிமியம் வரிகளுக்கு அப்பாற்பட்டது ஆகும்.ஒருவர், தனது பெற்றோர் மற்றும் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீட்டு பிரிமியம் செலுத்தினால், வரி நன்மைகள் பெற முடியும்.

   2020ல் இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்

   இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள சில சிறந்த குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டங்களை நீங்கள் மருத்துவகாப்புகோரல் பெற எளிதாக அமைய கொடுத்துள்ளோம். நீங்கள் உங்களது தேவைகளான காப்பு தொகை, பாதுகாப்பு, வயது வரம்பு, முன்- பின் மருத்துவமனை தங்கும் செலவுகள் முதலியன பொறுத்து தேர்வு செய்யலாம்.

   காப்பீட்டு நிறுவனம்

   குடும்ப மருத்துவ திட்டம்

   கப்பு தொகை (ரூ .)

   முன் & பின் மருத்துவமனை பராமரிப்பு செலவுகள்

   முன்பேயுள்ள நோய்கள்

   ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சுரன்ஸ்

   ஆக்டிவ் ஹெல்த் ப்ளாட்டினம்

   2லட்சம்- 2 கோடி

   முன்: 60 நாள்

   பின் : 90 நாள்

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   பஜாஜ் அலையன்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ்

   ஃபேமிலி ஃப்லோட்டர் ஹெல்த் - கார்ட்

   1.5 – 50 லட்சம்

   முன்: 60 நாள்

   பின் : 90 நாள்

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   பாரதி ஏ எக்ஸ் ஏ ஹெல்த் இன்சுரன்ஸ்

   ஸ்மார்ட் சூப்பர் ஹெல்த் இன்சுரன்ஸ் பாலிசி

   5 லட்சம் – 1 கோடி

   முன் : 60 நாள்

   பின் : 90 நாள்

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் ( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ் என்று அழைக்கபட்ட்து)

   கேர் ஹெல்த் கேர் ப்ளான்

   3-6 கோடி

   முன் : 30 நாள்

   பின் : 60 நாள்

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   சோழா எம் எஸ் ஹெல்த் இன்சுரன்ஸ்

   சோழா எம் எஸ் ஃபேமிலி ஹெல்த்லைன் இன்சுரன்ஸ்

   2 – 15 லட்சம்

   முன் : 60 நாள்

   பின் : 90 நாள்

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   டிஜிட் ஹெல்த் இன்சுரன்ஸ்

   டிஜிட் ஹெல்த் இன்சுரன்ஸ் ப்ளான்

   2-25 லட்சம்

   -

   இல்லை

   ஈடல்வெய்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ்

   ஃபேமிலி ஃப்லோட்டர்

   1 கோடி வரை

   சில்வர் : 30 & 60 நாள்

   கோல்ட் : 60 & 90 நாள்

   ப்ளாட்டினம் : 90 & 180 நாள்

   -

   ஃப்யுச்சர் ஜெனெரலி ஹெல்த் இன்சுரன்ஸ்

   ஃப்யுச்சர் ஹெல்த் சுரக்ஷா ஃபேமிலி ப்ளான்

   5 – 10 லட்சம்

   முன் : 60 நாள்

   பின் : 90 நாள்

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   இஃப்கோ டோக்கியோ ஹெல்த் இன்சுரன்ஸ்

   இஃப்கோ டோக்கியோ ஃபேமிலி ஹெல்த் ப்ரொடக்டர் ப்ளான்

   1.5 – 30 லட்சம்

   முன் : 45 நாள்

   பின் : 60 நாள்

   -

   கோடக் மஹிந்திரா ஹெல்த் இன்சுரன்ஸ்

   ஃபேமிலி ஹெல்த் இன்சுரன்ஸ்

   2-100 லட்சம்

   உண்டு

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   லிபர்டி ஹெல்த் இன்சுரன்ஸ்

   செக்யூர் ஹெல்த் கனக்ட்

   செக்யூர் பேஸீக் : 3,4,5ல

   செக்யூர் எலைட் : 2,3 , 4, 5, 6, 7.5,10 ல

   செக்யூர் சுப்ரீம் : 3,4,5,6,7.5,10 ல

   செக்யூர் கம்ப்லீட் : 2,3,4,5,6,7.5,10,15 ல

   -

   -

   மேக்ஸ் புப்பா ஹெல்த் இன்சுரன்ஸ்

   ஹார்ட்பீட் ஃபேமிலி ஃபர்ஸ்ட் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம்

   சில்வர் : 3- 15 லட்சம்

   கோல்ட் : 3 – 50 லட்சம்

   ப்ளாட்டினம் : 15 – 50 லட்சம்

   முன் : 60 நாள்

   பின் : 90 நாள்

   48 மாதங்கள் சில்வருக்கு மற்றும் 24 மாதங்கள் கோல்ட் & ப்ளாட்டினதிற்கு

   மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சுரன்ஸ்

   ஃபேமிலி ஃப்லோட்டர் – ப்ரொஹெல்த் ப்ரொடக்ட் ப்ளான்

   2.5 – 50 லட்சம்

   முன் : 60 நாள்

   பின் : 90 நாள்

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   நேஷனல் ஹெல்த் இன்சுரன்ஸ்

   நேஷனல் இன்சுரன்ஸ் மெடிக்லைம் பாலிசி

   50000 – 5 லட்சம்

   முன் : 30 நாள்

   பின்: 60 நாள்

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   ந்யூ இந்தியா அஷுரன்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ்

   ஃபேமிலி ஃப்லோட்டர் மெடிக்லைம் பாலிசி

   2 – 5 லட்சம்

   முன் : 30 நாள்

   பின் : 60 நாள்

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   ஓரியன்டல் இன்சுரன்ஸ் கம்பனி

   ஹேப்பி ஃபேமிலி ஃப்லோட்டர் பாலிசி

   1 – 20 லட்சம்

   முன் : 30 நாள்

   பின் : 60 நாள்

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   ராயல் சுந்தர்ம் ஹெல்த் இன்சுரன்ஸ்

   ராயல் சுந்தரம் லைஃப்லைன் ஹெல்த் இன்சுரன்ஸ்

   க்ளாசிக் : 2,3,4 லட்சம்

   சுப்ரீம் : 5,10,15,20 & 50 லட்சம்

   எலைட் : 25,30,50,100 & 150 லட்சம்

   க்ளாசிக் : 30 & 60 நாள்

   சுப்ரீம் : 60 & 90 நாள்

   எலைட் : 90 & 180 நாள்

   24 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   ரிலையன்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ்

   ரிலையன்ஸ் ஹெல்த்வைஸ் ப்ளான்

   1- 5 லட்சம்

   முன் : 30 நாள்

   பின் : 60 நாள்

   24 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   ஸ்டார் ஹெல்த் இன்சுரன்ஸ்

   ஸ்டார் ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா ப்ளான்

   1 – 15 லட்சம்

   முன் : 30 நாள்

   பின் : 90 நாள் ( 5000 வரை 7% மொத்த செலவுகள் )

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   எஸ் பி ஐ ஹெல்த் இன்சுரன்ஸ்

   எஸ் பி ஐ ஆரோக்யா ப்ரீமியர் ப்ளான்

   10 – 30 லட்சம்

   முன் : 60 நாள்

   பின் : 90 நாள்

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்சுரன்ஸ்

   வெல்சுரன்ஸ் ஃபேமிலி பாலிசி

   2 – 4 லட்சம்

   -

   48 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   யுனைடட் இந்தியா ஹெல்த் இன்சுரன்ஸ்

   ஃபேமிலி மெடிக்கேர் பாலிசி

   1 – 10 லட்சம்

   முன் : 30 நாள்

   பின் : 60 நாள் அதிகமாக 10 % எஸ். ஏ வை பொறுத்து

   24 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   யுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்சுரன்ஸ்

   கம்ப்லீட் ஹெல்த்கேர் இன்சுரன்ஸ்

   பேசிக் : 1-2 லட்சம்

   எசென்ஷியல் : 3- 5 லட்சம்

   ப்ரிவிலெஜ் : 6- 10 லட்சம்

   முன் : 30 நாள்

   பின் : 60 நாள்

   36 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு

   பொறுப்பு துறப்பு : * ஒரு குறிப்பிட்ட காப்பீட்டாளரையோ அல்லது காப்பீட்டாளரின் காப்பீடையோ பாலிசிபஜார் பரிந்துரைக்கவோ , மதிப்பிடவோ அல்லது ஒப்புவிக்கவோ இல்லை.

   குடும்ப காப்பீடு திட்டம் வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ளவேண்டியவை

   உங்கள் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய கூறுகளை இங்கு காணலாம். உங்கள் குடும்பத்தினரின் மருத்துவ தேவைகளை பொறுத்து போதுமான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நீங்கள் வாங்குகிறீர்களா என உறுதி செய்துகொள்ளுங்கள்.

   01 குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும் பாதுகாப்பு:

   பல்வேறு மருத்துவ காப்பீட்டு திட்டங்களை ஒப்பிடும் பொழுது, அந்த திட்டங்களின் கீழ் வழங்கப்படும் அடிப்படை மருத்துவ பாதுகாப்புகளை பட்டியலிடுவது முக்கியம்.பெரும்பாலான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் பராமரிப்பு செலவுகள், ஆம்புலன்ஸ் கட்டணம், மருத்துவமனையில் தங்கும் செலவுகள் முதலியவற்றை வழங்குகின்றன.

   நீங்கள் குழந்தை பெற விரும்புகிறீர்கள் எனில்,குழந்தைக்கும் காப்பீடு அளிக்கும் திட்டம் அல்லது ஏற்கனவே உள்ள உங்களது திட்டத்தில் குழந்தையை இணைத்து கொள்ளும் வசதி உள்ள குடும்ப மிதவை மருத்துவ காப்பீட்டு திட்டங்களை பெறுங்கள்.

   மேலும் பாலிசி ஒப்பிடல், முன்பேயுள்ள நோய்கள், வாழ்க்கை முறை மற்றும் முதல் 30 நாட்களுக்கான விலக்குகள் முதலியவற்றை கருத்தில் கொண்டு நடக்க வேண்டும்.

   02 குடும்ப மிதவை திட்டத்தின் காப்பு தொகையை அதிகரிக்கும் இலகு தன்மை

   வாழ்க்கை முறை செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் எப்பொழுதும் ஓரே மாதிரியாக இருப்பதில்லை. பெரும்பாலான காப்பீடு நிறுவனர்கள் வருங்காலங்களை கருத்தில் கொண்டு காப்பு தொகை புதுப்பிக்கும் தன்மையை கொண்டுள்ளனர். சில நேரங்களில், நீங்கள் புதுப்பிக்கும் பொழுது போனஸ் கோரவில்லை எனில், காப்பீட்டு நிறுவனர் காப்பு தொகையை அதிகரித்து உங்களுக்கு வெகுமதி வழங்குகிறார்.

   03 பணமில்லா மருத்துவமனை செலவுகளுக்கான இருப்பு நிலை:

   தற்போது, அனைத்து மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுமே தங்களது இணைப்பிற்கு உட்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா மருத்துவமனை செலவுகளை கொண்டுள்ளன. இது மருத்துவமனை இரைச்சலின்றி இயங்க உதவுகிறது.ஆனாலும், சிறந்த மருத்துவமனைகள் அந்த பட்டியலில் இருக்கிறதா என விசாரித்து கொள்வது இன்றியமையாதது.

   04 அதிக புதுப்பிக்கும் வயதினை கேளுங்கள்

   அதிக காப்பீட்டு நிறுவனங்கள் 60-65 வயது வரை காப்பீடு புதுப்பிக்கும் முறையை வழங்குகின்றன. தற்போது, சில மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் வாழ்க்கை முழுவதுமற்கான புதுப்பிக்கும் முறையுடைய திட்டங்களையும் வழங்குகின்றன. உங்களை சங்கடங்களில் இருந்து சரியான நேரத்தில் காக்கும் குடும்ப மிதவை திட்டங்களை தேர்வு செய்வதை உறுதி செய்யுங்கள்.

   05 பிரச்சனையின்றி காப்புத்தொகை கோரலை பெறுங்கள்:

   அனைத்து நிறுவங்களுமே காப்பீட்டு முறைப்படுத்தலின் படி இயங்குகின்ற பொழுதிலும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட வேறுபாடுகள் இருக்கும். உங்கள் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடு திட்டம் வாங்குவதற்கு முன்பே அந்த நிறுவனத்தின் காப்புதொகை கோரல் இயக்க முறை குறித்து அறிந்துகொள்ளுங்கள். நிறைய நிறுவனங்கள் தற்போது பணமில்லா மருத்துவமனை வசதிகளை வழங்குவதால், பத்திரங்களை சேர்த்து பெற்று , முழுமைபடுத்துவது தேவையில்லை.

   குடும்ப மிதவை மருத்துவ திட்டத்தில் உள்ள பொது விலக்குகள்

   உங்கள் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடு திட்டம் வாங்கும் பொழுது, நீங்கள் காப்பீட்டு பத்திரங்களை நன்றாக படித்து பார்த்து திட்ட விலக்குகளை விரிவாக புரிந்துகொள்வது அவசியம்.

   மேலும், முன்பேயுள்ள நோய்கள், பணமில்லா மருத்துவமனை வசதி, காத்திருப்பு காலம் முதலிய காப்பீடு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு கூறுகளை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். ஏனெனில், இந்த கூறுகளே நாம் மருத்துவ உதவி கோரும் தன்மை மற்றும் மருத்துவமனை பராமரிப்பு முறை போன்ற பாதுகாப்புகளை பெறுவதை உறுதிபடுத்துகின்றன.

   கீழே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ செலவுகள் பொதுவாகவே இந்தியாவில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இருந்து விலக்குகள் பெறுவதில்லை-

   • ஓபிடி சிகிச்சை மற்றும் சாதாரண மருத்துவ சோதனைகள்
   • எந்தவொரு மயக்கமுறை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செலவுகள்
   • வாழ்வு பாதுகாப்பு இயந்திரங்களுக்கான செலவுகள்
   • திட்டத்தில் இல்லாத, வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட சிகிச்சைகள்
   • போர் கால நிகழ்வுகள் , நெரிமுறையற்ற நிகழ்வுகள், அணு ஆயுத நிகழ்வுகள், புரட்சி நிகழ்வுகள்,வெளிநாட்டு எதிரிகள் தொடர்பான நிகழ்வுகள் முதலியன காரணமாக ஏற்படும் நோய் மற்றும் காயங்கள்
   • பிரசவ கால அல்லது பேறு கால பிரச்சனைகள் (திட்டத்தில் குறிப்பிடின்), உதாரணமாக, விருப்ப கருகலைப்பு, எக்டோபிக் கர்ப்பம் அல்லாத எதிர்பாராத கருகலைப்பு .
   • காத்திருப்பு காலம் முடியும் வரை முன்பேயுள்ள நோய்கள் பாதுகாப்புக்கு உட்படாது.

   குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டம், தனிநபர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விட சிறந்ததா?

   இரு திட்டங்களும் வழங்கும் நன்மைகளை பல்வேறுபட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் ஒப்பிட்டு பார்த்தால் ஒழிய இரண்டு திட்டங்களில் சிறந்தது எது என அறிவது கடினமாகும்.

   மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், மொத்த குடும்பத்திற்கும் ஓரே பிரிமியம் கட்டி, ஓரே காப்பு தொகையுடன் கூடிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதாவது, ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஓரே காப்பீட்டு திட்டம், வருடத்திற்கு ஓரே ஒரு முறை மட்டும் பிரிமியம் கட்ட வேண்டும்.

   இதற்கு எதிராக, தனிநபர் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒரே ஒருவருக்கு மட்டுமே பாதுகாப்பு அளிப்பதால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும். பல்வேறு திட்டங்கள் இருப்பதால்,பிரிமியம் தொகையும் திட்டத்தை பொறுத்து வேறுபடும்.

   நாம் கட்டும் பிரிமியம் தொகையின் அடிப்படையில் இந்த இரண்டு திட்டங்களையும் ஒப்பிட்டு பார்த்தால், பல தனிநபர் மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு கட்டப்படும் பிரிமியம் தொகை ஒரே ஒரு குடும்ப மிதவை காப்பீட்டு திட்டத்தில் கட்டப்படும் பிரிமியம் தொகையை விட அதிகம்.

   குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டங்களை பெறுவதற்கான வரம்புகள்

   ஒரு குடும்ப மருத்துவ காப்பீடு என்பது குழு மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்றது . இது ஒரே காப்பு தொகையில், ஓரே திட்டத்தில்,வருடம் ஓரே முறை கட்டப்படும் பிரிமியம் தொகையுடன் அனைத்து குடும்ப உறுப்பினரையும் உள்ளடக்கும். உங்களது குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 4 அல்லது 6 ஆக இருப்பின், உங்களுக்கு எந்த வரம்பும் இல்லை.

   உங்கள் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் வாங்குவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய சில காரணிகளாவன கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

   • கூடுதல் பிரிமியம் கட்டுவதன் மூலம், கூடுதலாக, குடும்பத்தின் புது உறுப்பினர்களை இணைத்து கொள்ளும் வசதி
   • குடும்பத்தில் மூத்தவர் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடையும்பொழுது திட்டம் காலாவதி ஆகிவிடும்.
   • குடும்பத்தில் புதிய உறுப்பினரை இணைக்கும் பொழுது, குடும்பத்தில் உள்ள அனைவரும் போதுமான பாதுகாப்பு பெறும் வகையில், கூடுதல் காப்பு தொகையை தேர்வு செய்யுங்கள்.
   • காப்பீட்டு பத்திரத்தில் குறிப்பிட்ட வயதை குழந்தை அடைந்த பிறகு , அதற்கு காப்பீடு பாதுகாப்பு வழங்காது.
   • உங்களுடைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், உங்கள் பெற்றோரை இணைக்காதீர்கள் , அது அதிக பிரிமியம் தொகைக்கு வழிகோரும்.

   மொத்தமாக, எந்தவொரு குடும்பமும் தன்னுடைய நிதி நிலையை பொறுத்து மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்யலாம். மேலும், பல தனிநபர் மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் மொத்த பிரிமியம் தொகயுடன் ஒப்பிடும் பொழுது இதில் பிரிமியம் குறைவு.

   *ஐ ஆர் டி ஏ ஐ ஆல் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களையே சேமிப்புகளாக காப்பீடு செய்பவர் வழங்குகிறார். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

   குடும்பத்திற்கான புது மருத்துவ காப்பீட்டு திட்டத்தை எப்படி வாங்குவது?

   உங்களிடம் ஏற்கனவே உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், புது குடும்ப உறுப்பினரை இணைக்க வேண்டும் எனில், உங்களது காப்பீடு செய்தவரிடம் அதை பற்றி கேளுங்கள். ஆனால், நீங்கள் காப்பீடுகளுக்கு புதியவர் மற்றும் உங்கள் குடும்பத்திற்கு காப்பீடு வாங்க விரும்புகிறீர்கள் எனில், அதற்கு பலதரப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.

   உங்களுடைய நன்மைக்கு, நீங்கள் இணையத்தில் பல்வேறு வகையான காப்பீட்டு திட்டங்களை தேடி, உங்களது நிதி நிலைக்கு ஏற்றது எது என அறிந்து, அதில் சிறந்ததை வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் காப்பு தொகையை கருத்தில் கொள்ளாது, வெறும் குறைந்த பிரிமியம் மட்டும் கருத்தில் கொள்ள கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

   நீங்கள் அதிகமாக கட்ட விரும்பவில்லை என்ற காரணத்திற்காக , போதுமான காப்பு தொகை இல்லாத காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது முட்டாள்தனமானது. ஏனெனில், பின் வரும் மருத்துவ செலவுகளை நீங்கள் உங்கள் பையில் இருந்துதான் கொடுக்க போகிறீர்கள். எனவே முடிவை தெளிவாக எடுங்கள்.

   மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ செலவு கோருவது எப்படி?

   நீங்கள் உங்களது மருத்துவ செலவுகளுக்கான காப்பு தொகையை இரண்டு வழிகளில் கோரலாம். அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

   பணமில்லா வசதிக்கான முந்தய ஒப்புதல் பெற, கீழ்கண்ட வழிகளை பின்பற்றுங்கள்:

   • முந்தய ஒப்புதல் பத்திரத்தை ஈமெயில் அல்லது ஃபேக்ஸ் அனுப்புங்கள். பத்திரம் மருத்துவமனயின் காப்பீட்டு உதவியாளரிடம் மற்றும் டி பி ஏ உதவியாளரிடம் இருந்து பெறலாம் அல்லது காப்பீடு செய்தவரின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
   • மருத்துவ சோதனை முடிவு, கண்டறிந்த சோதனை முடிவு, வெளிவரும் பத்திரம், செலவு ரசீதுகள் போன்ற அனைத்தையும் ஒப்படையுங்கள்
   • உங்களுடைய கோரல் வேண்டுதல் ஒப்புதல் பெற்றவுடன், மருத்துவ உதவிகளை வழங்கும் துறையிடம் இருந்து ஒப்புதல் ஈ மெயில் அனுப்பப்படும்.
   • உங்களது கோரலில் எதுவும் சந்தேகம் இருப்பின், மருத்துவமனையின் மூலம் தெளிவுப்படுத்தி கொள்ளப்படும்.
   • உங்களது கோரல் ஒப்புதல் பெறவில்லை எனில் நீங்கள் பணம் திரும்ப பெறுவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

   திரும்ப பெறுவதற்கான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

   • பாலிசி துவங்கும் பொழுது குறிப்பிடப்பட்டு இருந்த சான்றிதல்களுடன் கூடிய மனுவை ஒப்படையுங்கள்
   • காப்பீட்டு நிறுவனத்தின் மருத்துவ உதவிகள் வழங்கும் துறை கேட்கும் சந்தேகங்களை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
   • உங்களது மனுவை ஒப்படைத்த பிறகு, நீங்கள் ஏற்றுகொள்ளப்பட்ட கடிதம் அல்லது மறுப்பு கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்றை பெறுவீர்கள்.

   பாலிசிபஜாரில் இணையத்தின் மூலம் எங்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் வாங்க வேண்டும்?

   மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு இந்தியாவில் பஞ்சம் இல்லை எனினும், ஒரு திட்டத்தை வாங்குவது மிக கடினம். நீங்கள் உங்கள்து நேரம் மற்றும் ஆற்றலை வீணடிக்காமல் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்ற குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டங்களை பாலிசிபஜார் எனும் ஒரே இடத்தில் காணலாம். நீங்கள் இணையத்தில் வாங்கும் பொழுது அவசரமின்றி, சரியான பரிந்துரைகளுடன் தெளிவுத்தன்மையும் பெறலாம். அனைத்து திட்டங்களையும் ஒப்பிட்டு நல்லதொரு முடிவை எடுங்கள்!

   அதிகமாக கேட்கப்பட்ட கேள்விகள் (எஃப் ஏ க்யு ‘ ஸ்)

   • கே.1 குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?

    பதில்: குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டம் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் ஒரே திட்டத்தின் மூலம் பாதுகாப்பு அளிக்கிறது. இந்த திட்டத்தின் காப்பு தொகை மாறாது மற்றும் யாரேனும் ஒருவர் மருத்துவ வசதி பெற்றுவிடில், காலாவதியாகிவிடும். இந்த திட்டத்தின் உறுப்பினர்கள் காப்பீட்டாளர், அவரது குழந்தைகள், பெற்றோர், வாழ்க்கை துணை ஆவர்

   • கே.2 குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் எதற்காக?

    பதில்: தனிநபர் மருத்துவ காப்பீடுகளை விட குடும்ப மிதவை திட்டம் மலிவானது. மேலும், இந்த திட்டம் குடும்பத்தின் புதிய உறுப்பினர்களான பிறந்த குழந்தை மற்றும் வாழ்க்கை துணை எளிதாக இணைக்க உதவுகிறது.

   • கே. 3 குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டம் எவ்வாறு செயலாற்றுகிறது?

    பதில்: குடும்ப மிதவை திட்டத்தின் காப்பு தொகை நிலையானது மற்றும் குடும்பத்தின் யாரேனும் ஒரு உறுப்பினர் மருத்துவ உதவிக் கோரிவிட்டால் நின்றுவிடும். காப்பீடு புதுப்பிக்கும் வரை குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களால் எந்தவொரு மருத்துவ பாதுகாப்பினையும் பெறமுடியாது.

   • கே. 4 தேவையான சான்றிதழ்கள் ( இருப்பின்)

    பதில் : அனைத்து உறுப்பினர்களின் வயது சான்று, தனிநபர் அடையாள சான்று, முகவரி சான்று . காப்பீட்டளரின் வருமான வரி சான்று, முழுமைபடுத்தபட்ட காப்பீட்டு பாரம். சில திட்டங்கள் அனைத்து உறுப்பினர்களையும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்துகிறது.

   • கே.5 ஏற்கனெவே உள்ள திட்டத்தில் எனது குடும்ப உறுப்பினர்களை எவ்வாறு இணைப்பது?

    பதில் : நீங்கள் காப்பீடை புதுப்பிக்கும் பொழுது குடும்ப உறுப்பினர்களை இணைத்து கொள்ளலாம். ஆனால், காப்பீட்டின் இடைகாலத்தில் புதிதாக பிறந்த குழந்தையை தவிர வேறு யாரையும் இணைக்க முடியாது.

   • கே.6 நான் ஏற்கனவே கார்பரேட் காப்பீட்டு திட்டத்தில் இருப்பின், தனியாக மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது அவசியமா?

    பதில்: ஆம், உங்களது பணியாளர் நீங்கள் அந்த நிறுவனத்தில் உள்ளவரை மட்டுமெ உங்களது காப்பீட்டை கருத்தில் கொள்வார். எனவே உங்களுக்கென்று தனி மருத்துவ காப்பீட்டு திட்டம் கட்டயம் இருக்க வேண்டும். நீங்கள் அந்த நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றாலோ அல்லது புதிதாக வேறு துவங்கினாலோ, அந்த காப்பீட்டு திட்டம் உதவியின்றி போய்விடும். உங்களிடம் வேறு எந்த மருத்துவ காப்பீட்டு திட்டமும் இல்லாத நிலையில் எதுவும் மருத்துவ செலவு ஏற்படின், நீங்களும் உங்கள் குடும்பமும் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாவீர்கள்.

    மேலும், ஒரு வேளை உங்கள் நிறுவனம் தீடீரென அதன் கொள்கைகளை மாற்றிக்கொண்டாலோ அல்லது காப்பீட்டு பாதுகாப்பை நிறுத்தினாலோ நீங்கள் தான் அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்க வேண்டியதிருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கென்று உள்ள தனி மருத்துவ காப்பீட்டு திட்டமே கைக்கொடுக்கும்.

   • கே.7 குடும்ப மிதவை காப்பீட்டு திட்டம் என்றால் என்ன ?

    பதில் : குடும்ப மிதவை திட்டத்தில், ஒரே திட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இங்கு மாறாத பாதுகாப்பு தொகையானது அனைத்து குடும்ப உறுப்பினர்களாலும் பங்குகொள்ளப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்தை காக்க குடும்ப மிதவை திட்டமே சிறந்த தேர்வாகும். ஏனெனில் இந்த திட்டம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்குவதால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே காப்பீடு எடுக்கும் வேலையின்றி நம்மை நிம்மதியாக இருக்க செய்கிறது. பொதுவாகவே குடும்ப மிதவை திட்டமானது நாம், னமது வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்கினும் ஒரு சில காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களில் , நமது பெற்றோர் மற்றும் மாமனார் – மாமியார் இணைக்கும் வசதியும் உள்ளது.

   • கே.8 குடும்ப மிதவை திட்டத்தில் காப்பீட்டளர் இறப்பின் என்ன நடக்கும். மீதமுள்ள உறுப்பினர்களில் ஒருவரால் இந்த திட்டத்தை புதுப்பிக்க முடியுமா?

    பதில்: ஆம், முதன்மை காப்பீடாளர் இறந்தாலோ அல்லது முதிர்ச்சி வயதை அடைந்தாலோ , அடுத்த வயது வரம்பை பூர்த்தி செய்த நபர் இந்த திட்டத்தை புதுப்பித்து, இதன் சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம். எந்தவொரு சேர்க்கையோ அல்லது நீக்கமோ புதுப்பிக்கும் பொழுது தான் செய்ய முடியும்.

   • கே.9 சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் பொழுது நான் மருத்துவமனையை மாற்றிக் கொள்ளலாமா?

    பதில்: ஆம், நீங்கள் நல்ல சிகிச்சை மற்றும் சேவைகளை பெற ஏதுவாக மருத்துவமனையை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், இதுகுறித்து உங்களது டி பி ஏ விடம், அவர் தான் உங்களது கோரிக்கையினை திட்டத்தின் வரைமுறைகளுக்குள் அமைகிறதா என சோதிப்பார் , அவரிடம் முன்பே தெரிவிக்க வேண்டும்.

   • கே.10 நான் வெளிநாட்டில் நோயுற்றால் என்ன நிகழும்?

    பதில் : மேக்ஸ் புப்பா, கேர் ஹெல்த், மணிபால் சிக்னா, போன்ற பல்வேறு வகையான் நிறுவனங்கள் சுற்றுலாவின் பொழுது ஏற்படும் நோய்க்கான பாதுகாப்புடன், மருத்துவமனை செலவு, மற்ற மருத்துவ கருத்துகள் போன்ற வசதிகளையும் தருகிறது. மேலும், சுற்றுலா காப்பீட்டு திட்டம் எடுக்க உங்களை பரிந்துரை செய்கிறோம். அதன்மூலம், எதிர்பாராத இறப்பு, பல் சம்பந்தமான செலவுகள், யாத்திரை ரத்து போன்றவற்றிர்க்கும் உதவிகள் பெறலா. இது மருத்துவ செலவுகள், ஆபத்து கால வெளியேற்ற செலவுகள் போன்றவற்றையும் ஏற்கிறது. மேலும் படிக்க

   • கே.11 எந்த விதமான சூழ்நிலைகளில் பணமில்லா மருத்துவமனை செலவுகள் ரத்து செய்யப்படுகிறது?

    பதில்: நீங்கள் பணமில்லா மருத்துவ செலவுகளில் இருந்து கீழ்கண்ட சூழல்களில் ரத்து செய்யப்படுவீர்கள்- டி பி ஏ விற்கு அனுப்பபட்ட தகவல் போதவில்லை அல்லது தகவலில் எதுவும் தவறு இருப்பின் அல்லது அந்த சிகிச்சை உங்கள் திட்டத்தில் இடம் பெறவில்லை எனில் ரத்து செய்யப்படும். ஒருவேளை சரியான நேரத்தில் டி பி ஏ விடம் நமது மனு செல்லவில்லை எனில், நாமே மொத்த செலவுகளையும் ஏற்றுக்கொண்டு பின்னர் திரும்ப பெறும் முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

   • கே. 12 என்னுடைய கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என எப்படி அறிவது?

    பதில்: டி பி ஏ வின் உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்களது காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் கோரிக்கையின் நிலைமை குறித்து அறியலாம்.

   • கே .13 நான் ஒன்றிற்கு மேற்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் எடுத்துக்கொள்ளலாமா? அந்த சூழலில் நான் எப்படி கோரிக்கை செய்வது?

    பதில் : ஆம். நீங்கள் பல காப்பீட்டு திட்டங்களை ஓரே நிறுவனத்திலோ அல்லது வேறு நிறுவனங்களிலோ எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஏற்கனவே இருக்கும் திட்டங்கள் குறித்து காப்பீடு செய்பவரிடம் நீங்கள் காப்பீடு துவங்குபொழுதோ அல்லது கோரிக்கை செலுத்து பொழுதிலோ தெரியப்படுத்த வேண்டும். வேறுபட்ட நிகழ்வுகளை கொண்டு நாம் கோரிக்கை வழிமுறையை அறியலாம்.

    நிகழ்வு 1: காப்பீட்டாளர் ஒன்றிர்கு மேற்பட்ட ஓரே கால அளவு கொண்ட, காப்பு தொகையை விட கோரிக்கை தொகை குறைவாக கொண்ட திட்டங்களில் உள்ளார் எனில், எந்த திட்டத்தில் கோரலாம் என்பதை காப்பீடாளரே முடிவு செய்யலாம். உதாரணமாக, திரு. குமார் 4 லட்ச காப்பீடு திட்டத்தை திரு X என்பவரிடமும், ரூ 2 லட்ச காப்பீடு திட்டத்தை திரு Y இடமும் துவங்குகிறார். கோரல் தொகை 2 லட்சம். இந்த நிலயில் காப்பீட்டாளர் எந்த திட்டத்தை வேண்டுமென்றாலும் தேர்வு செய்து, விதிமுறைகளின் படி நன்மைகளை பெறலாம்

    நிகழ்வு 2: இதில், கோரல் தொகையானது, காப்பு தொகையை விட அதிகம். இந்த நிலையில் காப்பீட்டளர் எந்த காப்பீடு செய்பவர் சரியான நேரத்தில், மனுவை ஏற்பாரோ அவரிடம் கோரலாம். ஆனால், காப்பீட்டாளர் மற்ற திட்டங்கள் குறித்து கோரல் நேரத்தில் குறிப்பிடவில்லை எனில், கோரல் தொகை, காப்பு தொகையை விட குறைவாக இருக்கும் மற்றும் இதர செலவுகளை காப்பீட்டாளரே கவனித்து கொள்ளவேண்டும்.

    நிகழ்வு 3: நிலையான நன்மைகளின் கீழ் கோரல் : காப்பீட்டாளர் கொடிய நோய் போன்ற நிலையான நன்மைகள் உடைய திட்டத்தில் இருந்தார் எனில், அத்திட்டத்தின் படி அவர் சிகிச்சை சம்பந்தமாக எந்த கோரலும் செய்யமுடியாது. திட்டத்தின் இதர நன்மைகளை பெற காப்பீட்டாளரால் இயலும். இத்தகு சமயத்தில், பல வியாதிகளுக்கான காத்திருப்பு காலம் முடிந்த பழைய திட்டங்களின் அடிப்படையில் கோரல் செய்யவேண்டும் .

   Search
   Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
   top
   Close
   Download the Policybazaar app
   to manage all your insurance needs.
   INSTALL