முதியோருக்கான மருத்துவ காப்பீடு என்பது 60 முதல் 75 வரையுள்ள தனி நபர்களுக்கு வழங்கப்படும் ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டமாகும். முதியோருக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சில நன்மைகளாவன, பணமில்லா மருத்துவமனை பாதுகாப்பு, பராமரிப்பு செலவுகள், முன்பேயுள்ள மற்றும் நோய்களுக்கான பாதுகாப்பு ஆகியனவாகும்.
*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply
Who would you like to insure?
ஐ ஆர் டி ஏ ஐ இன் கூற்றுப்படி, இப்பொழுது ஒவ்வொரு மருத்துவ காப்பீட்டு நிறுவனரும் 65 வயதுடைய ஒவ்வொரு தனி நபருக்கும் மருத்துவ காப்பீடு வழங்குகின்றன. இந்த மேம்படுத்தப்பட்ட கூற்றின் மூலம் அனைத்து தனி நபர்களும் தங்களது வாழ்க்கையின் இறுதி காலத்தில் தேவையான உதவிகளை பெற முடியும். மேலும், பாலிசிதாரர்களுக்கு, அவர்களது தற்போதைய காப்பீட்டு நிறுவனம் திருப்தி அளிக்கவில்லை எனில், வேறு காப்பீட்டு நிறுவனத்திற்கு மாறும் வசதியும் இது வழங்குகிறது. இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பஞ்சம் இல்லை, எனினும் சரியான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்வது சவாலாக இருக்கிறது.
முதியோருக்கான மருத்துவ உதவி கோரும் திட்டம், பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. இது மருத்துவமனை செலவுகள், அறுவை சிகிச்சை செலவுகள், கொடிய நோய், எதிர்பாராத காயங்கள், முன்பேயுள்ள நோய்கள் போன்றவைகளை பார்த்துக்கொள்கிறது. காப்பீடு ஒழுங்காக புதுப்பிக்கப்பட்டு வந்தால், 80 வயது வரை வாழ்க்கை முழுவதற்குமான புதுப்பிக்கும் நன்மைகளுடன் திட்ட நன்மைகளை அனுபவிக்கலாம்.
இந்தியாவில் முதியோருக்கான மருத்துவ உதவி கோரல் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளாவன:
மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் பெயர் |
மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் |
நுழைவு வயது |
காப்புத் தொகை (ரூ இல்) |
முன்பேயுள்ள நோய்க்கான பாதுகாப்பு |
மருத்துவ பரிசோதனை |
ஆக்டிவ் கேர் சீனியர் சிட்டிசன் ஹெல்த் இன்சுரன்ஸ் |
ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சுரன்ஸ் |
55-80 வயது |
ஸ்டான்டர்டு – 10 லட்சம் வரை க்ளாசிக் – 10 லட்சம் வரை பிரிமியர் – 25 லட்சம் வரை |
2 வது வருடத்தில் இருந்து |
தேவை |
மூத்த குடிமக்களுக்கான சில்வர் ஹெல்த் திட்டம் |
பஜாஜ் அலையன்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ் |
46 -70 வயது |
50,000 – 5 லட்சம் |
2 வது வருடத்திலிருந்து |
46 வயதிற்கு பிறகு தேவை |
பாரதி ஏ எக்ஸ் ஏ சீனியர் சிட்டிசன் ஹெல்த் திட்டம் |
பாரதி ஏ எக்ஸ் ஏ ஹெல்த் இன்சுரன்ஸ் |
18-65 வயது |
5 லட்சம் - 1கோடி |
2வது வருடத்திலிருந்து |
- |
கேர் ஹெல்த் ஃப்ரீடம் ஹெல்த் திட்டம் |
கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் ( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ் என்று அழைக்கப்பட்டது) |
46 வயது மற்றும் அதற்கு மேற்ப்பட்ட |
3 லட்சம் – 10 லட்சம் |
2 வருடத்திலிருந்து |
தேவை ( திட்டத்தை பொறுத்து ) |
இண்டிஜுவல் ஹெல்த்லைன் திட்டம் |
சோழமண்டலம் ஹெல்த் இன்சுரன்ஸ் |
65 வயது வரை |
2 லட்சம் – 25 லட்சம் |
- |
55 வயது வரை தேவையில்லை |
டிஜிட் ஹெல்த் இன்சுரன்ஸ் |
டிஜிட் ஹெல்த் இன்சுரன்ஸ் |
இல்லை |
இல்லை |
இல்லை |
இல்லை |
ஹெல்த் இன்சுரன்ஸ் ப்ளாட்டினம் திட்டம் |
எடல்வெய்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ் |
எல்லா வயதும் |
15 லட்சம் – 1 கோடி |
- |
தேவை |
ஹெல்த் சுரக்ஷா இண்டிஜுவல் திட்டம் |
ஃப்யூச்சர் ஜெனரலி ஹெல்த் இன்சுரன்ஸ் |
70 வயது வரை வாழ்நாள் புதுப்பித்தலுடன் |
5 லட்சம் – 10 லட்சம் |
2 வது வருடத்திலிருந்து |
46 வயது மற்றும் அதற்கு மேல் |
ஹெல்த் ஆப்டிமா சீனியர் (அப்போலோ முனிச் ஹெல்த் ஆப்டிமா சீனியர்) |
ஹெச் சி எஃப் சி எர்கோ ஹெல்த் இன்சுரன்ஸ் |
61 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட |
2 லட்சம் – 5 லட்சம் |
3 வது வருடத்திலிருந்து |
தேவை மற்றும் 50% திரும்ப பெறக்கூடியது |
இண்டிஜுவல் மெடிஷீல்டு திட்டம் |
இஃப்க்கோ டோக்கியோ ஹெல்த் இன்சுரன்ஸ் |
3 மாதம் – 80 வயது |
50,000 – 5 லட்சம் |
3 வருடத்திலிருந்து |
60 வயதிற்கு மேல் |
கோடக் மஹிந்திரா ஃபேமிலி ஹெல்த் இன்சுரன்ஸ் |
கோடக் மஹிந்திரா ஹெல்த் இன்சுரன்ஸ் |
65 வயது வரை |
2லட்சம் – 100 லட்சம் |
2 வது வருடத்திலிருந்து |
- |
லிபர்டி ஹெல்த் இன்சுரன்ஸ் |
லிபர்டி ஹெல்த் இன்சுரன்ஸ் |
65 வயது வரை வாழ்நாள் புதுப்பித்தலுடன் |
2லட்சம் – 15 லட்சம் |
2 வது வருடத்திலிருந்து |
55 வயதிற்கு மேல் தேவை |
ஹார்ட்பீட் திட்டம் |
மேக்ஸ் புப்பா ஹெல்த் இன்சுரன்ஸ் |
65 வயது வரை |
2லட்சம் – 50 லட்சம் |
2 வருடத்திலிருந்து |
காப்பீட்டாளரின் வயதை பொறுத்து |
லைஃப்ஸ்டைல் ப்ரொடக்ஷ்ன் ஆக்சிடென்ட் கேர் |
மணிபால் சிக்னா ஹெல்த் இன்சுரன்ஸ் |
65 வயது வரை |
50,000 – 10 கோடி |
- |
- |
வர்ஷிதா மெடிக்லைம் பாலிசி ஃபார் சீனியர் சிட்டிசன் |
நேச்சுரல் இன்சுரன்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ் |
60 -80 வயது ( 90 வயது வரை புதுப்பிக்கும் தன்மையுடன்) |
மெடிக்லைம் – 1 லட்சம் ; கொடிய நோய் – 2 லட்சம் |
2 வருடங்களுக்கு பிறகு |
தேவை |
நியூ இந்தியா அஷுரன்ஸ் சீனியர் சிட்டிசன் மெடிக்லைம் திட்டம் |
நியூ இந்தியா அஷுரன்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ் |
60 -80 வயது( 90 வயது வரை புதுப்பிக்கும் தன்மையும்) |
1 லட்சம் – 1.5 லட்சம் |
18 மாதங்களுக்கு பிறகு |
தேவை |
சீனியர் சிட்டிசன் ஹோப் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம் |
ஓரியண்டல் ஹெல்த் இன்சுரன்ஸ் |
60 மற்றும் அதற்கு மேல் |
1 லட்சம் – 5 லட்சம் |
2 வது வருடத்திலிருந்து |
குறிப்பிட்ட சோதனைக்கூடங்களில் இருந்து தேவை |
ரஹேஜா க்யூப் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம் |
ரஹேஜா ஹெல்த் இன்சுரன்ஸ் |
65 வயது வரை |
1 லட்சம் – 50 லட்சம் |
- |
- |
லைஃப்லைன் எலைட் திட்டம் |
ராயல் சுந்தரம் ஹெல்த் இன்சுரன்ஸ் |
இல்லை |
25 லட்சம் – 1.5 கோடி |
2 வது வருடத்தில்ருந்து |
- |
ஹெல்த் கைன் இன்சுரன்ஸ் திட்டம் |
ரிலையன்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ் |
65 வயது வரை |
3 லட்சம் – 18 லட்சம் |
3 வது வருடத்திலிருந்து |
வயதிற்கு ஏற்ப |
சீனியர் சிட்டிசன் ரெட் கார்பெட் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம் |
ஸ்டார் ஹெல்த் இன்சுரன்ஸ் |
60 – 75 வயது |
1 லட்சம் – 10 லட்சம் |
காப்பீடு துவங்கி 2வது வருடத்திலிருந்து, |
தேவையில்லை |
ஆரோக்யா டாப் அப் திட்டம் |
எஸ் பி ஐ ஹெல்த் இன்சுரன்ஸ் |
65 வயது வரை |
1 லட்சம் – 5 லட்சம்; 1 லட்சம் – 10 லட்சம் (பிடிப்புகளுடன்) |
4 வது வருடத்தில் இருந்து |
55 வயதிற்கு மேல் |
மெடிசீனியர் ஹெல்த் இன்சுரன்ஸ் |
டாடா ஏஐஜி ஹெல்த் இன்சுரன்ஸ் |
61 வயது & அதற்கு மேல் |
2 லட்சம் – 5 லட்சம் |
4 வது வருடத்தில் இருந்து |
தேவை மற்றும் 50% வரை திரும்ப பெறக்கூடியது |
யுனைடட் இந்தியா – சீனியர் சிட்டிசன் மெடிக்லைம் திட்டம் |
யுனைடட் இந்தியா ஹெல்த் இன்சுரன்ஸ் |
61 – 80 வயது |
1 லட்சம் – 3 லட்சம் |
4 வது வருடத்தில் இருந்து |
தேவை மற்றும் 50% திரும்ப பெறக்கூடியது |
சீனியர் சிட்டிசன் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம் |
யுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்சுரன்ஸ் |
60 வயது & அதற்கு மேல் |
1 லட்சம் – 5 லட்சம் |
24 மாதங்கள் |
தேவை |
பொறுப்பு துறப்பு: * பாலிசிபஜார் எந்தவொரு குறிப்பிட்ட திட்டம் அல்லது குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனரையோ ஒப்புவிக்காது, மதிப்பிடாது மற்றும் பரிந்துரைக்காது.
முதியோர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் எப்பொழுது வேண்டுமானாலும் தோன்றலாம் என்பதால், மருத்துவ காப்பீட்டு திட்டம் வைத்திருப்பது இன்றியமையாதது. முதியோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவமனை தங்கியிருப்பு மனரீதியாக மற்றும் பணரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும். முதியோர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் தேவைப்படுவதற்கான மற்ற சில காரணங்கள் இதோ:
English
மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் வீட்டு வைத்தியம் முதல் மருத்துவமனை செலவுகள் வரை அனைத்திற்கும் பாதுகாப்பு வழங்குகின்றன. மூத்த குடிமக்களுக்கான உதவி கோரும் திட்டத்தில் வழங்கப்படும் பொதுவான நன்மைகளாவன கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
இந்த திட்டம் , பெரும்பாலான மருத்துவ பரிசோதனைகளின் போது தெரியவரும் நோய்களுக்கு பாதுகாப்பு வழங்கினாலும், ஒரு சில இடங்களில் இந்த திட்டம் செயல்படாது. கீழ்கண்ட சூழல்களில் இத்திட்ட விலக்கு அளிக்கிறது:
ஒரு மூத்த குடிமக்களுக்கானமருத்துவ உதவி கோரும் திட்டமானது, அதிக சிகிச்சை செலவுகளை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோய்களுக்கு அடிக்கடி ஆட்படும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. இளைய தனிநபர்கள் தங்களது மூத்த பெற்றோரின் உடல்நலம் குறித்து எப்பொழுதும் ஊசியில் நிற்கிறார்கள்.
பெரும்பாலான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் பராமரிப்பு செலவுகளை உள்ளடக்காது.மேலும், மருத்துவ உதவி கோர குறைந்து 24 மணி நேரம் மருத்துவமனையில்இருக்கவேண்டியதுஅவசியம். தற்கால புதுமைப்படுத்தலுக்கு நீங்கள் நன்றி கூற வேண்டும், ஏனெனில் தற்போது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மருத்துவமனையில் தங்கியிருத்தல் அவசியம் இல்லை. எனவே, அதிக பராமரிப்பு பாதுகாப்புகள் மற்றும் டையலசிஸ், கீமோதெரபி, ரேடியோதெரபி போன்றவைகள் உடைய ஒரு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் சிகிச்சை பெறக்கூடிய இணைந்த மருத்துவமனைகளை தெரிந்துகொள்ளுங்கள்.ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் தனக்கு கீழ் இணைந்துள்ள பல மருத்துவமனைகளை கொண்டுள்ளன.உங்களது திட்டத்தின் கீழ் எந்த மருத்துவமனைகள் உள்ளன என்று நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். ஆபத்து காலங்களில் இந்த மருத்துவமனையில் உங்கள் பெற்றோரை நீங்கள் வைத்து பார்த்துக் கொள்ளலாம். மற்றும் அனைவரும் தங்கள் எல்லைக்குட்பட்ட மருத்துவமனைகளில் சிறந்த சிகிச்சை பெறவே விரும்புகிறார்கள்.
உதவி கோரும் சதவீதம் மற்றும் உதவி தீர்க்கப்படும் காலம் இரண்டும் தான் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை. இவை இரண்டும் அதிகம் எனில்,காப்பீட்டு நிறுவனர் காப்பீட்டாளரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறந்த கவனம் கொண்டுள்ளனர் என அர்த்தம்.
பாலிசிதாரர் எந்தவொரு உதவியும் கோரவில்லை எனில், கோரல் இல்லா தள்ளுபடி மற்றும் கோரல் இல்லா போனஸ்களை பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த மாதிரியான நேரங்களில் பிரிமியம் குறையும் அல்லது காப்பு தொகை அதிகரிக்கும் அல்லது இரண்டும் நிகழலாம்.
பிரதி வருடம் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்ள உதவும் சிறந்த மருத்துவ காப்பீட்டு திட்டங்களை தேடுங்கள். இது ஒரு குறிப்பிட்ட காப்பீட்டு காலத்திற்கு பிறகே நடைமுறைக்கு வருகிறது. காப்பீடு புதுப்பிக்கும் பொழுது இந்த பரிசோதனைகள் எந்தவொரு பாதிப்பையும் பிரிமியத்தில் ஏற்படுத்தாது.
மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொழுது அல்லது ஆபத்து கால மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பொழுது பாலிசிதாரர் மருத்துவ உதவியை கோர அனுமதிக்கிறது. இந்த திட்டங்கள் இணைந்த மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சை பெற அல்லது சிகிச்சையின் மொத்த செலவுகளை திரும்ப பெற உதவுகின்றன. பணமில்லா சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகளை திரும்ப பெறும் உதவி ஆகிய இரண்டிற்குமே பாலிசிதாரர் 24 மணிநேர மருத்துவமனையில் தங்கியிருப்பு முடிவடைவதற்குள் தனது காப்பீட்டு நிறுவனரிடம் கூறி விடவேண்டும்.
பொதுவாக, மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த வசதி பெற, உதவி கோரலை ஒப்புவிக்க மற்றும் பண உதவி பெற கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
நீங்கள் இணைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறீர்கள் எனில், பணமில்லா உதவிக்கோரலை மூத்த குடிமக்களுக்கான திட்டத்தின் மூலம் கீழ்க்கண்ட முறையில் பெறலாம்:
உதவி கோரலை ஊக்கப்படுத்த நீங்கள் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி , வரம்புகளில் சரியாக உள்ளீர்கள் என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த திட்டம் உங்கள் தேவையின் பொழுது மருத்துவ உதவிகளுக்கு உத்திரவாதம் பெற்று தருவதோடு நிற்காமல், 1961 வருமான வரி சட்டம் 80D இன் கீழ் வரி நன்மைகளை பெறவும் உங்களுக்கு உதவுகிறது.உங்களது மூத்த பெற்றோருக்கு மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் எனில், வருமானத்தில் ரூ 30,000 வரை வரி சலுகை பெற முடியும். ஆண்டிற்கு எச்சரிக்கை மருத்துவ பரிசோதனைகளுக்கான, கூடுதல் நன்மையாக ரூ 5,000 பெறவும் முடியும்.
நீங்கள் இன்னும் சம்பாதித்து கொண்டே உங்களது மகன் அல்லது மகளுக்கான மருத்துவ காப்பீட்டு திட்ட பிரிமியத்தை கட்டுகிறீர்கள் எனில், வருமான வரி சலுகையாக ரூ 25,000 பெற முடியும். இதன் மூலம் நீங்கள் அதிகபட்சமாக ரூ 60,000 வரை வருமான வரி சட்டம் 80D இன் கீழ் வரி நன்மை பெறலாம்.
*வரி நன்மை, வரி சட்டங்களில் ஏற்படும் திருத்தங்களைப் பொறுத்தது.
இந்தியாவில் கொரொனா நிரந்தர நிலையை அடைவதை காணும் பொழுது, கொரொனா வைரஸ்க்கான மருத்துவ காப்பீட்டினை பெறுவது அவசியமாகும். மற்றும் ஏற்கனெவே அனைவரும் அறிந்ததாக, கொரொனா வைரஸ் மூத்த குடிமக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உடையவர்களையே அதிகம் தாக்குகிறது. இதன் காரணமாக மூத்த குடிமக்களும் அதிக பாதிப்பிற்கு உள்ளாவதாக கருத்தில் கொள்ளப்படுகிறது.
நம்பத்தக்க தகவலின் படி, 60 வயதிற்கு மேற்பட்டவர்களே 95% கொரொனா இறப்புகளை சந்தித்துள்ளார்கள்.
எனவே, முன்பேயுள்ள நோயாக அமையாததினால், உங்கள் மூத்த பெற்றோருக்கு, மொத்த மருத்துவ செலவுகளையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டம் எடுப்பது காரணமாக அமைகிறது. ஆனால், காப்பு தொகை, காப்பு வரம்பானது, மருத்துவ பரிசோதனைகள், தனிமைப்படுத்தல், காத்திருப்பு காலம் முதலியன ஒரு காப்பீட்டு நிறுவனரிடம் இருந்து மற்றொருவருக்கு வேறுபடும். 65 வயது உடைய மூத்த குடிமக்களுக்கு கொரொனா கவஜ் மற்றும் கொரொனா ரக்ஷக் திட்டங்களும் வாங்கலாம். இந்த திட்டங்கள் பிபிஇ கிட் , கையுறை, முகக்கவசம், ஆக்ஸிமீட்டர், வென்டிலேட்டர், முதலிய ஒரு சாதாரண மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ளடங்காதவைகளுக்கு உதவி வழங்குகிறது.
நீங்கள் மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் சந்தையில் சிக்கிக்கொண்ட ஒரு முதியவரா, பாலிசிபஜார் உங்களை காப்பாற்றும்.
வல்லுநர்களின் குழுவின் மூலம் பல மருத்துவ காப்பீட்டு திட்டங்களை ஒப்பிட்டு உங்களுக்கு மிக எளிதாகவும், விரைவாகவும் வழங்கி, உங்கள் பொன்னான நேரம் மற்றும் பணத்தினை பாதுகாக்கிறது. ஐ ஆர் டி ஏ ஐ ஆல் உத்திரவாதம் வழங்கப்பட்டு பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் நிறைய உள்ளதால், இணைய ஒப்பிடல் நீங்கள் சிறந்த திட்டத்தினையே தேர்வு செய்துள்ளீர்கள் என உறுதி அளிக்கிறது.
நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், ஒரு எளிய பாரத்தில், உங்களது மற்றும் உங்கள் காப்பீட்டு தேவைகள் குறித்து விவரங்களை பூர்த்தி செய்வது ஆகும்.நீங்கள் ஒப்படைத்தவுடன் உங்களுக்கு பொருந்தும் திட்டதை பற்றிய விவரங்கள் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும். உங்களுக்கு எதுவும் சந்தேகம் இருப்பின், எங்களது காப்பீட்டு நிறுவனர்கள் உங்களுக்கு உதவ எப்பொழுதும் காத்திருக்கிறார்கள் என்பதே எங்களின் சிறப்பு.
பதில் : மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் என்பது, 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் மருத்துவ தேவைகளை நிறைவேற்ற உருவாக்கப்பட்டது. வயது உயர துவங்கவும், நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால், இந்த திட்டம் இன்றியமையாதது ஆகிறது. இது சாதாரண மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விட அதிக கட்டணம் உடையது.
பதில்: இதற்கான காரணம் அனைவரும் அறிந்தது. ஒருவருக்கு வயது உயர துவங்கினால் , நோய்களுக்கான வாய்ப்புகளும், அவற்றின் தீவிரமும் அதிகரிக்கும். மேலும் பெரும்பாலாக இந்த வயதில் யாருக்கும் நிலையான வருமானம் இருப்பதில்லை, வெறும் பென்சன் மட்டும் தான். எனவே தான், இந்த திட்டம் வாங்குதல் மிக முக்கியமாகும்.
பதில்: மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடானது, மிக கண்டிப்பான மருத்துவ பரிசோதனைகள், குறிப்பிட்ட அளவு பாதுகாப்பு, மற்றும் அதிக விலக்குகள் உடையது. ஒருவர் இத்திட்டம் வாங்குவதற்கு முன் கீழ்க்கண்டவைகளை பற்றி முதலில் கவனிக்க வேண்டும். அவை – நுழைவு/ வெளியேறும் வயது, அதிகப்பட்ச புதுப்பிக்கும் வயது, இணை பண செலுத்துதல் கூறு, மற்றும் மருத்துவமனை தங்கியிருப்பு
பதில் : கீழ்க்கண்ட சான்றுகள் தேவை:
பதில்: ஆம்.மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் வாங்குவதற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். வயது உயர்ந்த தனி நபர் என்ற நிலையில் நீங்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆபத்தான முதலீடு ஆவீர்கள். எனவே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது முக்கியமாகிறது.
பதில்: மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம், குறிப்பிட்ட பாதுகாப்புடன் வருகிறது. திட்டம் வாங்கும்பொழுது கீழ்க்கண்ட காரணிகளை நன்றாக கவனிக்க வேண்டும்.
பதில்: ஆம். அனைத்து நல்ல காப்பீட்டு நிறுவனங்களும் பணமில்லா மருத்துவ வசதியை தருகின்றன.
பதில்: நீங்கள் ஒரு காப்பீட்டு நிறுவனரிடம் இருந்து மற்றொன்ருக்கு மாறுகிறீர்கள் எனில், நீங்கள் ஏற்கனவே பெற்றுக்கொண்டிருந்த நன்மைகளையும் உடன் எடுத்து செல்ல முடியும். போனஸ் உரிமைக்கோரல் இல்லா நன்மை, மொத்த போனஸ் மற்றும் காத்திருப்பு காலங்கள் முதலியன.
பதில்: பொதுவாக, மனுதாரரே திட்டம் துவங்கும் முன் எடுக்கும் மருத்துவ பரிசோதனைக்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐ ஆர் டி ஏ ஐ ஆல் உத்திரவாதம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் மட்டும் அவர்களுடன் இணைந்த மருத்துவமனையில் முன்பதிவு செய்து தருகின்றன.
பதில்:நான்கு உதவி கோரல் இல்லா வருடங்களுக்கு ஒரு முறை சில காப்பீடு செய்பவர்கள் மட்டும் இந்த வசதியை வழங்குகிறார்கள். இன்னும் ஒரு சில நிறுவனங்கள் நீங்கள் உதவி கோரியிருப்பினும் இந்த வசதியை ஆண்டுக்கு ஒரு முறை பெற வழிவகுக்கிறார்கள். எனவே திட்டக்கூறுகளை படித்து தெளிவடையலாம்.
இந்த செயலை துவங்கி, காப்பீடு செய்பவரின் இலவச எண்ணையோ அல்லது அருகில் உள்ள அலுவலக கிளையையோ உடனே தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் அவர்களுடன் இணைந்துள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தால், நீங்கள் எந்தவித செலவும் செய்ய வேண்டியதில்லை. அவர்களே மொத்தத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், நீங்கள் உங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தால் நீங்கள் செலவு செய்து பின்னர் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
பதில்: உதவிக்கோரல் ஆவணங்கள் டி பி ஏ விடம் சமர்ப்பிக்கப்படவேண்டியவை. ஆனால், டி பி ஏ இல்லாத சமயங்களில் காப்பீட்டு நிறுவனமே டி பி ஏ வசதியை செய்கின்றன.