பெற்றோருக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம்

நீங்கள் உங்கள் பெற்றோருக்கு காப்பீடு வாங்க திட்டமிடுகிறீர்களா? இந்திய காப்பீடு சந்தையில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு என்று நிறைய

Read More

Get ₹5 Lac Health Insurance starts @ ₹200/month*
Get ₹5 Lac Health Insurance starts @ ₹200/month*
250+ Plans 18 Insurance Companies
₹ 5 Lakh Coverage @ ₹ 10/day
7 Lakh+ Happy Customers

*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply
*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply

Get insured from the comfort of your home No medicals required
I am a

My name is

My number is

By clicking on 'View Plans' you, agreed to our Privacy Policy and Terms of use
Close
Back
I am a

My name is

My number is

Select Age

City Living in

  Popular Cities

  Do you take any daily medication? Apart from vitamins & supplements
  Get updates on WhatsApp

  மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் இருக்கின்றன. நிறைய காப்பீட்டு நிறுவனங்கள் குடும்பத்துடன்குடும்ப ப்லோட்டர்மற்றும் பராமரிப்பு மருத்துவ காப்பீட்டு திட்டங்களை உள்ளடக்கி,மூத்த பெற்றோர்களை கொண்ட குடும்பகளுக்கு என்றே தனித்துவமான மருத்துவ காப்பீட்டு திட்டங்களை வழங்குகின்றன. ஆனால், உங்கள் பெற்றோரின் வயது 50 ஐ விட அதிகமெனில் இந்த வசதிகளில் ஒரு சில குறைந்துவிடுகின்றது. மேலும், குடும்ப ப்லோட்டர் மருத்துவ செலவு கோரல் திட்டம்,குடும்ப மருத்துவ சலுகை திட்டம் வாங்குதல் என்பது உங்கள் பெற்றோரினுள் மூத்தவரின் வயதை

  பொறுத்து அதிக பிரிமியம் உடையதாகஅமைந்து விடுகிறது. இந்த திட்டங்கள் வயது மற்றும் உடல்நல பாதிப்பு போன்றவற்றை அடிப்படை கருத்தாக கொண்டு இருக்கின்றன. ஏனெனில், வயது அதிகரிக்க அதிகரிக்க, இத்திட்டத்தின் கீழ் உடல்நலம் குறைவுக்கான மருத்துவ வசதிகளை பெற அதிக வாய்ப்பு கள் உள்ளது.தற்போது,நிறைய நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கென்றே உருவாக்கப்பட்ட மருத்துவ வசதிகள் கொண்ட காப்பீட்டு திட்டங்கள் கொண்டு வருகிறது. உதாரணமாக, ஸ்டார் ஹெல்த் சீனியர் சிட்டிசன் ரெட் கார்பெட் திட்டம், பஜாஜ் அலையன்ஸ் சில்வர் திட்டம் முதலியன.

  உங்கள் பெற்றோருக்கு மருத்துவ பாதுகாப்பு திட்டம் ஏன்தேவைப்படுகிறது?

  நிதிநிலையை பற்றி எந்த வித கவலையுமின்றி நமது பெற்றோர்கள் சிறந்த மருத்துவ வசதிகள் பெறுவதற்கு போதுமான வசதிகள் கொண்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் வாங்குவது அவசியமாகிறது. ஆகையால், சிறந்த மருத்துவ காப்பீடு திட்டம் வாங்குவதற்கு கீழ்கண்ட காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

  மருத்துவ காப்பீட்டு பாதுகாப்பு

  காப்பீடு பாதுகாப்பு நன்மைகளை பற்றி முன்பே தெரிந்துகொள்வது முக்கியமாகும். சில முக்கிய காரணிகளான காப்பீட்டு காலம், முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவமனை பாதுகாப்பு, கொடிய நோய் பாதுகாப்பு, பராமரிப்பு முறைகள், மருத்துவமனையில் தங்கும் வழிமுறைகள், ஆயுஷ் சிகிச்சை, மருத்துவமனை குடியேற்றம் முதலியன பற்றி முன்பே பார்த்துகொள்வது நல்லது.

  போதுமான அளவுடைய காப்பீடு தொகை

  உங்கள் பெற்றோரின் வயதை பொறுத்து அவர்களுடைய உடல்நலம் அமைவதால், அதிக முதலீட்டு தொகையை தேர்ந்தெடுப்பது நன்று. இது அவர்கள் நிதி நிலையை சார்ந்தில்லாது சிறந்த சிகிச்சை பெற வழிவகுக்கிறது.

  முன்பேயுள்ள நோய்க்கான பாதுகாப்பு

  உங்களது பெற்றோருக்கு முன்பே நோய் இருந்தால், அதற்கான பாதுகாப்பு காத்திருப்பு நேரமான 2-4 வருடங்களுக்கு பிறகே நடைமுறைக்கு வரும். இது தேர்ந்தெடுத்த திட்டம் மற்றும் ஒவ்வொரு காப்பீட்டாளருக்கும் மாறுபடும். உங்களது குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டதில் முன்பேயுள்ள நோய்க்கான பாதுகாப்பு எப்பொழுதில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று முன்பே விசாரித்து கொள்ள வேண்டும்.

  இணை கட்டண கூறு

  இது நீங்கள் கட்ட வேண்டிய தொகையின் சதவீதத்தை குறிக்கிறது. மீதமுள்ள மருத்துவ செலவு தொகையானது, காப்பீட்டு நிறுவனத்தால் கட்டப்படுகிறது. உதாரணமாக, 20% இணை கட்டண கூற்றின் படி 10 லட்சம் மதிப்புள்ள ஒரு மருத்துவ பாதுகாப்பு தொகையை திட்டத்தின் மூலம் பெற

  வேண்டுமெனில், நீங்கள் 2 லட்சத்தை உங்கள் பொறுப்பாக கட்டவேண்டும். மீதமுள்ள 8 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் இத்திட்டத்தின் மருத்துவ நன்மையாக கட்டிவிடும். நீங்கள் “இணையற்ற கட்டண கூற்றையும்” தேர்வு செய்து கொள்ளலாம்.

  வரி நன்மைகள்

  பிரிவு 80D இன் அடிப்படையில் மருத்துவ காப்பீட்டு பிரிமியம், வரிகளுக்கு அப்பாற்பட்டது. நீங்கள், உங்களுக்கு மற்றும் உங்கள் 60 வயதுக்குள் உள்ள பெற்றோருக்கும் சேர்த்து பிரிமியம் கட்டுகிறீர்கள் எனில், ரூ 50,000 வரை வரி நன்மை அடையலாம். 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோருக்கு கட்டுகிறீர்கள் எனில் ரூ 75,000 வரை வரி நன்மை அடையலாம். ஆனால், இவை நடைமுறையில் உள்ள வரி கொள்கைகளை பொறுத்து மாறுபடும்.

  பெற்றோர்களுக்கான சிறந்த மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்

  காப்பீட்டு சந்தையில் நிறைய மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் இருக்கின்ற நிலையில் நாம் அனைத்தையும் ஒப்பிட்டு பார்த்து அதில் சிறந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது. உங்களது வயதுயர்ந்த பெற்றோருக்காக சில சிறந்த மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்கீழே கொடுக்கபட்டுள்ளன:

  உங்களது வயதுயர்ந்த பெற்றோருக்காக

  சில சிறந்த மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன:

  பெற்றோருக்கான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்

  காப்பீடு வழங்குபவர்

  நுழைவு வயது வரம்பு

  காப்பு தொகை (ரூ இல்)

  இணை கட்டண கூறு

  முந்தய மருத்துவ பரிசோதனைகள்

  ஆக்டிவ் கேர் சீனியர் சிட்டிசன் ஹெல்த் திட்டம்

  ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சுரன்ஸ்

  · குறை :55 வயது

  · அதிக: 80 வயது

  · நிரந்தரம்: அதிகப்படியாக 10 லட்சம்

  · க்ளாசிக்: அதிகபடியாக

  10 லட்சம்

  · பிரிமியர் : அதிகபடியாக 25 லட்சம்

  இல்லை

  தேவை

  திட்டத்தை காண

  கேர் ஹெல்த் திட்டம்

  கேர் ஹெல்த் இன்சுரன்ஸ் ( ரெலிகேர் ஹெல்த் இன்சுரன்ஸ் என்று முன்பு அழைக்கப்பட்டது)

  · குறை: 46 வயது

  · அதிக: வாழ்க்கை முழுவதும்

  · குறை : 3 லட்சம்

  · அதிக : 10 லட்சம்

  61 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 20%

  தேவையில்லை

  திட்டத்தை காண

  சோழா இண்டிஜுவல் இன்சுரன்ஸ் திட்டம்

  சோழமண்டலம் ஹெல்த் இன்சுரன்ஸ்

  · குறை : 3 மாதம்

  · அதிக: 70 வயது

  · குறை : 2லட்சம்

  · அதிக: 25

  லட்சம்

  55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10 %

  55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தேவையில்லை

  திட்டத்தை காண

  டிஜிட் ஹெல்த் இன்சுரன்ஸ்

  டிஜிட் ஹெல்த் இன்சுரன்ஸ்

  · இல்லை

  · இல்லை

  இல்லை

  இல்லை

  திட்டத்தை காண

  ஏடல்வேய்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ் ப்ளாடினம் திட்டம்

  ஏடல்வேய்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ்

  · அனைத்து வயதும்

  · குறை : 15 லட்சம்

  · அதிக: 1 கோடி

  20%

  தேவை

  திட்டத்தை காண

  ஃப்யூச்சர் ஹெல்த் சுரக்ஷா இண்டிஜுவல் திட்டம்

  ஃப்யூச்சர் ஜெனரலி ஹெல்த் இன்சுரன்ஸ்

  · வாழ்க்கை முழுவதுமான புதுப்பிக்கும் தன்மையுடன் 70 வயது வரை

  · குறை: 5 லட்சம்

  · அதிக: 10 லட்சம்

  மண்டலம் வாரியாக

  46 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்

  திட்டத்தை காண

  இஃப்ஃப்கோ டோக்கியோ இண்டிவிஜுவல் மெடிஷீல்டு திட்டம்

  இஃப்ஃப்கோ டோக்கியோ ஹெல்த் இன்சுரன்ஸ்

  · 3மாதம்- 80 வருடம்

  · குறை: 50,000

  · அதிக: 5 லட்சம்

  இல்லை

  60 வருடங்களுக்கு பிறகு

  திட்டத்தை காண

  கோடக் மஹிந்திரா ஃபேமிலி ஹெல்த் திட்டம்

  கோடக் மஹிந்திரா ஹெல்த் இன்சுரன்ஸ்

  · 65 வருடங்கள் வரை

  · குறை : 2லட்சம்

  · அதிக :

  100 லட்சம்

  இல்லை

  இல்லை

  திட்டத்தை காண

  லிபர்டி ஹெல்த் இன்சுரன்ஸ்

  லிபர்டி ஹெல்த் இன்சுரன்ஸ்

  · வாழ்க்கை முழுவதும் புதுப்பிக்கும் தன்மையுடன் 65 வருடங்கள் வரை

  · குறை : 2 லட்சம்

  · அதிக: 15 லட்சம்

  இல்லை

  55 வயதுக்கு பிறகு தேவை

  திட்டத்தை காண

  மணிபால் சிக்னா லைஃப்ஸ்டைல் ப்ரொடக்ஷ்ன் ஆக்சிடென்ட் கேர்

  மணிபால் சிக்னா ஹெல்த் இன்சுரன்ஸ்

  · 80 வயது வரை

  · குறை : 50,000

  · அதிக :

  10 கோடி

  இல்லை

  இல்லை

  திட்டத்தை காண

  மேக்ஸ் புப்பா ஹெல்த் கம்பேனியன் ஃபேமிலி ஃப்லோட்டர் திட்டம்

  மேக்ஸ் புப்பா ஹெல்த் இன்சுரன்ஸ்

  · வயது வரம்பு இல்லை

  · குறை : 2 லட்சம்

  · அதிக: 1 கோடி

  65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 20% இணை கட்டண வசதி

  45 வயதுக்கு மேற்பட்டவர்கள்

  திட்டத்தை காண

  நேஷனல் இன்சுரன்ஸ் - வரிஷ்தா மெடிக்லைம் பாலிசி ஃபார் சீனியர் சிட்டிசன்

  நேஷனல் ஹெல்த் இன்சுரன்ஸ்

  · 60-80 வயது( 90 வயது வரை புதுப்பிக்கும் தன்மை உடையது)

  · பாதுகாப்பு தொகை – 1 லட்சம்

  · கொடிய நோய் – 2 லட்சம்

  10%

  தேவை

  திட்டத்தை காண

  நியு இந்தியா அஷ்ஸூரன்ஸ் சீனியர் சிட்டிசன் மெடிக்லைம் பாலிசி

  நியு இந்தியா அஷ்ஸுரன்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ்

  · 60-80 வயது ( 90 வயது வரை புதுப்பிக்கும் தன்மை உடையது)

  · குறை : 1 லட்சம்

  · அதிக : 1.5 லட்சம்

  81-85 வயது வரை உள்ளாவர்களுக்கு 10%,

  86-90 வயது வரை உள்ளவர்களுக்கு 20%

  தேவை

  திட்டத்தை காண

  ஓரியன்டல் இன்சுரன்ஸ் ஹோப் திட்டம்

  ஓரியன்டல் ஹெல்த் இன்சுரன்ஸ்

  · குறை : 60 வயது

  · அதிக: இல்லை

  · குறை: 1 லட்சம்

  · அதிக : 5 லட்சம்

  20%

  தேவையில்லை

  திட்டத்தை காண

  ரஹெஜா க்யுப் ஹெல்த் இன்சுரன்ஸ்

  ரஹெஜா க்யு பி ஈ ஹெல்த் இன்சுரன்ஸ்

  · 65 வயது வரை

  · குறை : 1 லட்சம்

  · அதிக: 50 லட்சம்

  இல்லை

  இல்லை

  திட்டத்தை காண

  ரிலையன்ஸ் ஹெல்த் கைன் இன்சுரன்ஸ் திட்டம்

  ரிலையன்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ்

  · 65 வயது வரை நுழைவு

  · குறை : 3 லட்சம்

  · அதிக: 18 லட்சம்

  20%

  வயதை பொறுத்து தேவைபடும்

  திட்டத்தை காண

  ராயல் சுந்தரம் லைஃப்லைன் எலைட் திட்டம்

  ராயல் சுந்தரம் ஹெல்த் இன்சுரன்ஸ்

  · குறை : 18 வருடம்

  · அதிக: இல்லை

  · குறை: 25 லட்சம்

  · அதிக: 150 லட்சம்

  இல்லை

  முன்பேயுள்ள நோய்களுக்கு மட்டும் தேவை

  திட்டத்தை காண

  எஸ் பி ஐ – ஆரோக்யா டாப் அப் திட்டம்

  எஸ் பி ஐ ஹெல்த் இன்சுரன்ஸ்

  · 65 வயது வரை நுழைவு

  · 1-5 லட்சம்

  · 1-10 லட்சம் (பிடித்தங்கள் போக)

  இல்லை

  55 வயதுக்கு பிறகு

  திட்டத்தை காண

  சீனியர் சிட்டிசன்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ்

  பாரதி ஏ எக்ஸ் ஏ ஹெல்த் இன்சுரன்ஸ்

  · 18-65 வயது

  · குறை :5 லட்சம்

  · அதிக: 1 கோடி

  இல்லை

  இல்லை

  திட்டத்தை காண

  சில்வர் திட்டம்

  பஜாஜ் அலையன்ஸ் ஹெல்த் இன்சுரன்ஸ்

  · குறை : 46 வயது

  · அதிக: 70 வயது

  · குறை : 50,000

  · அதிக: 5 லட்சம்

  10% - 20%

  46 வயதுக்கு மேல் தேவை

  திட்டத்தை காண

  ஸ்டார் ஹெல்த் ரெட் கார்பெட் திட்டம்

  ஸ்டார் ஹெல்த் இன்சுரன்ஸ்

  · குறை : 60 வயது

  · அதிக: 75 வயது

  · குறை : 1 லட்சம்

  · அதிக: 25 லட்சங்கள்

  முன்பேயுள்ள நோய்களுக்கு 50%

  இல்லை

  திட்டத்தை காண

  டாடா ஏஐஜி மெடி சீனியர் ஹெல்த் திட்டம்

  டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்சுரன்ஸ்

  · குறை: 61 வயது

  · >அதிக : இல்லை

  · குறை : 2 லட்சம்

  · அதிக: 5 லட்சம்

  15%- 30%

  தேவை

  திட்டத்தை காண

  யுனைடட் இந்தியா- சீனியர் சிட்டிசன் மெடிக்லைம் திட்டம்

  யுனைடட் இந்தியா ஹெல்த் இன்சுரன்ஸ்

  · 61-80 வயது

  · குறை: 1 லட்சம்

  · அதிக: 3 லட்சம்

  இல்லை

  தேவை மற்றும் 50% மட்டும் திரும்ப கூடியது.

  திட்டத்தை காண

  யுனிவர்சல் சீனியர் சிட்டிசன் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டம்

  யுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்சுரன்ஸ்

  · 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்

  · குறை : 1 லட்சம்

  · அதிக: 5 லட்சம்

  10,15,& 20%

  தேவை

  திட்டத்தை காண

  பொறுப்பு துறப்பு: *எந்தவொரு தனி காப்பீடு நிறுவனரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட காப்பீடு நிறுவனரால் உருவாக்கப்பட்ட திட்டத்தையோ பாலிசிபஜார் உயர்த்தி காட்டவோ , பரிந்துரைக்கவோ , ஒப்புவிக்கவோ இல்லை.

  உங்கள் பெற்றோருக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் என்னென்ன பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன?

  மருத்துவ செலவுகள் அனைவரின் பட்ஜெட் திட்டத்திலும் ஒரு ஓட்டையை சந்தேகமின்றி உருவாக்கிவிடும். ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் நீங்கள் கீழ்கண்ட பாதுகாப்புகளை அனுபவிக்கலாம்.

  • மருத்துவமனைசெலவுகள்- ஒரு நோய் அல்லது விபத்தின் காரணமாக எக்கசக்க மருத்துவ செலவுகள் ஏற்படும். மருத்துவமனை செலவுகள் அதிகரித்துகொண்டு போகும் நிலையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நமது பாதுகாப்பு எல்லைக்கு உட்பட்டு நாம் நமது மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
  • முந்தையமற்றும் பிந்தைய மருத்துவமனை பாதுகாப்பு- மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு மற்றும் பின்பு ஆகிய இரண்டு நிலைகளிலும் உதவிகரம் நீட்டுகின்றன. எப்பொழுதும் இது 30 நாட்கள் முதல் 60 நாட்கள் ஆக இருப்பினும் ஒவ்வொரு காப்பீடாளருக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளன.
  • மருத்துவமனையில்தங்கும் வழிமுறைகள்- மருத்துவமனையில் தங்குவதற்கான வழிமுறைகளின் எண்ணிக்கை, திட்டத்திற்கு திட்டம் வேறுபடும். 24 மணி நேர மருத்துவமனை பாதுகாப்பு தேவைப்படாத, வெரிக்கோஸ் வெயின்ஸ் ஆபரேஷன் மற்றும் கண்புரை நோய் சிகிச்சைபோன்ற நோய்களுக்கு கூட இந்த திட்டம் உதவுகிறது.
  • ஆயுஷ்சிகிச்சை முறை நன்மைகள்- இந்த காலகட்டத்தில், பெரும்பாலான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி போன்றவைகளுக்கான ஆயுஷ் சிகிச்சை முறை நன்மைகளை வழங்குகிறது.
  • முன்பேயுள்ளநோய்கள்- பொதுவாக அனைத்து திட்டங்களும் காத்திருப்பு காலம் முடியவும் ஏற்கனவே உள்ள நோய்களுக்கு சிகிச்சை முறை பாதுகாப்புகள் வழங்குகிறது. இருந்தாலும், நாம் குறைந்த காத்திருப்பு காலத்துடன் கூடிய திட்டத்தை தேர்ந்தெடுத்து அதிகபட்ச நோய்களான இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவைகளுக்கு சிகிச்சைகளை பெறலாம்.
  • பெரியஅறுவை சிகிச்சைகள்- பெரும்பாலான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அதிக செலவுகள் உடைய பெரிய அறுவை சிகிச்சைகளான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை , இருதய அறுவை சிகிச்சை இவற்றிற்கு உதவுகின்றன. நீங்கள் உங்களுடைய பெற்றோருக்கு சில சிறந்த மருத்துவமனைகளில் அல்லது வெளிநாட்டிலோ (திட்டம் அனுமதித்தால்) உள்ள பெயர் பெற்ற சிறந்த மருத்துவர்களை கொண்டு சிகிச்சை செய்யலாம்.
  • புதுப்பிக்கும்தன்மைமருத்துவ காப்பீட்டு திட்டங்கள் பொதுவாக வாழ்க்கை முழுவதுமே புதுப்பிக்கும் வசதி கொண்டிருக்கும். ஆக, வாழ்க்கை முழுவதும் புதுப்பிக்கும் தன்மையுடன் கூடிய மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உங்கள் பெற்றோருக்கு மிக சிறந்தது.

  உங்கள் பெற்றோருக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் என்னென்ன பாதுகாப்புகள் இல்லை?

  உங்கள் திட்டம் என்னென்ன மருத்துவ பாதுகாப்பு வசதிகளை தருகிறது என தெரிந்துகொள்வது இன்றியமையாதது ஆகும். எந்த சூழ்நிலைகளில் காப்பீடு செய்பவர் மருத்துவ வசதிகளை செய்வதில்லை என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • எல்லாவகையான முன்பேயுள்ள காயங்கள் மற்றும் வியாதிகள்
  • பாலிசிதுவங்கி 30 நாட்களுக்குள் தோன்றுகின்ற நோய்கள்
  • அல்லோபதிதவிர மற்ற சிகிச்சைகள்
  • எல்லாவகையான மன நோய்கள் மற்றும் தானே ஏற்படுத்தி கொள்ளும் காயங்கள்
  • அதிககுடிபழக்கம் மற்றும் போதை பொருள் உபயோகத்தினால் ஏற்படும் நோய்கள்
  • கண்ணாடிமற்றும் லென்ஸ் போன்ற வெளிபுர கருவிகள் வாங்க ஏற்படும் செலவுகள்
  • பற்களுக்கானசிகிச்சை முறை செலவு ( விபத்து காலத்தை தவிர)
  • ஹெச்ஐ வி/எய்ட்ஸ் போன்ற சிகிச்சை முறை செலவுகள்
  • காத்திருப்புகாலமாக 2 வருடம் முடிந்த பிறகு ஏற்படும் மூட்டு அறுவை சிகிச்சைகள்
  • ப்ளாஸ்டிக்போன்ற அழகு சாதன சிகிச்சை செலவுகள்
  • போர்காலம், தீவிரவாத தாக்குதல், சர்வதேச எதிரி அல்லது படைகளால் ஏற்படுத்தப்படும் காயங்களுக்கான சிகிச்சைகள் முதலியன

  பெற்றோருக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை எப்படி தேந்தெடுப்பது?

  அதிகப்படியான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் இருந்தாலும்,உங்களது தேவை மற்றும் அத்தியாவசியங்களை பொறுத்து சிறந்த திட்டத்தை நம்மால் தேர்வு செய்ய இயலும்.உங்கள் பெற்றோர் அவர்களுடைய பொற்காலத்தில் சிறந்த சிகிச்சைகளை அனுபவிக்க மேலே குறிப்பிடப்பட்ட திட்டங்களில் ஒன்றோ அல்லது முதியோருக்கான காப்பீடு திட்டங்களில் தேடிய ஒன்றையோ நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.அதற்கு முன்பாக நமது வயதுற்ற பெற்றோர்களுக்கு காப்பீடு திட்டம் வாங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகளை சற்று விரைவாக கீழே காண்போம் –

  • அதிகப்படியானபாதுகாப்பு- உங்கள் பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் வாங்கும்போது திட்டத்தின் எல்லைகள் மற்றும் காரணிகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.உங்களது பெற்றோருக்கு அதிகப்படியான நோய்களில் இருந்து தங்களை காத்துகொள்ள, உதவும் திட்டம் தேவைப்படுகிறது. இந்த வயதில் அவர்கள் அதிக நோயுற வாய்ப்புகள் அதிகம் உள்ளது, ஆகவே அவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அவர்களுக்கு இது தேவையாகிறது. உங்கள் பட்டியலில் உள்ள நோய்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
  • நுழைவுவயது- பெரும்பாலான, காப்பீட்டு திட்டங்கள் 55 முதல் 80 வயது வரை பாதுகாப்பு தருகின்றன. 60 வயதை நுழைவு வயதாக கொண்ட திட்டங்களும் இருக்கின்றன.வாழ்க்கை முழுவதும் புதுப்பிக்கும் தன்மை உள்ள, அதிக வயதினை பற்றி கவலை கொள்ளாத, ஒரு திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
  • காத்திருப்புகாலம்- முன்பேயுள்ள நோய்களுக்கு அதிக காத்திருப்பு காலத்திற்கு பிறகே பாதுகப்பு வழங்கப்படுகின்றன. நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டம் குறைந்த காத்திருப்பு காலம் , மற்றும் அதிகப்படியான நோய்களான இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் முதலியனவற்றிற்கு பாதுகாப்பு வழங்குவதாக அமைய வேண்டி இருக்கிறது.
  • மருத்துவகாப்பீட்டு திட்டங்களை ஒப்பிடல்- சந்தேகமின்றி , அனைவரும் அவர்களது பெற்றோருக்கு சிறந்த மருத்துவ வசதிகளை பெறவே விரும்புகிறார்கள். ஆகையால், ஒரு திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு முன்பே சந்தையில் உள்ள அனைத்து திட்டங்களையும் அலசி ஆராய்ந்து கொள்ளவும்.
  • இணைந்தமருத்துவமனைகள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் காப்பீட்டாளருடன் இணைந்துள்ள மருத்துவமனைகளை குறித்து முன்பே தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் எல்லைக்கு உட்பட்ட, மதிப்புமிக்க மருத்துவமனைகள் அந்த பட்டியலில் இருக்கிறதா என பார்த்துகொள்ளுங்கள் . அதுவே அவசர காலத்தில் கைகொடுக்கும்.
  • காப்பீட்டுபிரிமியம்- பிரிமியம் வயதை பொறுத்து மாறுபடுகிறது. வயது உயர்ந்தால் பிரிமியமும் உயர்கின்றது. எனவேதான் முதியோர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பிரிமியம் சாதாரண திட்டங்களை விட அதிக பிரிமியம் கொண்டுள்ளது.ஆகையால் சாதாரண தனிநபர் மருத்துவ காப்பீட்டு திட்டம் , குடும்ப மிதவை காப்பீட்டு திட்டத்தை விட சிறந்த தேர்வாக அமைகிறது.
  • காப்பீட்டுசொற்கள் - முதலில், காப்பீட்டு திட்ட படிவம் அ முதல் ஃ வரை அனைத்தையும் உள்ளடக்கி இருப்பதாக தோன்றினும், காப்பீட்டு திட்டத்தின் அனைத்து உட்கூறுகளையும் முழுமையாக அலசி ஆராய்வது அவசியம்.

  அதிகமாக கேட்கப்பட்ட கேள்விகள்

  Written By: PolicyBazaar
  Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
  Close
  Download the Policybazaar app
  to manage all your insurance needs.
  INSTALL