உங்கள் மற்றும் உங்களைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்தை காப்பதில் சரியான நிதி திட்டமிடல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் டெர்ம் இன்ஷூரன்ஸ் காப்பீட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானது. டெர்ம் இன்சூரன்ஸ் எனப்படுவது யாதெனில், மிகவும் குறைந்த பிரீமியம் கட்டி காபீட்டாளருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படாவண்ணம் பாதுகாப்பதற்கே ஆகும். காப்பீட்டாளர் டெர்ம் இன்ஷூரன்ஸ் முடிவதற்குள் இறந்துவிட்டால், அவரது நாமினிக்கு காப்பீடு தொகை வழங்கப்படும்.
#All savings and online discounts are provided by insurers as per IRDAI approved insurance plans | Standard Terms and Conditions Apply
By clicking on "View plans" you agree to our Privacy Policy and Terms of use
~Source - Google Review Rating available on:- http://bit.ly/3J20bXZ
ஒருவர் இறந்தால் அதிலிருந்து அவரது குடும்பத்தினரை காப்பாற்றவே இன்சூரன்ஸ் எடுக்கப்படுகிறது. எனினும், இதில் சில வகை இறப்புகள் சேர்க்கப்படுவதில்லை. டெர்ம் இன்ஷூரன்ஸில் எந்த வகை இழப்புகள் சேர்க்கப்படாது என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
ஒருவர் உடல் நலம் குன்றி அல்லது வயது முதிர்ந்து இயற்கை மரணம் எய்தினார் என்றால் அது டெர்ம் இன்ஷூரன்ஸில் கோரப்படலாம். சிகிச்சை பயன் இல்லாத கொடிய நோயினாலோ, மருத்துவ முறையினாலோ காபீட்டாளர் இறந்தால், பயனாளிக்கு இறப்பு பணம் முழுவதும் கிடைக்கும்.
விபத்து காரணமாக காப்பீட்டாளரின் மரணம் ஏற்பட்டால் டெர்ம் இன்ஷூரன்ஸ் பாதுகாப்புகள் அளிக்கப்படுகின்றன. மேலும் வண்டி ஓட்டுபவர் காப்பீடு எடுத்திருந்தால் காப்பீடு அளவின் மேல் கூடுதல் பணம் பயனாளிகளுக்கு அளிக்கப்படுகின்றது.
இருப்பினும் இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு. மது அல்லது ஏதேனும் போதைப் பொருட்களின் பிடியில் காப்பீட்டாளர் மரணம் ஏற்பட்டால் பயனாளிகள் உரிமை கோர முடியாது. மேலும் ஏதும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கும் போது மரணம் ஏற்பட்டாலும் காப்பீடு செல்லுபடி ஆகாது. சாகச விளையாட்டுகளில் ஏற்படும் மரணமும் ஆயுள் காப்பீடு திட்டங்களில் கோரப்படலாகாது.
இணைக்கப்படாத பாலிசிகளில், பாலிசி தொடங்கிய நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் காப்பீட்டாளர் தற்கொலை செய்து இறந்து விட்டால் பயனாளிக்கு 80% பிரீமியம் தொகை வழங்கப்படும். இணைக்கப்பட்ட திட்டங்களை பொறுத்தவரையில், பாலிசிதாரர் 12 மாதங்களுக்குள் தற்கொலை செய்து கொண்டால் பயனாளி 100% பிரீமியம் பணத்தை பெறுவார். பாலிசி ஒரு வருடம் முடிந்த பின்னர் பாலிசிதாரர் தற்கொலை செய்துகொண்டால் பாலிசியின் நன்மைகள் ரத்து செய்யப்பட்டு நிறுத்தப்படும். தற்கொலை மரணத்தை உள்ளடக்காத பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உண்டு, எனவே பாலிசிதாரர் எந்த ஒரு பாலிசியை வாங்கும் முன்னரும் நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளை வாங்கிப் படித்தல் அவசியமாகிறது.
காப்பீட்டாளர்களின் மரணம் அபாயகரமான செயல்பாடுகள் மற்றும் சுய காயங்களால் நிகழ்ந்தவையானால் பயனாளியின் கூற்று காப்பீட்டு நிறுவனத்தால் நிராகரிக்கப்படும்.
எச்ஐவி அல்லது எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்களால் காப்பீட்டாளரின் இறப்பு ஏற்பட்டால் காப்பீடு நிறுவனம் கோரிக்கையை நிராகரித்து விடும்
மது அல்லது பிற போதைப் பொருட்களை அதிகமாக உட்கொண்டதால் காப்பீட்டாளரின் மரணம் நிகழ்ந்தால், காப்பீடு நிறுவனம் பயனாளிக்கு எந்தவொரு இறப்பு பயனையும் வழங்காது.
பயனாளி காப்பீட்டாளரை கொலை செய்து அது விசாரணையில் தெரியவந்தால் அந்த காப்பீடு தள்ளுபடி செய்யப்படும். பயனாளி தான் கொலை செய்யவில்லை என்று நிரூபிக்கும் வரையில் பணம் கொடுக்கலாகாது.
சுனாமி அல்லது மின்னல், நிலநடுக்கம், வானிலை சீற்றம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் காப்பீட்டாளர் இறந்தால் எந்த ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் அவரது குடும்பத்தாருக்கு காப்பீடு தொகையை வழங்கும். காப்பீடு நிறுவனம் பயனாளிக்கு உறுதி பணத்தை இறப்பு பயனாக கொடுக்கும்.
ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாலிசிகளுக்கு உரிமை கோருவார் ஆனால் அவர் இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ப்பு முகமையின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பயனாளி புது காப்பீடு எடுக்கும்போது முன்னர் எடுத்த காப்பீட்டு விவரங்களை பதிவிட வேண்டும். பாலிசி விவரங்களை காப்பீடு விண்ணப்பத்தில் கொடுக்க வேண்டும். மேலும் பயனாளி காப்பீட்டாளர் இறப்பு சான்றிதழையும் காப்பீடு நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும். புதிய காப்பீடு நிறுவனம் கொடுக்கப்பட்ட விவரங்களை பழைய காப்பீடு நிறுவனத்திடம் சரி பார்த்து கொள்ளும். விபரங்களை உறுதிப்படுத்திய பின்னர் பயனாளிக்கு காப்பீடு தொகை வழங்கப்படும்.
கீழ் குறிப்பு
புதிய டெர்ம் பாலிசி வாங்கும் முன்னர் காப்பீட்டாளர்கள் பாலிசி சார்ந்த ஆவணங்களை நன்கு வாங்கி படித்தல் மிகவும் அவசியம். பாலிசியில் எது சேரும், எது சேராது என்பது தெரிந்து இருப்பது பின்னாளில் கோரிக்கை அளவில் நமக்கு உதவுவதோடு நின்றுவிடாமல் கோரிக்கை நேரத்தில் வீண் விரயங்களில் இருந்தும் நம்மை காக்கும்.