மோட்டார் வாகன காப்பீடு

இந்திய சாலைகளில் ஓடும்பைக்குகள், ஸ்கூட்டர்கள், கார்கள் மற்றும் லாரிகள் போன்ற அனைத்து இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ங்களுக்கும் மோட்டார் வாகன காப்பீடு அவசியமாக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிமித்தமாக உபயோகிக்கப்படும் வணிக வாகனங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்கள் மோட்டார் வாகன காப்பீடு செய்துகொள்ளலாம். அனைத்து வண்டி ஓட்டுனர்கள்/ உரிமையாளர்களுக்கு மோட்டார் வாகன காப்பீடு மிகவும் முக்கியமான ஒரு ஆவணம் ஆகும். காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு இயற்கையினாலோ அல்லது மனிதர்களாலோ உண்டாகும் சேதங்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பதே இத்திட்டத்தின முக்கிய கொள்கையாகும். வாகனங்களுக்கு ஏற்படும் சுய சேதாரங்கள் மட்டுமின்றி, இத்தகைய வாகன காப்பீட்டு திட்டங்கள், விபத்து காப்பீடு, மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் காயங்கள் அல்லது மரணம் போன்ற இழப்புகளுக்கும் பாதுகாப்பு காப்பீடு அளிக்கின்றன. இவ்வகையில் சாலைகளை உபயோகப்படுத்துவோருக்குஇந்த பாலிசிகள் பாதுகாப்பையும் மனநிம்மதியையும் அளிக்கின்றன.

Read more


ஒப்பிடுங்கள், கார் இன்ஷ்யூரன்ஸில் 85%* வரை சேமியுங்கள்.
செயலாக்கம்
கார் காப்பீட்டை வருடத்திற்கு ₹ 2094 முதல் தொடங்குங்கள்#
 • 2 நிமிடத்தில் கொள்கையை புதுப்பிக்கவும்

 • 20+ காப்பீட்டாளர்கள்

 • 51 லட்சம்+

1000 க்கும் குறைவான சிசி கார்களுக்கு குறைவான டிபி விலை. அனைத்து சேமிப்புகளும் காப்பீட்டாளர்களால் ஐஆர்டிஐ(IRDI) அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் படி வழங்கப்படு

மோட்டார் வாகன காப்பீடு வகைகள்

மோட்டார் வாகன காப்பீட்டு திட்டங்களை பொதுவாக கீழ் கண்டபடி வரிசைப்படுத்தலாம்:

கார் காப்பீடு

விபத்தினால் சொந்த காருக்கோ அல்லது மூன்றாம் தரப்பினருக்கோ ஏற்படும் சேதங்களுக்கு கார் இன்சூரன்ஸ் காப்பீடு அளிக்கிறது. இத் திட்டத்தை தேர்ந்து எடுக்கும் நபர், மற்ற பிற காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் ப்ரீமியம் தொகையை ஒப்பீட்டு இந்த திட்டம் சிறந்ததுதானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த ப்ரீமியம் தொகை காரின் வகை, மதிப்பு, பதிவு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் தயாரிப்பு வருடம் போன்றவற்றை ஒட்டியே இருக்கும்.

இரு சக்கர வாகன காப்பீடு

இந்த காப்பீடு பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு பொருந்தும். கார் இன்சூரன்ஸ் திட்டத்தின் அனைத்து அம்சங்களும் இரு சக்கர காப்பீடு திட்டங்களுக்கும் பொருந்தும்.

வணிக வாகன காப்பீடு

வணிக வாகனங்களுக்கு உண்டாகும் சேதங்களால் அவற்றின் ஓட்டுனர்கள் சந்திக்கும் நஷ்டங்களை சரி செய்ய வணிக வாகன காப்பீடு பேருதவியாக இருக்கிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வணிக வாகனங்கள் என்பவை சொந்த உபயோகங்களுக்கான வாகனங்ககளை தவிர்த்து சரக்குகள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டுமே ஆகும்.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள வாகன காப்பீட்டு பாலிசி வகைகள்

மூன்றாம் தரப்பு காப்பீட்டு பாலிசி

நீங்களும் உங்கள் வாகனமும் ஈடுபட்ட விபத்தில் காயமடைந்த மூன்றாம் தரப்பு மனிதர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இந்த பாலிசி காப்பீடு அளிக்கிறது. இந்தியஇன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் டெவலப்மெண்ட் அதாரிட்டியின் சட்டதிட்டங்களின் படி எந்த காப்பீட்டு நிறுவனமும் மூன்றாம் தரப்பு காப்பீட்டு திட்டங்கள் அளிக்க மறுப்பு தெரிவிக்க இயலாது.

விரிவான காப்பீட்டு பாதுகாப்பு

மூன்றாம் தரப்பு காப்பீட்டு திட்டங்களில் மேற்கொண்டு இணைக்கப்படும் இந்த திட்டம்காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு திருட்டு மற்றும் சேதங்களால் உரிமையாளருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சரி செய்கிறது. மூன்றாம் தரப்பு காப்பீடையும் இந்த திட்டம் அளிக்கிறது.

ஓட்டுவதை ஒட்டி செலுத்தும் திட்டம்

சாண்ட்பாக்ஸ் முறைப்படி படி ஐஆர்டிஏ வின் சமீபத்திய விதிமுறைகளின் கீழ் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட கார் இன்சூரன்ஸ் திட்டம் ‘ஓட்டுவதை ஓட்டி செலுத்தும்’ பாலிசி ஆகும். இதுவரை ஓட்டிய கிலோ மீட்டர் தூரத்தை ஒட்டி காப்பீட்டு ப்ரீமியம் தொகையை பாலிசிதாரர் செலுத்த இந்த பாலிசி அனுமதிக்கிறது. காப்பீடு எடுப்பவர் பாலிசி எடுக்கும் சமயம்பாலிசி காலத்தில் எத்தனை தொலைவு வாகனத்தை செலுத்த திட்டமிட்டுள்ளார் என்று கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் பாலிசியின் பரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. ஓட்டுவதை ஒட்டி செலுத்தும் இந்த பாலிசி சோதனை முறையில் ஒரு ஆண்டுக்கு விரிவான மற்று மூன்றாம் தரப்பு காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தற்சமயம் பாரதி ஆக்ஸா, அக்கோ ஜெனரல், ஐசிஐசிஐ லோம்பார்ட் போன்ற நிறுவனங்கள் தங்ளுடைய முகவர்கள். ஆன்லைன் போர்ட்டல்கள் விற்பனையாளர்களின் வலைதளங்கள் மற்றும் இதர விற்பனை கூடங்கள் மூலம் இந்த பாலிசியை அளிக்கின்றன.

வாகன காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டவை யாவை ?

கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களால் ஏற்ப்படும் சேதங்கள் வாகன காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டவையாகும்

 • வேலை நிறுத்தம் மற்றும் கலகம்
 • தீ விபத்து மற்றும் கொள்ளை
 • தீவிரவாத செயல்கள்
 • பூகம்பம்
 • நில சரிவு
 • வெள்ளம், சூறாவளி, புயல்

வாகன காப்பீடு திட்டத்தில் அனுமதிக்கப்படாதவை யாவை ?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளில் வாகன காப்பீடு அளிக்கப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ளவும்.

 • ஓட்டுனர் போதை மருந்துகள் அல்லது அவற்றை தவறாக உபயோகப்படுத்தி அவற்றின் பிடியில் இருந்தாலோ
 • பாலிசியில்குறிப்பிட்ட காரணங்கள் தவிர்த்து மற்றவற்றிற்கோ அல்லது சட்ட விரோதமான காரியங்களுக்கோ உபயோகப்படுத்தல்
 • செல்லுபடியாகும் ஓட்டுனர் உரிமம் இல்லாமை
 • காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு இந்திய நாட்டிற்கு வெளியே ஏற்பட்ட இழப்பு அல்லது சேதம்.

நீங்கள் ஏன் வாகன காப்பீடு செய்ய வேண்டும்?

ஒவ்வொரு மாதமும் சுமாராக 4 லட்சம் மனிதர்கள் சாலை விபத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? உலக சுகாதார நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின் அறிக்கைப்படி 2012ம் வருடம் உலகத்திலேயே அதிகமான சாலை விபத்துகள் இந்தியாவிலேயே நடந்துள்ளன.

இந்தியாவில் இருக்கும் மிக அதிக அளவிலான சாலைகள் மற்றும் அவற்றின் மோசமான நிலைகளையும் கருதினால், சாலை பயணத்திற்கு வாகன காப்பீடு ஒரு அவசிய ஒன்றாகும். வாகன காப்பீடு உங்களுக்கு மட்டும் இன்றி மூன்றாம் தரப்பு மனிதர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கும் பொருளாதார பாதுகாப்பு அளிக்கின்றது. சில தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு மற்ற சில சலுகைகளையும் அளிக்கின்றன. அவையாவன

 • நெட்வொர்க் பணிமனைகளில் நேரடி பண பரிமாற்றம் அல்லது பணமின்றி இழப்பீடு
 • தேய்மான பாதுகாப்பு
 • இஞ்ஜின் பாதுகாப்பு
 • 24 x 7 சாலையோர உதவி
 • வண்டியை கட்டி இழுத்து செல்லும் உதவி

வாகன காப்பீட்டின் கீழ் காப்பீடு தொகை கோருவது எங்ஙனம் ?

வாகன காப்பிட்டின் கீழ் காப்பீடு செய்த தொகையை கோருவதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் வழிமுறைகள் அந்த வாகனங்களையும் அதற்கு ஏற்பட்ட இழப்பையும் பொருத்ததாகும்.

சொந்தகாருக்கு ஏற்ப்பட்ட சேதத்திற்கு உரிமை காப்பீடு கோருதல்

இந்த நடைமுறையை பின்பற்ற, காப்பீடு எடுத்தவர் அவருக்கு ஏற்பட்ட இழப்பிற்கான விரிவான மதிப்பீட்டை காப்பீட்டு நிறுவனத்தில் சமர்ப்பிக்கவேண்டும். இழப்பீட்டிற்க்கான காரணத்தையும் தொகையையும் மதிப்பீடு செய்ய பொறியியல் படித்த தனியார் மதிப்பீட்டாளர்களுக்கு இந்த பணி அளிக்கப்படுகிறது. சேதமடைந்த வாகனத்தை கவனமாக சோதனை செய்து அவர்கள் சமர்ப்பிக்கும் மதிப்பீட்டு அறிக்கையை காப்பீட்டு நிறுவனங்கள் மறு பரிசீலனை செய்து அவற்றில் பரிந்துரை செய்யப்பட்டுளவை உண்மைதானாஎன்பதை ஆராய்கின்றன. பொதுவாக எந்த நபருக்கு இவற்றை பழுதுபார்க்கஉத்தரவு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதோ அவருக்கே அவரே இப்பணியை செய்யும் அதிகாரம் வழங்கப்படும்.

காப்பீட்டு தொகை கோரிக்கையை பரிசீலனை செய்ய சமர்ப்பிக்கவேண்டிய மற்ற ஆவணங்கள்:

 • தகுதி சான்றிதள் (வணிக வாகனங்களுக்கு மட்டும்)
 • ஓட்டுனர் உரிமம்
 • பதிவு பத்திர புத்தகம்
 • பழுது பார்த்தவரின் இறுதி பில்
 • காவல் துறை அறிக்கை

மூன்றாம் தரப்பு கோரிக்கை விண்ணப்பம்

காப்பீடு செய்துகொண்டவரோ அல்லது சம்பந்தப்பட்ட மூன்றாம் தரப்பினரோ கொடுத்த விண்ணப்பததை பெற்றதும், காப்பீடு நிறுவனம் இந்த விஷயத்தை அவர்களுடைய வழக்கறிஞருக்கு அனுப்புகிறது. விபத்தை பற்றிய அனைத்து தகவல்களும் காப்பீடு செய்துகொண்டவரிடம் இருந்து கீழே குறிப்பிட்டுள்ள ஆவனங்களோடு பெறப்படுகின்றன.

 • காவல் துறை அறிக்கை
 • ஓட்டுனர் உரிமம்
 • மருத்துவரின் சான்றிதழ்
 • மரணம் ஏற்பட்டிருந்தால், இறப்பு சான்றிதழ்

மோட்டார் வாகன பரீமியத்தை நிர்ணயிக்கும் அளவுகோல்கள்

 • ஓட்டுநரின் வயது
 • இதுவரை வண்டி செலுத்திய முறை
 • வாகனத்தின் தயாரிப்பாளர்
 • ஓட்டுநரின் தொழில்
 • விபத்து ஏற்ப்பட்ட இடத்தின் தகவல்

மோட்டார் வாகன காப்பீடு: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 • கேள்வி: நான் எடுக்க வேண்டிய வாகன காப்பீடு திட்டம் விரிவான காப்பீட்டு திட்டமா அல்லது மூன்றாம் தரப்பு காப்பீட்டு திட்டமா?

  பதில்: இந்தியசாலைகளில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கும் மூன்றாம் தரப்பு காப்பீட்டு திட்டம் அத்தியாவசமான ஒன்று. இந்த திட்டத்தில் மூன்றாவது தரப்பினருக்கு ஏற்ப்படும் காயங்களுக்கோ அல்லது சேதங்களுக்கோ இழப்பீடு வழங்கப்படும். இத்திட்டத்தின் பயனாளிகள் மூன்றாவது தரப்பினர் மட்டுமே. காப்பீடு செய்யப்பட்ட வாகனத்திற்கு ஏற்ப்படும் மொத்த சேதங்களுக்கோ அல்லது இழப்பிற்கோ பாதுகாப்பு செய்ய விரிவான காப்பீடு எடுப்பதே சிறந்ததாகும். இதன் கீழ் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் மட்டுமின்றி மூன்றாம் தரப்பினறுக்கு ஏற்படும் இழப்புகளில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

 • கேள்வி: காப்பீட்டு ப்ரீமியம் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  பதில்: நீங்கள் செலுத்த வேண்டிய பரீமியத்தொகையை காப்பீடு செய்துகொள்ளுபவர் தெரிவித்துள்ள மதிப்பு தொகை, கட்டாய தள்ளுபடி, அனுமதிக்கப்பட்ட அமரும் வசதி, இயந்திரத்தின் கண கொள்ளளவு போன்ற பல்வேறு தகவல்களை ஒட்டி நிர்ணயிக்கப்படுகிறது. அளிக்கப்படும் பாதுகாப்பு வசதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திற்கும் விரிவான காப்பீட்டு பாதுகாப்பு திட்ட ப்ரீமியத்தொகை வேறுபடும். திட்டங்களின் ப்ரீமியத்தொகையை ஒப்பீடு செய்தால் மட்டுமே நீங்கள் சிறந்த திட்டத்தை தேர்ந்து எடுக்க இயலும். மூன்றாம் தIரப்பு காப்பீட்டு திட்டத்தின் பரீமியங்கள் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் டெவலப்மெண்ட் அதாரிட்டியால் முடிவு செய்யப்படுகின்றன.

 • கேள்வி: எனது தேவைகள் எவ்விதனமான காப்பீட்டு திட்டங்களில் நன்கு பாதுகாப்பு அளிக்கப்படும்?

  பதில்: காப்பீடு செய்யப்பட்ட தொகையானது காப்பீடு செய்பவர் அறிவித்த தொகையாகும். இது வாகனத்தின் தற்போதைய மார்க்கெட் மதிப்பாகும். நீங்கள் மூன்றாம் தரப்பு காப்பீட்டை எடுத்தால் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்ப்படும் இழப்பிற்க்கு மட்டுமே உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். இதன் கீழ் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் உடல் காயங்களுக்கு வரையறை இல்லாமலும் அவர்களின் சொத்து சேதங்களுக்கு ரூ 7,50,000 வரையும் பாதுகாப்பு கிடைக்கிறது. மூன்றாம் தரப்பின் சொத்து சேதங்களுக்கு அளிக்கப்படும் நஷ்டத்தை ரூ 6000 க்குள் தடுத்து நிறுத்திவைத்துக் கொள்ளவும் தேர்வு செய்ய வசதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் அதற்குண்டான ப்ரீமியம் தொகையும் குறையும்

 • கேள்வி: எனது வாகன காப்பீட்டு பாலிசியின் காலம் என்ன?

  பதில்: பொதுவாக வாகன பாதுகாப்பு பாலிசி ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் பாலிசி முடிவு பெறாமல் இருக்க அதில் உள்ள கெடு தேதிக்கு முன்னரே புதிப்பிக்கபபட வேண்டும். தடையற்ற பாதுகாப்பிற்கு முடிவுறும் தேதிக்கு முன்னரே ப்ரீமியத்தை செலுத்தி புதிப்பித்துக்கொள்ளவும். பாலிசியை குறித்த காலத்திற்குள் புதிப்பிக்க தவறினால், வாகனம் மீண்டும் ஒரு முறை முழு சோதனை செய்யப்படும். அதுமட்டுமின்றி விரிவுவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறித்த காலத்திற்குள் புதிப்பிக்கப்படாத பாலிசிகளுக்கு ‘நோ க்ளைம் போனஸ்’ வசதி அளிக்கப்படாது.

 • கேள்வி: நோ க்ளைம் போனஸ்’ என்றால் என்ன?

  பதில்:பாலிசி காலத்தில் எந்த ஒரு இழப்பீடும் கோரவிட்டால் அதை ஊக்குவிக்க அளிக்கப்படும் தொகையே நோ க்ளைம் போனஸ்’ என்பதாகும். தற்போதைய இந்திய நடைமுறைப்படி இச்சலுகை விரிவான காப்பீட்டு திட்டத்தின் பரீமியத்தில் 25 முதல் 50 சதவீதம் வரை மாறுபடும். இந்த சலுகை மூன்றாம் தரப்பு காப்பீட்டு திட்டங்களுக்கு பொருந்தாது. நஷ்ட ஈட்டு கோரிக்கை எதுவும் தாக்குதல் செய்யப்பட்டால் அந்த வருடத்திற்கான ‘ நோ க்ளைம் போனஸ்’ நிராகரிக்கப்படும். இந்த சலுகை பாலிசிதாரருக்குமட்டுமே வழங்கப்படும், காப்பீடு செய்த வாகனதிற்கு அல்ல. வாகனத்தைவிற்பனை செய்யும் சமயம், புதிய உரிமையாளருக்கு காப்பீட்டு திட்டத்தை மாற்றிக்கொடுக்க இயலும்எனினும் ‘ நோ க்ளைம் போனஸ்’ தொகையை மாற்றி கொடுக்க இயலாது. மீத பரீமியத்தொகையை செலுத்த வேண்டியது புதிய உரிமையாளரின் பொறுப்பாகும். புதிதாக வாகனம் வாங்கும் சமயம், இந்த ‘ நோ க்ளைம் போனஸ்’ தொகையை விற்பனை செய்த/பழைய உரிமையாளர் உபயோக படுத்திக்கொள்ளலாம்.

 • கேள்வி: நான் எனது காப்பீட்டு நிறுவனத்தை மாற்றினால், நோ க்ளைம் போனஸ்’ தொகையும் மாற்றப்படுமா?

  பதில்: நீங்கள் பாலிசி புதிப்பிக்கும் சமயம் காப்பீட்டு நிறுவனத்தை மாற்றினால், நோ க்ளைம் போனஸ்’ அவசியம் கிடைக்கும். தற்போதைய காப்பீட்டு நிறுவனத்தில் உங்கள் பாலிசியில் சேர்ந்துள்ள தொகையை உறுதி செய்யும் ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும். காலாவதியாகும் மூல காப்பீட்டு பாலிசியுடன் இந்த திட்டத்தில் நஷ்ட ஈடு கோரிக்கை எதுவும் பதிவு செய்யவில்லை என்ற கடிதத்தை சமர்ப்பிக்கவேண்டும். உங்கள் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பாலிசியை புதிப்பிக்க வேண்டி அனுப்பப்பட்ட கடிதம் அல்லது உங்களுடைய ‘நோ க்ளைம் போனஸ்’ தொகை என்ன என்று அவர்களிடம் இருந்து ஒரு கடிதமோ இதற்கு சான்று.

 • கேள்வி: என் பரீமியம் தொகையை குறைக்க மேலும் ஏதாவது தள்ளுபடி வசதி இருக்கின்றனவா?

  பதில்: நோ க்ளைம் போனஸ்’ மட்டுமின்றி சுய சேதார ப்ரீமியத்தின் கீழ் மேலும் சில தள்ளுபடிகள் உள்ளன. அவை ஆட்டோமொபைல் அசோசியேஷனில் நீங்கள் மெம்பர் ஆக இருத்தல், வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கிளப் அங்கீகாரம் பெற்ற தனியாரின் பழங்கால(வின்டேஜ்) கார்கள், ஆட்டோமொபைல் அசோசியேஷன், புனே அங்கீகாரம் பெற்ற திருட்டு தடுப்பு கருவிகள் பொருத்தப்பட்டு அவை பொருத்தியவற்றை இந்தியன் ஆட்டோமொபைல் அசோசியேஷன் உறுதி செய்தவை போன்றவை. மேலும் கண் பார்வை திறன் குறைந்தவர்கள், உடல் ஊனமுற்றோர், மன வளர்ச்சி குன்றியவர்கள் போன்றவர்களுக்காக மாறுபாடுகள் செய்யப்பட்டு சாலை போக்குவரத்து அதிகாரிகளினால் பதிவு சான்றிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கும் வாகனங்களுக்கும் தள்ளுபடி அளிக்கப்படும். மேலும் நீங்கள் சுயமாக தேர்ந்தெடுக்கும் விலக்குகளை பொருத்து காப்பீட்டு நிறுவனம் மேலும் தள்ளுபடி அளிக்கும். பொறுப்பு விதிகளை மட்டுமே அளிக்கும் திட்டத்தில் , மூன்றாவது நபருக்கான சேதங்களை ரூ 7,50,000/-இல் இருந்து ரூ.6000 கக்கு குறைத்துக்கொண்டால், ப்ரீமியம் தொகையில் மேலும் தள்ளுபடி கிடைக்கும்.

 • கேள்வி: வாகன பாதுகாப்பு காப்பீட்டு பரீமியத்திற்கு சேவை வரி பொருந்துமா?

  பதில்: ஆமாம், நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டங்களின்படி சேவை வரி வசூலிக்கப்படும்.

 • கேள்வி: கழிவுகள் என்பவை என்ன?

  பதில்: கழிவுகள் என்பவை கோரப்பட்ட தொகையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையாகும். பொதுவாக இந்த கட்டாய கழிப்புகள் இரு சக்கர வாகன ங்களுக்கும் ரூபாய் 50 முதல் தனியார் நான்கு சக்கர வாகனங்களுக்கும்சுமக்கும் திறன் மற்றும் கொள்ளளவுமேம்படுத்தப்பட்ட வணிக வாகனங்களுக்குரூபாய் 500 வரையும் இருக்கும். வாகனத்தின் வயதை கணக்கில் கொண்டும் மற்றும் நஷ்ட கோரிக்கை சமர்ப்பிக்கப்படும் கால அவகாசத்தை கணக்கில் கொண்டும் அதிக அளவிலான கட்டாய கழிவுகள் வேறுபடும்.

 • கேள்வி: பாலிசியில் மாற்றங்களை பதிவு செய்யும் வழிமுறைகள் யாவை?

  பதில்:பாலிசியில் முகவரி, அல்லது குறிப்பிட்ட வாகனத்தில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது அவற்றின் உபயோகத்தில் மாற்றங்கள் போன்றவற்றை பாலிசியில் காப்பீட்டு நிறுவனத்தினம் மூலம் இணைத்துக்கொள்ள இயலும். தக்க ஆதாரங்களுடன் உங்களின் காப்பீட்டு நிறுவனதிற்கு கடிதம் அனுப்பி தேவையான ஒப்புதலை பெற்றுக்கொள்ள இயலும். குறிப்பிட்ட ஒரு சில ஒப்புதல்களுக்கு அதிகப்படி ப்ரீமியம் வசூலிக்கப்படலாம்.

 • கேள்வி: நான் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் எனது வாகனத்தை செலுத்தி க்கொண்டு இருக்கையில், ப்ரீமியம் தொகை எவ்வாறு கணக்கிடப்படும்?

  பதில்:ப்ரீமியம் தொகையை முடிவு செய்ய வாகனம் எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த குறிப்பிட்ட இடம் மட்டுமே கருதப்படும். வாகனம் பதிவு செய்யப்பட்ட இடத்தையும் உபயோகப்படும் இடத்தையும் எண்ணி குழப்பமடையவேண்டாம். உதாரணமாக உங்கள் வாகனம் சென்னையில் பதிவு செய்யப்பட்டதாக இருந்தால் Zone A விற்கு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும். நீங்கள் வாகனத்தை வேறு நகரத்திற்கோ அல்லது மாநகரத்திற்கோ மாற்றினாலும், அதே தொகை பொருந்தும். அதேபோல் வேறு நகரில் பதிவு செய்யப்பட்டவற்றிக்கு zone Bக்கு பொருந்தும் ப்ரீமியம் வசூலிக்கப்படும். பின்னர் அந்த வாகனம் ஒரு மெட்ரோ நகரத்திற்கு மாறினாலும், zone B க்கு விதிக்கப்படட தொகையே பொருந்தும்.

 • கேள்வி: நான் எல்பிஜி அல்லது சிஎன்ஜி உபகரணத்தை பொருத்தினால், எனது காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டியது அவசியமா?

  பதில்:உங்கள் வாகனத்தில் எல்பிஜி அல்லது சிஎன்ஜி உபகரணத்தை பொருத்தியபின், வாகனம் பதிவு செய்யப்பட்ட சாலை போக்குவரத்து அதாரிட்டி அலுவலகத்தில் தெரியப்படுத்தினால் பதிவு சான்றிதழில் தக்க மாற்றங்களை அவர்கள் செய்து கொடுப்பார்கள். அதேபோல் பாதுகாப்பீட்டு நிறுவனத்திற்கும் தெரியப்படுத்தினால். அதற்குறிய ப்ரீமியம் தொகையை பெற்றுக்கொண்டு அந்த உபகரணங்களின் மதிப்பிற்கு சொந்த சேதாரம் பிரிவின் கீழ் தேவையான பாதுகாப்பையும் அளிப்பர்.

 • கேள்வி: என் வாகனத்தை வாங்கும் நபருக்கு நான் எடுத்த காப்பீட்டை மாற்ற இயலுமா?

  பதில்: ஆம். வாகன காப்பீடு வாங்குபவர்களுக்கு மாற்றக் கூடியது. நீங்கள் செய்யவேண்டியது வாகனம் விற்பனை விவரத்தை காப்பீட்டு நிறுவனத் திற்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். வண்டி வாங்கும் உரிமையாளர் ஒரு புதிய முன்மொழிவு கடிதம் சமர்ப்பிக்கவேண்டும். ஒரு குறைந்த தொகை மற்றும் வாகனம் விற்கப்பட்ட தேதியில் இருந்து பாலிசி முடிவு தேதி வரையான ‘நோ க்ளைம் போனஸ்” விகிதாச்சார முறையில் வசூல் செய்யப்படும். வாகனம் மாற்றப்பட்ட தேதியில் இருந்து 14 நாட்களுக்குள்விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிமையாளர் மாற்றம் பதிவு செய்யப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்க. வாகனத்தின் உரிமையாளர் அவ்வாறு செய்ய தவறினால், சொந்த சேதத்திற்கான நஷ்ட ஈடு வழங்கப்பட மாட்டாது.

 • கேள்வி: எனது காப்பீட்டு பாலிசி தொலைந்து போனால், டூப்ளிகேட் பாலிசி பெற இயலுமா?

  பதில்: ஆம். நீங்கள் பாலிசி பெற்றுக்கொண்ட அலுவலத்தில் எழுத்து மூலம் இதை சமர்ப்பிக்க வேண்டும். டூப்ளிகேட் பாலிசி வழங்க ஒரு சிறிய தொகை வசூலிக்கப்படும்.

 • கேள்வி: வாகன காப்பீட்டு கோரிக்கை சமர்ப்பிக்க தேவையான ஆவணங்கள் யாவை?

  பதில்: பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்களுக்கு கீழ் கண்ட ஆவணங்கள்சமர்ப்பிக்கவேண்டும். இருப்பினும், பாலிசியில் கொடுத்துள்ள நுண் விவரங்களை படித்து ஒரு முறை சரி பார்த்துக்கொள்ளவும்.

  • நிரப்பப்பட்ட கோரிக்கை மனு
  • வாகனத்தின் பதிவு சான்றிதழ் நகல்
  • சேத மதிப்பீடு அசல்
  • பணிமனையின் பில் மற்றும் தொகை செலுத்திய ரசீது -அசல். நீங்கள் பணமில்லா முறையில் வாகனத்தை ரிப்பேர் செய்திருந்தால் அசல் விலை பட்டியல்.
  • வாகனம் முழு இழப்பு அல்லது திருடு போயிருந்தால், போலீசின் முதல் தகவல் அறிக்கை.
  • வாகன திருட்டிற்கு கோரிக்கை அளிக்கும் போது, வாகனத்தின் சாவியுடன் போலீஸ் அளிக்கும் ‘கண்டுபிடிக்க இயலவில்லை’ என்ற கடிதம்.
 • கேள்வி: எனது வானகத்திர்ற்கு நான் மோட்டார் வாகன பாதுகாப்பு பாலிசி வாங்கவில்லையெனில் என்ன ஆகும்?

  பதில்: இந்திய சாலைகளில் ஓடும் அணைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மோட்டார் வாகன பாதுகாப்பு பாலிசி இருப்பது அவசியம். உங்கள் வாகனத்திற்கு நீங்கள் மோட்டார் வாகன பாதுகாப்பு பாலிசி வாங்கவில்லையெனில் மோட்டார் வாகன சட்டம் 1988 ஐ மீறியதாக ரூ 2000 அபராதமும் ன்று மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும்.

 • கேள்வி: மோட்டார் வாகன பாதுகாப்பு பாலிசி எடுப்பது எளிதான ஒன்றா?

  பதில்: ஆமாம். வணிகவாகனமோ, கார்மற்றும்இருசக்கரவாகனங்கள்போன்றஏதுவாகஇருந்தாலும்வாகனபாதுகாப்புபாலிசிவாங்குவதுமிகஎளிதானஒன்று. காப்பீட்டுநிறுவனத்தையோஅல்லதுமுகவர்களையோதொடர்புகொள்ளவும். எவ்விதசிரமமும்இன்றிசிலநிமிடங்களில்ஆன்லைன்மூலம்வாகனஉரிமையாளர்கள்காப்பீடுஎடுக்கஅனைத்துகாப்பீட் டுநிறுவனங்களும்அனுமதிக்கின்றன.

 • கேள்வி: ஆன்லைன்மூலம்காப்பீட்டுபாலிசிஎடுப்பதுநன்மைதரக்கூடியாதா?

  பதில்: ஆமாம், மிகவிரைவாகவழங்கப்படுவதாலும், மேலும்காகிதமுறைஇல்லாமல்வசதியாகஅளிக்கப்படுவதாலும்இதுமிகவும்நன்மைகொடுக்கிறது. சிலநிறுவனங்கள்ஆன்லைன்மூலம்வாங்குவோருக்குதள்ளுபடியும்அளிக்கின்றன. மேலும்நீங்கள் இல்லத்தைவிட்டுவெளியேசெல்ல வேண்டியஅவசியம்இல்லாமல்பாலிசிசிலநிமிடங்களிலேயேஉண்களுக்கு வழங்கப்படுகிறது.

 • கேள்வி: என்வாகனகாப்பீட்டுபாலிசியைஆன்லைன்மூலம்புதுப்பிக்கஇயலுமா?

  பதில்: முடியும். மோட்டார்வாகனபாதுகாப்பீட்டுபாலிசியைகாப்பீட்டுநிறுவனத்தின்அதிகாரபூர்வமானவலைதளத்திலோஅல்லது பாலிசி பஜார் போன்ற காப்பீட்டு நிறுவனங்களின் வலைதளத்திலோ உங்கள் பாலிசியை நீங்கள் புதுப்பித்துக் கொள்ள இயலும்.

 • கேள்வி: எனதுவாகனகாப்பீடுகோரிக்கையைநான்ரத்துசெய்யமுடியுமா?

  பதில் : முடியும். நீங்கள் காப்பீட்டு கோரிக்கையை ரத்து செய்யுமாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு மின்னணு அஞ்சல் மூலம் அனுப்பியோ அல்லது வாடிக்கையாளர் உதவிமையத்தை தொடர்புகொண்டே உங்கள் கோரிக்கையை நீங்கள் ரத்து செய்யலாம்.

 • கேள்வி: மோட்டார்வாகனபாதுகாப்புகவர்நோட்என்றால்என்ன?

  பதில்:பாலிசிபத்திரம்வழங்குவதற்குமுன்கொடுக்கப்படும்அத்தாட்சியேமோட்டார்வாகனபாதுகாப்புகவர்நோட்ஆகும். பாலிதாரார்காப்பீடுவேண்டிசமர்ப்பித்தபூர்த்திசெய்தஃபார்ம்மற்றும்பரீமியத் தொகைஇவைஇரண்டையும்பெற்றுக்கொண்டதும்இந்தஆவணம்வழங்கப்படும்.வழங்கப்பட்டதேதியில்இருந்து 60 நாட்கள்வரைஇந்தஆவணம்செல்லுபடியாகும். இந்தகவர்நோட்கெடுவாகும்தேதிக்குமுன்னரேமோட்டார்வாகனபாதுகாப்பீட் டுபாலிசிபத்திரத்தைவழங்கவேண்டும்என்பதுகாப்பீட்டுநிறுவனத்திற்குமுக்கியமானவிதியாகும்.

 • கேள்வி: பாலிசிவாங்க வாகனமுன் பரிசோதனைஎப்போதுசெய்யப்படும்?

  பதில்: பாலிசிவழங்கும்முன்கார்கள், பைக், ஸ்கூட்டர்மற்றும்லாரிகள்போன்றவற்றிற்குமுன்பரிசோதனைகீழ்குறிப்பிட்டசமயங்களில்நடத்தப்படும்.

  • காப்பீட்டுகாலத்தில்ஏதேனும்இடைவெளிஇருந்தால்
  • மூன்றாம்நபர் காப்பீடு பாலிசிவிரிவாக்கப்பட்டபாலிசியாகமாற்றவேண்டிஇருந்தால்
  • காப்பீடுசெய்யப்பட வேண்டிய வாகனம்இறக்குமதிசெய்யப்பட்டகார்அல்லதுபைக்
  • சமர்பித்தகாசோலைசெல்லாததால்மீண்டும்தொகைசெலுத்தப்பட்டால்
 • கேள்வி: மின்னணு/மின்சாரஉபரி உபகரணங்கள்என்பவையாவை?

  பதில்: மின்னணுமற்றும்மின்சாரஉபகரணங்கள்என்பவைநீங்கள்வாகனத்தைவாங்கும்போதுவாகனதயாரிப்பாளர்களால்பொருத்தப்படாதமின்னணு / மின்சாரகருவிகளேஆகும். உதாரணமாகநீங்கள்காரைவாங்கியபின்அதில்எல்சிடிதிரையைபொருத்தினால்அதுமின்னணு/மின்சாரஉபரிபாகமாகும். பாலிசியைவாங்கும்போதுவாகனஉரிமையாளர்அதற்கும்பாதுகாப்புகவர்தேர்வுசெய்துஇருந்தால்மட்டுமேஅவற்றிக்குகாப்பீடுவழங்கப்படும்.

 • கேள்வி: கார்களில்தனிநபர்சொந்தவிபத்துகாப்பீடுயாருக்குக்கிடைக்கும்?

  பதில்: உங்களதுமோட்டார்வாகனபாதுகாப்பீட்டுபாலிசியின்கீழ்இங்குகுறிப்பிட்டுள்ளவர்களுக்குதனிநபர்பாதுகாப்புநன்மைகளையும்வாங்கமுடியும்.

  • உரிமையாளர்–ஓட்டுனர்
  • பயணம்செய்பவர்கள் (பெயர்குறிப்பிடப்பட்டமற்றும்குறிப்பிடப்படாதவர்கள்)
  • சம்பளம்அமர்த்தியுள்ளஓட்டுனர்
 • கேள்வி: எனதுவாகனத்தைவிற்கும்சமயம்நடப்பதுஎன்ன?

  பதில்:நீங்கள்உங்களுடையஇருசக்கர, நான்குசக்கர, மற்றும்வணிகவாகனங்களைவிற்றவுடன்நடப்பிலுள்ளகாப்பீட்டுபாலிசிவாங்குபவரின்பெயருக்குமாற்றப்படவேண்டும். வண்டிவிற்ற 14 நாட்களுக்குள்வாங்கியவர்காப்பீட்டைமாற்றவிண்ணப்பிக்கவேண்டும். நீங்கள்பாலியைஉங்களுடையவேறுவாகனத்திற்கும்மாற்றிக்கொள்ளலாம். அச்சமயம்வாகனத்தைவாங்கியவர்அதற்குபுதியபாலிசியைவாங்கவேண்டும்.

 • கேள்வி: விபத்துஏற்பட்டால்என்னசெய்யவேண்டும்?

  பதில்:விபத்துஏற்பட்டவுடன்உடனடியாககாவல்துறைக்குதகவல்கொடுத்துசம்பவம்நடந்தஇடத்தைபுகைப்படம்எடுக்கவேண்டும். உங்களதுவாகனத்தையும்அதேபோலசம்பந்தப்பட்டமற்றவாகனத்தையும்பலவேறுகோ ணங்களிளும்குறிப்பாகசேதமாகியஇடத்தைமையப்படுத்திபுகைப்படம்எடுக்கவும்.மற்றவண்டிஓட்டுனருடன்பாலிசிஎண், காப்பீட்டுநிறுவனம், பெயர், தொலைபேசிஎண், போன்றமுக்கியதகவல்களைபறிமாறிக்கொள்ளவும். ஏற்பட்டசேதத்திற்குஉண்டானஇழப்பீடைபெறஉங்கள்காப்பீட்டுநிறுவனத்தைதொடர்புகொண்டுகாப்பீட்டுகோரிக்கையைசமர்ப்பிக்கவும். உங்களுடையபொருள்களையும்வாகனத்தின்சாவியையும்பாதுகாப்பாகவைக்கவும்.

செய்திகள்:

 • அக்டோபர் 1, 2020 முதல்அமலுக்குவரும்புதியமோட்டார்வாகனவிதிகள்

  தரை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட மத்திய வாகன சட்டம் 1989 ன் திருத்தங்களின்படி, மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில் நுட்பங்கள் மற்றும் மின்னணு கண்காணிப்பின் மூலம் போக்குவரத்து விதிகள் அமல் படுத்தப்பட உள்ளன. மோட்டார் வாகன சட்டங்களின் கீழ் அக்டோபர் 1, 2000 முதல் இவை செயல் படுத்தப்பட உள்ளன.

  போக்குவரத்து விதிகளை மீறல் மற்றும் அனைத்து விதமான ஊழலை ஒழிக்க தொழில் நுட்ப மேலாண்மை, போக்குவரத்து விதிகள் மற்றும் அதற்குரிய அபராதம் போன்றவற்றை சீர் செய்ய மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்கள் சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்டன.

  மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட உள்ள முக்கிய மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டது இருக்கின்றன.

  • ஓட்டுனர் வண்டி ஓட்டும் போது, வழி பார்க்க கை பேசியை உபயோகப்படுத்தலாம். ஆனால் அதனால் அவருடைய கவனம் தவறக்கூடாது. .
  • மின்னணு முறையில் சரி பார்க்கப்பட்ட வாகனத்தின் ஆவணங்களின் அசல் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பறிமுதல் செய்யப்பட வேண்டிய ஆவனங்களுக்கும் பொருந்தும்.
  • தகுதி நீக்கம் செய்யப்படும் லைசென்ஸ் தகவல்கள் வரிசைக்கிரமத்தில் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டு அவை தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும்.
  • ஓட்டுநரின் நடத்தை மற்றும் அவரின் பதிவுகள் கண்காணிக்கப்படும்.
  • ஒவ்வொரு சோதனைக்குப்பின்னரும் ஓட்டும் தகவல்கள் வளைதளத்தில் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.
  • வலைத்தளத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் பங்கு உடைய அனைத்து அதிகாரிகளின் அடையாளம் பகிரப்படும்.
  • ஓட்டுநர்கள் தங்கள் வாகனத்தின் ஆவணங்களை மத்திய அரசின்

  ‘எம் பரிவாகன்’ அல்லது ‘டிஜி லாக்கர்’ போன்றவற்றில் பதிவு இறக்கி வைக்க அனுமதி.

  சாலை பாதுகாப்பிற்கும் ஓட்டுனர்களின் துன்பங்களை குறைக்கவும் இந்த சட்ட திருத்தங்களும் போக்குவரத்து விதி கண்காணிப்பும் அமல் படுத்தபடுவதாக அரசாங்கத்தின் அறிக்கை தெரிவுக்கிறது.

 • மோட்டார் வாகன காப்பீட்டை புதுப்பிக்க மாசு காட்டுப்பாடு சான்றிதழை அவசியப்படுத்தியது ஐ ஆர் டி ஏ.

  வாகன காப்பீட்டை புதிப்பிக்கும் சமயம் செல்லுபடியாகும் மாசுக்கட்டுபாடு சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தை, காப்பீட்டு நிறுவனங்ககளுக்கு ஐ ஆர் டி ஏ. தெரிவித்துள்ளது.

  இதற்கு முன் செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் காப்பீடு நிறுவனங்கள் பாலிசியை புதுப்பிக்க கூடாது என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இவற்றை அவசியமாக அமல் படுத்த வேண்டும் குறிப்பாக டெல்லி –என் சி ஆர் பகுதிகளில் என்று ஐ ஆர் டி ஏ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

  மாநில காவல் துறை அதிகாரிகளும் இந்த மாசுக்கட்டுபாடு சான்றிதழை சமர்ப்பிக்க ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களை கேட்க முடியும். வாகனம் குறிப்பிட்ட மாசு கட்டுப்பாடின் வரையறைக்கு உட்பட்டது என்று மாசு காட்டுப்பாடு சோதனை நிலையம் இந்த சான்றிதழை வழங்கலாம்.

 • லாக் டவுன் 2.0 நிதி அமைச்சகம் அறிவித்த வாகன காப்பீட்டின் நீட்டிக்கப்பட்ட பாலிசி கெடு

  தற்சமயம் நிலவும் கரோனா வைரஸ் பரவலால் பொதுமக்களின் துயரத்தை கருதி, மூன்றாம் தரப்பு பாதுகாப்பு பாலிசியின் வருடாந்திர ப்ரீமியம் தொகை செலுத்த சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. நிதி அமைச்சகத்தின் சமீபத்திய வெளியீட்டின்படி பாலிசிதாரர்கள் பரீமியத்தை மே 15,2000 வரை செலுத்தாமல் வைத்துக்கொள்ளலாம். இது மார்ச் 15 முதல் மே 3, 2020 வரை புதுப்பிக்கபட இருக்கும் பாலிசிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

  இன்சூரன்ஸ் விதிகளின் படி, புதுப்பிக்க வேண்டிய தேதிக்கு முன்னர் பாலிசிதாரர் பரீமியத்தொகை செலுத்தாவிடில், பாலிசி நிலுவையில் இருந்து விலக்கப்படும். மருத்துவ பாலிசியின் கீழ் பாலிசிதாரருக்கு 30 நாள் கருணை காலம் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் வாகன காப்பீட்டு திட்டத்தில் இது அனுமதிக்கப்படவில்லை. நிலுவையில் உள்ள காப்பீடு இல்லாமல் ஓட்டினால் அதிக அபராதம் விதிக்கப்படும். இந்த அறிக்கை தற்சமயம் நிலவும் பேரிடரில் பாலிசிதாரர்களுக்கு அவர்கள் நிதி நிலைமையை சமாளிக்க ஒரு பெரிய உதவியாகும்.

Find similar car insurance quotes by body type

Hatchback Sedan SUV MUV
Search
Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
 Why buy from policybazaar