வாகன காப்பீடு தொகை கணிப்பான்

வாகன காப்பீடு கணிப்பான் வாகனம் வாங்கும் நபர் வெவ்வேறு காப்பீடுகளை ஆராய்ந்து மதிப்பு செய்ய உதவும் ஒரு இணையவழி செயலி ஆகும். மேலும் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப சரியான காப்பீடு எது என்பதை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

Read more


ஒப்பிடுங்கள், கார் இன்ஷ்யூரன்ஸில் 85%* வரை சேமியுங்கள்.
செயலாக்கம்
கார் காப்பீட்டை வருடத்திற்கு ₹ 2094 முதல் தொடங்குங்கள்#
 • 2 நிமிடத்தில் கொள்கையை புதுப்பிக்கவும்

 • 20+ காப்பீட்டாளர்கள்

 • 51 லட்சம்+

1000 க்கும் குறைவான சிசி கார்களுக்கு குறைவான டிபி விலை. அனைத்து சேமிப்புகளும் காப்பீட்டாளர்களால் ஐஆர்டிஐ(IRDI) அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் படி வழங்கப்படு

சந்தேகமின்றி,வாடிக்கையாளர் ஒரு சிறந்த நான்கு சக்கர வாகன காப்பீடை தேர்வு செய்ய வாகன காப்பீடு கணிப்பான் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது. வெவ்வேறு நான்கு சக்கர காப்பீடு திட்டங்களை எளிதாக ஒப்பிடட உதவுகிறது. ஒரு வாகன காப்பீடு கணிப்பான் வாடிக்கையாளர்களின் கேப்பீடு தேவைகளை மதிப்பிட்டு திட்டமிட உதவுகிறது.

வாகன காப்பீடுகளை ஒப்பிட்டு 55% வரை சேமியுங்கள். புதிய அல்லது இரண்டாம் வகை வாகனம் எனினும் இந்த கணிப்பானைக்கொண்டு தரவரிசை பட்டியலின்படி ஒப்பிட்டுபார்க்க இயலும். உடனடியாக உங்கள் தேவைகளுக்கும் செலவு திட்டத்திற்கேற்ப ஒரு ஆன்லைன் காப்பீட்டை தேர்வு செய்யுங்கள்.

 • வாகனகாப்பீட்டை இணையம் மூலம் தேர்வுசெய்து பணத்தை மீதப்படுத்தலாம் .
 • சிறந்த காப்பீட்டு நிறுவனபங்களின் காப்பீடுகளை ஒப்பிட்டு பார்க்கலாம்
 • சிறந்தகாப்பீட்டை தேர்ந்தெடுங்கள்

வாகன காப்பீடு கணிப்பானின் லாபங்கள்.

 • வாகனகாப்பீடு கணிப்பான் மூலம் மொத்த காப்பீட்டு தகல்வல்களையும் காப்பீடு வாங்கும்படிகளையும்வாடிக்கை யாளருக்கு எளிதாக புரியவைக்கலாம்.
 • காப்பீட்டுகட்டண தொகையை ஒப்பிட்டு பார்த்து சிறந்ததை தேர்ந்தெடுக்க இயலும் .
 • வேறுபட்டகட்டண தொகையை ஒப்பிட்டு கட்டண முறையைமாற்றியமைத்துக் கொள்ளஇயலும் .
 • இடைத்தரகர்கள்மூலம் நமது முடிவு தேர்ந்தெடுக்கப்படாமல் தவிர்க்க இயலும் .

வாகன காப்பீடு கணிப்பானை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

இது ஒரு இணையவழி அம்சம் என்பதால் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் தகவல்களை பொறுத்தே காப்பீட்டின் கட்டண தொகையை நிர்ணயிக்க முடியும் .

வாகனம் வாங்குபவர்களுக்கும் அவர்களது தேவைக்கேற்ப சந்தாதொகையை கணித்துக்

கொள்ளஇயலும் . சரியான காப்பீட்டு சந்தாவை தேர்ந்தெடுக்க தேவைப்படும் தகவல்களான வாகனபதிவு ,வாகனமாதிரி , காப்பீடு ஆரம்பம், மற்றும் முடியும் காலம், றப்புசலுகைளின் விவரங்கள். இவையனைத்தையும் கணினியின்மூலம் சில நொடிகளில் தெரிந்து கொள்ளலாம். மேலும் சரியான வாகன காப்பீடு எது என்பதை தேர்வுசெய்யவும், ஒப்பிட்டு பார்க்கவும் இது ஒரு சரியான செயலி ஆகும். இதை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் ஒருவர் தேவையான சிறந்த ஒரு காப்பீட்டை

தேர்ந்தெடுக்க இயலும். காப்பீடு எவ்வளவு அதிகமோ நான்கு சக்கர சந்தாவும் அவ்வளவு அதிகம்.நான்கு சக்கர வாகன காப்பீடை கணக்கிடுவதற்கு ஒவ்வொரு காப்பெடு நிறுவனமும் ஒவ்வொரு முறையை கையாளுகிறது.

 • இரண்டாம்வகை வாகனத்திற்கான சந்தாகணிப்பான் : இரண்டாம் வகை வாகனத்திற்கான சந்தா தொகையை மதிப்பீடுசெய்ய அந்த வாகனத்தின் வாகன வகை எரிவாயு வகை மற்றும் வாகனத்தின் பதிவு எண், முந்தய காப்பீடு ஏதேனும் பெறப்பட்டிருந்தால் அதன் விவரங்கள் மற்றும் முந்தைய வருடத்தின் உரிமைகோரால் அறிக்கைகள். இரண்டாம் வகை வாகனத்திற்கான சந்தாகணிப்பான் வாடிக்கையாளரை அவர் தேவைக்கேற்ப ஒரு சிறந்த காப்பீடை தேர்ந்தெடுக்க உதவுகிறது.
 • புதியவாகனத்திற்கான சந்தாகணிப்பான்: புதிய வாகனத்திற்கான காப்பீடு சந்தா பற்றி அறிந்துகொள்ள வாகன விபரங்களான வாகன உற்பத்தியாளர் பெயர் , வாகனமாதிரி, உற்பத்தி செய்யப்பட்ட வருடம், எந்த மாநிலத்தில் பதிவிடப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தர வேண்டும். உரிமையாளரின் சொந்தவிபரங்களுடன் அணைத்து தேவைகளும் தள்ளுபடிகளும் ஒப்பிட்டு ச ரியான தேர்வை இந்தகாப்பீடு கணிப்பான் செய்துதருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு துரித தீர்வாகும் .

வாகன காப்பீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

சந்தா கட்டணத்தை நேரடியான சூத்திரம் மூலம் கணக்கிடலாம். சிறந்த மற்றும் சரியான காப்பீட்டை நாம் அறிந்துகொள்ள இதுசிறந்ததாகும். சுயசேதம்-(சந்தா சலுகை பெறப்படாத வெகுமதி +தள்ளுபடி ) + உத்திரவாத சந்தா அதாவது வாகன ஒருங்கமைப்பு மற்றும் வளர்ச்சி கழகத்தின் மதிப்பிடல் மூலம் நிர்ணயிக்கப்படும் தொகையால் எந்தவித குழப்பமும் இன்றி காப்பீட்டை கணிக்க இயலும் .

காரணிகள்

உற்பத்திசெய்யப்பட்டவருடம் (2012)

என் சி பீ யுடன் நான்கு

சக்கர காப்பீடு

ஷோரூம் விலை

ரூ. 4,16,000

தேய்மானம்

20%

ரூ. 83,200

காப்பீடு மதிப்பு தொகை

ரூ. 3,32,800

சுய சேதம் மதிப்பு

1.970%

ரூ. 6556

வாகன காப்பீடு வெகுமதி

பெறப்படாத தள்ளுபடி

20%

ரூ. 1311

மொத்த சுயசேத சந்தா

ரூ. 5,425

சுயவிபத்து கேப்பீடு

ரூ. 100

வாகன ஓட்டிக்கான சட்டரீதியான விபத்து காப்பீடு

ரூ. 50

கட்டாயமான மூன்றாம் நபர் கேப்பீடு

ரூ. 1110

கூட்டுசந்தா

ரூ. 6505

சேவைவரி

14%

ரூ. 911

மொத்த சந்தா

ரூ. 7416

வாகன காப்பீட்டு தொகையை முடிவு செய்யும் காரணிகள்:

வாகன காப்பீடு சந்தா மதிப்பிடுவதில் தவிர்க்க முடியாத சில சிறந்த வேறுபாடுகள் முக்கிய பங்குவகிக்கின்றன .

 • வயதுமற்றும் பாலினம் : சந்தாதாரர் 25 வயதுக்கு உட்பட்டவர் எனில் வாகன விபத்துக்கான காரணக்கூறுகள் அதிகம் என்பதால் 18-25 வயதுக்குட்பட்டவர்கள் அதிகபடியான சந்தா தொகை செலுத்துபவராக கணக்கிடப்படுவர்கள்.
 • வாகனஉற்பத்தி, மாதிரி, மற்றும் மாறுபாடு: ஆடி மற்றும் பென்ட்லீ போன்ற விலை உயர்த்த நான்கு சக்கர வானகனங்கள் வாகனங்கள் ஆல்டோ மற்றும் சாண்ட்ரோவுடன் ஒப்பிடும்பொழுது அதிகமாக மதிப்பிடப்படும். அதேபோல் ஆறு இருக்கைக்குமேல் உள்ள எஸ் யூ வி பெரியரக வாகனங்கள் குடும்பரக வாகனங்களைவிட அதிக கட்டணம் செலுத்தநேரிடும் .
 • காப்பீடுதேவைப்படும் இடம்: கிராமப்புற மற்றும் புறநகர்பகுதியை ஒப்பிடும்பொழுது வாகன நெருக்கம் அதிகம் உள்ள நகர்புறத்தில் கூடுதல் சந்தா தொகை வசூலிக்கப்படும்.
 • எரிபொருள் வகை: பெட்ரோல் /டீசல் போன்ற எரி பொருளுடன் ஒப்பிடும் பொழுது எரிவாயு பயன்பாட்டில் உள்ள வாகனத்திற்கு குறைவான தொகை கணக்கிடப்படும் .
 • தயாரிக்கப்பட்ட வருடம்: நான்கு சக்கர வாகனத்தின் வயதிற்கேற்ப அதன் காப்பீடு மதிப்பு தொகையும் குறையும்.
 • தள்ளுபடி: இராணுவவீரர், மருத்துவர், மற்றும்அரசுபணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும்.
 • தன்னார்வசெயல்: தாமாகவே முன்வந்து ஒரு சிறிய தொகையை ஈடுபெரும்பொழுது அறிவித்துக் கொள்வதன்மூலம் வருடாந்திர சந்தாஅளவு குறைகிறது .
 • திருட்டுக்குஎதிரான காப்பீடு தள்ளுபடி: இயந்திர ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் விதிமுறைக்குட்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதெனில் திருட்டு ஏற்படின்5% வரை இழப்பு வழங்கப்படும்.
 • காப்பீடுதொகை பெறப்படாததற்கான வெகுமதி: ஒவ்வொரு வருட இறுதியிலும் காப்பீடு பெறப்படவில்லையெனில் ஒரு குறிப்பிட்ட வெகுமதி வருடகணக்கில் சேரும். இதன் கூட்டு தள்ளுபடி தொகையிலிருந்து 10% முதல் 50% வரை மாறுபடும். மேலும் மற்றொரு வாகனத்திற்கு காப்பீட்டை மாற்றம் செய்யும்பொழுது தொகையும் மாற்றப்படும் .

வாகன காப்பிட்டு சந்தாவை கணிப்பதற்குதேவையான விவரங்கள்:

நேரடியாக ஒருவர் காப்பீடு சந்தா தொகையை எவருடைய உதவியும் இன்றி தாமாகவே கணக்கிட்டு கொள்ளலாம் . நாம் தரும் உள்ளீடு விவரங்களின் அடிப்படையில் தரவரிசைபடி சிறந்த நிறுவனத்தைதேர்வுசெய்யலாம் .

இணையதள வாகன காப்பிட்டு கணிப்பானில் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பதிவுசெய்ய வேண்டும்:

 • வாகனபதிவிட்டு எண்
 • ஆர்டிஓ
 • வாகனம்பதிவிடப்பட்ட வருடம்
 • வாகனமாதிரி
 • உற்பத்தியாளர்
 • எரிபொருள் வகை

சிறந்த காப்பீடு விவரத்தை பெற சரியான துல்லியமான விவரத்தை தருவதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு காப்பீடை தேர்ந்தெடுப்பதும், நிராகரிப்பதும் தனிநபர் விருப்பத்திற்குட்பட்டது.

சந்தா தொகையை கணக்கீடு செய்ய எளிய சூத்திரத்தை கீழ்கண்டவாறு பின்பற்றலாம்:

சந்தா தொகையை சுய சேதார தொகைக்கு நிகரானது -(காப்பீடு பெறப்படாத வெகுமதி + அதிக தள்ளுபடி ) + பிற தேவைக்கான காப்பீட்டு மதிப்பு + ஐஆர்டிஏஐ நிர்ணயித்த மூன்றாம் நபருக்கான தொகை .

மூன்றாம் நபருக்கான காப்பீட்டு கட்டணம் ஐஆர்டிஏஐ யால் 16 ஜூன் 2019ல் நிர்ணயிக்கப்பட்ட விவரங்கள் கீழ்கண்டவாறு

இயந்திர கொள்ளளவு

சந்தா தொகை மதிப்பு ஜூன் 16,2019 (ரூ.)

1000 சிசிகும்குறைவு

2,072

1000 சிசி கும் அதிகம் மற்றும் 1500 சிசி கும் குறைவு

3,221

1500 சிசிகும்அதிகமான

7,890

பழைய மற்றும் புதிய வாகனத்திற்கான காப்பீட்டை எவ்வாறு மதிப்பிடலாம் ?

பழைய மற்றும் புதிய வாகனத்தின் காப்பீட்டு தொகை மதிப்பிட கீழ்கண்ட விவரங்களை தர வேண்டும் .

 • புதியவாகனத்தின் உற்பத்தியாளரின் பெயர்
 • வாகனவிவரம் மற்றும் உற்பத்தியாளரின் பெயர் மற்றும்விவரம்
 • வாகனத்தின்மாதிரி
 • தேதிமற்றும் வாகனம் பதிவிடப்பட்ட மாநிலம்
 • மாநிலம்மற்றும் சாலைவரி செலுத்தப்பட்ட மாவட்டம்
 • எரிபொருள் வகை
 • உற்பத்திசெய்யப்பட்ட வருடம்

இரண்டாம் வகை அல்லது பழைய வாகனத்திற்கு -

 • வாகனமாதிரி
 • எரிபொருள் -எரிவாயு ,பெட்ரோல், அல்லது டீசல்
 • காப்பீடுபெறப்பட்ட தகவல்
 • தேய்மானம்மதிப்பு
 • முந்தையகாப்பீட்டின் விவரம்

இரண்டாம் வகை வாகனத்திற்கு உரிமையாளரின் பெயர் விவரங்களும் தரப்பட வேண்டும்.

வாகன காப்பீடு தொகை புதுப்பித்தல்

ஏற்கனவே உள்ள காப்பீட்டை சரியான கால இடைவெளியில் புதுப்பித்தல் இன்றியமையாதது. ஒவ்வொரு காப்பீடும் ஒரு குறிப்பிட்ட காலஅ வகாசத்தை பொறுத்து அமைக்கப்பட்டது, அந்த குறிப்பிட்ட தேதியை கடக்கும் போது வாடிக்கையாளர் காப்பீட்டை புதுப்பிக்க வேண்டும். இதை எளிமையாக இணையம் மூலம் புதுப்பித்து கொள்ளலாம்.

பல வாடிக்கையாளர்கள் சந்தா தொகையை மையமாக வைத்து தங்களது காப்பீட்டை தேர்ந்தெடுக்கின்றனர் . இது ஒருசரியான தேர்வாககாது. ஏனைய காரணிகளான லாபம் மற்றும் சலுகைகளையும் பார்க்கவேண்டும். அதிக தொகையானாலும் முழுமையான நீட்டிக்கப்பட்ட காப்பீடு கிட்டுமானால் அதைத் தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும் .

கேள்விகள்:

 • வாகன காப்பீடு கட்டணத் தொகை கணிப்பான் என்றால் என்ன ?

  வாகன காப்பீடு கணிப்பான் என்பது ஒரு இணைய வழி செயலி ,வாகன காப்பீடு வாங்குபவர்களுக்கு வேறு சில காப்பீட்டுடன் ஒப்பிட்டு ஒரு சரியான மேற்கோளுடன் செலுத்த வேண்டிய கட்டண சந்தா தொகையை காப்பீட்டுதாரருக்கு தெரிவிக்கும்.

 • நான் எனது வாகனத்திற்கு வாகன காப்பீடு மேற்கோள் வாங்குவதற்கு காப்பீடு கணிப்பானை எங்கு கண்டறியலாம்?

  வாகன காப்பீடு கணிப்பானை எளிமையான முறையில்இருந்த இடத்திலேயே கட்டண சந்தா தொகையைகாப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதற்கு பெயர், தொலைபேசி எண், முகவரி, வாகனமாதிரி எண் ,வாகன உற்பத்தியாளரின் பெயர், உற்பத்தி செய்யப்பட்ட வருடம், வாகன எரிபொருள், பதிவு செய்யப்பட்ட விளக்கம் போன்ற சில தகவல்களை தெரிவிக்கவேண்டும். அனைத்து சரியான விளக்கங்களையும் பதிவு செய்த பின்பு காப்பீடு சந்தா கணிப்பான் உங்களுக்கு தேவையான மேற்கோளை கணக்கிட்டு தெரிவிக்கும்.

 • வாகன காப்பீட்டை பாதிக்கும் காரணிகள் யாவை?

  காப்பீட்டில் தெரிவிக்கப்பட்ட வாகனத்தின் தொகை, தானூர்தி மாதிரி, இயந்திர சதுர அடி கொள்ளளவு, புவியியல் இருப்பிடம் போன்ற ஏனைய காரணிகள் வாகன காப்பீட்டில் பிரதானமான பங்கு வகிக்கின்றது.

 • வாகன காப்பீட்டின் சந்தா தொகையை குறைப்பதற்கு ஆலோசனைகள் என்ன?

  நான்கு சக்கர வாகனத்தின் சந்தாவை குறைப்பதற்கு பல வகையான வழிகள் உள்ளன. இந்திய உந்துவண்டி கழகத்தின் உறுப்பினர் ஆவதன் மூலமும், திருட்டுக்கு எதிரான உபகரணங்களை நான்கு சக்கர வாகனத்தில் பொருத்துவதன் மூலமும் காப்பீடு கட்டண சந்தாவை குறைக்கலாம். நான்கு சக்கர வாகன காப்பீடு பெறுவதற்கு முன் நமது வாகனத்தில் வாகன காப்பீட்டில் குறிப்பிடப்பட்ட மதிப்பும் கணினியில் குறிப்பிடப்பட்ட மதிப்பும் சரியாக உள்ளதா என பார்க்க வேண்டும். இவை சரியான தொகை செலுத்தப்படுகிறதா என்பதை பார்ப்பது மட்டும் அல்லாமல் உதிர்வாதமாக வசதியான உரிமைகோரால் அல்லாத வழிமுறைக்கு உத்திரவாதம் அழிக்கிறது .உங்களுடையஉந்து வண்டியை வாங்கும் பொழுது கவனத்துடன் நமது தேவைக்கேற்ப வாங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு 50 கிலோமீட்டருக்கும் குறைவாக வாகனம் ஓட்டுபவர் எனில் பெரிய வகை பெரிய வகை வாகனத்தை தேர்வு செய்யாமல் இருப்பது நல்லது.வாகனத்தின் சதுர கன அடியும் விற்பனை நிலையத்தின் விலையையும் பொறுத்து காப்பீட்டிற்கு நாம் செலுத்தும் கட்டண சந்தா மாறுபடும்.வேறு வித கூடுதல் ஒப்பந்தங்களை தேர்வு செய்ய தேவையில்லை. ஏனெனில் அது உங்களின் காப்பீட்டின் கட்டண சந்தாவை அதிகரிக்கும்.

 • வாகன காப்பீடு கணிப்பானின் லாபங்கள் என்ன?

  வாகன காப்பீடு கணிப்பானின் லாபங்கள் கீழ்வருமாறு:

  • வாகன காப்பீடு வாங்கும் முறையை வசதியாகவும் எளிமையாகவும் வாகனம் வாங்குபவர்களுக்கு மாற்றியமைக்கிறது.
  • வேறு காப்பீட்டு கட்டணத்துடன் ஒப்பிட்டு பார்த்து நமது தேவைக்கேற்ற சிறந்த காப்பீட்டை தேந்தெடுக்க உதவுகிறது.
  • இது ஒரு முதல் தர செயல் எல்லை அனுபவத்தின் மறுபடுகிற காரணியை எவ்வாறு காப்பீடு கட்டணம் மாற்றுகிறது என்பதை தருகிறது
  • முடிவெடுப்பதில் அவசரமோ அல்லது காப்பீடு தரகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவை எடுக்க தேவையில்லை .
 • நான்கு சக்கர வாகன காப்பீட்டு கணிப்பானை நான் காப்பீடு புதுப்பிக்கும் பொழுது பயன்படுத்த இயலுமா?

  நான்கு சக்கர வாகனகாப்பீடு புதுப்பித்தல் கட்டண கணிப்பான் வாகன காப்பீடு வாங்கும் தருவாயில் அந்த கணிப்பான் செயலியை உபயோகிப்பதை எளிமையாக தெரிந்துகொள்ளலாம். அவ்வாறு இல்லையெனில் வாகன காப்பீடு புதுப்பிக்கும் கணிப்பான் இணையவழியில் கட்டண விவரத்தை காப்பீடு புதுப்பிக்கும் தருவாயில்தெரிந்துகொள்ளலாம்.இது சுலபமானது,வசதியானது மற்றும் எளிமையானது.

 • நான்கு சக்கர வாகன காப்பீடு கணிப்பானின் முக்கியத்துவம் என்ன?

  இது ஒரு தனித்துவமான செயலி . நான்கு சக்கர வாகனத்தின் காப்பீட்டை வசதியாக கணக்கிட்டு கொள்வதற்கு தரமான காப்பீடு வாங்குபவர் சில குறிப்பாணை தேர்வு செய்வதன் மூலமும் சரியான காப்பீட்ட்டை தேர்ந்தெடுக்க முடியும்

Find similar car insurance quotes by body type

Hatchback Sedan SUV MUV
Search
Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
 Why buy from policybazaar